Thursday, December 25, 2008

கலைஞர் டிவி - சரத் ரெட்டி - ஜெயலலிதா அறிக்கை

வலைப்பதிவுலகில் லக்கிலுக் மற்றும் கேபிள் சங்கர் சொன்ன கிசுகிசு தற்போது ஜெயலலிதா அறிக்கை மூலம் சபைக்கு வந்திருக்கிறது. கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் ரெட்டி தாக்கப்பட்டது பற்றி ஜெயலலிதாவின் அறிக்கை. சன் டிவியிலிருந்து கலைஞர் டிவிக்கு சென்ற பல செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொக்குப்பாளர்கள் கடந்த 2 நாட்களாக கலைஞர் டிவியில் காணப்படுவதில்லை. மாறன் பிரதர்ஸின் monopoly வந்தால் மற்றவர்களுக்கு என்ன கதி ?

படம்: நன்றி: Dinakaran (கலைஞர் டிவி சீரியல் விளம்பரம் தினகரனில் 2 நாள் முன்பு வந்தது :-)) !!!)

!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!

சென்னை: "அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்தால், கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த முதல் தேதி கருணாநிதியின் இல்லத்தில் நடந்த கோமாளிக் கூத்து குறித்து நான் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதில், "அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா அல்லது கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?' என்று வினவியிருந்தேன். தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள், இதுகுறித்து முதல்வரிடம் புகார் கொடுக்க கடந்த 23ம் தேதி சென்னை வந்துகொண்டிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதியை நம்பிய கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இன்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


காசுக்காக எதையும் செய்யக்கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. இதே நிலைமை தான் கருணாநிதியை நம்பி, கலைஞர் "டிவி'க்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி குடும்ப இணைப்பை அடுத்து, சரத் ரெட்டி மீதுள்ள ஆத்திரத்தில், கடந்த 20ம் தேதி இரவு 12 மணிக்கு, அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியுள்ளனர்.


இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சரத் ரெட்டியிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை எனக் கூறப்பட்டதாக செய்தி வந்துள்ளது. தற்போது சரத் ரெட்டி, எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "போலீசாரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்; இதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என சரத் ரெட்டியின் வக்கீலிடம், கருணாநிதி தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. கலைஞர் "டிவி'க்கு சென்ற மீதமுள்ள 250 நபர்கள், தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி ஒரு நம்பிக்கை துரோகி என்பதை சரத் ரெட்டி இப்போது புரிந்துகொண்டிருப்பார்.


கருணாநிதியை பொறுத்தவரை, குடும்ப நலன், உறவினர்களின் நலன், பணம் ஆகியவை தான் முக்கியம். அரசாங்கம், சட்டம் என்பதெல்லாம் மக்களுக்காக இருக்கிறதா அல்லது கருணாநிதியின் குடும்பத்திற்காக இருக்கிறதா என்று புரியாத சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. குடும்பங்களின் ஆட்சி உருவானால் சுயநலத்திற்கே முன்னுரிமை தரப்படும் என்பதை மக்கள் புரிந்து, திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எனது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலைச் செய்யவும், ஏழை, எளிய மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டுகளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinamalar

Monday, December 22, 2008

காஞ்சி மடத்திலிருந்து புதிய தமிழ் ஆன்மீக சானல்

காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஸ்ரீசங்கரா என்ற பெயரில் புதிய ஆன்மீக தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடந்த விழாவில், ஸ்ரீ சங்கரா டிவியை கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் தொடங்கி வைத்தார்.


படம்: செய்தி: நன்றி: Thatstamil

இந்த விழாவில் மதத் தலைவர்கள், மடாதிபதிகள், துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநரும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரரும், நமது வாழ்வில் ஆன்மீகம் மிகவும் முக்கியமானது. மதங்களைக் கடந்து ஆன்மீகம்தான் நமது வாழ்க்கைப் பாதையை தெளிவாக்குகிறது என்றனர்.

சானல் புரமோட்டரான ஹரிகிருஷ்ணா கூறுகையில், நேயர்களுக்கு சிறந்த ஆன்மீக நிகழ்ச்சிகளைக் கொடுப்பதே இந்த சானலின் நோக்கம். வயது, மொழியைக் கடந்து, நல்ல ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான வடிகாலாக இந்த சானல் திகழும் என்றார்.

தினசரி காலை ஆன்மீக இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். தொடர்ந்து கோ பூஜை, சுப்ரபாதம் ஆகியவை இடம் பெறும்.

இதைத் தொடர்ந்து ஆரோக்கியம், ஜோதிடம், பஜன்கள், கர்நாடக இசை, வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலான ஆன்மீக தொடர்களும் இதில் இடம் பெறும்.

தேவி தரிசனம் என்ற நிகழ்ச்சி வயோதிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி காலை இடம் பெறும். மாலையில் தேவதா தரிசனம் என்ற நிகழ்ச்சி இடம் பெறும்.

அதேபோல சஹஸ்ரநாமம், ஆரத்தி ஆகியவையும் இடம் பெறும். பல்வேறு ஆன்மீகவாதிகளின் உரைகளும் இடம் பெறும்.

குழந்தைகளுக்காக காட் டூன் ('God-toons') என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கல்வி நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

இதுதவிர இந்து புராணங்களில் உள்ள கதைகளை அடிப்படையாக வைத்து அனிமேஷன் தொடர்களையும் ஒளிபரப்பு செய்ய ஸ்ரீ சங்கரா டிவி உத்தேசித்துள்ளது.

Wednesday, December 17, 2008

எந்திரன் @ சன் டிவி

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் கூத்தாடிகளே ஒன்று பட்டால் ஊருக்குக் கொண்ட்டாட்டமா ? இல்லை திண்டாட்டமா ? இல்லை குடும்பத்திற்குக் கொண்டாட்டமா ?











படங்கள்: செய்தி: நன்றி:

தினகரன்
சென்னை பதிப்பு 18 டிசம்பர் 2008


ரஜினிகாந்த் & ஐஸ்வர்யா ராய் நடிக்கும் "எந்திரன்" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்


சென்னை, டிச.18: ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார்.

வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்ற உள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சண்டைகாட்சிகள் இதுவரை இந்திய திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்று சக்சேனா கூறினார்.

ரஜினிகாந்த், ஷங்கர், சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில் சக்சேனா இந்த தகவல்களை வெளியிட்டார்.

இதுபற்றி கலாநிதி மாறன் கூறுகையில், ‘‘சன் பிக்சர்ஸ்க்கு இது மிகப்பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் என்று உணர்வுபூர்வமாக நம்புகிறேன். ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும்’’ என்றார்.

இயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டி.வியுடன் சேரும்போது, பலத்த எதிர்பார்ப்புடன் விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும்’’ என்றார்.

ரஜினிகாந்த் கூறும்போது, ‘‘இது இந்தியாவின் மிகப்பெரிய படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

Monday, December 8, 2008

'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணாநிதி


பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.
மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு





படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை :-)

கருணாநிதி அறிக்கை:
மறக்க வேண்டியது தீது ஒன்றுதான்




சென்னை, டிச.9: முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கலையில், இலக்கியத்தில், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்துவிட்டோரின் குடும்பங்களின் வழித்தோன்றல்களை பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திட செய்வதும் கடமையென கொண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலம்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும், பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.


மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக கூறுவதென்றால், Ôஅக்கிரகாரத்து அதிசய மனிதர்Õ என்று வ.ரா.வை சிறப்பித்து, அவர் மறைந்த பிறகும், சாவி மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன். 1990ம் ஆண்டு நான் ஆட்சியில் இருந்த போது, வ.ரா. துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்துக்கே வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஒப்படைத்தேன். 17.8.90 அன்று கலைவாணர் அரங்கில், வ.ரா. நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம்.


திருவள்ளுவர் உருவத்தை அழகுற வரைந்து கொடுத்த ஓவியர் வேணுகோபால் சர்மா குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிதி வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு. 17.2.1985 அன்று நான் எழுதிய Ôகுறளோவியம்Õ நூல் வெளியீட்டு விழாவுக்கு வேணுகோபால் சர்மாவை அழைத்து வரச் செய்தேன். அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்கு கிடைத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக அளித்தேன். வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் கூறியதும், ரூ.10 ஆயிரம் வழங்கினேன். அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கினேன்.
தமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்கக் கோரிய பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, சிறப்பித்தவன் நான்.

கழகத்தின் கலை உலகக் காவலராக இருந்து பின்னர் காமராஜரின் தளபதியாக ஆனபிறகும், Ôதம்பி, நீ எங்கிருந்தாலும் வாழ்கÕ என்று அண்ணாவால் வாழ்த்தப் பெற்ற சிவாஜி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர். எங்கள் நட்பின் அடையாளமாகத்தான் இப்போது அந்த குடும்பம் என்னைச் சூழ்ந்து குலவிடுகிறது. தமிழக கலைக் குடும்பத்தில் எனக்கு நட்பு பகை எனும் நானாவித நிலைகள். அனைத்தையும் சந்தித்து கலைக்குடும்பம் ஒன்றையன்று வாழ்த்தி மகிழ்கிறதல்லவா.

Ôமறப்போம் மன்னிப்போம்Õ அரசியலில் மட்டுமல்ல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா, இதையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா? அதன் வலிமைதான் இது. மன்னித்து மறக்க வேண்டியது, ÔதீதுÕ எனும் ஒன்றைத்தான் என்பதை நான் தெரிந்து, தெளிந்து நடப்பது போல், உடன் பிறப்பே, நீயும் நடக்க வேண்டும்.

இதற்கிடையே, 6.12.2008 காலையில் Ôதாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னைÕ என்று அண்ணாவின் பேரன் மலர் வண்ணன் வரவே, என் மனதில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு. மலர் வண்ணன் மனைவியுடன் இந்த தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்தபோதும், சிவாஜி குடும்பத்தினர் கொள்ளுபேரன், பேத்தியென மன மகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்தபோதும், நமது குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும், சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்கும் என்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.பெருங்குடும்பமாம் நமது கழகத்தின் உடன் பிறப்புகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinakaran

Friday, December 5, 2008

பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சிபிஎம் கூட்டு

உறுதியானது அ.தி.மு.க.,வுடனான ‌மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி

சென்னை : லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்காரத் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் முடிவில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

செய்தி: நன்றி: Dinamalar and TimesOfIndia

செய்தி: நன்றி: Maalaisudar

சென்னை, டிச.5: வரும் மக்களவை தேர்தலில் அதிமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெயலலிதா, பிரகாஷ் கரத் ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர். ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று சந்தித்த போது, இந்த உடன்பாடு ஏற்பட்டது.
.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, காங்கிரஸ் அணியுடன் அக்கட்சிகள் தங்கள் தோழமையை முறித்துக் கொண்டன.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் முயற்சியில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களும் ஈடுபட்டன. இதற்காக தமிழ்நாட்டில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து அக்கட்சி கள் ஆலோசனை செய்து வந்தன.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டியது. அக்கட்சி தலைவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து இது குறித்து பேசினார்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தமிழக அரசியல் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கள், மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிமுக வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என கூறியதாக தெரிகிறது. தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடலாம் என அவர்கள் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

எனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் இணக்கமாகவும், ஒரே அணியில் இருக்க வேண்டு மென்ற கருத்துடனும், அதிமுகவுடன் அணி சேர்வதே நல்லது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆலோசனை இரண்டாவது நாளாக இன்றும் தேசிய செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன், பொலிட் பீரோ உறுப்பினர் கே.வரதராஜன் ஆகியோர் இன்று பகல் 12.30 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை ஜெயலலிதா இன்முகத்துடன் வாசலில் வந்து வரவேற்றார். ஜெயலலிதாவுக்கு கரத் பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி குறித்து, மார்க்சிஸ்ட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜெயலலிதா விடம் அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒருமணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ஜெயலலிதாவும், பிரகாஷ் கரத்தும் கூட்டாக செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.

Monday, December 1, 2008

குடும்பம் ஒரு கழகம்

அஞ்சுகம் அம்மாளின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தென்படுகிறதே ? கவனித்தீர்களா ? இதெல்லாம் குருபெயர்ச்சியின் லீலையா ? எதற்கும் இந்தப் படத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். (படத்தைக் கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)

செய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 2-டிசம்பர்- 2008





முதல்வர் கருணாநிதியை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டால் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி., மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, முதல்வரின் மகள் செல்வி ஆகியோர் 2 கார்களில் வந்தனர். முதல்வருடன் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தயாளு அம்மாள், மருமகன் செல்வம், அவரது மகள் டாக்டர் எழில், மருமகன் டாக்டர் ஜோதிமணி, ஸ்டாலின் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேசன், இன்னொரு மகள் அஞ்சுகம், மருமகன் விவேக், முதல்வரின் மகன் மு.க.தமிழரசு, அவரது மகன் அருள்நிதி, கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பு முடிந்து அனைவரும் 5.30 மணிக்கு வெளியில் வந்தனர். அப்போது முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டனர். பத்திரிகையாளர்கள் அதிகமாக இருந்ததால், ‘அறிவாலயத்தில் முதல்வர் நிருபர்களை சந்திப்பார்’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் பின்னர் அவர்கள் சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டுக்கு சென்றனர்.
மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?

சந்தோஷமாக இருக்கிறது.

இந்த சந்திப்பு எதனால் நடந்தது?

இதயத்தால் நடந்தது.

தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?

அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.

உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்?

எனக்கு கோபம் வரும் போதும், வருத்தம் வரும் போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின் போதும் இருந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?

இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.


குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது?

எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.



பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது?


கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.

அழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?

மனமிருந்தது எனவே மாற்றம் ஏற்பட்டது.

மதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா?

கேளாதீர்கள். கிளறாதீர்கள்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்து கொள்ளலாமா?

அது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

அடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக தொலைகாட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்?

கலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.

இந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே?

எம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகு தான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.

தயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா?

பேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.

நாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா?

மனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.

இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா?

இந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.

சமரசத்தின் பின்னணி என்ன?

அழகிரி, ஸ்டாலின்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

Sunday, November 23, 2008

மாசறு பொன்னே; முரசொலி மாறா ! - கருணாநிதி கவிதை

மறைந்த, முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 5-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.வின் முன்னணித் தலைவருமான முரசொலி மாறனின் 5-வது நினைவு தினம் இன்று. இதையொட்டி முதல்வர் கருணாநிதி, அவருக்கு கவிதை மூலம் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் எழுதியிருப்பதாவது:


அண்ணா கண்ணுக்கு ஆச்சரிய குறியாக
மாசறு பொன்னே; வலம்புரி முத்தே!
அருமைக் கண்மணியே, அன்பு மாறனே!
ஓடி விட்டன ஐந்து ஆண்டுகள் உன்னைப் பிரிந்து!
உன்னை நினைவூட்டி என் நெஞ்சில் அலைபாயும் நிகழ்வுகளை
முரசொலி அலுவலக முகப்பில் நாங்கள் வைத்துள்ள சிலை;
அடுக்கடுக்காகக் காட்சியாக்கும்போது;
நீ தத்தித் தவழ்ந்த பருவம் தாளமிடுவது போல் தளிர் நடை போட்ட பருவம்;
என் தோளில் அமர்ந்து கோளிலி கோயிலுக்குப் போன பருவம்;
குவளைப் பள்ளியில் உன்னைக் குந்த வைத்தது முதல்
குடந்தைக் கல்லூரியில் சேர்த்து அக்காள் பெரியநாயகம் அரவணைப்பில் வளர்ந்து;
சேலம் கல்லூரியில் சிறப்புறு மாணவன் எனும் செவியினிக்கும் சேதியாலே சிந்தை குளிர்ந்து;
அண்ணா கண்களுக்கு ஆச்சரியக் குறியாகவும்
உன் அன்பு மாமனாம் என் கண்களுக்கு அழகும் அறிவும் கலந்த
மறக்க முடியாத மா மருந்தாகவும் விளங்கி;
எந்த மருந்துக்கும் இரக்கம் காட்டி இறங்கித் தொலையாத
இறுதி முடிவுக்கு இயற்கை ஆளாக்கிவிட்டது உன்னை!
எதை நினைத்து என்னைத் தேற்றிக் கொள்வது?
யாரை நினைத்து என் மனத்தை மாற்றிக் கொள்வது?
நீயும் சேர்ந்து வளர்த்த உயிர் போன்ற கழகம் இருக்கிறது!
அந்தக் கழகத்திற்கென ஒலித்து என்றைக்கும் கம்பீரம் குலையாத;
கையெழுத்து ஏடாகத் தொடங்கி;
திராவிடரின் தலையெழுத்தை உயர்த்திப் பிடிக்க
ஒலித்திடும் முரசொலி இருக்கிறது;
ஆனால் நீயில்லையே என் கண்ணே!
மாறன் என் தம்பியல்லவோ!
என்று மார்தட்டிச் சொன்ன மாமேதை
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு உன் மறைவு;
என் போன்றார்க்கு எரிமலையின் நெருப்பலை போல் அல்லவோ;
வாய்த்து வாட்டி வதைத்து விட்டது!
அகரம் கற்று கொடுத்த கலைஞரென
ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?
நீ எழுதிய புத்தகமா அது?
தமிழனுக்குச் சோகம் வரும்போதெல்லாம்
வேகமாக எழுகின்ற வினாவல்லவோ அது!
மாநில சுயாட்சியென்று மாமேதையாம் நீ எழுதிய
இந்த இயக்கத்தின் லட்சியப் புதையலாம் பெரும் நூலில்;
அறியாமை இருளில் மூடிக் கிடந்த
தமிழர்களின் விழி திறந்த பெரியார்
அரசியல் எழுச்சி எனும்
விளக்கேற்றி வைத்த அண்ணா
அன்பின் உருவங்களாம் எங்கள்
குடும்பச் சுடர்கள் முத்துவேலர், அஞ்சுகத்தாய்
ஆகியோரின் நீங்காத நினைவுக்கு!
என்று எழுதிவிட்டு;
எனக்கு அகரம் கற்றுக் கொடுத்து ஆளாக்கியவரும்
என் ஆசானுமாகிய கலைஞர் என்றும் கூறி,
நன்றி தெரிவித்திருக்கிறாயே; மாசற்ற உன்மனத்தில்
எழுந்த நன்றியுணர்வு அல்லவா அது?
அதனால்தான் என்றைக்கும்
உன் நிழற் படத்தையோ,
உருவச் சிலையையோ,
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு;
மாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசறு விரையே
கரும்பே தேனே...
எனும் சிலப்பதிகார வரிகள்தான் என்
சிந்தையைச் சிலிர்க்க வைக்கின்றன
வாழ்க நீ இந்த
வையம் உள்ளவரை!


செய்தி: நன்றி: Thatstamil

Wednesday, November 19, 2008

நடிகர் எம் என் நம்பியார்

அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தி: நன்றி: Thatstamil

Monday, November 17, 2008

ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் - சத்தியநாராயணா திடீர் நீக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக் கட்சியையும் தொடங்கி ரஜினிக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இதையடுத்து ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார் ரஜினி.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார். அரசியல் குறித்த கேள்விக்கு மட்டும், ஆண்டவன் உத்தரவிட்டால் நாளைக்கே அரசியலுக்கு வருவேன் என்றார்.

அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ரஜினி கூறாமல், ஆண்டவன் உத்தரவு கிடைத்தால் வருவேன் என்று ரஜினி கூறியிருப்பதை சாதகமான அம்சமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். கடவுள் பக்தரான ரஜினி, கடவுளின் அனுமதியுடன், அவரது உத்தரவுடன் வர விரும்புவதையே இது வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பிறந்துள்ளது.

அனேகமாக எந்திரன் படத்தை முடித்து விட்டு அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

ரஜினியும் தற்போது அரசியல் பிரவேசம் குறித்த சிந்தனைக்குப் போய் விட்டதாகவே தெரிகிறது. சமீபத்தில் அத்வானியின் நூல் வெளியீட்டு விழாவின்போது அத்வானியை விட ரஜினிக்கே பலத்த கரகோஷமும், ஆதரவுக் குரலும் காணப்பட்டது.

இதைப் பார்த்து துக்ளக் ஆசிரியர் சோவும் கூட, இவ்வளவு பெரிய ஆதரவை வைத்துக் கொண்டு எதற்காக ஆண்டவன் உத்தரவை ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என ரஜினியை வைத்துக் கொண்டே கூறினார். இதெல்லாம் ரஜினி மனதில் புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக ரசிகர் மன்றங்களை ஒழுங்கமைக்கும் பணியில் ரஜினி இறங்கியுள்ளார். அதற்கு முதல் படியாக, யாரும் எதிர்பாராத வகையில் சத்தியநாராயணாவை ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.

ரஜினியின் ஆரம்ப கால நண்பர்களில் சத்தியநாராயணாவும் ஒருவர். கடந்த 25 ஆண்டு காலமாக ரசிகர் மன்றங்களை நிர்வகித்து நடத்தி வருகிறார்.

ஆனால் மன்றத்திற்குள் கோஷ்டியை உருவாக்கி வைத்து வருவதாக சத்தியநாராயணன் மீது புகார் எழுந்தது. மேலும் மன்றங்கள் தொடர்பான, ரசிகர்களின் உணர்வுகள் தொடர்பான உண்மையான தகவல்களை தனக்கு அவர் தெரிவிக்கவில்லை என்ற அதிருப்தியும் ரஜினிக்கு எழுந்ததால், அவரை நீக்கும் முடிவுக்கு ரஜினி வந்ததாக தெரிகிறது.

அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் தனது குடும்ப நண்பரான சுதாகர் என்பவரை ரசிகர் மன்றத் தலைவராக்கியுள்ளார் ரஜினி. இனிமேல் மன்றங்கள் தொடர்பான அனைத்தையும் சுதாகர்தான் கவனிப்பார்.

சத்தியாநாராயணாவின் நீக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, புதிய மாற்றத்திற்கான அடிக்கல்லாகவே இதை அவர்கள் பார்க்கின்றனர்.

விரைவில் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றப் பிரதிநிதிகளை ரஜினி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.

ரஜினியிடமும், மன்ற நிர்வாகத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் புதிய பிரவேசத்திற்கு வழிவகுக்குமா என்ற ஆர்வத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

செய்தி: நன்றி: Thatstamil

Tuesday, November 11, 2008

அத்வானி விழா: ரஜினிக்கு ஸ்பெஷல் அழைப்பு !!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி இன்று சென்னை வருகிறார்.

அவர் எழுதியுள்ள 'எனது நாடு, எனது வாழ்க்கை' (My country; M life) என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

சென்னை நாரத கான சபாவில் நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் வெளியிடுகிறார். பத்திரிகையாளர் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவுக்காக அவர் நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது மாநில பிஜேபி.

ரஜினி வருவாரா?

இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகையைத்தான். அவரது குரு தயானந்த சரஸ்வதிதான் புத்தகத்தை வெளியிடுகிறார் என்பதால் ரஜினியின் வருகையை உறுதியாக எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த விழாவுக்காக ஜெயலலிதா – ரஜினி இருவரையும் ஒரே மேடையில் ஏற்றத் திட்டமிட்டிருந்தது பிஜேபி தலைமை. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரஜினி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராகவாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ரஜினிக்கு பிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அழைப்பை பிஜேபியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ரஜினிக்கு நேரில் கொடுத்துள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான சோவும் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அத்வானியுடன் மேடையேறி அரசியல் பேசுவாரா... அல்லது எச்சரிக்கையுடன் வெறும் பார்வையாளராக நின்றுவிடுவாரா ரஜினி? பார்க்கலாம்!

செய்தி: நன்றி: Thatstamil

Friday, November 7, 2008

பிராமணப் பத்திரிக்கைகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி

ஈழப் போராட்டம் குறித்த செய்திகளை திசை திருப்பி தகவல் வெளியிடும் பிராமணர்கள் நடத்தி வரும் பத்திரிக்கைகளை தமிழர்களும், திராவிடர்களும் புறக்கணிக்க வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

''எரியும் ஈழமும், பிராமண நாளிதழ்களும்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கி.வீரமணி பேசுகையில்,

பிராமணர்களால் நடத்தப்படும் சில ஆங்கில நாளிதழ்களும், சில தமிழ் நாளிதழ்களும் ஈழப் பிரச்சினை குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மக்களை திசை திருப்பும் வகையில் தவறான, திசை திருப்பக் கூடிய செய்திகளை அவை பிரசுரித்து வருகின்றன.

2.30 லட்சம் ஈழத் தமிழர்கள் படும் துயரங்களையும், வலுக்கட்டாயமாக காட்டுக்குள் துரத்தப்பட்டுள்ள அவலத்தையும் இந்தப் பத்திரிக்கைகள் மறந்து விட்டன.

இவர்களால் அமெரிக்க அதிபராக ஓபாமா தேர்வு செய்யப்பட்டதை பக்கம் பக்கமாக செய்தி போட்டு நிரப்ப முடிகிறது. ஆனால் தமிழ் ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் நடத்தி வரும் போர் குறித்த செய்தியை ஏன் இவர்கள் போடுவதில்லை?.

பிராமணக் குடும்பங்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பத்திரிக்கைகளின் இரட்டை நிலையைத்தான் இது காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு தங்களையும், தங்களது தாயகத்தையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியும். இந்த செய்தித் தாள்களின் உதவி அவர்களுக்குத் தேவையி்ல்லை.

தமிழர்களும், திராவிடர்களும், இந்த பிராமணப் பத்திரிக்கைகளைப் படிக்காமல் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார்.

செய்தி: நன்றி: Thatstamil

Tuesday, November 4, 2008

ரஜினியின் பூர்வீகம் தமிழகமா..?

ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பின்போது... "உங்களுடைய பெற்றோரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்டுக்குப்பம்; அங்கு உங்கள் பெற்றோருக்கு நினைவுச்சின்னம் எழுப்புவீர்களா?' என்று ஒரு கேள்வி வாசிக்கப்பட்டது



அதைக் கேட்டவுடன்... சற்று வியப்புடன் புன்முறுவல் பூத்த ரஜினிகாந்த், மீண்டும் அந்தக் கேள்வியை வாசிக்கச் சொன்னார். அதோடு "இந்தக் கேள்வியைக் கேட்டவர் இங்கு வந்திருக்கிறாரா?' எனக் கேட்க, அந்த கேள்வியைக் கேட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திகேயன் எழுந்து நின்று ரஜினிக்கு மரியாதை தெரிவித்தார்.

இதையடுத்து அவரை சற்று உற்றுப் பார்த்த ரஜினிகாந்த் புன்னகைத் தவாறே... ""இந்தக் கேள்வியை நீங்களாகத்தான் கேட்டீர்களா? இல்லை... யார் சொல்லியாவது கேட்டீர்களா? என்றார். அதற்கு அந்த ரசிகர் "நானாகத்தான் கேட்டேன்'' என்றார்

"சரி... நீங்கள் சொல்வது பற்றி யோசிக்கிறேன்' என பதிலளித்தார் ரஜினிகாந்த். மகாராஷ்டிரத்தில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாகப் பொதுக்கூட்டங் களிலும் திரைப்படங்களிலும் "என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களே' என விளித்தும், அவரைக் கன்னடர் எனப் பலர் விமர் சித்து வருவதும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் ரஜினியின் பெற்றோர், "தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்' என்ற அடிப்படையில் எழுந்த கேள்வி, ரஜினியை வெகுவாக ரசிக்க வைத்திருக்கலாம்.

செய்தி: படம்: நன்றி: தினமணி
4-நவம்பர்-2008: பக்கம் 12 - சென்னை பதிப்பு

*** *** *** *** ***

கடமையைச் செய்; பலனை "எதிர் பார்'!

தன்னுடைய பல படங்களில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கீதாஉபதேசத்தை வச னங்களாக உச்சரித்தவர் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தபோது மேடையில் அமைக்கப்பட்டிருந்த "கடமையைச் செய்; பலனை எதிர் பார்' என்ற வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ரசிகர்கள் உள்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியது

ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான படத்தின் பின்னணியில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த அந்த டிஜிட்டல் பேனர் வாசகங்களைப் பற்றிப் பேசும்போது..

""நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். அதற்கான பலனையும் எதிர்பாருங்கள். நான் கூட ஆரம்பத்தில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நாம் சிரமப்பட்டு உழைக்கிறோம். ஏன் பலனை எதிர்பார்க்கக்கூடாது. எனவே நீங்கள் உழைத்ததற்கான பலனை எதிர்பாருங்கள். "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்பதுதான் நமது தத்துவம் என்றார் ரஜினிகாந்த்
இந்தக் கருத்து குறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது..

""இது எங்களுடைய தலைவர் அரசியலில் விரைவில் ஈடுபடுவார் என்பதைத்தான் காட்டுகிறது. ரஜினி தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்துவருகிறார். அதற்கான பலனும் அவருக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த வாசகங்களை ரஜினி தனக்காகச் சொல்லவில்லை. இத்தனை காலம் அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் நற்பணி, நலத்திட்டம் என தீவிரமாக உழைத்துவருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு..

"உரிய பலன்' விரைவில் கிடைக்கும். அதை எதிர்பாருங்கள் என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்காகத்தான் இந்த வாசகங்கள்'' என்றார்.

Monday, November 3, 2008

ஈழத் தமிழர்களுக்கு உயிரும் தருவோம் - கருணாநிதி

வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம், தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில்,

இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.

உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்

கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;

வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல்

இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு

இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை "இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு

அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு

சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம்-

அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும் அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்

அதனால் நிதி கொடுக்காதீர்- இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று வெறிக் கூச்சல் போடுகின்றார்- அவற்றை நாம் பொருட்படுத்தாமல்

வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம்- தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம்!

இவ்வாறு தனது கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி: Thatstamil

Monday, October 13, 2008

கட்சி தொடங்கினால்..! : ரஜினிகாந்த் எச்சரிக்கை



"என் பெயரில் கட்சி தொடங்குவது, கொடி அறிமுகப்படுத்துவது, என் படத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்குவேன். அதன்பின்னும், அதை தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.


தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். ஆனால், இதை ரஜினி ஏற்கவில்லை.

இந்நிலையில், கோவை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், “தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்’’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். ரஜினி படத்துடன் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தனர். பின்னர், கோவை தெற்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் அபு ஆகியோர் கூறுகையில், ‘‘ரஜினி அரசியலுக்கு வருவார் எனக் காத்திருந்து நொந்து போய் விட்டோம். அதனால், நாங்களாகவே, புதிய கட்சியைத் தொடங்கி விட்டோம்’’ என்றனர்.

இந்நிலையில், கட்சி தொடங்கியவர்களை மன்றத்தில் இருந்து ரஜினி நீக்கினார். இதை மன்றத்தின் கோவை மாவட்ட செயலாளர் சிங்கை உலகநாதன் நேற்று அறிவித்தார். தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தி கட்சி தொடங்க யாரையும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்து ரஜினி அறிக்கையும் வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

சமீப காலமாக ரசிகர் மன்றத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு நிலவி வருகிறது. தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தினால் நானும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது.

தற்போது நான் ‘எந்திரன்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது ரசிகர்கள் அவரவருக்கு விருப்பமுள்ள அரசியல் கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்கள் தலைமை மன்றத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்பும், அதே செயலைத் தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களின் செய்திகளையும், அறிக்கைகளையும் பத்திரிகைகள் தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Ôஅரசியலுக்கு நான் வந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாதுÕ என்பதை இறுதியாகவும், உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நிலையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை வரவேற்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 14-10-2008 (சென்னை பதிப்பு)

அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் - ஜெயலலிதா

முதல்வர் கருணாநிதி தன் மகன் மு.க. அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மதுரை நகரில் மக்கள் வசிக்க முடியாமல் போய்விடும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அராஜகத்தை அடக்கக் கோரியும் அதிமுக சார்பில் இன்று மதைரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் எனது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றது அண்டை மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை புகலிடமாக மாற்றிக் கொண்டன.

காவல் துறை, முதல்வர் கருணாநிதியின் ஏவல் துறையாகிவிட்டது. தங்களது உயிரையம் உடமைகளையும் மக்களே பாதுகாத்துக் கொள்கிற கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 7 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய வன்முறைக்கு கருணாநிதி வித்திடுகிறாரோ என்று தோன்றுகிறது.

சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் பற்றி கவலைப்படால் தான் தோன்றித் தனமாக சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளையும், தனது மகன் அழகிரி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்ட குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது செயல். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விடுவிக்கப்பட்டவர்களும் வெளியில் உள்ள சதிகாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அண்ணனுக்கு நன்றி!'

மேலும் மதுரை முழுவதும் அண்ணனுக்கு நன்றி என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அழகிரியின் படையை விரிவாக்குவதற்காக கருணாநிதி இந்த செயலை செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

1405 கைதிகளை விடுதலை செய்து அவர்கள் துணையுடனும் ஏவல் துறையின் முழு ஒத்துழைப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் கைதிகள் விடுதலையை எதிர்க்கிறேன். இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பு கருணாநிதியைத்தான் சேரும்.

அழகிரி அராஜகம்:

அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அழகிரியை முதல்வர் உடனடியாக அடக்கி வைக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளில் அவரது தலையீடு இருக்கவே கூடாது, என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Thatstamil

Sunday, September 7, 2008

திமுகவை அழிக்க வீராசாமியே போதும் - விஜயகாந்த்

மின் வெட்டு பிரச்னையால் திமுகவை அழிக்க வீராசாமி ஓருவரே போதும்’’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விஜயகாந்த் பேசியதாவது:

தமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு 10,000 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 3,500 மெகாவாட் மின் சாரம் பற்றாக்குறை. 2012ல் தான் மின்வெட்டு சரியாகும் என அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.



இந்த பிரச்னையில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மின் உற்பத்திக்காக முன்கூட்டி யே திட்டங்களை போட வில்லை. மின்வெட்டால் விசைத்தறிகள், பவுண்டரிகள் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் முடங்கி கிடக்கின்றன. மின்வெட்டால், முதலாளிகள் கடனில் தவிக்கிறார்கள். தொழிலாளிகளுக்கு வேலை இல்லை, அரை வயிற்று கஞ்சிக்கு வழி இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு அமைச்சர் வீராசாமி, ரோபோ போல் போகிறார், வருகிறார். டெல்லி சென்று திரும்பினார். 600 மெகாவாட் மின் சாரம் பெற்று வந்ததாக தெரிவித்தார். இதனால் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா? திருவிளையாடல் நாகேஷ் பாணியில் சொன்னால் தி.மு.க.வை அழிக்க வீராசாமி ஒருவரே போதும்.

2 ரூபாய்க்கு அரிசி போட்டார்கள். அதை யாரும் வாங்கவில்லை. கோழித்தீவனமாகத்தான் பயன்படுத்த முடியும். இப்போது ஒரு ரூபாய்க்கு போடுவதாக சொல்கிறார்கள். அரிசி ஒரு ரூபாய்; குழம்பு வைக்க 30 ரூபாய் ஆகிறது.

மக்களுக்கு நல்லது செய்ய நல்ல மனம் வேண்டும். 5 முறை ஆட்சிக்கு வந்தும் வறுமையை ஒழிக்க கருணாநிதியால் முடியவில்லை. அதனால் தான் 1 ரூபாய்க்கு அரிசி போடுகிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். மக்கள், நல்ல மாற்றத்தை உருவாக்க தே.மு.தி.க. வினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். கேப்டன் டி.வி ஆரம்பிக்க விண்ணப்பம் போட்டோம். பணம் கட்டினோம்; அனுமதி தர மறுக்கிறார்கள். முரசு சின்னத்துக்கும் சட்டரீதி யாக முட்டுக்கட்டை போடுகிறார்கள். நமக்கு சின்னம் முக்கியமில்லை. 4 நாட்களுக்கு முன்பு, எந்தச் சின்னத்தை அறிவித்தாலும் ஜெயிப்போம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 8 செப் 2008 (சென்னை பதிப்பு)

Tuesday, August 26, 2008

தமிழ்நாடு குடிகார நாடு ? - ராமதாஸ்

மது விற்பனையை அரசு தொடர்ந்து அதிகரித்தால் தமிழ் நாட்டிற்கு குடிகார நாடு என்று பெயர் ஏற்படும் அவலநிலை உருவாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மதுவிலக்குப் பிரச்சனையில் கொள்கையற்ற அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று பாமக சார்பில் "தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்பு கொள்கை' குறித்த வழிமுறைகளை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மது விலக்கை கொண்டு வருதற்கான வழிமுறைகள் இந்த கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதனை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

தமிழக அரசுக்கு மாற்று தொழில் கொள்கை, வேளாண்மைக் கொள்கை, இளைஞர் நலன் குறித்த கொள்கை, சென்னை போக்குவரத்து பிரச்ச னைக்கான மாற்றுத்திட்டம் என பல்வேறு ஆக்கப்பூர்வமான யோசனைகளை தெரிவித்துள்ளோம்.

அந்த வகையில் மது ஒழிப்புக்கான மாற்று கொள்கை திட்டத்தை உருவாக்கி அதனை இன்று பத்திரிகையாளர்கள் மூலமாக மக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
மதுவை ஒழிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

அரசியல் சட்டத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் அரசுத்தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
எனவே முதலமைச்சர் கருணாநிதி இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக மது விற்பனையை குறைத்து முழுமையான மதுவிலக்கை தமிழகத் தில் கொண்டுவர வேண்டும்.

மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றெல்லாம் காரணங்களை சொல்லக்கூடாது. ஆண்டுதோறும் மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பு ஒன்றை அரசு வெளியிடும். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட இந்த குறிப்புகளில் மது விலக்கு தொடர்பான சில அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் இது குறித்த கொள்கை விளக்க குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே இந்த அரசு மதுவிலக்கை பொறுத்தவரை கொள்கையற்ற ஒரு அரசாக திகழ்ந்து வருவது தெளி வாகிறது. மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது ஏற்புடையதாகாது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க சில நடைமுறை வழிமுறைகளை நாங்கள் தெரிவித்துள்ளோம். அவற்றை அரசாங்கம் அமல்படுத்தலாம். அதேபோல வருவாய் இழப்பை ஈடுகட்டவும் மாற்று வழிகளை கூறியுள்ளோம்.

மணல் கொள்ளை மூலம் ஆண்டுக்கு சராசரியாக அரசாங்கத் திற்கு வர வேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தனியாருக்கு போகிறது. இதனை கட்டுப் படுத்தலாம். மேலும் விற்பனை வரியை முறையாக வசூலித்தால் அதன் மூலமாகவும் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அத்துடன் கிரானைட் குவாரி மூலமாகவும் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் வரும். இத்தகைய வழிகள் மூலமாக அரசாங்கம் தன்னுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தொடர்ந்து மது விற்பனையை அரசு அதிகப்படுத்தி வந்தால் தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதிலாக இதற்கு குடிகார நாடு என்று பெயர் ஏற்படும் அவலநிலை உருவாகும் என்றார் டாக்டர் ராமதாஸ்.


அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, அவற்றுக்கு பதிலளிக்க டாக்டர் ராமதாஸ் மறுத்து விட்டார். ஏற்கனவே கூறியதைப்போல தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த பாமகவின் நிலை பற்றி அறிவிக்கப்படும் என்றும், இன்னும் ஓரிரு நாளில் அரசியல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

பேட்டியின் போது, பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் சைதை சிவா, ராமமுத்துக்குமார், பசுமைத் தாயகம் அருள், மு.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

நெடுமாறன் - தசரதன் - கருணாநிதி - கவிதை

புதிய தசரதனின் பதவித் துறப்பு - பழ. நெடுமாறன்.


கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக் காட்டுவதே ஆகும்.

தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாக பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார்.

மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ
பன்னருந் தவம்புரி பருவ மீதெனக்
கன்ன மூலத்தினிற் கழற வந்தென
மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர்

""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப் போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று'' என பாடுகிறான் கம்பன்.

கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அரியணையில் இருந்து இறங்கித் துறவுகோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூடுகிறார்கள். அப்படி கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசரதனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான்
அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்
துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின்
பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ

""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சரியோ'' என்கிறான்.

ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அரியணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன்.

கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால் இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார்.

""5 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை''யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படி கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உரியதாகும். 1993-ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

2001-ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால் 2006-ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். 2008-ஆம் ஆண்டில் தனக்கு பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும்.


ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்?

""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது - அவருக்கும் நல்லது'' என நினைத்து அனைவரும் அமைதி காத்து விட்டார்களா?

முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, சேதுக் கால்வாய் பிரச்னை போன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புரியாத புதிர்தான்.

சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது.

தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புரியக் கூடியது.

அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக?

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டு சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் திமுகவின் வெற்றி பெரிய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பம் இல்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேரிட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார். அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்?

இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அரியணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால் தசரதன் தானே முன் வந்து அரியணையைத் துறக்க முற்படுகிறான்.

ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெரியும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.

கட்டுரை: நன்றி: தினமணி

இதற்கு மறுமொழியாக கருணாநிதி எழுதிய ஆழ்வார் கவிதை

விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!!
அண்ணாவின் அணி வகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!
குன்றனைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென;
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பதுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையில் விஷம் ஒரு மொந்தை!

Monday, August 25, 2008

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் - தங்கபாலு

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் வரவேற்று அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் குடும்பத்தினர் வீதியில் வறுமையில் வாடுவதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வீடு, நிதி உதவி மற்றும் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்பட் டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா, சேலம் புதிய உருக்காலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா, ஈரோட்டில் நடை பெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் இருதலைவர் களும் கலந்து கொள்கிறார்கள். இது பற்றிய முழு விவரம் நாளை அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல். அது கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றக்கூடிய கப்பல். அந்த பாதுகாப்பான கப்பலில் பயணம் செய்த இடதுசாரிகள் திடீரென கடலில் குதித்து விட்டார்கள்.

இப்போது அவர்கள்தான் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் காங்கிரஸ் கட்சி மூழ்குவதுபோல தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற சக்திகள் கைகோர்த்து நிற்கின்றன. எனவே மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும்.

காங்கிரஸ் கூட்டணியில் தான் பாமக உள்ளது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியும் அதைத்தான் கூறி வருகிறார். பாமக இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று முதல்வரே கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாட்டில் எல்லா மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் நாங்கள் வரவேற்று கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

மேற்கு வங்கம், கேரளா சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எங்களை எதிர்ப்பது போல இடது சாரிகள் பாவனை செய்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மனம்மாறி விடுவார்கள். 3வது அணி என்பது ஒரு கற்பனையே. அதுசாத்தியமாகாது. அது இடதுசாரி களுக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார் கே.வீ.தங்கபாலு.

செய்தி: நன்றி: Maalaisudar

Sunday, August 24, 2008

பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி வலுவடையும்: கருணாநிதி

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேசப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.

ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.

இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது. இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.

செய்தி: நன்றி: Thatstamil

திமுக அணிக்கு பாமக திரும்பி வரும்: ப.சிதம்பரம்


திமுக அணியிலிருந்து பாமக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே பாமக திமுக அணிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. வரும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை, ப.சிதம்பரம் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் பாமக பங்கேற்றுள்ளது.

தமிழகத்தில் இடையிலே சில வேறுபாடுகள் தோன்றியதன் காரணமாக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே மீண்டும் பாமக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தெரிவிக்கலாம்.

காங்கிரஸ் ஆட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர். நாடு எப்போதெல்லாம் சங்கடத்தில் மூழ்குகிறதோ அப்போதெல்லாம் நாட்டைக் காப்பாற்றும் மாலுமியாகத்தான் காங்கிரஸ் இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என்றார் சிதம்பரம்.


செய்தி: நன்றி: Thatstamil

Thursday, August 21, 2008

ஆற்காடு வீராசாமி பேச்சு அநாகரீகம்: வரதராஜன்

கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது அரசியல் அநாகரீகமானது, அழகற்ற பேச்சு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,திமுக அமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து பேசியிருப்பது அபத்தமானது. அரசியல் நாகரீகமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கலைஞரின் 50 ஆண்டு சட்டமன்ற பேச்சினுடைய புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்றது. அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி தேச பக்தி கொண்ட கட்சியாக திமுகவுக்கு தெரிந்திருக்கிறது.

கருத்து வித்தியாசம் வந்தவுடன் எடுப்பேன், கவிழ்ப்பேன் என்ற நிலையில் திமுக அமைச்சர் பேசுவது அழகல்ல என்றார் வரதராஜன்.


ஆற்காடு வீராசாமி பேச்சு

சென்னை: அணு சக்தி ஒப்பத்தை எதிர்த்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த கட்சிகள் வரும் லோக்சபா தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என்று மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வர வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதுகுறித்து 25ம்தேதி அவர்கள் தங்களது முடிவை அறிவிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி பூடகமாக பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விமர்சித்து கவிதை எழுதியிருந்தார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை மனதில் கொண்டு எழுதப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில், அனல் மின்சாரத்தை நம்பினால் நமது நாடு முன்னேற முடியாது. அதனால்தான் அணு சக்தி ஒப்பந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு கம்யூனிஸ்டுகளும், மதவாத சக்திகளும் குறை சொன்னார்கள்.

அணு சக்தி இருந்தால்தான் மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்த முடியும். 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 1998ம் ஆண்டு கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

கட்டடம் கட்டி முடித்தும், இயந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டும் மின் உற்பத்தி தொடங்கவில்லை. காரணம் யுரேனியம் இல்லாததுான். 2009ம் ஆண்டு பிப்ரவரியில் 1000 மெகாவாட்டும், டிசம்பர் மாதம் 1000 மெகாகவாட்டும் மின்உற்பத்தி செய்வதாக கூறியருக்கிறார்கள்.

கம்யூ. பத்தாம் பசலிகள்:

ரஷ்யாவில் இருந்து வந்தால் மின் உற்பத்தி செய்யலாம். அமெரிக்காவிலிருந்து வந்தால் செய்யக் கூடாதா. கம்யூனிஸ்டுகள் போகாத ஊருக்கு வழி காட்டுபவர்கள். இது பத்தாம் பசலித்தனம். இப்படி இருந்தால் இந்தியா முன்னேற முடியாது. இந்தியா முன்னேற உங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் இயக்கம் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அணு மின்சக்தி வந்தால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்.

அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள். அவர்கள் தற்போது வாங்கிய சீட்களை விடவும் குறைந்த சீட்களையே பெறுவார்கள் என்றார் ஆற்காடு வீராசாமி.


கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் வரும் தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதியின் நிழலான ஆற்காடு வீராசாமி காட்டமாக கூறியிருப்பது திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வரப் போவதை உணர்த்துவதாக உள்ளதாக கருதப்படுகிறது.

செய்தி: நன்றி: Thatstamil

Tuesday, August 19, 2008

ஆன்மீகம் அவசியம்: கனிமொழி

மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடம் சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. பீடத்தின் தலைவரான சக்தி அம்மா தலைமை வகித்தார்.

மதம் வேறு - ஆன்மீகம் வேறு

திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எனக்கு மத நம்பிக்கைக் கிடையாது. மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று என் தந்தை கருணாநிதி சொன்ன புனித வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

மதம் வாழ்க்கையை நெறிப்படுத்தும். சில நேரம் மதம் 'மத'மாக மாறி விடுகிறது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி பல இடங்களில் பேசி வருகிறார். ஆனால் சேது திட்டம் இப்போது மதமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நியாயமான பலன்கள் மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு வருகிறது.

மறுக்கப்பட்ட பலன்களை பெற்றுத் தர போராடினால் நாத்திகன் என்கின்றனர். கசப்பு மருந்தில் இனிப்பு தடவி ஆன்மீகம் என்கின்றனர். நாங்கள் வேறு வகையில் இனிப்பு என்ற மேல் பூச்சுத் தடவுகிறோம்.

மாணவர்கள் நலனுக்காக இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் அனைத்து உதவிகளையும் அரசே செய்து விட முடியாது.

சக்தி அம்மா போன்றவர்கள் இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் இந்த சமுதாயம் முற்றிலும் மாறும் நிலை உருவாகியுள்ளது.

கல்வி உதவி பெறும் மாணவர்கள் நன்றாக படித்து உயர்நிலைக்கு வர வேண்டும். அவர்களும் மற்றவர்களுக்கு இதேபோல உதவிகளை செய்ய வேண்டும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மனிதனால் மட்டுமே இந்த பூமியை சூறையாட முடியும். விலங்குகளை அழிக்க முடியும். ஆனால் மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்றார் கனிமொழி.


செய்தி: நன்றி: Thatstamil

Thursday, August 14, 2008

தினமலரே வெளியிட்டுள்ள அந்துமணி ஃபோட்டோ




யாருன்னு கண்டுபிடியுங்க பாப்பம் ? படத்தைப் பற்றிய தினமலர் குறிப்பிலேயே க்ளூ உள்ளது.

(ரிப்பனை வெட்டுபவர் - கலெக்டர் ஜவகர்)

படம்: நன்றி: தினமலர்

----------------------------------------------------------------
பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Sunday, August 10, 2008

சென்னை திரும்பினார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 4 மாத ஓய்வுக்கு பின் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

இதெல்லாம் செய்தியா என கேட்கக்கூடாது :-) இனிமேல் அறிக்கைகளும் விவாதங்களும் தமிழக அரசியல் களமும் இன்னும் சூடு பெறலாம். Watch out this space..!




கடந்த ஏப்ரல் 7ம் தேதி கோடநாடு சென்றார். அங்கு சுமார் 4 மாதம் ஓய்வுக்குப் பின் நேற்றிரவு கோவையில் இருந்து பாரமவுண்ட் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு 9.05 மணிக்கு வந்து சேர்ந்தார்.

காரில் வெளியே வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், செங்கோட்டையன், முத்துச்சாமி, தம்பிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சேகர்பாபு, கலைராஜன், மைத்ரேயன், சுலோச்சனா சம்பத் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜெயலிதாவுடன் சசிகலா, பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் வந்தனர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 11 ஆகஸ்டு 2008

பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Thursday, August 7, 2008

அழகிரி 'அஞ்சாநெஞ்சன்' - கருணாநிதி மகிழ்ச்சி

மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.

குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.

தமிழ்த்தாயின் நன்றி!

நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.

டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.

உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.

ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.

தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஎம்எஸ் ஒரு தமிழன்...

இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.

இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.

இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.

மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, July 23, 2008

இன்று ! மன்மோகன் சிங் - அத்வானி



இதுவல்லவோ டெல்லி அரசியல் தலைவர்களின் கலாச்சாரம் ?

நேற்று பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு இன்று பாலகங்காதர திலகர் விழாவில் பிரதமரும் அத்வானியும்.

படம்: நன்றி: என்.டி.டி.வி

Monday, July 21, 2008

தயாநிதி மாறனுக்கு கி.வீரமணி பாராட்டு

மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று அறிவித்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், “ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன், திமுக கட்சிக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்’’ என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்ததை, திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது, பாராட்டுகிறது.

‘அண்ணா சொன்ன, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன்’ என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட. ‘திமுகவை அழிக்க, வேறு எவராலும் முடியாது. ஆனால், அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். அது என்றும் பொருந்தும்.

தயாநிதி மாறனின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம், முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் திராவிடர் கழகம் விடுக்கிறது. அண்ணா சொன்னது போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.


செய்தி: நன்றி: தினகரன் 22 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

பேரன்களை வாழ்த்துவது ஆபத்து: கருணாநிதி

இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவது ஆபத்தில் முடிகிறது. ஆனாலும் இந்தப் பேரன் எனக்கு எதிராகப் போய்விட மாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன் என்று மு.க.முத்துவின் மகன் முத்து அறிவுநிதியை வாழ்த்தினார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இன்று திரைப்படத் தணிக்கை என்பது அத்தனை சிரமமான விஷயமில்லை. ஆனால் நான் கதை-வசனம் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தணிக்கைத் துறைதான் திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது.

அந்தக் கால கட்டத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது சென்சாரிடம்தான். திரும்பிப்பார் என்றொரு படம். சிவாஜி நடித்தது. நான்தான் வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் தணிக்கையின்போது 4 ஆயிரம் அடிகளை வெட்டச் சொல்லி விட்டார்கள். எந்தக் காட்சியை வெட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் படத்தின் இயக்குநர் காசிலிங்கமும் தினமும் 5 மாடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

ஒரு நாள் அந்த சென்சார் அதிகாரியிடம், தினமும் இத்தனை மாடிகளை ஏறி வருகிறோமே, இதைப் பார்த்தும்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா, என்று கேட்டேன். திருப்பதி மலைக்கு வந்து போவதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவு புண்ணிய இடம்தான் இதுவும் என்றார் என் கொள்கைகளைத் தெரிந்து கொண்டே.

பதிலுக்கு நான், அங்கும் இங்கும் ஒரே ரிசல்ட்தான் என்றேன். கடைசியில் பலரும் சொன்னதற்குப் பிறகு 2 ஆயிரம் அடி வெட்டினார்கள்.

நான் வசனம் எழுதிய எந்தப் படமும் சென்சாருக்குத் தப்பியதே இல்லை.

இன்று அந்த அளவு நெருக்கடி இல்லை. நினைப்பதை, நாட்டில் நடக்கும் விஷயங்களைத் திரையில் காட்டுமளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை அருமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள் திரையுலகினர்.

நாளை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இங்கே திரைப்பட விழாவில் இவர் உற்சாகமாகக் கலந்து கொள்கிறாரே என்று கூட கண்டனங்கள் எழலாம். ஆனால் அதையும்கூட உங்களுக்காகச் செய்கிற ஒரு தியாகமாகக் கருதி தாங்கிக் கொள்கிறேன்.

தமிழ்ப் பெயர்

இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன....? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக் கூடக் கேட்கக் கூடாதா... இவ்வளவு சலுகைகள் அளித்தும் கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்.

சமீபத்தில் 70 படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவை ஆங்கிலம் அல்லது பிற மொழித் தலைப்புகள் கொண்டவை.

இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத் துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேரனை வாழ்த்துவது ஆபத்து!

இந்தப் படத்தில் என் பேரன் அறிவுநிதி ஒரு பாடல் பாடி இருக்கிறான். அவன் மேலும் மேலும் இந்தத் துறையில் புகழ் பெற வாழ்த்துகிறேன். இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவதே ஆபத்தாக முடிகிறது.

இருந்தாலும்கூட, இந்தப் பேரன் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்ற நம்பிக்கையோடு, நல்ல முறையில் வாழ்வான், என்னுடைய நிலையில் இவன் ஒருவனாவது நின்று என் பெயரைச் சொல்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் என்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, July 10, 2008

ஆற்காடு வீராஸ்வாமி அவர்களே ? நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

பல மூத்த - சூடான இடுகை பதிவர்கள் போன்ற பிரபலங்கள், ஏன் ஜெயலலிதா, ராமதாஸ், சன்டிவி + தினகரன் குழுமம் கூட உங்களை கட்டம் கட்டி காய்ச்சுகிறார்களே ?

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாளில் ஒரு முறையாவது உங்கள் பேரை உச்சரிக்கும் அளவிற்கு விவசாயம், தொழில், பள்ளி, கல்லூரி, வீடு ஏன் பெப்சி, கோக் என விற்கும் பெட்டிக்கடைக்காரர் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் மின்வெட்டை சந்திக்கின்றனர். உடனே உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை. தேவையா இது.. ? ஏதாவது செய்து மின்சாரத்திற்கு வழி பண்ணுங்க இல்லாட்டி ஆறு கோடி தமிழர்களும் தினமும் கரிச்சு கொட்டினாங்கன்னா என்னத்துக்கு ஆவறது ?

ஆற்காடு வீராஸ்வாமி அவர்களே - ஏதாவது முயற்சி எடுங்கள். அது செயலாகும் வரை பிற மாநிலங்கள், நடுவண் கிரிட் என கடன் வாங்கியாவது மின்சாரத்தை கொடுக்க முயலுங்கள். சும்மா 'அடுத்த மாசம் காத்தடிக்கும் அப்ப மின்சாரம் வரும் - அக்டோபரில் மழை வரும் அப்ப மின்சாரம் வரும்' என அறிக்கை விடவேண்டாம்.

இதுல ராமதாஸ் வேற 'தீவிரவாதிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கு'ன்னெல்லாம் பேட்டி கொடுக்குறாரு.

தமிழக மின்சாரத் துறை ஆற்காடு வீராசமிக்கு தீவிரவாதிகளுடன் நெருக்கமான தொடர்புள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.

இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.


**** **** **** ****

அப்டியே சொல்லிபோடுங்க - நீங்க நல்லவரா ? கெட்டவரா ? முதல் பாராவுல சொன்ன பலரும் ஏன் உங்களையே கட்டம் கட்டறாங்க ?

* * * * * * * * * * * * * * * * * * * * * * *


அமைச்சர் ஆற்காடு வீராசாமி மின்சார உற்பத்தியை அதிகரிக்க பாடுபட வேண்டும்


ஜெயலலிதா அறிக்கை



சென்னை, ஜூலை 11: முதல்வரும் மின்சார அமைச்சரும் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விடுத்து மின் உற்பத்தியை பெருக்க பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி வாழ்கின்றனர். மீதமுள்ள 40 விழுக்காடு மக்கள் தொழில் வளர்ச்சியை சார்ந்துள்ளனர். இந்த இரண்டுக்கும் இன்றியமையாதது மின்சாரம். ஆனால் இன்று மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு, எந்தத் துறையும் வளர்ச்சி அடையவில்லை.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை திறந்து ஒரு மாதம் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பம்ப் செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என்றால், மின் தடையால் அதற்கும் வழியில்லை. மேல்நிலை தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டு காரணமாக கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஐந்து லட்சம் விசைத் தறிகளை இயக்க முடிவில்லை. 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பனியன் கம்பெனிகளில் உள்ள நவீன இயந்திரங்கள் மின்தடையால் பழுதடைந்து விடுகின்றன. அதை நீக்க வெளிநாட்டு நிறுவனங்களை நாட வேண்டிய நிலை. இதனால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுகிறது.

அரசின் அலட்சியத்தால் அனைத்து சிறு தொழில் செய்வோருக்கும் மூன்று மாதத்தில் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர், தொழில் மையம் வைத்திருப்போர், கணினி மையம் வைத்திருப்போர், மாணவ - மாணவியர் என அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ தன் துறைக்கு சம்பந்தமில்லாத பணிகளை கவனிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். ‘பூனைக்கு மணி கட்டுவது’, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவது, தேவையில்லாமல் அடுத்தவர்களின் துறைகளில் தலையிடுவது ஆகியவற்றில்தான் அவரது நாட்டம் செல்கிறதே தவிர, மின்சார உற்பத்தியை பெருக்குவதில் நாட்டம் செல்லவில்லை.

இவர் மின்சாரத்துறை அமைச்சரா? அல்லது முதலமைச்சரின் குடும்ப விவகாரங்களுக்கு அமைச்சரா? என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது. முதலமைச்சரோ திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

மின்சார அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் இதுபோன்ற நடவடிக்கைகளால் வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விட்டுவிட்டு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மின்சார உற்பத்தியை பெருக்கவும், காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து உரிய காலத்தில் பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி: நன்றி: தினகரன் 11 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Wednesday, July 9, 2008

காமராஜர் ஆட்சி அமைப்போம்: தங்கபாலு

"நான் எந்த கோஷ்டியையும் சாரதவன், காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவேன்" என்று தமிழக காங்கிரசின் புதிய தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு, நேற்று காலை 9.28 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்றார். அவரிடம் பொறுப் பை ஒப்படைத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்தார்.



புதிய தலைவராக பொறுப்பேற்ற தங்கபாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, ஜி.ஏ.வடிவேலு, ஞானதேசிகன் எம்.பி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், காங்கிரஸ் தொண்டர்களிடையே தங்கபாலு பேசியதாவது:

எந்த குழப்பமும் இல்லாமல், கோஷ்டிகள் இல்லாமல் தமிழக காங்கிரஸ் தலைவராக செயல்படுவேன். சோனியாகாந்தியின் கரத்தை வலுப்படுத்துவதுதான் எனது லட்சியம். நான் எந்த கோஷ்டியையும் சாராதவன். எல்லா தலைவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, மக்களிடம் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்வேன். எல்லா தலைவர்களிடமும் ஒற்றுமையை உருவாக்குவேன். எல்லோரும் என்னை வாழ்த்த வந்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சோனியாகாந்தியின் தலைமையிலான ஆட்சியை கொண்டுவர அனைவரும் பாடு படவேண்டும்.

இவ்வாறு தங்கபாலு பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சோனியாகாந்தியின் கட்டளையை ஏற்று 3வது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். புதிய சூழலில் தமிழக காங்கிரசை பலப்படுத்தும் பணியை தொடருகி றேன். எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் காமராஜரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம். தமிழக காங்கிரசில் எந்த குழு அரசியலும் கிடையாது. தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து அனைத்து தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இருவரும் 25 நிமிடம் பேசினர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 10 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Tuesday, July 8, 2008

ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு பேசலாமா ? : கருணாநிதி

பெட்ரோல் இல்லை - இவர்கள் விளையாடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஊட்டியில் உட்கார்ந்துள்ளவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை ஒரு பிடி பிடித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளையொட்டி, கடந்த ஜூன் 6-ந் தேதியில் இருந்து தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி, கால்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் தங்கக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரங்கில் மின்னொளியில் நேற்று இரவு நடந்தது. 10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் திருவல்லிக்கேணியை சேர்ந்த `சீ பிரீஸ்' அணியும், திருவான்மியூரை சேர்ந்த `ஸ்கிரீன் வேர்ல்ட்' அணியும் மோதின. இதில், 108 ரன்களை முதலில் ஆடி குவித்த `சீபிரீஸ்' அணி, அடுத்து ஆடிய `சீவேர்ல்ட்' அணியை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், தென்சென்னையில் இருந்து 1,285 அணிகள் கலந்து கொண்டன. 15,420 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டார்கள். 5 மைதானங்களில் மின்னொளியில் போட்டி நடந்தன.

கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தங்கக் கோப்பையை முதல்வர் வழங்கினார். அந்த அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர, கால்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகளில் வென்ற அணியினருக்கும் கருணாநிதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இறுதிப் போட்டியை கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். முதல் பந்தை அவர் அடிக்க, அவருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பந்து வீசி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த போட்டியை முதல்வர் கருணாநிதி முழுமையாக அமர்ந்து பார்த்து ரசித்தார்.

முன்னதாக ஸ்ரீகாந்த் பேசுகையில், முதல்வர் கருணாநிதி ஒரு கிரிக்கெட் பைத்தியம். நான் ஆடிய போட்டிகளை நேரடியாக வந்து பார்த்திருக்கிறார். உலகக் கோப்பையை வென்று திரும்பியபோது எனக்கு அந்த காலத்திலேயே நிலம் கொடுத்தார்.

20 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று திரும்பிய தினேஷ் கார்த்திக்குக்கும் அவர் பெரிய பரிசு கொடுத்துள்ளார். அவருக்கு விளையாட்டை மதிக்கும் தன்மையும், அதன் மீதான ஆர்வமும் அதிகம். நான் இதனை மனதார சொல்கிறேன்.

இந்த போட்டிகளை நடத்துவதற்கான அமைச்சர் ஸ்டாலினின் ஐடியா சிறப்பான ஒன்று. நானும் இதுபோல் ரோட்டில் விளையாடி வந்தவன்தான். இந்த போட்டியில் ஆடியவர் இந்தியாவுக்கு ஆடி புகழ்பெற வேண்டும் என்றார்.

நிறைவாக முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கிப் பேசினார். அவர் கூறுகையில், தென்சென்னை திமுக மாவட்டம் சார்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த போட்டியினை மு.க.ஸ்டாலின் வளர்த்த இளைஞரணி தம்பிமார்கள் நடத்தி என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

இங்கு பேசிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் என்னை புகழ்ந்து கூறும்போது, `கிரிக்கெட் பைத்தியம்' என்றார். அது வருந்தத்தக்க வார்த்தை அல்ல. பித்தன் அல்லது பைத்தியம் ஆகியவை ஒன்றினையே குறிக்கின்றன. மிக அதிக பற்று கொண்டதை குறிப்பிடும் வார்த்தைதான் அது.

(அப்போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருணாநிதியிடம் ஏதோ கூறினார்). ஸ்ரீகாந்த் என்னிடம் இப்போது, `நான் நல்ல எண்ணத்தில்தான் அப்படி கூறினேன்'' என்றார். பரமசிவனை உண்மையான பக்தர்கள் நல்ல எண்ணத்தில்தான் `பித்தா, பிறைசூடி' என்று வாழ்த்துவது அவருக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.

கிரிக்கெட் போல் மற்ற சில விளையாட்டுகளும் இந்தியாவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களில் நானும் ஒருவன். நம் விளையாட்டுக் குழு வெளிநாட்டில் போய் வெற்றி பெற்று திரும்பினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். அவர்கள் தோல்வி அடையும்போது, அவர்கள் மேலும் பயிற்சி செய்ய வேண்டும், மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்று நான் மட்டும் அல்ல, விளையாட்டு வீரர்களும், விளையாட்டு நிபுணர்கள் எல்லாம் அறிவுரைகளை வாரி வழங்கி உள்ளனர்.

இளைஞர்கள் இந்த வயதில் இத்தகைய பயிற்சியில் ஈடுபடுவது, சில ஊருக்கு போய் பரிசு பெற்றோம் என்பதற்காக அல்ல. உடல் வலிவுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் நாட்டை வாழ வைக்க வேண்டிய சமுதாயம் என்கிற முறையிலே ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ள விளையாட்டு மிக முக்கியமானதாகும். வைக்க வேண்டியது உங்கள் கடமை.

வெற்றி பெற்றவராயினும் சரி, தோல்வியடைந்தவராயினும் சரி, ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வோடு, உடல் வலிமை பெருக்கி விளையாட்டில் வெற்றிகரமாக முன்னேற வேண்டும். உலகில் தலை சிறந்த விளையாட்டாக கிரிக்கெட் கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட விளையாட்டில் நாம் இன்னும் திறமையை காட்ட வேண்டும். நாட்டுக்கு புகழை கொடுக்க வேண்டும். இதுபோன்ற திறமை வேறு எங்கும் இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், என்னை நிருபர் போல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அவர், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்று என்னை கேட்டார். நான் எப்போதும் ஜாக்கிரதையாக பதில் சொல்பவன். நான் தமிழ்நாட்டு வீரர் யாரையாவது பிடிக்கும் என்று சொன்னால், நான் குறிப்பிடாத தமிழ்நாட்டு, இந்திய வீரர்களுக்கு வருத்தம் ஏற்படும். அதனால் நான் எனக்கு பிடித்த வீரர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் கிளைவ் லாயிட் என்று உள்நாட்டினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சொன்னேன்.

அவரும், எனக்கும் லாயிட்டைத்தான் பிடிக்கும் என்று சொல்லி நான் கையாண்ட முறையையே கையாண்டார்.

கடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபிறகு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நாடு திரும்பியபோது, அரசு சார்பில் அவரை கவுரவித்த பெருமை எனக்கு உண்டு. அவர் ஆடிய விதத்தில் தொடர்ந்து ஆடி இருந்தால் உலகின் முதல் நிலை வீரராக ஆகியிருப்பார். நான் உலக அளவில் ஏன் தொடர்ந்து போகவில்லை என்று கேட்டால்-கடைசியில் அவர் நம் வட்டத்துக்கே வந்துவிட்டார்.

உலகப்புகழ் பெற்ற அவர், வட்ட அளவில் ஆடப்படும் இதுபோன்ற கிரிக்கெட் ஆட்டங்களில் ஆர்வத்தை காட்டும்போது, எந்த அளவுக்கு இளைஞர்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உள்ளது என்பது புரிகிறது. இந்த விளையாட்டின் மீது அவர் காட்டும் உற்சாகத்தை வரவேற்கிறேன்.

பெட்ரோல் இல்லை- இவர்கள் விளையாடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஊட்டியில் உட்கார்ந்து கொண்டுள்ளவர்கள் இப்படி சொல்கிறார்கள். அதை கொட்டை எழுத்தில் போடும் பத்திரிகைக்காரர்களும் உள்ளார்கள் என்றார் கருணாநிதி.

செய்தி: நன்றி: Thatstamil