Tuesday, January 20, 2009

எந்த சமூகத்தையும் இழிவாகப் பேசியதில்லை - கருணாநிதி


என் இளமை காலந்தொட்டு இன்று வரை ஒரு சமூகத்தையும், பிரிவையும் கேலி கிண்டல் செய்தோ, தாக்கிப் பேசியோ எழுதியோ; நாகரீகக் குறைவாக இதுவரை நடந்து கொண்டதில்லை.
அதனால் தான் சிலப்பதிகாரத்தை "பூம்புகார்" திரைக்காவியமாக நான் எழுதிய போது, பொற்கொல்லர் மீதிருந்த பழியைத் துடைக்கும் வகையில் திரைக்கதையை மாற்றி அமைத்தேன்.




நான் தாக்கப்பட்ட போதும் கேலி செய்யப்பட்ட போதும் குற்றம் சுமத்தி எரிச்சலூட்டப்பட்ட போதும்; பதிலுக்குப் பதில் என்று பண்பற்ற முறையில் பேசிப் பழகியதுமில்லை.


1957ம் ஆண்டு குளித்தலைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தேன்.
11.7.1957 அன்று சட்டமன்ற உறுப்பினர்களின் மேசைகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்களின் பெயர்கள் அச்சியற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதை நான் படித்துப் பார்த்த போது; மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இசைவேளாளர் என்று இருந்தது. அதை தொடர்ந்து அன்று நடந்த அவை நடவடிக்கையின் ஒரு பகுதி வருமாறு:

கருணாநிதி: இங்கே வைக்கப்பட்டுள்ள பட்டியலில் சாணான் என்றும் வண்ணான் என்றும் குறிப்பிடபட்டிருக்கிறது. அதில் ன் என்ற எழுத்தை மாற்றி ர் என்ற எழுத்தைப் போட்டு பட்டியல் தயாரிக்க அரசாங்கம் முன் வருமா?

அமைச்சர் கக்கன்: கருணாநிதி சொன்னது மாதிரி மாற்றம் செய்வது தான் சரி.

அமைச்சர் சி. சுப்பிரமணியம்: ‘ன்’ என்ற எழுத்தை போட்டிருப்பதினால் மரியாதை குறைந்து விடாது. சிலர் டிரைவர் என்பதை டிரைவன் என்று மரியாதை குறைவாக சொல்வதாக நினைத்து சொல்வதுண்டு. இது அப்படி அல்ல. அவர்களின் ஜாதிப் பெயரின் படி போடப்பட்டிருக்கிறது. இதனால் மரியாதைக் குறைவு ஒன்றுமில்லை.

கருணாநிதி: இந்தப் பட்டியலிலே மருத்துவர், இசை வேளாளர் என்றெல்லாம் மதிப்பு கொடுத்து உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் சி. சுப்பிரமணியம்: அதில் மதிப்பு ஒன்றுமில்லை.

அமைச்சர் கக்கன்: இந்தப் பிரச்னை குறித்து சென்னை அரசு பரிசீலனை செய்யும் என்று இதற்கு முன்னரே நான் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் கக்கன் அன்று இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சில நேரங்களில் திமுக உறுப்பினர்களோ அல்லது திமுக அமைச்சர்களோ, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிவிட்டால்; அந்தப் பேச்சு குறிப்பை, சட்டமன்ற நடவடிக்கை குறிப்பிலிருந்து அகற்றி விடுமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் ஒரு கட்சியிடம் இன்னொரு கட்சி கடைபிடிக்க வேண்டிய அரசியல் நாகரீகம்.
ஒரு முறை எதிர் வரிசையில் இருந்த கற்றறிந்த நண்பர்; முதலமைச்சராக இருந்த என்னை நோக்கி 'உங்கள் ஆட்சி "மூன்றாந்தர ஆட்சி" என்று முஷ்டியை உயர்த்தி முரட்டுத்தனமான சொற்களை பயன்படுத்தி ஏசிட முற்பட்ட போது சட்ட மன்றத்தில் கழக அமைச்சர்களும், உறுப்பினர்களும் கடுங்கோபம் கொண்டு எழுந்து விட்டனர்; அவரை மறுத்து பேசிட!
உடனே நான் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு; ‘‘மூன்றாந்தர ஆட்சி என்று எதிர் வரிசை நண்பர் சொன்னதில் குற்றமில்லை. அவர் நமது ஆட்சியை "நாலாந்தர ஆட்சி" என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆம்! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர எனப்படும் பிரிவுகளில் இது நாலாந்தர சூத்திரர்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி என்றுதானே நண்பர் குறிப்பிடு கிறார்’’
என நான் சொன்னதும் அந்த நண்பர் உள்பட மன்றமே மவுனமாயிற்று. திருச்சியிலிருந்த தந்தை பெரியாருக்கு இந்நிகழ்ச்சி இளவல் வீரமணி மூலம் கூறப்பட்டு; அவர் என்னைப் புகழ்ந்து பெருமை கொண்டார்.

எனவே பொது வாழ்க்கையில் பதில்களே, விளக்கங்களோ, அரசியல் அறிக்கைகளோ சூடாக மட்டுமிருந்து சுவையற்று போய் விடுமேயானால்; பண்பாடும் பட்டொழிந்து போய்விடும். அண்ணா பேசிய ஒரு கடற்கரை கூட்டத்தில் என்.வி.நடராசன் பேசும்போது, 'இனிமேல் காங்கிரஸ் மந்திரிகள் வந்தால் கல் வீசுவோம்' என்று கர்ச்சனை செய்து விட்டார். மேடையிலிருந்த அண்ணா சட்டென்று எழுந்து, Ôநடராசன் இப்போது பேசிய கல் வீசுவோம் என்ற வார்த்தைகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிறகு பேசலாம் என்று கட்டளையே இட்டார். என்.வி.நடராசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் பேச முடிந்தது.

இப்படி பண்பாடும் அரசியல் நாகரீகமும் கற்றுத் தந்த ஆசானாம் அண்ணாவிடம் பயின்ற ஒருவனின் வேண்டுகோளாக நமது கட்சியை சேர்ந்தோர் உள்ளிட்ட எல்லாக் கட்சியினருக்கும் நான் பணிந்து சமர்ப்பிப்பது:

மாற்று கட்சியினரையும் மதித்திடுவோம்
‘‘மறைந்த தலைவர்களின் சிலைகளை மாசுபடுத்த மாட்டோம்’’
வில்லம்பு பட்ட புண் உள் ஆறும்; ஆறாதே சொல் அம்பு பட்ட புண்
என்பதை மறவாமல்-
விரோதிகளிடமும்;
பண்பு காட்டிடுவோம்
தவறுகளை நாம் திருத்திக் கொள்வோம்-
தவறு செய்பவர்களையும்; திருத்தத்
தயங்காமல் முற்படுவோம்!
இனியரு தவறு செய்து இழிநிலை
கொள்ள மாட்டோம்
என இன்றே சபதம் ஏற்போம்.

புதுச்சேரியில் இளம் தலைவர்
ராஜீவ் காந்தி அவர்களின்
சிலை மாசுபடுத்தப்பட்ட
அநாகரீக செயலைக்
கண்டும் கேட்டும்
இதை எழுத நேரிட்டது.


இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinakaran

Wednesday, January 14, 2009

குமுதத்தில் 10 வலைப் பதிவர்கள்

இந்த வார குமுதத்தில் (78ஆம் பக்கத்தில்) தமிழ் வலைப்பூவின் 10 டாப் வலைப்பதிவர்கள் பட்டியல் வந்துள்ளது. (தளவாய் சுந்தரம்)

இட்லிவடை, லக்கிலுக், ஜ்யோவ்ராம்சுந்தர், நாகார்ஜுனன், பரிசல்காரன்,அதிஷா, ஷோபாசக்தி, பத்ரி சேஷாத்ரி, பிகேபி, லிவிங் ஸ்மைல் வித்யா.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குமுதமும் Pay Site ஆகப் போகிறது.

Tuesday, January 13, 2009

அழகிரிக்கு திமுகவை காக்கும் பொறுப்பு தரப்படும் - கருணாநிதி

காத்திரு தம்பி அழகிரி! கட்டளை வரும்.

நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.

திருமங்கலம் வெற்றிச் செய்தியோடு மு.க.அழகிரி, வெற்றி பெற்ற வேட்பாளர் லதா அதியமானுடன் மதுரையிலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார்.

அவர்களுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும் உடன் வந்தார். விமான நிலையத்தில் இருந்து லதா அதியமானை திறந்த வேனில் அழைத்துக் கொண்டு அழகிரி, ஸ்டாலின் ஊர்லவமாக வந்தனர்.


படம்: நன்றி: Dinakaran

வழியெங்கும் திமுகவினர் பெரும் திரளாக கூடி வரவேற்பளித்தனர். அண்ணா அறிவாலயம் வந்ததும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் லதா அதியமான் வாழ்த்து பெற்றார்.

செய்தி: நன்றி:thatstamil

Monday, January 12, 2009

சொன்னது நடந்தது..! : மு.க.அழகிரி

40 ஆயிரம் வித்தியாசம் சொன்னது நடந்தது மு.க.அழகிரி பேட்டி

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், வாக்கு எண்ணிக்கை நடந்த மருத்துவக்கல்லூரிக்கு மு.க.அழகிரி வந்தார். அவரை ஏராளமான தொண்டர்கள் வரவேற்று, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.



அழகிரியிடம் வேட்பாளர் லதா அதியமான் ஆசி பெற்றார். பின்னர், அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக அரசின் சாதனைகளுக்காகவும், ஏழைகளுக்காக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காகவும் திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. வெற்றிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள், தோழமைக்கட்சி தலைவர்கள், அயராது உழைத்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரசாரத்தின் போது, என்மீது அவதூறு பரப்பிய வைகோ மீது நான் ஏற்கனவே கூறியபடி வழக்கு தொடருவேன். ஜெயலலிதா உட்பட எதிர்க்கட்சியினர் என்மீது கூறிய அவதூறு பிரசாரங்களை மக்கள் நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசின் சாதனைகள் அதிகரித்து வருவதால், இதுவரை நடந்த 3 இடைத்தேர்தல்களிலும் வாக்கு வித்தியாசமும் அதிகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதை விட சிறப்பான வெற்றிபெறும் வகையில், 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுவோம். இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

செய்தி: படங்கள்: நன்றி: Dinakaran





சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்து இலங்கை பிரச்னை பற்றி பேசினர்.




திருமங்கலத்து யானை: கருணாநிதி கவிதை


உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார்& உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறு கண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் ஈட்டி &
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும் &குறை
பல சொல்லிப் பேசும் கும்பலை & வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் & உன்னால்
பழிதீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஓறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!

Tuesday, January 6, 2009

பிரதர்ஸ்..!!!



திருமங்கலம் தொகுதி பச்சகோம்பன்பட்டியில் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்