Friday, August 17, 2007

கருணாநிதி தூக்காத காவடியா ?: விஜயகாந்த்

டாடா தொழிற்சாலை குறித்த பிரச்சனையில் தமிழக அரசு அமைதியாக இருந்தாலே அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

நாட்டின் 60வது சுதந்திரதினத்தையொட்டி நேற்று தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை அமைவது குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் தரப்பு நிலையை மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கையாக கொடுக்கின்றன.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் டாடா தொழிற்சாலை நிறுவ திட்டமிடப்பட்டதாக கருணாநிதி சொல்கிறார். அப்போது இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படவில்லை.

அனைவரும் செட்டப் செய்துதான் கருத்து கேட்க குழுவை அனுப்பி இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் காவடி தூக்குகின்றனர் என்று முதல்வர் கிண்டல் செய்துள்ளார்.

நான் கேட்கிறேன், இவர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எத்தனை முறை காவடி தூக்கியுள்ளார். மக்களுக்காக எதிர்க்கட்சிகள் காவடி தூக்கினால், முதல்வர் டாடாவுக்காக காவடி தூக்குகிறாரா.

திமுக மற்றும் அதிமுகவால் தான் இவ்வளவு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அமைதியாக இருந்தாலே அரசியல்வாதிகளும் அமைதி காத்து விடுவார்கள்.

டாடா தொழிற்சாலை விவகாரமும் எந்த பிரச்சனையின்றி சுமூகமாக முடிந்துவிடும்.

எதிர்க்கட்சியினர் தொகுதிகள்-புறக்கணிக்கும் அரசு:

ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி அரசாங்கம், எதிர்க் கட்சியானாலும் சரி, கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் சரி மாற்றுக் கட்சிகளின் சட்டமன்ற தொகுதிகள் உட்பட சாதாரண வார்டு வரை எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்காக செய்யவில்லை.

இந்த விஷயத்தில் திமுக அரசு எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கிறது என்றார் விஜயகாந்த்

Nandri: Source: Thatstamil