Sunday, September 30, 2007

இந்தியில் பேசிய கருணாநிதி - சி.என்.என். ஐ.பி.என்

தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியில் பேசியதாக சி.என்.என். ஐ.பி.என் தெரிவிக்கிறது.
"இந்துஸ்தான் ஹை தேஷ் ஹமாரா, ஜான் சே ஹை ஹம்கோ பியாரா, ஹிந்தி(து?) முஸ்லீம், சீக் இசாயீ ஆபஸ் மேன் ஹை பாய் பாய்" என மேற்கோள் சொல்லி பேசியதாகவும் செய்தி.

முழு செய்திக்கும் சுட்டி இங்கே: நன்றி: சி.என்.என்.ஐபிஎன்.

Defying SC ban, MK pulls a 'fast' one; speaks Hindi

Sandhya Ravishankar / CNN-IBN

Published on Monday , October 01, 2007 at 08:17 in Nation section


“Hindustan hai desh hamara, jaan se hai humko pyaara, Hindi, Muslim Sikh Isaai, aapas mein hain bhai bhai” (India is our country and Hindus, Muslims, Sikhs and Christians are all brethren.)


That’s Tamil Nadu Chief Minister M Karunanidhi, pioneer of the state’s anti-Hindi agitation, speaking the language he campaigned against many years ago - all to prove that he is secular and his comments on Lord Ram were not meant to hurt Hindu sentiments.


The DMK patriarch has called for a voluntary hunger strike in Tamil Nadu to press for the speedy implementation of the controversial Sethusamudram project. In fact, he is ready to defy the Supreme Court ban on the bandh called by him.


“I respect people's decision more than any court's verdict,” he said, addressing a meeting of party workers in Chennai.


Karunanidhi on Sunday accused state Opposition leader and AIADMK chief J Jayalalithaa of hypocrisy, pointing out how her own election manifesto in 2006 had promised to implement the project.


Pushed into a corner, Congress too, finally, broke its silence.


"How will this benefit Tamil Nadu? Well, it will bring ports and industry. They're spending Rs 2,500 cr on it. Where will this money go? It'll all come back to the people of Tamil Nadu,” Congress State Secretary M Krishnaswamy said.


While Karunanidhi accused his opposition of using Ram politics with an eye on the possible mid-term polls, his own coalition partners like Thol Thirumavalavan of the Dalit Panthers of India used Ram rhetoric to woo his Dalit electorate. Many allies like Tha Pandian of the CPI used his signature rebellion to rouse his atheist Communist votebank.


But amidst the political melee, it was Union Shipping Minister TR Baalu who seemed to have had the last word.


“I promise you that the first ship will go through the Sethusamudram channel in front of your eyes,” he said.


For now, it seems the battle, assuming epic proportions, will be fought in Tamil Nadu and the response to Karunanidhi's so-called voluntary strike, which may invite contempt of court proceedings, could be an indicator of the public mood in the state.

மூக்குக் கண்ணாடி பறிமாற்றம் ?

மற்ற செய்தித்தாள்களிலோ, இணைய தளத்திலோ வந்துள்ளதா என தெரியவில்லை. ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் எனக்குப் பட்டது. கருணாநிதியின் மனைவியார் கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறு தோன்றும் முதல் படம் இதுவென நினைக்கிறேன். அதுபோலவே சாதா கண்ணாடி அணிந்த கருணாநிதி படமும்.

சூப்பர் ஸ்டார் ? அடுத்த படம் எப்போ சார் ?




முதல்வர்-ரஜினி சந்திப்பு

சென்னை, செப். 30: முதலமைச்சர் மு.கருணாநிதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை அவரது கோபாலபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் உடன் இருந்தார். "சந்திரமுகி' படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த்துக்கு தமிழக அரசு சிறந்த நடிகர் விருது அறிவித்திருந்தது.
.
விருதுகள் அறிவிக்கப்பட்ட போது வெளியூரில் இருந்ததால் ரஜினிகாந்த், முதலமைச்சரை சந்திக்கவில்லை. இன்று காலை தான் அவர் சென்னை திரும்பினார் என்றும், உடனடியாக முதலமைச்சரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.


படம்/ செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Friday, September 28, 2007

பந்த்துக்கு தடை இல்லை - ஆனால் ......

டவுசர் கிழியும் ஆனால் கிழியாது என்பது போல

அக்டோபர் 1ந் தேதி திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பந்த்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும் பந்த்தின்போது பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் அரசு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் வரும் 1ந் தேதி பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, டிராபிக் ராமசாமி ஆகியோர் பொது நல மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோரை கொண்ட முதலாவது அமர்வு நேற்று விசாரித்து. அதில் அவர்கள் கூறியதாவது:
அரசியல் கட்சிகள் விடுத்துள்ள இந்த பந்த்துக்கு அடிப்படை ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அரசியல் கட்சிகள் கூறியிருப்பது பந்த். அதை வேலை நிறுத்தம் என்றோ, கடையடைப்பு போராட்டம் என்றோ கூறுவதை ஏற்க முடியாது.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 24.10.2007க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
பந்த் நடைபெறும் நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும், மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு இராது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதன்படி மாநில அரசு, காவல்துறை டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அக்டோபர் 1ந் தேதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ கட்டாயப்படுத்தி குடிமக்களின் அன்றாட வேலையில் குறுக்கிட்டால், அப்படி குறுக்கிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து உட்பட எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அன்றைய தினம் இயல்பாக செயல்பட அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதை தடுக்க யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிகைகளில் விளம்பரம் வாயிலாக இதனை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருந்தனர்.


Source: Nandri: Maalaisudar

Thursday, September 27, 2007

படம் - இன்னுமோர் புதிய காப்பி

பல வருடங்களாக கருணாநிதி பங்கேற்கும் இந்த நிகழ்வுப் படங்கள் காணக்கிடைக்கும். இந்த வருடம் விஜயகாந்தும் - தற்போது மருத்துவர் ராமதாசும் மற்றும் கார்த்தி சிதம்பரம்








படம் நன்றி: மாலைச்சுடர்

Wednesday, September 26, 2007

பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்

ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அனைத்தையும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.

பள்ளிப் பாடநூல்களை நியாயமான விலையில் ஒரே மாதிரியாக, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க, கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் நிறுவப்பட்டது.
இதன்மூலம் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழிகளில் 502 தலைப்புகளில் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழை முதல் மொழியாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெளிச்சந்தையிலும் பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் முன்னேற்றம், ஆசிரியர் நலன் கருதி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட நூல்களை இணைய தளத்தில் வெளியிட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு Ôநிக்Õ நிறுவனத்துடன் இணைந்து பணிகள் நடந்தன. இதையடுத்து 322 தலைப்புகளில் பாடப் பகுதிகள் இணைய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுப் பாடநூல் தலைப்பு 162 (தமிழ் வழிப் பாடநூல் தலைப்புகள் 90, ஆங்கில வழி பாடநூல் தலைப்புகள் 72) உள்ளன. சிறுபான்மை பாடநூல் தலைப்புகள் 160 உள்ளன.
வகுப்பு வாரியாக பார்த்தால், 1 முதல் 5ம் வகுப்பு வரை 95 தலைப்புகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 73 தலைப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 154 தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடங்களை, விருப்பம்போல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இந்த இணைய தளம் குறித்து அறிய விரும்புவோர் http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் பார்க்கலாம்.

இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், Ôதற்போது 1150 மேனிலைப்பள்ளிகளிலும், 1500 உயர்நிலைப்பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில் இந்த பாட நூல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்கலாம். மேலும் பள்ளிப் பாடத்திட்டம் 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் திருத்தம் செய்யப்படுகின்றன.
ஆனால் தேவைக்கேற்ப அவற்றில் ஆண்டுதோறும் மாறுதல்களை கொண்டு வருவதற்காக பாடத்திட்ட மேம்பாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறதுÕ என்றார்.

இணைய தளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலிங்கம் தலைமை தாங்கினார்.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் எம்.விஜயகுமார், Ôநிக்Õ நிறுவன துணை இயக்குனர் ஜெனரல் மோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்

Monday, September 24, 2007

இன்றைய படம் - புத்தம் புதிய காப்பி


இன்றைய படம் - புத்தம் புதிய காப்பி


நன்றி: தினகரன் (24-09-2007)

Thursday, September 20, 2007

'......' ஒரு குடிகாரர்: '......' - சி.என்.என் ஐபிஎன்

மொதல்ல விஜயகாந்தப் பத்தி சொன்னார் - அப்புறம் அம்மாவ ஜாடையா சொன்னார். இப்போ இவரப்பத்தி. மத்தவங்களை குடிகாரர் என சொல்லுவதில் அப்படியென்ன ஆனந்தமோ ?


செய்தி சுட்டி: CNN-IBN

Sunday, September 16, 2007

இரண்டு கட்சியினரும் திருடர்கள் - விஜயகாந்த்

லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி ஏன்? விஜயகாந்த் அறிவிப்பு
தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர தயக்கமாகவுள்ளது, என்று விஜயகாந்த் பேசினார்.

திருவண்ணாமலை மற்றும் வடசென்னை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க.,வில் இணைந்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் இவ்விழா நேற்று நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:

அரசியல் கட்சி நடத்துவதற்கு நிறைய தகுதிகள் வேண்டும். அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என பலமுறை யோசித்து தான் நான் கட்சி துவக்கினேன். கட்சியை துவங்குவது சுலபம்; அதை நடத்துவது தான் கடினம். நான் பெண்களை பற்றி அதிகம் பேசுவதாக கூறுகின்றனர். கட்சித் துவங்கியது முதல் எனக்கு பல சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள்தான் எனக்கு அதிகம் ஆறுதல் கூறுகின்றனர். அதனால்தான் அவர்களை பற்றி நான் உயர்வாக பேசுகிறேன்.

நான் பொய் சொல்லமாட்டேன் என்பதை நம்பித்தான் இன்றைக்கு இளைஞர்கள் என் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். நான் நினைத்தால் குடிசையில் இயங்கும் கட்சி அலுவலகத்திற்கு வராமல் சூஏசி' ரூமிலேயே இருந்திருக்க முடியும். என்னை நம்பியுள்ள மக்களுக்காக நான் என்றும் அவர்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். அவர்களுக்காக நான் மழையில் நனையவும், வெயிலில் காயவும் தயாராக இருக்கிறேன். தி.மு.க., கூட்டணி கட்சியினர் மணல் கொள்ளையில் ஆதாரம் இருப்பதாகவும், கல்லுாரி சீட் விவகாரத்தில் ஆதாரம் இருப்பதாகவும் கூறுவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.

ஜாதி, மத உணர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் மக்களோடு மக்களாக என்னால் பழக முடிகிறது. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அரசு கேபிள் சூடிவி' ஆரம்பிக்கப்படுகிறது. அதில்வரும் விளம்பர வருமானத்தை அரசு எடுத்துகொண்டு கேபிள் சூடிவி' இணைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பொழுது போக்கு அம்சம் மக்களுக்கு தேவை என்பதால், இலவச கலர் சூடிவி' வழங்கப்படுகிறது என்று கூறியவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். விருத்தாசலம் தொகுதியில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தது தவறு என்று ஒருவர் வசைப்பாடி கொண்டிருக்கிறார். எரியும் அடுப்புக்கு பக்கத்தில் கூட தூங்கலாம்; ஆனால், பசி இருந்தால் தூங்க முடியாது.

பசியின் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் ஏழை, நடுத்தர மக்கள் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையை தயாரித்தேன். அதில் உள்ள சில திட்டங்களை மாற்றி அரசு இன்று தங்கள் கண்டுபிடிப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முடிய வேண்டிய கத்திப்பாரா மேம்பாலப்பணி இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. மேம்பாலத்தின் வயது 25 ஆண்டுகள் என்று கூறுவார்கள். அதில் ஏழு ஆண்டுகள் கட்டுமானப்பணி முடிவதற்குள் கழிந்து விடும்போல் இருக்கிறது. தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர தயக்கமாகவுள்ளது. மத்திய அரசை அவர்கள் ஆளாவிட்டாலும் அமைச்சர்களை வைத்து கொண்டு கோடிகளை சுருட்டுகின்றனர். இதை தடுக்கத்தான் பார்லிமென்ட் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அறிவித்துள்ளேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Source: Nandri: Dinamalar

Wednesday, September 12, 2007

சுனாமி எச்சரிக்கை - இந்தோனேசிய பூகம்பம்

சுனாமி எச்சரிக்கை - இந்தோனேசிய பூகம்பம்

இந்தோனேசியாவில் இன்று மாலை இந்திய நேரப்படி 4.40க்கு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தினால் (ரிக்டர் அளவு 7.9) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதி நாடு வாழ் மக்களுக்குத் தெரிவிக்கவும்.

Powerful earthquake hits Indonesia, tsunami warning issued

Jakarta, Sept. 12 (AP): A powerful earthquake hit Indonesia today, causing buildings to sway strongly in the capital, and authorities issued a tsunami warning for much of the Indian Ocean region.

The US Geological Survey said the quake had a preliminary magnitude of 7.9 and hit at about 6:10 p.m. (1640 IST). It was centered about 15.6 kilometers underground in the southern Sumatra area, it said.

The Pacific Tsunami Warning Center issued a tsunami warning for wide areas of the region.

"Earthquakes of this size have the potential to generate a widespread destructive tsunami that can affect coastlines across the entire Indian Ocean Basin," it said.

In Jakarta, tall buildings swayed for several minutes, and occupants rushed down the stairs to escape.

Source: http://www.hindu.com/thehindu/holnus/000200709121712.htm

http://earthquake.usgs.gov/eqcenter/recenteqsww/Quakes/quakes_all.php

MAP 7.9 2007/09/12 11:10:26 -4.517 101.382 30.0 SOUTHERN SUMATRA, INDONESIA

Tuesday, September 11, 2007

தி.மு.க., கூட்டணியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்

தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகல் : டி.ராஜேந்தர் அதிரடி

சென்னை : தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகுவதாக லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று அவர் கூறியதாவது : தி.மு.க., கூட்டணி தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

source: Nandri: Dinamalar

Monday, September 10, 2007

கருணாநிதி அதிரடி ? மாமல்லபுரத்தில் ஆலோசனை

6 மந்திரிகளின் இலாகாக்களில் மாற்றம் ?? கருணாநிதி அதிரடி - மாமல்லபுரத்தில் ரகசிய ஆலோசனை

தமிழக அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, என்.கே.கே.பி.ராஜா, கே.பி.பி.சாமி உட்பட 6 அமைச்சர்களின் இலாகாக்களை அதிரடியாக மாற்ற முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இன்று மாமல்ல புரத்தில் அவர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை 2006 மே 13ந் தேதி பதவியேற்றது. 30 மந்திரிகள் உள்ளனர். இதில் சில மந்திரிகளின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு திருப்திகரமாக இல்லையென்று கூறப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருடைய இலாகாவை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பரிதி இளம்வழுதி, பெரிய கருப்பன், கே.பி.பி.சாமி, என்.கே.கே.பி.ராஜா ஆகிய அமைச்சர்களின் செயல் பாட்டில் முதலமைச்சருக்கு திருப்தி இல்லையென்று கூறப்படுகிறது. ஆகவே அவர்களின் இலாகாவையும் மாற்ற முதலமைச்சர் திட்ட மிட்டிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அவர் இன்று காலை மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருடன் அமைச்சர் பொன்முடி சென்றதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் தனியாக புறப்பட்டுச் சென்று முதல்வருடன் ஆலோசனை யில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருப்திகரமாக செயல்படாத அமைச்சர்களின் இலாகாவை மாற்றுவது தொடர்பாகவும், ஒரு சிலரை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் ஆவுடையப்பனை அமைச்சராக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை அமைச்சராக ஆக்கினால் துணை சபாநாயகராக இருக்கும் வி.பி.துரைசாமியை சபாநாயகராக பதவி உயர்த்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

இது குறித்து விரைவில் முடிவெடுத்து முதல்வர் அமைச் சரவையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் திமுக அரசுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுத்து வரும் நெருக்கடி குறித்தும் அதை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சேலம் ரெயில்வே கோட்ட திறப்பு விழா, அண்ணா பிறந்தநாள் விழா, கலைஞர் தொலைக்காட்சி துவக்க விழா ஆகியவை குறித்தும் முதல்வர் கருணாநிதி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Source: Nandri: Maalaisudar

Sunday, September 9, 2007

சாய்பாபா - ஸ்டாலின், துரைமுருகன் சந்திப்பு

புட்டபர்த்தி சென்று சத்ய சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சென்னையில் கூவம் நதியை சுத்தப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்பு அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.


Photo courtesy: Dinamalar

உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்றனர். இவர்களுடன், அகில இந்திய சத்ய சாய் சேவா சங்கத் தலைவரும், "டிவிஎஸ்' நிர்வாக இயக்குனருமான வேணு சீனிவாசன், தொழிலதிபர் சேதுராம சீனிவாசன் ஆகியோரும் சென்றனர். புட்டபர்த்தியில் இரவு தங்கிய ஸ்டாலின், நேற்று காலை எழுந்ததும் அங்கு, "வாக்கிங்' சென்றார். பின்னர், சாய் அறக்கட்டளை நடத்தி வரும் பிரமாண்டமான மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், திருமண மண்டபம், நுõலகம் போன்றவற்றை சுற்றிப் பார்த்தார். இதன்பின், சத்ய சாய்பாபாவை அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, ஏற்கனவே சாய்பாபா அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருஷ்ணா நீர் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து ஸ்டாலின் விவரித்தார். தற்போது, பூண்டி வரை கால்வாய் சீரமைப்புப் பணிகள் நடந்து வருவது குறித்தும் பாபாவுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு சாய்பாபா வந்திருந்த போது, கூவம் நதியை சுத்தப்படுத்தும் பணியை சாய் அறக்கட்டளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு உதவுவதாக சாய்பாபாவும் உறுதியளித்திருந்தார். இதை சாய்பாபாவிடம் நினைவுபடுத்திய ஸ்டாலின், கூவம் நதியை சுத்தப்படுத்துவதோடு இருபுறமும் கான்கீரிட் தடுப்பு அமைத்துத் தர உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான வரைவு திட்டத்தையும் சாய்பாபாவிடம் ஸ்டாலின் கொடுத்ததாக தெரிகிறது. பூண்டி வரையிலான கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும், நடைபெற இருக்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என சாய்பாபாவிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். இருபது நிமிடங்களுக்கு மேல் நடந்த இச்சந்திப்பு முடிந்ததும், புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னை திரும்பினார்.


Source: Nandri: Dinamalar

Friday, September 7, 2007

ரஜினி கமல் திடீர் சந்திப்பு !

ரஜினி கமல் திடீர் சந்திப்பு ! இணைந்து நடிக்க திட்டம்?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், கலைஞானி கமல்ஹாசன் திடீர் என சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளையும், பல்வேறு யூகங்களையும் எழுப்பியுள்ளது. இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூற்பபடுகிறது.

ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் முதலில் இந்த சந்திப்பு நடந்தது. ரஜினியும், கமலும் அங்கு நெடுநேரம் பேசியுள்ளனர். பின்னர் கமலும், ரஜினியும் சேர்ந்து மதிய உணவையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

அதன் பின்னர் அடுத்த நாள் ரஜினியை தனது நீலாங்கரை வீட்டுக்கு கமல் அழைத்துள்ளார். ரஜினியும் அங்கு சென்று கமலுடன் மதிய உணவு அருந்தினார். அன்று இரவு 11 மணி வரை இருவரும் நீண்ட நெடிய விவாதத்தை நடத்தியுள்ளனர்.

இருவரும் ஒரு கதை குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அந்தக் கதையின் நாயகனாக ரஜினி நடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனும் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் அரை மணி நேரம்தான் வருவார் என்று தெரிகிறது. ஆனால் அவரது கேரக்டர் படு திருப்புமுனையான கேரக்டராம்.

இது இரு நண்பர்களின் கதை. இருவரும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்களாம். இந்தக் கதையை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கக் கூடும் எனவும் தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் இரு இமயங்களும் சந்தித்து இரண்டு நாட்களாக டிஸ்கஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் இணைந்து நடித்தால் அது தமிழ்த் திரையுலகின் ரெக்கார்ட் படமாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை

Source: Nandri: Thatstamil

Thursday, September 6, 2007

ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது

ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது
ஜோதிகா, ப்ரியாமணிக்கும் விருது


தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரமுகி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிகாந்த்திற்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் கிடைத்துள்ளன. இதேபோல ஜோதிகா, ப்ரியா மணி ஆகியோருக்கு சிறந்த நடிகைகளுக்கான விருது கிடைத்துள்ளது.

2005 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்.

2005ம் ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்கள்:

சிறந்த நடிகர் ரஜினிகாந்த் (சந்திரமுகி)
சிறந்த நடிகை ஜோதிகா (சந்திரமுகி)
சிறந்த வில்லன் பிரகாஷ் ராஜ்.
சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக்.
சிறந்த இயக்குநர் ஷங்கர்.

சிறந்த படங்கள் சந்திரமுகி, கஜினி.
2வது இடம் அந்நியன்.
3வது இடம் தவமாய் தவமிருந்து.

சிறந்த குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்.
சிறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை விஜய், சூர்யா பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசை மீரா ஜாஸ்மின் பெறுகிறார்.

2006ம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நடிகர் கமல்ஹாசன்
சிறந்த நடிகை ப்ரியா மணி
சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு.
சிறந்த இயக்குநர் திருமுருகன்.
சிறந்த படம் வெயில்.
2வது இடம் பருத்தி வீரன்.
3வது இடம் திருட்டுப் பயலே.

சிறந்த குணச்சித்திர நடிகர் நாசர்.
சிறந்த வில்லன் பசுபதி.
சிறந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை கார்த்தியும், பக்ரூவும் பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு சந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

2006ம் ஆண்டுக்கான கலை வித்தகர் விருதுகள்

அண்ணா விருது ராம.நாராயணன்.
கலைவாணர் விருது விவேக்.
ராஜா சாண்டோ விருது தங்கர் பச்சான்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் தாமரை.
எம்.ஜி.ஆர். விருது அஜீத்.
கவியரசு கண்ணதாசன் விருது பா.விஜய்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது விக்ரம்.
தியாகராஜ பாகவதர் விருது டி.எம்.செளந்தரராஜன்.


சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கி கலைஞர்களைக் கெளரவிப்பார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Nandri: Thatstamil

Wednesday, September 5, 2007

நான் கூட இப்போது ஒரு சாஸ்திரி தான் - கலைஞர்

சென்னை கலைவாணர் அரங்கில் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலைத்துறையில் செயற்கரிய செயல்புரிந்த கலைஞர் களுக்கு 2006 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில், பொற்பதக்கங்களை வழங்கி உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், "தமிழின் பெயரால் ஒருவரைக் குற்றம் சொல்லி குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி தமிழ் உணர்வே இல்லை என்று சொல்வது நல்லதல்ல. எல்லோரும் சேர்ந்துதான் தமிழைக் காப்பாற்ற வேண்டும். வளர்க்கவேண்டும். கலைஞர் தொலைக்காட்சி யிலாவது தமிழ் வாழுமா? என்று சந்தேகப்படு கிறார்கள். தமிழ் வாழும்; நிச்சயமாக எல்லோரையும் வாழவைக்கும்" என்று குறிப்பிட்டார்.

முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

இன்று ஏறத்தாழ கலைமாமணி விருதுகள் 70 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். இத்தனை பேருக்கு இந்த அவையில் நானும் ஆளுநர் அவர்களும் வழங்கியுள்ள இந்த விருதும், பரிசளிப்பும், பாராட்டுப் பத்திரமும் அவர்கள் இதுவரையிலே ஆற்றியிருக்கின்ற தொண்டுக்காக, அவர்கள் தமிழகத்திலே தங்களுடைய திறமையின் மூலமாக, எடுத்துக்காட்டிய கலைக்காக, இசைக்காக, காவியத்திற்காக என்று எடுத்துக் கொண்டாலுங்கூட, இவர்களைப் பார்த்து இந்த விழாவிலே அவர்கள் விருது பெறுவதைப் பார்த்து அடுத்த அடுத்த

விழாக்களில் நாமும் இத்தகைய சிறப்பைப் பெற வேண்டுமென்கிற எண்ணம், வருங்காலக் கலைஞர்களுக் கெல்லாம் ஏற்பட வேண்டுமென்பதற்காகத் தான், இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சின்னத்திரை கலைஞர்கள் சிறப்பிக்கப்படுவதில் பெரும் மகிழ்ச்சி

இந்த ஆண்டு "சின்னத்திரை’’ கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீண்ட காலமாக ஒரு ஆதங்கம் இருந்தது. என்னிடத்திலே அந்த ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்திய போது, அதை நிறைவு செய்கின்ற இடத்தில் அப்போது நானில்லை. நான் வருவேன் என்று காத்திருந்தார்கள், வந்தவுடனே (கைதட்டல்) அதனை வெளியிட்டார்கள், நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், மன்னிக்க வேண்டும், கேட்டுக் கொண்டார்கள் என்பதை விட அன்புக் கட்டளையிட்டார்கள். அதனை இன்றைக்கு நிறைவேற்றிய பெரும் மகிழ்ச்சியும், பூரிப்பும் எனக்கு இருக்கின்றது.

இந்த மன்றத்திற்கு எனக்கு முன்னால் பேசிய நம்முடைய ராமநாராயணன் குறிப்பிட்டதைப் போல "சங்கீத நாடக சபா’’ என்று தான் தொடக்கத்திலே பெயர் இருந்தது. நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் தமிழ் நாட்டில் இயல், இசை, கூத்து என்று நம்முடைய தனித் தமிழில் அந்தச் சொற்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஏதோ அந்தச் சொற்களில் தெய்வீகம் இல்லை, அதிலே கடவுள் கருணை இல்லை, அதிலே பக்தி ரசம் இல்லை, அது தமிழாக இருக்கிற காரணத்தால் வடமொழியாக இல்லாத காரணத்தால், அதிலே இருக்க வேண்டிய அருள் இல்லை என்ற ஒரு அப வாதம் நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு, அதற்கேற்ப சங்கீத நாடக சபா என்றே இதனை அழைத்து வந்தோம்.

தமிழ்நாடு என்று அண்ணா பெயர் வைத்துபோது சட்டப்பேரவையில் எழுந்த வாழ்த்து முழக்கம்

தி.மு.கழக ஆட்சி தொடங்கிய பிறகு அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே நீண்டகாலமாக நம்முடைய கோரிக்கையாக இருந்த "தமிழ் நாடு’’ என்கிற பெயரை அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலேயே எடுத்துச் சொல்லி, அதற்காக காங்கிரஸ் கட்சியின் தியாகி, சங்கரலிங்க நாடார் அறுபது நாட்களுக்கு மேல் உண்ணா விரதம் இருந்து, இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று கேட்ட அந்தக் கோரிக்கையை - அண்ணா அவர்கள் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றியது மாத்திரமல்ல, நான் உங்களுக்குச் சொல்கிறேன், காங்கிரசார், கம்யூனிஸ்ட்டுகள் என்று எல்லா கட்சிகளும் - கட்சி வித்தியாசம் இல்லாமல், சட்டப் பேரவையிலே தமிழர்கள் என்கிற ஒரே நிலையிலே அமர்ந்திருந்த போது, அண்ணா அவர்கள் எழுந்து நின்று, நான் "தமிழ்நாடு’’ என்று பெயர் வைத்திருக்கிறேன், நான் செய்த சாதனைகளில் எதை மாற்றினாலும், இந்தச் சாதனையை யாராலும் மாற்ற முடியாது, அவர்களை காலம் தண்டிக்கும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விட மாட்டார்கள் என்று அன்றைக்குச் சொல்லி, அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் என்பதை மறந்து, அந்த அவையிலேயே சொன்னார்கள், நான் மூன்று முறை "தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ என்று சொல்வேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் "வாழ்க, வாழ்க’’ என்று சொல்ல வேண்டுமென்று கூறி விட்டு, அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலேயே "தமிழ்நாடு’’ என்று மூன்று முறை ஒலிக்க, எல்லா உறுப்பினர்களும், கட்சி சார்பற்ற முறையில் "வாழ்க வாழ்க’’ என்று ஒலித்த அந்த ஒலி முழக்கம் இன்றைக்கும் என்னுடைய காதுகளிலே கேட்டுக் கொண்டிருக்கிறது. என்றும் மறக்க முடியாத முரசமாக கேட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படி பெயர் சூட்டப்பட்ட இந்த மாநிலம் இங்கே தமிழை தகுந்த முறையில் உயர்ந்த முறையில், அதை நாம் செங்கோலோச்சுகின்ற முறையிலே நடத்திட வேண்டாமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஏறத்தாழ நூறாண்டு காலமாயிற்று. தமிழுக்கு "செம்மொழி’’ என்ற தகுதி உண்டே, அந்தத் தகுதி எங்கே போயிற்று என்று முதன் முதலில் கேட்டவர் பரிதிமாற்கலைஞர். பரிதிமாற்கலைஞர் என்றால் அவர் வேறு ஏதோ ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர் என்று யாரும் கருதக் கூடாது, அவருடைய இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. சாஸ்திரியாக இருந்தாலும், அய்யர், அய்யங்காராக இருந்தாலும் அந்தக் காலத்தில் தமிழின் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கு ஈடில்லை, இணையில்லை என்ற அந்த நிலைமையிலேதான் சூரிய நாராயண சாஸ்திரி தன்னுடைய பெயரை பரிதிமாற்கலைஞர் என்று தமிழ்படுத்திக் கொண்டார். பரிதி என்பது சூரியனைக் குறிக்கும், மால் என்பது நாராயணனைக் குறிக்கும், நாராயணன் என்றால் மகாவிஷ்ணு, சாஸ்திரி என்பது கலைஞனைக் குறிக்கும். நான் கூட இப்போது ஒரு சாஸ்திரி தான். (சிரிப்பு, கைதட்டல்) அந்த பரிதிமாற்கலைஞர் தான் நூறாண்டுகளுக்கு முன்பு போர்க் கொடி உயர்த்தினார். நம்முடைய தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும், உலகத்திலே ஹிப்ரு போன்ற ஐந்தாறு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து இருக்கிறது, ஆனால் நம்முடைய தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து இல்லையே என்று வருத்தப்பட்டார். அந்த வருத்தம் பல ஆண்டு காலமாகத் தேக்கத்திலே இருந்து இப்போதுதான் அண்மையில் நம்முடைய ஆட்சி தோழமை கட்சி நண்பர்களுடைய ஒத்துழைப்போடு உதயமான பிறகு, நான் டெல்லிப் பட்டணம் சென்று அங்கே அம்மையார் சோனியா காந்தி அவர்களை சந்தித்து, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, அதற்குப் பிறகு அந்தத் துறையின் அமைச்சர் அர்ச்ஜூன் சிங் அவர்களைச் சந்தித்து, செம்மொழி என்கிற அந்தஸ்து தமிழுக்குத் தரப்பட வேண்டும், அதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னவுடன், எனக்கு சோனியா காந்தி அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு தரப்பட்டு விட்டது என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, அவர்கள் அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தார்கள், இந்த அந்தஸ்து வந்ததற்கு யாராவது பெருமை பேசிக் கொள்ள வேண்டுமேயானால், அந்தப் பெருமை உன் ஒருவனுக்குத் தான் உரிமை உடையது என்று எனக்கு எழுதினார்கள். (பலத்த கைதட்டல்)

அந்தக் கடிதம்; நான் புதையலாக வைத்து போற்ற வேண்டிய ஒன்றாகும். அத்தகைய நிலைமையிலே செம்மொழி தகுதி நம்முடைய தமிழுக்குக் கிடைத்திருக்கும்போது, அந்தத் தமிழால் நம்முடைய மன்றத்தை இசைவாணர்களை, கலைவாணர்களை, - இவர்களையெல்லாம் பாராட்ட, புகழ அவர்களுக்கெல்லாம் மேலும் மேலும் ஊக்கத்தை வழங்க - அவர்களில் பலர் இயக்குநர்களாக நம்முடைய ராம நாராயணனைப் போல இருக்கிறார்கள், பலர் கவிஞர்களாக இருக்கிறார்கள், இந்த மன்றத்தில் செயலாளராக இருக்கின்ற இளையபாரதியைப் போல, இப்படி இருக்கின்றவர்களையெல்லாம் சிறப்பிக்க, அவர்களையெல்லாம் உயர்த்த, இந்த சங்கத்திற்கு, சபாவிற்கு, மன்றம் என்று பெயரிடுவதா, அல்லது வேறு பெயர் வைப்பதா என்று எண்ணிய போது தான் நான் இந்த மன்றத்திலே உள்ள நண்பர்களையெல்லாம் அழைத்துப் பேசினேன், அவர்களிடம் கேட்டுக் கொண்டேன், இயல், இசை நாடகம் என்ற இந்த மூன்றும் நம்முடைய தமிழுக்கே பெருமையளிக்கக் கூடியது, ஆகவே இந்த மூன்றையும் சேர்த்து இயல் இசை நாடக மன்றம் என்று இதற்கு பெயர் வைக்கலாமென்று கேட்டேன், அப்படியே எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள், அன்று முதல் இன்று வரையில் இது இயல், இசை, நாடக மன்றமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட இந்த மன்றத்தில் நடைபெறுகின்ற இந்த விழாவில் பலர் இன்றைக்கு பாராட்டப்பட்டிருக்கிறார்கள். சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவராக நம்முடைய இயக்குநர் பார்த்திபன் அவர்களை நன்றி சொல்லச் சொன்னால், அவர் தமிழ்நாட்டையே நான் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன் என்று நமக்குத் தெரியாமலே எடுத்துக் கொண்டு போய் விட்டார். பல பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள், தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டுபோக (பலத்த சிரிப்பு, கைதட்டல்) பார்த்திபன் உட்பட தமிழர்கள் அவ்வளவு பேரும் ஏமாளிகள் அல்ல (பலத்த கைதட்டல்) என்பதை நான் இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

1967-ம் ஆண்டு எனக்கு கலைமாமணி விருது வழங்கி வாழ்த்தினார் அண்ணா

அவர் நன்றி கூறியது எனக்கு - கலைஞர்களுக்கு விருது வழங்கினேன் என்று நன்றி கூறினார். ஆனால் நான் அந்த நன்றியை எனக்குக் கூறியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதே மன்றத்தில் 1967ஆம் ஆண்டு இந்த கலைமாமணி விருதை இந்த மேடையில் எனக்கு அணிவித்து, வாழ்த்துச் சொன்னவர் என்னை ஆளாக்கிய என் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களாவார்கள். (கைதட்டல்) அப்போது கூட அந்தப் பதக்கத்தை நேரடியாக என்னுடைய கழுத்திலே போடாமல், போடுவது போல பாவித்து, இரண்டு முறை எனக்கு ஏமாற்றத்தைத் தந்து, மூன்றாவது முறை தான் அதைப் போட்டார்கள். அப்படி ஒரு வேடிக்கையாக அந்தப் பதக்கம் எனக்கு அன்று அளிக்கப்பட்டது.

இன்றைக்கு ஒவ்வொரு விழாவிலும் நூற்றுக்கணக் கானவர்களுக்கு, ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பதக்கம் அணிவிக்கப்படுகிறது. நான் முதலில் நம்முடைய மன்றத்திற்கு தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டது பற்றிச் சொன்னேன். இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய, போற்ற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டம் தமிழர்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. தமிழைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, தமிழுக்கு நாங்கள் தான் காப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு அந்தப் பெருமையிலே நாம் ஏமாந்து விடக் கூடாது, ஏமாற்றி விடக் கூடாது. இன்று நான் ஒரு பத்திரிகையைப் படித்தேன். "மாலை முரசு’’ பத்திரிகை. நான் பேசுவது ஒன்றும் அரசியல் அல்ல. தமிழ் மொழியைப் பற்றி ஒரு வாதம். தனித்தமிழ் பேசுவதா, வேண்டாமா என்பதைப் பற்றி ஒரு வாதத்தை அந்த மாலைப் பத்திரிகை இன்று எழுப்பியிருக்கிறது. அதிலே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். "ஆரம்பமாகப் போகிற கலைஞர் டி.வி.க்கு சில அறிவுரைகள்’’ - "தமிழிலேயே நடத்துங்கள்’’ - அதாவது எனக்கு அறிவுரை (பலத்த சிரிப்பு, கைதட்டல்) கலைஞர் தொலைக்காட்சியை தமிழிலேயே நடத்துங்கள் என்பது தமிழை வளர்ப்பதற்கு, தமிழர்களை வளர்ப்பதற்குப் பயன்படவேண்டுமென்று சொல்கிறார்கள்.

நான் அதை நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் யார் சொல்வது, நான் யார் கேட்பது என்கின்ற அகம்பாவம் என்னுடைய உள்ளத்திலே எந்த மூலையிலும் அரும்பாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதேநேரத்தில் அவர்கள் ஆங்கிலம் கலந்து சில சொற்கள் கையாளப்பட்டதை - குறிப்பாக சன் டி.வி.க்கு தமிழ் உணர்வே கிடையாது அவர்களுக்கென்று - நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் கலகம் ஊட்டி விடுகின்ற அளவிற்கு அதிலே ஒரு கட்டுரை வந்திருக்கிறது. சன் டி.வி. என்பதே ஆங்கில கலப்பு என்றும், சன் டி.வி.யில் தமிழுக்கே இடம் இல்லை என்றும் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தமிழை வளர்ப்பதற்காக உற்சாகத்தோடு செய்யப்படுகின்ற - அந்த ஊக்க உணர்வோடு செய்யப்படு கின்ற காரியமா என்றால் இல்லை. ஏதோ ஒரு பகையைத் தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகின்ற காரியமாகத் தான் அது இருக்கின்றது.

நான் அந்தப் பத்திரிகையைப் படித்துப் பார்த்தேன். சன் டி.வி.யால் தமிழ் உணர்வு அழிந்தது என்பது தலைப்பு. எல்லோருக்கும் சன் டி.வி.யிலே தொடர்பு உண்டு. நமக்கு இன்றைக்கு தொடர்பு இல்லாத காரணத்தால், அது தமிழை அழித்து விட்டதா என்ற கேள்விக்கு அவ்வளவு அவசரப்பட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது.

கலைஞர் தொலைக்காட்சியிலாவது தமிழ் வாழுமா என்று சந்தேகப்படுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கின்ற ஒரே பதில் - கலைஞர் வாழுகிறாரோ இல்லையோ, தமிழ் வாழும். (பலத்த கைதட்டல்) ) இது தான் அவர்களுக்கு என்னுடைய பதில்.

ஒருவருக்கொருவர் பகையைக் கக்கி தமிழைக் காப்பாற்ற முடியாது

"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’’ என்பது தான் (கைதட்டல்) நான் தமிழைப் பற்றிக் கூறிய ஒரு சூளுரை. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பது. எனவே தான் தமிழ் வாழுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை, வாழும். (கைதட்டல்) மற்றவர்களையும் வாழ வைக்கும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். சன் டி.வி.யால் தமிழ் மொழி அழிந்தது என்பதற்கு நான் ஏதோ சன் டி.வி.க்கு புதிதாக வக்காலத்து வாங்குகிறேன் என்று நாளைக்குப் பத்திரிகைகளில் எப்படி செய்தி வரும் என்று எனக்குத் தெரியும். (சிரிப்பு) ஆனால் தமிழின் பெயரால் ஒருவரைக் குற்றம் சொல்லி, ஒருவரை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி தமிழ் உணர்வே இல்லை என்று சொல்வது நல்லதல்ல. எல்லோரும் சேர்ந்து தான் தமிழைக் காப்பாற்ற வேண்டும், தமிழை வளர்க்க வேண்டும். அறிவுரை கூற வேண்டும்.

ஆனால் அதே "மாலைமுரசு’’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் "ஸ்ரீபெரும்புதூரில் இன்று ராஜிவ் நினைவிடத்தில் பிரதிபா பட்டீல் அஞ்சலி’’ என்று பெரிய கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன், இதிலே ஸ்ரீபெரும்புதூர் என்பது தமிழா? (பலத்த கைதட்டல்) திருப்பெரும்புதூர் என்று அதை தமிழர்கள் எல்லாம் அழைக்கிறார்கள். நாமெல்லாம் திருப் பெரும்புதூர் என்று தான் அழைக்கிறோம். அதை ஸ்ரீபெரும்புதூர் என்று வேண்டுமென்றே, அவ்வளவு பெரிய "ஸ்ரீ’’ யை போட்டிருக்கிறார்கள். பதிலுக்குப் பதில் தாக்குவதற்காக இதைச் சொல்லவில்லை. மாலைமுரசைக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் திருப்பெரும்புதூர் என்று போடுங்கள். உங்களுடைய தமிழ் உபதேசத்தைக் கேட்டு சன் டி.வி. திருந்திக் கொள்ளும், நானும் கூட திருந்திக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் தயவுசெய்து ஸ்ரீபெரும்புதூர் என்பதை திருப்பெரும்புதூர் என்று திருத்திக் கொள்ளுங்கள் என்று நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு வாதப் பிரதிவாதத்திற்காக எழுப்பப்பட்டதல்ல. எல்லோரும் சேர்ந்து தமிழைக் காப்பாற்ற ஒருவருக்கொருவர் பகையைக் கக்கி தமிழைக் காப்பாற்ற முடியாது. எனவே உள்ளுணர்வோடு, யோசித்து அந்த உணர்வைப் பயன்படுத்தி, அந்த வகையில் தமிழ் வாழ வேண்டும், தமிழ் பரப்பப்பட வேண்டுமென்ற அந்த எண்ணத்தோடு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இன்றைக்கு விருது பெற்ற, பரிசு பெற்ற அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்து வாழ்க வாழ்க தமிழ் வாழ்க என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Nandri: Source: Murasoli