தமிழ் ரசிகப் பெருமக்கள் அனைவரும் ஆவலுடன் பார்க்க விரும்பிய படங்களுள் சமீபத்தில் முதலிடம் பெற்றது பாலாவின் "நான் கடவுள்".
விமர்சனங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி ரசிகர்கள் பார்க்க வேண்டிய உன்னதப் படைப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் படம் இது.
உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் குறித்து சில வேறுபட்ட பார்வைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தப் படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளவிட முடியாதது.
நான் கடவுள் படத்தைப் பார்க்கும் ஆர்வம் திரை ரசிகர்களுக்கு மட்டுமல்ல... திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்துக்கும் இருந்ததாம்.
அதனால் படம் ரிலீஸான உடனே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் தனது பிஆர்ஓ நிகில் முருகனிடம்.
அதன்படி சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட, நான் கடவுள் படம் பார்த்தார் ரஜினி. இந்தப் படம், கதைக் களம், கதை நிகழுமிடங்கள் ரஜினிக்குப் புதிதல்ல. இமய மலையில் பல விதமான சாதுக்களைப் பார்த்த ரஜினியால், இந்த அகோரி சாதுக்கள் மற்றும் அவர்களின் உலகத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததாம். (அதைக் கைப்பட ஒரு கடிதமாகவே எழுதியுமிருக்கிறார் ரஜினி!)
படம் முடிந்ததும், பாலா மற்றும் ஆர்யாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்த ரஜினி, இருவரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
படம்: நன்றி: தட்ஸ்தமிழ்
"வெரி குட்... பிரமாதம் பாலா. ரொம்ப எமோஷனலாயிட்டேன் படம் பார்த்து. குட்... உங்களால மட்டும்தான் இப்படியொரு படம் பண்ண முடியும் பாலா. எக்ஸலன்ட் ஒர்க். இந்தப் படத்தை நீங்க ப்ரஸண்ட் பண்ண விதம் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். கிளாஸ் பிக்சர்..." என்று பாராட்டினாராம்.
படத்தின் நாயகன் ஆர்யாவையும் மிகவும் பாராட்டியுள்ளார் ரஜினி. இந்த சின்ன வயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வித்தியாசமான படம் பண்ணதுக்கு வாழ்த்துக்கள், என்று ரஜினி கூறியதும் நெகிழ்ந்து போய்விட்டாராம் ஆர்யா.
ரஜினியின் கடிதம்:
பாலாவைப் பாராட்டி ரஜினி கைப்பட எழுதியுள்ள கடிதம்:
"திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை. பொதுவாக அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அன்றாட அரசியல் வாழ்க்கை பற்றித்தான் தெரியும்.
ஆனால் இந்த உலகில், இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாத எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கு. இதில் Underworld Mafia-க்களிடம் சிக்கித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் ஆன்மீகத்திலிருக்கும் அகோரி பாபாக்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு வாழ்க்கைகளையும் யதார்த்தமாக திரையில் கொண்டு வந்திருக்கும் பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்.
இமய மலையில் பல அகோரிகளை நேரில் சந்தித்தவன் என்ற முறையில் ஆர்யா அவர்களின் யதார்த்தமான அகோரி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்ன மெய்சிலிர்க்க வைத்தது
படத்தில் நடித்த அனைத்து ஊனமுற்றவர்களின் நடிப்பும் என்னை கண்கலங்க வைத்தது. இந்த மாதிரி ஒரு திரைக்காவியம் தமிழில் வந்தது என் தலையை நிமிர வைத்திருக்கிறது. இனிமேல் ஒரு படம் இதுபோல் வரப்போவதுமில்லை.
இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்புடன் ரஜினிகாந்த்"
-இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் ரஜினிகாந்த்.
சமீப காலத்தில் ரஜினி இந்த அளவு நெகிழ்ந்து பாராட்டிய படம் அநேகமாக நான் கடவுளாகத்தான் இருக்கும்!
பாராட்டுக்களும் விருதுகளும் தொடரட்டும் பாலா!
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Tuesday, February 10, 2009
பாலாவின் திறமைக்கு தலை வணங்குகிறேன்-ரஜினி
Monday, November 17, 2008
ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் - சத்தியநாராயணா திடீர் நீக்கம்
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர்.
விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக் கட்சியையும் தொடங்கி ரஜினிக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இதையடுத்து ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார் ரஜினி.
அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார். அரசியல் குறித்த கேள்விக்கு மட்டும், ஆண்டவன் உத்தரவிட்டால் நாளைக்கே அரசியலுக்கு வருவேன் என்றார்.
அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ரஜினி கூறாமல், ஆண்டவன் உத்தரவு கிடைத்தால் வருவேன் என்று ரஜினி கூறியிருப்பதை சாதகமான அம்சமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். கடவுள் பக்தரான ரஜினி, கடவுளின் அனுமதியுடன், அவரது உத்தரவுடன் வர விரும்புவதையே இது வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பிறந்துள்ளது.
அனேகமாக எந்திரன் படத்தை முடித்து விட்டு அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.
ரஜினியும் தற்போது அரசியல் பிரவேசம் குறித்த சிந்தனைக்குப் போய் விட்டதாகவே தெரிகிறது. சமீபத்தில் அத்வானியின் நூல் வெளியீட்டு விழாவின்போது அத்வானியை விட ரஜினிக்கே பலத்த கரகோஷமும், ஆதரவுக் குரலும் காணப்பட்டது.
இதைப் பார்த்து துக்ளக் ஆசிரியர் சோவும் கூட, இவ்வளவு பெரிய ஆதரவை வைத்துக் கொண்டு எதற்காக ஆண்டவன் உத்தரவை ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என ரஜினியை வைத்துக் கொண்டே கூறினார். இதெல்லாம் ரஜினி மனதில் புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக ரசிகர் மன்றங்களை ஒழுங்கமைக்கும் பணியில் ரஜினி இறங்கியுள்ளார். அதற்கு முதல் படியாக, யாரும் எதிர்பாராத வகையில் சத்தியநாராயணாவை ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
ரஜினியின் ஆரம்ப கால நண்பர்களில் சத்தியநாராயணாவும் ஒருவர். கடந்த 25 ஆண்டு காலமாக ரசிகர் மன்றங்களை நிர்வகித்து நடத்தி வருகிறார்.
ஆனால் மன்றத்திற்குள் கோஷ்டியை உருவாக்கி வைத்து வருவதாக சத்தியநாராயணன் மீது புகார் எழுந்தது. மேலும் மன்றங்கள் தொடர்பான, ரசிகர்களின் உணர்வுகள் தொடர்பான உண்மையான தகவல்களை தனக்கு அவர் தெரிவிக்கவில்லை என்ற அதிருப்தியும் ரஜினிக்கு எழுந்ததால், அவரை நீக்கும் முடிவுக்கு ரஜினி வந்ததாக தெரிகிறது.
அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் தனது குடும்ப நண்பரான சுதாகர் என்பவரை ரசிகர் மன்றத் தலைவராக்கியுள்ளார் ரஜினி. இனிமேல் மன்றங்கள் தொடர்பான அனைத்தையும் சுதாகர்தான் கவனிப்பார்.
சத்தியாநாராயணாவின் நீக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, புதிய மாற்றத்திற்கான அடிக்கல்லாகவே இதை அவர்கள் பார்க்கின்றனர்.
விரைவில் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றப் பிரதிநிதிகளை ரஜினி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ரஜினியிடமும், மன்ற நிர்வாகத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் புதிய பிரவேசத்திற்கு வழிவகுக்குமா என்ற ஆர்வத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.
செய்தி: நன்றி: Thatstamil
Tuesday, November 11, 2008
அத்வானி விழா: ரஜினிக்கு ஸ்பெஷல் அழைப்பு !!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி இன்று சென்னை வருகிறார்.
அவர் எழுதியுள்ள 'எனது நாடு, எனது வாழ்க்கை' (My country; M life) என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை நாரத கான சபாவில் நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் வெளியிடுகிறார். பத்திரிகையாளர் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவுக்காக அவர் நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது மாநில பிஜேபி.
ரஜினி வருவாரா?
இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகையைத்தான். அவரது குரு தயானந்த சரஸ்வதிதான் புத்தகத்தை வெளியிடுகிறார் என்பதால் ரஜினியின் வருகையை உறுதியாக எதிர்பார்க்கிறார்கள்.
ஏற்கெனவே இந்த விழாவுக்காக ஜெயலலிதா – ரஜினி இருவரையும் ஒரே மேடையில் ஏற்றத் திட்டமிட்டிருந்தது பிஜேபி தலைமை. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரஜினி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராகவாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ரஜினிக்கு பிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அழைப்பை பிஜேபியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ரஜினிக்கு நேரில் கொடுத்துள்ளனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பரான சோவும் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அத்வானியுடன் மேடையேறி அரசியல் பேசுவாரா... அல்லது எச்சரிக்கையுடன் வெறும் பார்வையாளராக நின்றுவிடுவாரா ரஜினி? பார்க்கலாம்!
செய்தி: நன்றி: Thatstamil
Tuesday, July 1, 2008
‘குசேலன்’ கேசட் வெளியீட்டு விழா பசுபதி, நயன்தாரா, மீனா புறக்கணிப்பு

சென்னையில் நடந்த 'குசேலன்' பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'குசேலன்’. இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, தயாரிப்பாளர்கள் பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் உட்பட யாருமே பசுபதி பற்றியோ மீனா, நயன்தாரா பற்றியோ பேசவே இல்லை. Ôவிளம்பரங்களில் தங்களை புறக்கணித்ததால் அவர்கள் விழாவை புறக்கணித்திருப்பதாகÕ கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.
'குசேலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பசுபதி வேடத்தில் நடித்திருப்பவர் ஜெகபதி பாபு. அவரை விழா மேடையில் அமர வைத்து, கவுரவித்தனர். அவரது வேடத்தை தமிழில் ஏற்ற பசுபதியை கண்டுகொள்ளாதது ஏன் என புரியவில்லை என விழாவுக்கு வந்திருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
விழாவுக்கு வராதது குறித்து பசுபதியிடம் கேட்டபோது, 'வெடிகுண்டு முருகேசன்' படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடக்கிறது. அதனால் விழாவுக்கு வரமுடியவில்லை என்றார். இதே போன்று 'ஏகன்' பட ஷூட்டிங் காரணமாக நயன்தாரா வரவில்லை என அவரது தரப்பினர் கூறினர். மீனா ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் வரவில்லை என்று கூறப்பட்டது.
விழாவுக்கு வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் வடிவேலு உட்பட பலர் பிசியானவர்கள்தான். அவர்களும் பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி விழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான பசுபதி, நயன்தாரா, மீனா வராதது சினிமா வட்டாரத¢தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
செய்தி: படம்: நன்றி: தினகரன் 2 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)
Wednesday, June 18, 2008
குசேலன் - ஸ்பெஷல் ஸ்டில்ஸ்





குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.
ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் குசேலன். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:
குசேலன் படத்துக்கு 82 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. டப்பிங்கும் முடிந்துவிட்டது. வரும் திங்கட்கிழமை முதல் இசை சேர்ப்பு பணி தொடங்கும். ரஜினிக்குரிய பஞ்ச் வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 75 ஆண்டு தமிழ் சினிமா வரலாறு பற்றிய பாடல் படத்தில் இடம் பெறுகிறது.
Ôசினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமாÕ என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.
பாடல் கேசட் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். உலகம் முழுவதும் சாய்மீரா நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இப்படத்துக்கு ÔகதாநாயகடுÕ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், இசை. அரவிந்த் கிருஷ்ணா, ஒளிப்பதிவு. ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.
செய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 19 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)
