தி.மு.க.வின் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கனிமொழி அளித்த பேட்டி வருமாறு :-
தி.மு.க.வில் எல்லோரும் சேர்ந்து என்னை ராஜ்ய சபா வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதை வாரிசு திணிப்பு என்று விமர்சிப்பது சரியல்ல. உலகில் எல்லா நாடுகளிலுமே வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள்.
தி.மு.க. ஜனநாயக கட்சி. இங்கு ஒருவரை கொண்டு வருவது என்பதை கட்சித் தலைவர் மட்டும் தீர்மானிப்ப தில்லை. கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனுபவ சாலிகளின் கருத்துபடியே அத்தகைய முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
திணிப்பு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. யாரையும் உயர்ந்த இடத்தில் திணித்து வெகு காலம் உட்கார வைக்க முடியாது. கட்சி தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். அண்ணன் மு.க.ஸ்டாலினை தொண்டர்கள் ஏற்காமல் இருந்திருந்தால் இந்த அளவு செல்வாக்குடன் இருக்க முடியாது.
ராஜ்ய சபா எம்.பி.யானதும் எனது செயல்பாடுகள் ஆக்கப் பூர்வமாக இருக்கும். ஏதோ ஆறு வருடம் எம்.பி.யாக இருந்தேன் என்று மட்டும் இல்லாமல் கட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உழைப்பேன்.
திராவிட கொள்கைகள் என் ரத்தத்தில் ஊறியுள்ளது தி.முக.வும் கலைஞரும் வலி யுறுத்தும் இட ஒதுக்கீடு, தமிழ் மொழி ஆளுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இது வரை தமிழ்நாட்டில் மேடைகளில் பேசினேன். இனி டெல்லியிலும் போய் பேசுவேன்.
தி.மு.க.வில் தற்போது நெருக்கடி ஏற்பட்டதால் தான் என்னை ராஜ்யசபா வேட்பாள ராக அறிவித்துள்ளனர் என் பதிலும் உண்மை இல்லை. கட்சியில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை.
எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை நான் தீர்த்து வைத்தற்காக இந்த பரிசு தரப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. குடும்பம் என்றால் சின்ன உரசல்கள் இருக்கத்தான் செய்யும். குடும் பத்தின் அழகே அன்பும் மோத லும் சேர்ந்த கலவைதான்.
எல்லோரும் கவனிக்கிற இடத் தில் இருப்பதால் எங்கள் குடும்பத்தில் நடப்பவை மிகைப்படுத்தப்படுகின்றன. ஒற்றுமைக்காக நான் பாடு பட்டேன் என்பதெல்லாம் கற்பனை.
தி.மு.க.வுக்கும், டெல்லிக்கும் இடையே பலமான உறவு பாலத்தை ஏற்படுத்த என்னை எம்.பி.யாக்கவில்லை. அதற்கு தி.மு.க.வில் பல ஆண்டுகளாக டெல்லியில் பணியாற்றி வரும் முக்கியமான தலைவர்கள் இருக்கிறார்கள். அதற்காக என்னை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது செழுமையான கட்சி.
எங்கள் குடும்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் எப்படி நடந்தது ஏன் நடந்தது என்றெல்லாம் நினைத்து பார்த்தால் எதுவும் புரியவில்லை.தனிப்பட்ட முறையில் எனக்கும் மாறன் சகோதரர் களுக்கும் உள்ள உறவு எப் போதும் போல் உள்ளது. அவர் களுடன் பேசி சில நாட்கள் ஆகிறது. கால ஓட்டத்தில் அவரவர் வேலையை பார்க்க போய் விட்டார்கள். நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு குடும்பங்களும் இணைவது பற்றி காலமும் தலைவரும் தான் தீர்மானிக்க வேண்டும்.
`தினகரன்' பத்திரிகை கருத்து கணிப்பை தவிர்த்திருக்கலாம். கருத்து கணிப்பு நடத்தப்பட்ட காலத்தில் எனக்கும் அரசிய லுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. ஆனால் அதில் என்னையும் சேர்த் திருந்ததுதான் வேடிக்கை.
மதுரை சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எனவே விரிவாக எதையும் பேச முடியாது.
அடுத்து நான் மத்திய மந்திரி ஆவேனா என்று கேட்டால் `இல்லை' என்பதுதான் இப் போதைய என் பதில். படிப் படியாக போகலாமே.
அண்ணன்கள் தங்களு டைய தங்கையின் வளர்ச்சிக்கு எந்தெந்த வகையில் உதவு வார்களோ அந்த வகையில் என்னுடைய அண்ணன்கள் அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் எனக்கு உதவி வருகிறார்கள். மதுரை சம்பவத்துக்கும் எனது அண்ணனுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
Nandri: Maalaimalar
Wednesday, May 30, 2007
மதுரை சம்பவம்: அழகிரிக்கு தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை - கனிமொழி பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
குட் குட்...
பக்கா அரசியல்வாதியாகி விடுவார்.
//மதுரை சம்பவத்துக்கும் எனது அண்ணனுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை//
வேலிக்கு ஒணான் சாட்சி.
கனிமொழி உடம்பில் ஓடுவதும் அதே ரத்தம்தானே!
வாரியத் தலைவர் பதவி வழங்கபட்ட போது MGR- இடம் நம்பியார் "நான் நல்லவானாக இருக்க விருப்புகிறேன்" எனச் சொல்லி பதவியை மறுத்தராம்.
நல்ல அரசியல்வாதியாகிவிட்டார் கனிமொழி.வேறென்ன சொல்ல?
Osai, Rashka, Thiru,
thanks for your comments.
SV
Post a Comment