'பிரதமருக்கு ரகுபதி யார் என்றே தெரியவில்லையே!' என்று அதிர்ச்சி அடைந்த அந்த தமிழக அமைச்சர், ரகுபதியை சுட்டிக்காட்ட, அவரை அழைத்து ஒரு நிமிடம் பேசினார் மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் அமைச்சரவையில் 80 அமைச்சர்கள் உள்ளனர். அனைவரையும் நினைவில் வைத்திருப்பது கடினம். சிலசமயம் சிலருடைய முகங்கள் நினைவிற்கு வராது; சிலருடைய பெயர்கள் திடீரென மறந்துபோகும்.
வாஜ்பாய் பிரதமராகயிருந்தபோது, பார்லிமென்ட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அவருடைய சக அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் பெயர் மறந்து போனது. வேறு ஏதோ ஒரு பெயரைச் சொல்ல, அனைவரும் ஷாக் ஆயினர்.
சோனியாவை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் வரும்போது, அவர்களைப் பற்றிய குறிப்போடு, அவர்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் அனுப்பப்படும். வருபவர் யாரென்று சோனியா தெரிந்து கொள்வதற்காக அப்படி அனுப்புவது வழக்கம். தேவகவுடா பிரதமராக இருந்தபோது கூட, இதே கதிதான். இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் மன்மோகன் சிங்.
தி.மு.க.,வைச் சேர்ந்த ராதிகா செல்வி உள்துறை இணை அமைச்சராக பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டபோது, ரகுபதியைச் சந்திக்க விருப்பப்பட்டார். ஆனால், யார் ரகுபதி என்பது பிரதமருக்கு தெரியவில்லை. வேறு வழியில்லாமல், விழாவில் அமர்ந்திருந்த ஒரு அமைச்சரிடம், "இங்கே யார் ரகுபதி?' என்று வாய்விட்டே கேட்டு விட்டார். "பிரதமருக்கு ரகுபதி யார் என்றே தெரியவில்லையே!' என்று அதிர்ச்சி அடைந்த அந்த தமிழக அமைச்சர், ரகுபதியை சுட்டிக்காட்ட, அவரை அழைத்து ஒரு நிமிடம் பேசினார் மன்மோகன் சிங்.
Nandri: Dinamalar
http://www.dinamalar.com/2007may23/pakkavadhiyam.asp
No comments:
Post a Comment