Friday, May 25, 2007

சன் டிவி அதிகாரிக்கு கொலை மிரட்டல்

சன் டிவியின் துணைத் தலைவரும், தலைமை நிகழ்ச்சி அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஹன்ஸ் ராஜ் சக்ஸேனா, ஆணையர் லத்திகா சரணைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில், தனது செல்போனைத் தொடர்பு கொண்ட ஒருவர், உடனடியாக சன் டிவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாக தனது புகாரில் கூறியுள்ளார் சக்ஸேனா.

இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், பி.சி.ஓ.விலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது. விரைவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்தே ஆட்களை இழுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சன் டிவியின் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Nandri: Thatstamil
http://thatstamil.oneindia.in/news/2007/05/25/threat.html

No comments: