Tuesday, May 22, 2007

அன்பழகன் துணை ஜனாதிபதி ?

தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவி? சோனியா காந்தி ஆலோசனை



சோனியாவின் இந்த திட்டத்தை தி.மு.க. ஏற்கும் பட்சத்தில் அமைச்சர் அன்பழகன் துணை ஜனாதிபதி ஆக்கப் படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. 85 வயதாகும் அன்பழகன் திராவிட இயக்கத் தலைவர்களில் மூத்தவர்.



ஜனாதிபதி அப்துல்கலா மின் பதவிக்காலம் வரும் ஜுலை மாதம் 24-ந் தேதி முடிகிறது. எனவே ஜுலை 15-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. புதிய ஜனாதிபதி யார் என் பது ஜுலை 22-ந் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.



ஜனாதிபதி அப்துல்கலாம் பதவி காலம் முடிவது போல துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத்தின் 5 ஆண்டு பதவிக் காலமும் வரும் ஆகஸ்டு மாதம் முடி கிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் கட்சித் தலைவர்கள் ஆலோ சனை நடத்தி வருகிறார்கள்.



துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபை களில் உள்ள எம்.பி.க்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு தேர்வு செய்வார்கள். இரு சபைகளிலும் மொத்தம் 776 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அதிக எம்.பி.க்களை வைத்துள்ளது.



எனவே துணை ஜனாதிபதி பதவிக்கு சோனியா யாரை கை காட்டுகிறாரோ அவர் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்க சோனியா ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.



சமூக நீதி உள்ளிட்ட பல விஷயங்களில் தி.மு.க.வுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒத்துப்போகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது தி.மு.க.வின் ஒத்துழைப்புடன் மாயாவதியை தங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்து விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி பதவி கொடுத்து தி.மு.க.வுடனான நட்புறவை வலுப்படுத்த சோனியா நினைக்கிறார்.



சோனியாவின் இந்த திட்டத்தை தி.மு.க. ஏற்கும் பட்சத்தில் அமைச்சர் அன்பழ கன் துணை ஜனாதிபதி ஆக்கப் படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. 85 வயதாகும் அன்பழகன் திராவிட இயக்கத் தலைவர்களில் மூத்தவர்.



1967 முதல் 1971ம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். டெல்லியில் உள்ள பிற கட்சி தலைவர்களுடன் நன்கு நல்லுறவு கொண்டிருப்பவர். முதல்-அமைச்சர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவர் களில் முதன்மை இடத்தில் இருப்பவர்.

எனவே அன்பழகன் துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக டெல்லி யில் பேசப்படுகிறது.



Nandri: Maalai Malar

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=203989

No comments: