பொதுவாக கருணாநிதி எழுதும் கவிதைகளை உடனே வெளியிடும் தினகரன் / தமிழ் முரசு, இந்த கவிதையை வெளியிடவில்லை.
தயாநிதி மாறன் மீது கடும் தாக்கு
"பட்டை தீட்டி பார்த்தும்
ஜொலிக்காத கூழாங்கல்'
கருணாநிதி கவிதை
சென்னை, மே 19:
பட்டை தீட்டிப்பார்த்தும் பலனில்லை என்றும் ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குறித்து ஒரு சூசகமான கவிதையை எழுதியுள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தாம் சொல்ல நினைக்கிற மிக முக்கியமான விஷயங்களை கவிதையாக வெளிப்படுத்துவது அவரது இயல்பு. தமக்கு மிக நெருக்கமானவர்களை எச்சரிக்கவும், அவர்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டவும் இந்த கவிதை ஆயுதத்தை அவ்வப்போது கருணாநிதி கையில் எடுப்பது காலங்காலமான நடைமுறை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிக கடுமையாக சாட வேண்டும் என்றாலும், இதுபோன்ற கவிதைகளைத்தான் அவர் துணைக்கு அழைப்பார்.
மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தம்முடைய உள்ளத்தில் உள்ளதை வெளிக்கொண்டு வருவதற்கு இதுபோன்ற கவிதைகள் கருணாநிதிக்கு பெரிதும் துணை நிற்கும். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரச்சனையில் அவரது உள்ளத்தை உருக்கிக்கொண்டிருந்த கருத்தை வெளிப்படுத்த "நினைவுகளின் போர்ப்பாட்டு' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை இன்றைய "முரசொலி' நாளேட்டில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
மாறன், அமிர்தம், செல்வம் மருமகப்பிள்ளைகள் மான்குட்டிகளாய்
மார் மீதும் தோள் மீதும் பாய்ந்து விளையாடிய காட்சியெல்லாம்
ஓய்ந்து போயினவே என் இளமையோடு; அவை ஒழிந்தே போயினவே;
தேய்ந்த என் முதுமைத் தோள்களிலே தாங்கும் வலிமை இல்லாததினால்!
துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்
தோள் மீது கை போட்டுத் துணைக்கு வந்துவிட்டோம் என்பதும் கனவுதானே!
""பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது
ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்
பட்டை தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை''
இப்படி தயாநிதி மாறன் குறித்து மறைமுகமாக கவிதை மூலம் தம் மன வேதனையை கருணாநிதி வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது.
Nandri: Maalai Sudar
http://www.maalaisudar.com/1905/hed_news_4.shtml
Sunday, May 20, 2007
ஜொலிக்காத கூழாங்கல் - கருணாநிதி கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment