ஆகஸ்டு 15-ந்தேதி புதிய டி.வி உதயம்: கருணாநிதி அறிவிப்பு
மதுரையில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கும், சன் டி.வி. குழுமத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு ஆதரவு தொலைக்காட்சி எதுவும் இல்லாத சூழ்நிலையில் அக்குறையை போக்க புதிய தொலைக்காட்சி ஒன்று உதயமாக உள்ளது.
புதிய தொலைக்காட்சிக்கு "கலைஞர் டி.வி.'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ் டி.வி. நிறுவனம் இந்த புதிய தொலைக்காட்சியைத் தொடங்குகிறது. இதனுடைய சின்னமாக "உதயசூரியன்'' இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"கலைஞர் டி.வி.'' மக்களின் தேவையையும் விருப்பங் களையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற் றும் வகையில் புதிய தொலைக் காட்சி உதயமாக உள்ளது. இந்த புதிய டி.வி.சானல் ஜுன் 3-ந் தேதி ஒளிபரப்பை தொடங்கும் என்று ஒரு தக வல் வெளியாகி இருந்தது. அது தவறு. ஜுன்-3ந் தேதி புதிய தொலைக்காட்சி பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
புதிய தொலைக் காட்சியின் நிகழ்ச்சிகள் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் ஒளி பரப்பாகும். இதில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் விபரம் இறுதி செய்யப்பட்டு வரு கிறது. தொலைக்காட்சித் துறையில் சிறந்த நிபுணர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒளிபரப்புத் துறையில் நன்கு அனுபவம் பெற்றவர்கள் எங்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
புதிய தொலைகக்காட்சியை தி.மு.க. நிர்வகிக்காது. ராஜ் டி.வி. குழுமம் அதை நிர்வகிக்கும். இதை "கலைஞர் டி.வி.'' என்று எல்லாரும் சொல்கிறார்கள்.
இந்த புதிய தொலைக் காட்சியில் நான் பங்கேற்கும் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி எதுவும் வராது. சில மாநிலங்களில் இதற்கான முயற்சி நடந்தது. என்னையும் இதில் ஈடுபடுத்த சிலர் அணுகி னார்கள்.
ஆனால் டி.வி.மூலம் ஆட்சி நடத்த இயலாது என்பது என் கருத்து.
தி.மு.க. தலைமை நிலையமான அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி.யை வெளியேறும்படி நானோ வேறு யாருமோ சொல்லவில்லை. அவர்கள் (சன் டி.வி. நிர்வாகம்) விரும்பும் வரை அறிவாலயத்தில் தங்கி இருக்கலாம். அவர்களை நான் வெளியேற சொன்னதாக சொல்வது தவறானது.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
"கலைஞர் டி.வி.'' ஒளிபரப்புக்கான அனுமதி பெற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் நேற்று விண் ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து விரைவில் மத்திய அரசு அனு மதி வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ராஜ் டி.வி. குழுமத்திடம் ஏற்கனவே "டெலிபோர்ட்'' வசதி உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அவர்களால் புதிய டி.வி. சானலை தொடங்கி விட முடியும்.
தற்போது ராஜ் டி.வி. நிகழ்ச்சிகள் தாய்காம் சாடி லைட் மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் 2 டிரான்ஸ் பாண்டர்களை ராஜ் டி.வி. பயன்படுத்தாமல் கைவசம் வைத்து இருக்கிறது. அதில் ஒன்றை "கலைஞர் டி.வி.க்கும்'' மற்றொன்றை "குழந்தைகள் சானலுக்கும் பயன்படுத்த ராஜ் டி.வி. திட்ட மிட்டுள்ளது.
கலைஞர் டி.வி. தலைமை நிர்வாகியாக சரத்குமார் என்பவர் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் தலைமையில் தொழில் நுட்பக் குழு மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் குழு "கலைஞர் டி.வி.'' யை மிகச்சிறப்பாக கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தினமும் 9 தடவை செய்திகள் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இது தவிர பல புதிய நிகழ்ச்சிகள் அதிரடியாக வர உள்ளன. இதற்காக அனுபவம் வாய்ந்த மெகா தொடர் தயாரிப்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
"கலைஞர் டி.வி.'' ஒளிபரப்பு தொடங்க இன்னும் 2 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்க வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
Nandri: Maalai Malar
http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=203983
Tuesday, May 22, 2007
கலைஞர் டி.வி: பொறுப்பு - சரத்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment