"கலைஞர் டிவி'யில் பணியாற்றுவதற்காக தொழில்நுட்ப பணியாளர் களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. இதில், "சன் டிவி' ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளத்துடன் அவர்களுக்கு பணி நியமன உத்தரவும் நேற்றே வழங்கப்பட்டது. இதேபோல நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கான நேர் முகத் தேர்வு இன்று முதல் நடக்க உள்ளது. சன் "டிவி'யின் செய்திப்பிரிவில் பணியாற்றும் முக்கிய நபர்கள் பலர், "கலைஞர் டிவி'யில் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
***********************************************************
சென்னை: "கலைஞர் டிவி' என்ற பெயரில் தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஊடகமாக புதிய "டிவி' சேனலை ராஜ் "டிவி' துவக்க இருக்கிறது. வரும் ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று இந்த புதிய சேனல் துவக்கப்பட உள்ளது.
இதுவரை ஆளுங்கட்சியின் "டிவி' போல் செயல்பட்டு வந்த "டிவி' சேனலின் ஊழியர்கள், இந்த புதிய "டிவி'க்கு படையெடுத்துள்ளனர்.தி.மு.க.,வுக்கு ஆதரவான "டிவி'யாக "சன் டிவி' செயல்பட்டு வந்தது. அதன் நிர்வாகத்துக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதால், கட்சிக்கு அதிகாரப்பூர்வ, "டிவி' சேனல் இல்லாத நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க.,வுக்கு ஜெயா "டிவி,' பா.ம.க.,வுக்கு மக்கள் "டிவி' என தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு "டிவி' இருக்கும் நிலையில், தி.மு.க.,வுக்கும் தனியாக "டிவி சேனல்' வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதியது. முதல்வர் கருணாநிதியின் சட்டசபை "பொன்விழா' நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ராஜ் "டிவி'க்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பிரதமர், சோனியா உட்பட தேசிய தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய சன் "டிவி' கடுமையாக முயற்சித்த போதிலும், அதற்கு அனுமதியளிக்கவில்லை.ஜெயா, சன், ராஜ் ஆகிய மூன்று சேனல்கள் மட்டுமே தற்போது தமிழில் செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன. தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஒளிபரப்புவதற்காக தனி சேனல் ஒன்றை துவக்க அக்கட்சியின் மேலிடம் விரும்பியது. இது தொடர்பாக ராஜ் "டிவி' நிர்வாகத்துடன் தி.மு.க., சார்பில் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் ஆகியோர் பேசியுள்ளனர்.
ஏற்கனவே "டிவி' சேனல் நடத்தும் அனுபவம் பெற்ற நிறுவனம் என்பதால், ராஜ் "டிவி' நிர்வாகமே தி.மு.க.,வின் அதிகாரப் பூர்வ சேனலை நடத்த அனுமதித்து இருப்பதாக தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். புதிய "டிவி'யை துவக்குவதற்கான மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் இதர தொழில்நுட்ப வசதிகளை செய்து தரும் பொறுப்பு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய "டிவி'க்கு "கலைஞர் டிவி' என பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் சின்னமான உதயசூரியனே புதிய "டிவி'யின் "லோகோ'வாக இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. பெரிய அளவில் புதிய "டிவி'யை நடத்த வேண்டும் என்பதற்காகவும், "சன் டிவி' மற்றும் "ஜெயா டிவி'யுடன் போட்டி போட்டு செய்திகளை காண்பிக்க வேண்டும், என்பதற்காகவும் அனுபவமுள்ள செய்தியாளர்களை சேர்க்கும் முயற்சியில் ராஜ் "டிவி' நிர்வாகம் உதவி வருகிறது. "சன் டிவி'யில் வேலை பார்த்து வரும் பெரும்பாலான ஊழியர்கள், "கலைஞர் டிவி'க்கு தாவ தயாராகி விட்டனர்.
"கலைஞர் டிவி'யில் பணியாற்றுவதற்காக தொழில்நுட்ப பணியாளர் களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. இதில், "சன் டிவி' ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளத்துடன் அவர்களுக்கு பணி நியமன உத்தரவும் நேற்றே வழங்கப்பட்டது. இதேபோல நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கான நேர் முகத் தேர்வு இன்று முதல் நடக்க உள்ளது. சன் "டிவி'யின் செய்திப்பிரிவில் பணியாற்றும் முக்கிய நபர்கள் பலர், "கலைஞர் டிவி'யில் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ராஜ் "டிவி' நிர்வாகத்துடன் "டிவி' ஊழியர்கள் மொபைல் போனில் ரகசியமாகத் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்த புதிய சேனல் வரும் ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று செயல்பட துவங்குகிறது.
* ராஜ் "டிவி' குழுமத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தி.மு.க.,வும் ராஜ் "டிவி' குழுமமும் இணைந்து வெகுவிரைவில் ஒரு "டிவி' சேனலை ஆரம்பிக்க உள்ளன. இந்த புதிய சேனலுக்கு "கலைஞர் டிவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தி.மு.க., மூத்த தலைவர் களுடன் பேசிய பின் தான், "டிவி' சேனல் ஆரம்பிப்பதற்கான திட்டம் உருவாக்கப் பட்டது. இத்திட்டம் முழு நிறைவு பெற்று செயல்பட துவங்கியுள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் இருக்கும். முழுக்க முழுக்க செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கலந்த முன்னணி சேனலாக இந்த சேனல் திகழும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
தற்போது, பெரும்பாலான கேபிள் இணைப்புகள், "சன் டிவி' நிர்வாகம் வசம் உள்ளதால், புதிய சேனலை முக்கியத் துவம் கொடுத்து, "பிரைம் பேண்டில்' ஒளிபரப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. "அண்ணா அறிவாலயத் தில்' உள்ள சன் "டிவி' அலுவலகத்தை விரைவாக காலி செய்யவும் தி.மு.க., சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகள் தரும் நிறுவனத்தை மட்டும் அறிவாலயத்திலேயே வைத்துக் கொள்ள தி.மு.க., விரும்புகிறது. சன் "டிவி' இயங்கிய அதே இடத்தில் இருந்தபடி, "கலைஞர் டிவி' செயல்படும் என்றும் தெரிகிறது. புதிய சேனலுக்கு முக்கியத் துவம் தராத பட்சத்தில், கேபிள் இணைப்புகளையும் தி.மு.க.,வே வழங்கும் வகையில் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
.* சேனல் மாறுகின்றன பிரபல தொடர்கள்: "கலைஞர் டிவி'யில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிகள் கூட இறுதி செய்யப்பட்டு விட்டன. இப்போது, வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்கள், "கலைஞர் டிவி'க்கு இடம் மாற முடிவு செய்துள்ளன. குறிப்பாக பெண்களை கவர்ந்த நடிகை ராதிகா நடித்து வரும் பிரபல தொடர், பிரபல மூன்றெழுத்து சினிமா நிறுவனம் தயாரித்து பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் தொடர், ஆகியவை விரைவில், "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும். இதே போல் பிரபல பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள், சமீபத்தில் திரைக்கு வந்த பிரபலமான சினிமாக்கள் ஆகியவையும், "கலைஞர் டிவி'க்கு இடம் மாறுகின்றன.
Nandri: Dinamalar
http://www.dinamalar.com/2007may21/specialnews1.asp?newsid=2
Sunday, May 20, 2007
கலைஞர் டிவி: ஜூன் 3ம் தேதி முதல் ஒளிபரப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment