Wednesday, March 26, 2008

இந்தியாவில் குடியும் செக்ஸும்தான் கொண்டாட்டம் ?!

குடியை எதிர்த்து போர்க்கோலம் பூண்டுவரும் மருத்துவர் தமிழ்குடிதாங்கியவர்கள் (பாராட்டுக்கள் !) ஏன் இன்னும் சமூகத்தின் இன்னொரு நச்சான செக்ஸ் சம்பந்தப்பட்ட சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராட்டம் துவங்கவில்லை ? விரைவில் துவங்க வேண்டுகிறோம்.

{{{{{{{{{{{ ஜக்கி வாசுதேவ் கட்டுரை ஆரம்பம் }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

கொண்டாட்டம் என்றாலே குடியும் செக்ஸும்தான் என்று இளைஞர்கள் நினைக்கும் அபாயம் இங்கே நேர்ந்துவிட்டது.

இந்தியா அண்மைக்காலமாக புதிய கலாசாரத்தைச் சந்தித்துக் கொண்டு இருப்பதை மறக்கக்கூடாது.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம், திருமணமான இளம் தம்பதிகள் நள்ளிரவில் தனியே கொண்டாட்டங்களுக்காகப் போனதில்லை. குடித்துவிட்டு ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் இளைஞர்களை சாலைகளில் அவர்கள் எதிர்கொண்டதில்லை.

சுலபமாக எங்கும் மது கிடைக்க அரசாங்கமே வழி செய்திருக்கிறது. கொள்கைகளைவிட வணிகமே பிரதானம் என்று அமெரிக்க வழியில் இந்திய அரசும் இறங்கிவிட்டது.

முன்பு குடிப்பவர்கள் தாழ்வாகக் கருதப்பட்டார்கள். இப்போது குடிக்க மறுப்பவர்கள், வாழ்க்கையை ரசிக்கத்
தெரியாதவர்கள் என்று ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள்.

{{{{{{{{{{{ }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

ஆண்களைத் தூண்டும் விதத்தில் தங்கள் உடல் பாகங்களை வெளிக்காட்டும் உடைகளைப் பெண்கள் அணிந்து வருவதும் புதிய கலாச்சாரத்தில் நாகரிகமாகக் கருதப்படுகிறது.

{{{{{{{{{{{{{{ }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

படித்தவர்களும் சமூகத்தில் மேல்தட்டில் இருக்கும் வசதியானவர்களும் ஒரு புதிய கலாசாரத்தை இங்கே கொண்டுவரப்பார்க்கிறார்கள். மொத்த ஜனத்தொகையில் அவர்கள் மிக் சிறிய சதவிகிதம் தான். இதை அனுபவிக்க இயலாமல் விடுபட்டவர்கள்தாம் பெரும்பான்மை.

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம்கூட முழுமையாகக் கிடைக்காமல் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களின் பார்வையில் இது எப்படித் தோன்றும்? சமூகத்தின் தராசுத் தட்டுகள் சமமாக இல்லாது போகும்போது இருப்பவர்களை இல்லாதவர்கள் பிரமிப்பும், இயலாமையும் பொறாமையுமாகப் பார்க்கிறார்கள். குடிபோதையில் இருக்கும் போது கட்டாயத்தின் பேரில் அடக்கிவைத்த உணர்ச்சிகள் பீறிட்டுவிடுகின்றன.

மொத்த ஜனத்தொகையும் இந்தக்கலாசாரத்துக்குப் பழக்கமாகும் வரை இதுபோன்ற அசம்பாவிதங்கள் (அண்மையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மும்பை, கொல்கத்தா, போன்ற பல இந்திய நகரங்களில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது.) இருக்கத்தான் செய்யும் . இதைக் கவனத்தில் கொண்டுதான் பெண்கள் நடந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு மனிதனையும் அழுக்காறு, வன்முறை போன்ற தேவையில்லாத பகுதிகள் மூடியிருக்கின்றன. கவனமாக அவற்றைக் களைந்து எடுத்துவிட்டால் அவனுடைய வாழ்க்கை மரியாதைக்கு உரியதாகிவிடும்.

அதனால்தான் தியானத்தை நான் தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன். வெளிச் சூழ்நிலைகளின் திடீர்த் தூண்டுதல்களால் அலை பாயாத மனம் வேண்டும் என்றால் தியானம் அவசியம். மனிதர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டவர்களாக தியான நிலையில் இருந்தால் இந்த அவலங்கள் நேராது.

விஷப் பாதையைத் தவிர்க்க அமுதூட்டும் தியான வழிக்கு வாருங்கள் !
.... அமுதம் அருந்துவோம்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

( நன்றி: ஆனந்த விகடன் பிப்ரவரி 20, 2008 இதழ்)

http://www.vikatan.com/av/2008/feb/20022008/av0202.asp

1 comment:

Sambar Vadai said...

கோலி சோடா கோயிந்தன் said...
/*ஆண்களைத் தூண்டும் விதத்தில் தங்கள் உடல் பாகங்களை வெளிக்காட்டும்
உடைகளைப் பெண்கள் அணிந்து வருவதும் புதிய கலாச்சாரத்தில் நாகரிகமாகக்
கருதப்படுகிறது.

மொத்த ஜனத்தொகையும் இந்தக்கலாசாரத்துக்குப் பழக்கமாகும் வரை
இதுபோன்ற அசம்பாவிதங்கள் (அண்மையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்
போது மும்பை, கொல்கத்தா, போன்ற பல இந்திய நகரங்களில் பெண்கள்
மீது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது.)
இருக்கத்தான் செய்யும் . இதைக் கவனத்தில் கொண்டுதான் பெண்கள் நடந்துகொள்ளவேண்டும்.

நல்ல வேளை இதை சொன்னவர் - சத்குரு ஜக்கி வாசுதேவ்
( நன்றி: ஆனந்த விகடன் பிப்ரவரி 20, 2008 இதழ்) */

அவர் பெயர் மட்டும் ஏதோ மோஹம்மது, ஆஹமது என்று இருந்து இருந்தா அவரை பிற் போக்கு இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்லியிருப்பார்கள்.