Thursday, March 27, 2008

தினமலர் ஆசிரியர், பதிப்பாளருக்கு 3 மாதம் சிறை - மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பு


பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை


சென்னை, மார்ச் 28: பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும், வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:

தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.

செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

“தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை“ என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

செய்தி: படம்: நன்றி:: Dinakaran




{{{{{{{ The Hindu Report }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

3-month jail for Tamil daily Editor, publisher

CHENNAI: A Magistrate Court in Egmore has sentenced Dinamalar Editor R. Krishnamurthy and its publisher R. Lakshmipathi to undergo three months’ simple imprisonment in a defamation case filed by a retired headmaster of a government school.

A. Sethuraman, who worked as headmaster of the Government Boys Higher Secondary School, Oothukottai, filed a complaint against Dinamalar for publishing a news item on March 16, 2001 stating that he helped students to indulge in copying in the public examination.

Following the publication of the report, he was placed under suspension.

The news item was wrong, malicious and baseless, he contended.

News: The Hindu

No comments: