Wednesday, March 12, 2008

வங்கக் கடலில் புயல் சின்னம் !?

குளோபல் வார்மிங்கா ? இல்லை நாட்டுல நல்லவங்க அதிகரிசுட்டாங்களா ? என்னங்க இது மார்ச்சு மாசத்துல புயல் சின்னம், பலத்த மழை அப்படீன்னு ? என்னமோ போங்க. தண்ணிப் பிரச்னை இல்லாம இருந்தா சரிதான்.

செய்தி: நன்றி: மாலைமலர்

வங்கக் கடலில் புயல் சின்னம்: பலத்த மழை எச்சரிக்கை: 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

சென்னை, மார்ச். 12-

வங்கக் கடலில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோர பகுதியின் தென்மேற்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து புயலாக மாறும் நிலையில் உள்ளது.

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 36 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் இருந்து கிழக்கு நோக்கி 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடபகுதியை விட தென் பகுதி மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் உருவானதின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. தாழ் வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இன்றும் இந்த மழை நீடிக்கும் என தெரிகிறது.



படம்: நன்றி: சி.என்.என்

No comments: