விரைவில் விற்பனைக்கு வருகிறது ரூ.5க்கு பெண்கள் காண்டம்
ஆணுறை போல பெண்களுக்கும் காண்டம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதாலும், உபயோகிக்கும் முறை பற்றி பெரியளவில் பிரசாரம் செய்யப்படாததாலும் இந்தியாவில் பெண்கள் காண்டம் அதிகம் விற்பனையாகவில்லை.
இதனால், பெண்கள் காண்டத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம்(என்.ஏ.சி.ஓ) இறங்கியுள்ளது. முதல்கட்டமாக இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து 15 லட்சம் பெண்கள் காண்டத்தை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் வாங்குகிறது. அவை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு அடுத்த 8 மாதத்தில் விநியோகிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து என்.ஏ.சி.ஓ இயக்குனர் சுஜாதா ராவ் கூறுகையில், 'கடந்த 2006ம் ஆண்டில் ஐ.நா சுகாதார நிறுவனவத்திடமிருந்து 5 லட்சம் காண்டம் வாங்கினோம். அதை வைத்து 13 மாநிலங்களில் உள்ள 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தினோம். இதில் 60 சதவீத பெண்கள், காண்டத்தை மீண்டும் வாங்கினர். இவர்களில் 98 சதவீதம் பேர் உபயோகிக்கும் முறை எளிதாகவும், சவுகரியமாகவும் உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால், பெண்கள் காண்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டுமிட்டுள்ளோம்' என்றார்.
பெண்கள் காண்டம் ரூ.5க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்பது பற்றி காண்டம் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் கம்பெனியைச் சேர்ந்த மனோஜ் கோபாலகிருஷ்ணா கூறுகையில், ÔÔபெண்கள் காண்டம் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதை இந்தியாவில் தயாரிக்க கொச்சியில் தற்போது புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பெண்கள் சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி பெண்கள் காண்டம் தயாரிக்கப்படும். இதை தயாரிக்க சராசரியாக காண்டம் ஒன்றுக்கு ரூ.40 செலவாகும். ஆனாலும் விலையைக் குறைத்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்ÕÕ என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறுகையில், ÔÔஆணுறை உபயோகிக்க ஆண்கள் மறுக்கும்போது, பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும், தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்கும் இந்த காண்டம் பயன்படும்ÕÕ என்றார்.
செய்தி: படம்: நன்றி: தமிழ்முரசு
6-மார்ச்- 2008 பக்கம்-6 சென்னை பதிப்பு
Thursday, March 6, 2008
ரூ.5க்கு பெண்கள் காண்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment