Wednesday, March 19, 2008

சென்னையை சீரழிக்க வரும் டைம்ஸ் ஆஃப் இண்டியா

புலி வருது புலி வருது கதையாக புலி வந்தே விட்டது. இனி மவுண்ட்ரோடு மஹாஹிண்டுவிற்கு புளியைக் கரைக்கும்.என்ன கழுத.. இனிமே சென்னையிலும் குடியும் கூத்தும் அரைகுறை ஆடைப் பெண்களின் படங்களும் போட்டால்தான் அது பத்திரிக்கை என்ற கலாச்சாரம் பரவும். குடி பார்களுக்கு 12 மணிக்குமேல் அனுமதி இல்லையா - TOI தன் பங்கை செயலாற்றி வக்காலத்து வாங்கி கட்டுரை பதியும். டிஸ்கோதேக்களுக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறாரா..இல்லையா என்பது வேறு. TOI நிச்சயம் இந்த மாதிரி சமாச்சராங்களுக்கு வக்காலத்து வாங்கி நாட்டில் என்னமோ குடியும் செக்ஸும் இல்லையென்றால் தனிமனிதனுக்கு உணவு கிடைக்காத லெவலில் TOI போராடும். அப்பப்போ சென்னை பற்றிய சாக்கடை/ டிராபிக்/மெட்ரோ ரயில் என எதையாவது பற்றி செய்தி போட்டு 'பாருங்க நாங்க வந்தப்புறம் தான் அரசாங்கமே மக்கள் பிரச்னையை கவனிக்குதுன்னு' விளம்பர செய்திகளும் வரும்.

செய்தியே இல்லாமல் சும்மா விளம்பரங்களும், படங்களும், சென்னை டைம்ஸ் என்ற இணைப்பில் யார் யார் மேல்தட்டு குடிகாரர்கள் எந்த 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் பார்களில் குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள் போன்ற படங்களும், இந்தி நடிக/நடிகையரின் காதல் களியாட்டங்கள் போன்ற செய்திகளே இடம்பெறும். யார் இதற்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் நாட்டு ஆட்டோ கலாச்சாரத்திற்கு TOI தயார் செய்து கொள்வது நல்லது.

ஒரு வேளை தினகரன்/தமிழ்முரசு விநியோகஸ்தர்களே டைம்ஸையும் விநியோகிப்பார்களோ ? இது நிச்சயம் தினகரனுக்கு பின்னாளில் கேடு விளைவிக்கலாம். தினகரன் தினமலருக்கு செய்த Poachingங்கை TOI தினகரனுக்கு செய்து இழுத்து மூட எதை வேண்டுமானாலும் செய்யும். டைம்ஸ் ஆஃப் இண்டியா என அப்படியே தமிழாக்கம் செய்த பத்திரிக்கையை வெளியிடும் தில்லும் அதற்கு உண்டு. பெங்களூரில் அப்படித்தான் விஜய் டைம்ஸ் என்ற பத்திரிக்கையைக் கொன்று கன்னடத்திலே டைம்ஸ் ஆஃப் இண்டியா வெளியிட்டு வருகிறார்களாம்.

இந்தி ஆதிக்கம் நிச்சயம் அதன் கட்டுரைகளில் இருக்கும். பலவித இந்தி வார்த்தைகள் அதன் கட்டுரைத் தலைப்பில் தட்டுப்படும். ஆங்கிலம் மூலமாக இந்தியை திணிக்கும். இந்திக்காரர்களின் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிக்கும். இதற்கு தமிழ்பாதுகாப்பு காவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என போகப் போகத் தெரியும்.

சென்னையில் வந்து குவியும் வட இந்தியர்களுக்கு ரொம்ப குஷியாக இருக்கும். ஸ்ரீலங்காரத்ன மேதகு என்.ராம் என்ன செய்யப் போகிறார் ?

மாமனார் குடும்பத்து செய்தித்தாளுக்குப் போட்டியாக வரும் TOIக்கு எப்படி தயாநிதி மாறன் தனது பத்திரிக்கையில் விளம்பரம் பண்ண ஒத்துக்கொண்டார் ?

இந்த செய்திக் கட்டுரை பழசு என்றாலும் இதன் சாரம் இப்போதும் பொருந்தும்.

படம்: நன்றி: தினகரன் (20- 3 - 2008) சென்னை பதிப்பு

3 comments:

சகாதேவன் said...

இந்தியாவின் டைமே சரியில்லை.

சகாதேவன்

Unknown said...

ood Article.
I still remember that day, I had seen full page - Sania Mirza photo in half skirt at front page, the same day, there was an important news about Indo-US nuclear deal issues.
It shows how responsible ToI is ??
ToI ignores all regional news and projects only North and Bollywood news.
My strong suggestion:
DON'T READ ToI at any cost. It is waste of time.

பத்மகிஷோர் said...

TOIlet paper