கிருஷ்ணகிரி அருகே அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளதால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 570 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்ற னர். மாதவிலக்கு நாட்களில் மாணவிகள் படும் சிரமங்களை நிலையை அறிந்த Ôயுனிசெப்Õ நிறுவனம், மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து 570 பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கும், அதில் பயிலும் சில மாணவிகளுக்கு பயிற்சி அளித்தது. அத்துடன், Ôபயப்பட எதுவுமில்லைÕ என்ற சிறிய புத்தகத்தை அச்சிட்டு அனைவருக்கும் விநியோகித்தது.
நாப்கினை வாங்க கிராமபுற மாணவிகள் மட்டுமல்லாமல் நகரில் வாழும் மாணவிகள் கூட வெட்கப்படுகின்றனர். இந்நிலையை போக்க, பள்ளிகளிலேயே இவர்களுக்கு சானிட்டரி நாப்கின் குறைந்த விலையில் கிடைக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு எடுத்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக மேகலசின்னம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷினை வைத்துள்ளனர். இதில் 25 நாப்கின்கள் வைக்கப்படுகின்றன. நாள்தோறும் 20 நாப்கின்களை மாணவிகள் எடுத்து செல்கின்றனர்.
இந்த மெஷினில் ஒரு ரூபாய் நாணயம் இரண்டை போட்டால் ஒரு நாப்கின் வெளியே வரும். இந்த பள்ளியில் உள்ள மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளும் இங்கு வந்து சானிடரி நாப்கின்களை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்ட எரியூட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளி கூறும்போது, சோதனைமுயற்சியாக எங்கள் பள்ளியில் இந்த சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றார்.
செய்தி, படம்: நன்றி: தினகரன் - சென்னை பதிப்பு 18-3-2008 பக்கம் 14
Monday, March 17, 2008
அரசு மகளிர் பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment