Thursday, July 12, 2007

கருணாநிதியின் பச்சைத் துரோகம் - ஜெயலலிதா

காவிரி பிரச்சனையில் அதிமுக கூறியபடி உச்சநீதிமன்றத்தில் முறை யிடாததால், முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்களுக்கு பச்சைத்துரோகம் இழைத்துள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காவிரி பிரச்சனை: "கருணாநிதியின் பச்சைத்துரோகம்'
ஜெயலலிதா ஆவேசம்


சென்னை, ஜூலை 12:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 16 ஆண்டுகாலத்துக்குப்பிறகு காவிரி நடுவர் மன்றம் கடந்த 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சங்களும், ஏற்றுக்கொள்ளக் கூடாத அம்சங்களும் இருந்தன. பாதகமான அம்சங்கள் குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத் துக்கு செல்ல வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழக அரசால் 19.2.2007, 15.4.2007 ஆகிய நாட்களில் கூட்டப் பட்ட அனைத்துக்கட்சி கூட்டங் களிலும் அதிமுக இதனை வலியுறுத்தியது. உடனடியாக நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய கெசட்டில் வெளியிட வேண் டும் என்று கோரி நான் 18.3.2007 அன்று உண்ணாவிரதம் இருந்தேன்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலில் நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு செய்து தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தி லிருந்து அதிமுக ஒதுங்கி நின்றது.

நடுவர் மன்றத்தை மறுபடியும் அணுகுவது வேண்டாத வீண் வேலை என்றும், உச்சநீதிமன்றத்தை மட்டுமே உடனடியாக அணுக வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் கடந்த 10ந் தேதி காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழக அரசு மனுவை விசாரிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து கருணாநிதி யின் முகத்தில் கரி பூசியது.

இப்போது 150 நாட்களை வீணாக கழித்து விட்டு தமிழக அரசு எங்கு புறப்பட்டதோ அந்த இடத்துக்கு திரும்பவும் வந்து நிற்கின்றது. இதுதான் கருணாநிதியின் இமாலய சாதனை, நிர்வாகத்திறன்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, காவிரி தண்ணீரால் உயிர் வாழ்ந்தும் கூட அதைப்பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாத ஒரே மனிதர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். கடந்த நான்கு நாட்களாக அவர் பெங்களூரில் மகள் வீட்டில் தங்கி சன் டிவி குழுமத்திலிருந்து தன் பங்குக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய்களை பெறுவதற்கான சமரச பைசல் விவகாரங்களில்தான் அவர் அக்கறையுடன் ஈடுபட்டு இருந்தாரே தவிர, மறந்தும் காவிரி பிரச்சனை குறித்து உரிய முறையில் செயல்பட வில்லை.

இதற்கிடையில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தில் மிக ரகசியமாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு தீர்ப்பை தாமதப்படுத்தும் நோக்கத்தில் விளக்கம் கோரும் போர்வையில் அமைந்துள்ளது.

தற்போது மேட்டூரில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் 25ந் தேதி தான் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்திருப்பதற்கும் கருணாநிதியின் சுயலாபம் தான் காரணம். தண்ணீர் திறந்து விட்டால் திமுகவினர் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதால்தான் விவசாயிகள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற நோக்கத்தில் தண்ணீர் திறப்பதை தாமதப்படுத் தியிருக்கிறார்.

மகன்களுக்கு இன்னும் எத்தனை ஆயிரம் கோடி சேர்க்கலாம், இன்னும் என்னென்ன பதவிகளைப் பெற்றுத்தரலாம், கனிமொழிக்கு மத்திய அரசில் எந்த இலாகாவைப் பெற்றுத்தரலாம், அதன்மூலம் குடும்பத்துக்கு எந்த வழிகளில் லாபம் கிடைக்கும் என்பது பற்றித்தான் கருணாநிதியின் சிந்தனை உள்ளது.

காவிரி டெல்டா விவசாயி பயிரிட்டால் என்ன, பயிரிடாமல் போனால்தான் அவருக்கென்ன? ஸ்டாலினுக்கு எப்போது பட்டாபிஷேகம் செய்வது?, தூக்கு மரத்தின் நிழல் படிந்திருக்கும் மதுரை மகனை எப்படி காப்பாற் றுவது? என்பது போன்ற குடும்ப கவலையில் மூழ்கியுள்ள கருணாநிதிக்கு காவிரியாவது, பாசன மாவது, பயிராவது, நீராவது?

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கருணாநிதி தலைமையிலான அணிக்கு 39 எம்பிக்களை அளித்துள் ளார்கள். கூட்டுறவு அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு, மாநில அரசு, மத்திய அரசு எல்லா வற்றிலும் அவருடைய கொடூர கரங்கள் நீண்டுள்ளது.

இத்தனை அதிகாரங் களையும் கையில் வைத்துக் கொண்டு ஒரு சிறு நன்மையைக் கூட தமிழகத் துக்கு செய்ய கருணாநிதி தயாராக இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது எப்படி இருந்த தமிழகம், எப்பேர்ப் பட்ட தலைவர்களைப் பெற்ற தமிழகம் இந்த இழிநிலைக்கு இன்று ஆளாகிவிட்டதே என்று நினைத்தால் சொல்லொணா வேதனை நெஞ்சை அடைக்கின்றது.

இப்படியும் ஒரு முதலமைச்சர், இப்படி ஒரு தமிழக அமைச்சரவை, மத்திய அமைச்சரவை இவையெல்லாம் தமிழகத் திற்கு வந்து வாய்த்த பெரும் சாபக்கேடு. தமிழக மக்கள் எவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விலகுகி றார்களோ அவ்வளவுக்கவ்வ ளவு நல்லது.

டெல்டா பாசன விவசாயிகள் பச்சைப்பசே லென்று நெற்பயிரை விளை விக்க வேண்டிய இந்த நேரத்தில், தமிழக மக்கள் பார்க்க முடிந்ததெல்லாம் கருணாநிதியின் பச்சை துரோகத்தைத்தான். இதை நினைக்கும்போது ரத்தக் கண்ணீர்தான் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Nandri: Source: Maalaisudar

2 comments:

maruthan said...

there is truth in jayas claim

Unknown said...

பச்ச... ஆன்டிக்கு ரொம்ப புடிச்ச கலர்??
டிவி'ல இவங்க அலும்பு தாங்கலடா சாமீ