Monday, July 2, 2007

ராமதாஸ் எச்சரிக்கை - பொன்முடி மீது கடும் தாக்கு

பொன்முடி - "நிதானம்' அனைவருக்கும் தெரியும். அவர் எப்போதெல்லாம் நிதானமாக இருப்பார், எப்போ தெல்லாம் நிதானத்தை இழப்பார் என்பதை நான் முதலமைச்சரின் கவனத்திற்கே கொண்டு சென்றிருக்கிறேன்

உயர்கல்வி கட்டணக் கொள்ளை விவகாரம்
ராமதாஸ் எச்சரிக்கை
பொன்முடி மீது கடும் தாக்கு

சென்னை, ஜூலை 2:


தமிழகத்தில் உயர் கல்வித்துறையில் நடைபெற்று வரும் நன்கொடை மற்றும் கல்விக் கட்டண கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் பாமகவின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். உயர்கல்வித்துறை முந்தைய ஆட்சியில் இருந்ததை விட தற்போது மிகவும் சீரழிந்து அலங்கோலமாகி விட்டதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நன் கொடைகள் வசூல் மற்றும் கல்விக் கட்டண கொள்ளை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று சென்னையில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆற்றிய உரை வருமாறு:

கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை சுமார் 27 முறை போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 240க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை கொள்ளை கூடாரங்களாகவே மாறிவிட்டன.

இதில் விதிவிலக்காக ஒரே ஒரு தனியார் கல்லூரி மட்டும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து வருகிறது. மற்ற எல்லா கல்லூரிகளிலும் கல்விக் கட்டண கொள்ளை தான் நடந்து வருகிறது. பிற மாநிலங்களை விட இங்கு தான் மிக அதிகமாக கல்விக் கட்டணங் களை வசூலித்து வருகிறார்கள். இதுகுறித்து புகார்கள் வரவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.

120 மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து ஒரு சங்கத்தை உருவாக்கி இது தொடர்பான புகார்களை முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செய லாளர், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குனர் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பியிருக் கிறார்கள். உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு தொடரப் பட்டுள்ளது. பத்திரிகைகளிலும் இது பற்றிய செய்திகள், கட்டுரைகள் வெளி வந்துள்ளன. இவற்றை யெல்லாம் தான் நான் தொகுத்து ஒரு அறிக்கையாக தந்தேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் (பொன்முடி) நிதானமாக பதிலளிக்கிறேன் என்று கூறி எதைஎதையோ சொல்லியிருக்கிறார். அவர் "நிதானம்' அனைவருக்கும் தெரியும். அவர் எப்போதெல்லாம் நிதானமாக இருப்பார், எப்போ தெல்லாம் நிதானத்தை இழப்பார் என்பதை நான் முதலமைச்சரின் கவனத்திற்கே கொண்டு சென்றிருக்கிறேன்.

(பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், "உயர்கல்வித்துறை அமைச்சர் என்னவோ நடக்கிறது; ஒன்றுமே புரியவில்லை என்று மயக்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறார் என்று குறிப்பிட்டார்) அந்த அமைச்சர் எங்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு, இந்த துறையில் ஏதாவது உருப்படியாக நடவடிக்கை எடுத்தால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நாங்கள்தோழமையுடன் இருக்கும் நாங்களே போராட வேண்டுமா என்றுதான் கேட்கிறோம். முன்பு ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் இருந்ததை விட தற்போது உயர் கல்வித்துறை மிகவும் சீரழிந்து அலங்கோலமாகிவிட்டது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. இதற்கு ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் சொல்லவில்லை.

முதலமைச்சர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சட்டமன்ற வளாகத்திலேயே நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையை உருவாக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். முதலமைச்சருக்கு சங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்றுதான் எங்கள் கட்சி எம்பிக்களையும், எம்எல்ஏக் களையும் தெருவுக்கு அழைத்து வந்து போராடுகிறோம்.

இனியும் இந்த விஷயத்தில் நட வடிக்கை எடுக்கப்படாவிட்டால், எங் களுடைய போராட்டம் மேலும் தீவிர மடையும். எனவே, கல்விக் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தி ஏழை மாணவர்கள் பயன்பெற அரசும், முதலமைச்சரும், அமைச்சரும் உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்கேஜி என்பது சிறுவணிகக் கொள்ளை; மருத்துவக் கல்லூரிகள் பெருவணிகக் கொள்ளை என்று நடப்பதால் தோழமைக் கட்சி என்ற முறையில் இந்த புகார்களை அரசிடம் முன்வைக்கிறோம். முதலமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் ராமதாஸ்.

Nandri: http://www.maalaisudar.com/0207/hed_news_1.shtml

No comments: