அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் ஜெயலலிதா: வீரமணி அறிக்கை
சென்னை, ஜூலை 9: அரசியல் காரணங்களுக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லக் கூடாது என்று ஜெயலலிதா கூறுவது, அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாததைக் காட்டுகிறது என்று திக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி ஓய்வெடுப்பதற்காக பெங்களூருக்கு சென்றிருப்பதை கண்டித்து, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது மனிதநேயமற்ற, அநாகரிகமான, கீழ்த்தரமான செயலாகும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஐதராபாத் திராட்சை தோட்டத்திலும், கொடநாடு பங்களாவிலும் வாரக்கணக்கில் ஓய்வெடுக்கவில்லையா? தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் எடியூரப்பா கூறியதால், தமிழக முதல்வர் கர்நாடகத்துக்கு செல்லலாமா என்று ஜெயலலிதா கேட்பது ஆத்திரத்தில் தோய்ந்த அரைவேக்காட்டுத்தனமான செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை வற் புறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டுத்தான் முதல்வர் பெங்களூருக்கு சென்றுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக அண்டை மாநிலத்துக்கு செல்லக் கூடாது என்று கூறுவது ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
Nandri: Dinakaran (09-July-2007
Sunday, July 8, 2007
அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் ஜெ - வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஜெ - தேசிய வாதம் செலக்டீவாக பேசுபவர். பெங்களூர் இந்தியாவில் தானே இருக்கிறது ?
அது சரி. ஜெ போட்ட ரொட்டி துண்டுகளை பொரிக்கித் தின்ன நாய் தானே இந்த கருப்பு சட்டை மானமிகு அல்பம்.இப்போ மஞ்ச துண்டுக்கு அந்த சேவையை செய்து வரும் முண்டம்.
Post a Comment