Tuesday, July 10, 2007

அதிமுகவுடன் பாமக ? கனவிலும் நடக்காத அதிசயம்

திமுக அணியில் பாமக நீடிக்கும். அதிமுகவுடன் கூட்டணியா? கனவிலும் நடக்காத அதிசயம்
பாமக தலைவர் ஜி.கே.மணி பேட்டி.


செங்கல்பட்டு, ஜூலை 11: “திமுக அணியில் பாமக தொடர்ந்து நீடிக்கும். அதிமுகவுடன் கூட்டணி என்பது கனவிலும் நடக்காத அதிசயம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட பாமக இளைஞர் அணி மாநாடு, மறைமலை நகரில் 14ம் தேதி நடக்கிறது. அதற்காக வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவரின் மாளிகை போல மேடை அமைக்கப்பட்டு வருவதை பாமக தலைவர் ஜி.கே.மணி, நேற்று பார்வையிட்ட பின் அளித்த பேட்டி:

கூட்டுறவு தேர்தல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது எப்படி நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுகிறது.

அதிமுக அணியில் சேருமாறு பாமகவுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். அதை பாமகவினர் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். இது அதிசயமானது.
திமுக கூட்டணியில்தான் பாமக தொடர்ந்து நீடிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அதில் எந்த மாற்றமும் நிகழாது. இது உறுதி. இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

Nandri: Source: Dinakaran (11-July-2007)

2 comments:

கோவி.கண்ணன் said...

//"அதிமுகவுடன் பாமக ? கனவிலும் நடக்காத அதிசயம்" //

ஏன் இதை கேள்விப்பட்டதில் இருந்து யாருக்கும் தூக்கமே வரவில்லையாமா ?

அப்பறம் எங்கே கனவு ?
:))

Sambar Vadai said...

கனவுல தான் நடக்காது. நெசத்துல நடந்தாலும் நடந்துடும்னும் நாம எடுத்துக்கலாம்ல :-))

வருகைக்கு நன்றி - கோவி.கண்ணன்.