சினிமா ரசிகர் மன்றத்தினர் முட்டாள்கள் : பா.ம.க.,ராமதாஸ் ஆவேசம்
திருவண்ணாமலை : ""சினிமா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டதாகத்தான் கருதுவேன்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். திருவண்ணாமலையில் ஒரு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் சினிமாவை பற்றி சில நேரம் நான் மட்டுமே கடுமையான விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. சினிமாவே தேவையில்லை. இளைஞர்களை, சமுதாயத்தை, தமிழை சினிமா சீரழிக்கிறது. சினிமாவில் யதார்த்தம் கிடையாது. சினிமாவில் "மசாலா' என்று பல்வேறு பார்முலா சொல்கிறார்கள். சினிமாவில் ஒருவர் 100 பேரை அடிப்பார். எந்த ஊரிலும் சண்டையின் போது ஒரே ஆள் 100 பேரை அடிப்பது கிடையாது. அதேபோல், கற்பழிப்பு காட்சிகளை சினிமாவில் விலாவாரியாக காண்பிக்கின்றனர். நடைமுறையில் கற்பழிப்பு சம்பவம் நடந்தாலே பலரும் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். தற்போது, ஒரு சிலர்தான் கற்பழிப்பு குறித்து போலீசில் புகார் கொடுக்க முன்வருகின்றனர்.
இப்போது சினிமாவில் நாகரீகம் என்ற பெயரில் கலாசார சீரழிவு நடக்கிறது. இதனை ஆதரிக்க அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டு சிலர் உலா வருகின்றனர். அத்தகைய நபர்கள் உண்மையிலேயே அறிவுஜீவிகள் கிடையாது. இது வருத்தம் அளிக்கிறது. சினிமா ரசிகர் மன்றங்களே கூடாது என்று நான் தொடர்ந்து பலமுறை சொல்லி வருகிறேன். ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டதாகதான் நான் கருதுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
Nandri: Source: Dinamalar
Wednesday, July 11, 2007
சினிமா ரசிகர் மன்றத்தினர் முட்டாள்கள் - ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எது எப்படியோ இந்த விசயத்தில் இவர் சொல்வது 100% சரி என்றே தோன்றுகிறது :)
Post a Comment