Sunday, July 29, 2007

பதவி விலக தயார் - கருணாநிதி

என்னால் மக்களுக்கு செய்ய முடிந்தது இவ்வளவுதான். இதைவிட மேலும் நல்லது செய்ய முடியும் என்று வேறுயாராவது கருதினால், நான் ஒதுங்கிக்கொண்டு அவர்களை வரவேற்று பாராட்டி, புகழ்மாலை சூட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். நல்ல அரசு மக்களுக்கு நல்லதை செய்யும் போது அதற்கு மற்றவர்கள் துணை இருக்க வேண்டுமே தவிர, இதை தடுத்துவிட்டோம் என்று கித்தாப்பு காட்டக்கூடாது என்றும் அவர் காட்டமுடன் குறிப்பிட்டார். வா, வந்து பார், நான் நினைத்ததை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டுகிற அரசாக என்னுடைய அரசு செயல்படாது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 3வது கட்டமாக அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வேலைவாய்ப்பகத்தின் பதிவு பெற்ற அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க முடியாவிட்டாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல இன்று வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம்.

3வது கட்டமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 818 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்று கட்டங்களில் மொத்தம் இதுவரை 55 கோடியே 52 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் வேலை வாய்ப்புக்கு தடைச்சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து இந்த ஆட்சி அமைந்த பிறகு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் இருந்த 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பதிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்.

தேர்தல் கால வாக்குறுதிகள் பலவற்றை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இவ்வளவுதான் எங்களால் முடிந்தது என்று கூறி விடைபெறவும் நாங்கள் தயார்.

என்ன செய்தாலும் எல்லோரையுமே திருப்திப் படுத்த முடியாது. ஆங்காங்கே சில குறைபாடுகள் எழுவதற்கு வாய்ப்புண்டு. நல்ல முறையில் வழிகாட்ட தோழர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும்.

மேலும் இதைவிட காரியங்கள் செய்கிறோம் என்று யாராவது வந்தால் என்னால் முடிந்தது இதுதான் என்று நான் விலகிக்கொண்டு அவர்களை வரவேற்று பாராட்டி, புகழ் மாலை சூட்ட தயாராக இருக்கிறோம்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற 11 மாத காலத்திற்குள் 11 தொழிற்சாலை களை இந்த அரசு கொண்டுவந்து இருக்கிறது. இதனால் எனக்கு கர்வமோ, பெருமையோ, இறுமாப்போ இல்லை. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கின் றனரே என்ற மனவேதனைதான் உண்டு.

ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்கு எத்தனை தடைகளை கடந்து வர வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். வடமாநிலங் களிலே இது போன்ற புதிய தொழிற்சாலைகள் வரும்போது சில பிற்போக்குவாதிகள் ஏழை விவசாயிகளை தூண்டிவிட்டு ரத்த வெள்ளம் ஓடச் செய்கிறார்கள்.

ஒரு அரசு நல்ல முடிவு எடுத்து மக்களின் நல்வாழ்வுக்காக புதிய தொழில்களை தொடங்க முன் வந்தால் மக்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் மக்களை தூண்டிவிடும் விஷமிகளும், சமுதாய கிருமிகளும் நாட்டில் உள்ளன.

இவைகளை எல்லாம் சமாளித்து தான் தொழில்வளங்களை உருவாக்க ஒரு அரசு நேரத்தையும், உழைப்பை யும், பணத்தை யும் செலவழிக்க வேண்டும். அரசு செய்யும் காரியங்களை தடுப்பவர்களுக்கு இடைக்கால மாக நாம் நினைத்த காரியத்தை முடித் தோம் என்ற ஆறுதல் கிடைக்கலாம். அதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.

ஒரு நல்ல அரசு மக்களுக்கு செய்கிற நல்ல காரியங்களுக்கு துணை இருக்க வேண்டியது நண்பர்கள், தோழர் களின் கடமையாகும். இதை தடுத்து விட்டோம் என்கிற கித்தாப்பு கூடாது.
வா, வந்து பார் என்று நினைக்கிற அரசாக இருந்தால் நான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டலாம். இங்கு எந்தவித கலவரமும் நடக்கக் கூடாது.

அமைதிக்கு பங்கம் வரக்கூடாது என்று நினைக்கும் என்னைப் போன்றவர்கள் உங்கள் பாடு, மக்கள் பாடு என்று ஒதுங்கிக்கொள்ள தயார். நல்ல காரியங்களை நடத்துவதற்கு தடையாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமும், வேதனையும் தான் என்கு உள்ளது. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நான் எண்ணுபவன் அல்ல.

நான் பிறந்த போது முதலமைச்சர் ஆவேன் என்று நினைத்து வந்தவன் அல்ல. காலத்தின் கோலம், சமுதாயத்தின் நிலை, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களின் வழி காட்டுதல் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்படி அவர்கள் காட்டிய தியாக வழியில் நான் நடப்பதும் எனக்காக அல்ல; உங்களுக்காக; உங்களுடைய வாழ்க்கை நலனுக்காகத்தான். என்னுடைய வார்த்தையை நம்பினால் உங்களோடு இருப்பதில் அர்த்தமுண்டு. இல்லை என்றால் மக்களிடம் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

இந்த விழாவுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் திரிபாதி வரவேற்று பேசினார். சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Nandri: Source: Maalaisudar

Monday, July 16, 2007

படம் சொல்லும் சேதி என்ன ?

இது நாள் வரையில் அரசு நிகழ்ச்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாத மூத்த புதல்வர் தற்போது தோன்றுவதன் காரணங்கள் பலருக்கும் தெரிந்ததுதான் எனினும், ??????


படம் நன்றி: டெக்கான் க்ரோனிக்கிள் (சென்னை பதிப்பு - 16-July-2007)

Friday, July 13, 2007

ஆரிய மாயையை வீழ்த்துக - கருணாநிதி

திமுகவை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பது நாம் சமீப காலமாக கண்டு வரும் நிதர்சனமாகும். திமுக இப்போதும் வலிமையான இயக்கமாக உள்ளது. மேலும் இதை வலிமை மிக்க இயக்கமாக ஆக்கி விட்டு தான் நான் கண்மூடுவேன்.

250 மதிமுகவினர் இணைந்தனர்.
திமுகவை வலுப்படுத்திய பிறகே கண்ணை மூடுவேன். கருணாநிதி உருக்கம்


சென்னை, ஜூலை 12:


Nandri: Photo source: Dinamalar


திமுகவை மேலும் வலிமை மிக்க இயக்கமாக ஆக்கி விட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று முதலமைச்சர் கருணாநிதி உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பது நாம் கண்டு வரும் நிதர்சனம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அண்ணா அறிவாலய வளாகத்தில் மதிமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் சபாபதி மோகன் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களுமாக 250க்கும் மேற்பட்டவர்கள் இன்று கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று கருணாநிதி பேசியதாவது: சபாபதி மோகன் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் மதிமுகவிலிருந்து விலகி இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சபாபதி மோகனின் இந்த முடிவு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். என்னை பொறுத்தவரை இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது இயற்கையாகவே நடைபெற்றதாகும். அவர் எப்போதுமே திமுகவின் அடிப்படை கொள்கையை விட்டு விலகியதில்லை. இங்கிருந்து சில காலம் விலகிச் சென்ற மதுரை பி.எஸ்.மணியன், திராவிட இயக்க கொள்கை, லட்சியம் மாறாமல் இங்கு வந்து இணைந்திருக்கிறார்.

திமுகவை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பது நாம் சமீப காலமாக கண்டு வரும் நிதர்சனமாகும். திமுக இப்போதும் வலிமையான இயக்கமாக உள்ளது. மேலும் இதை வலிமை மிக்க இயக்கமாக ஆக்கி விட்டு தான் நான் கண்மூடுவேன்.

வருங்காலத்தில் திமுக இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் அரசியல் நிலைப்பாட்டை நிர்ண யிக்கும் மாபெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்பது தான் என் வாழ்நாள் ஆசை. இதை என் வாழ்நாளில் நிறைவேற்றுவேன்.

தமிழகத்திலுள்ள திராவிட கட்சிகள் பொது பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை போல ஒன்றிணைந்து செயல்பட நான் விரும்பினேன். ஆனால் ஒரு ஆரிய சக்தி, திராவிட சக்தி என்ற பெயரிலே அதற்கு தடையாக இருந்தது உங்களுக்கு தெரியும்.

இது போன்ற ஆரிய மாயைகளை விரட்ட வேண்டும் என்று தான் பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் பாடுபட்டார்கள். அந்த ஆரிய மாயையை வீழ்த்துவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Nandri: Source: Maalaisudar

Thursday, July 12, 2007

சிரிப்புதான் வருகிறது - கருணாநிதி

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

வெட்கமில்லை, வெட்கமில்லை என்று உடுமலை நாராயண கவிராயர் எழுதிய பாடல் யாருக்குப் பொருந்தும்?

கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வி.கண்ணுச்சாமியை தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் ராசாராமன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது. அந்தத் தேர்தல் முடிந்ததும், அதே வி.கண்ணுச்சாமியை, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது. மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமார், மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்த சண்முகராஜேஸ்வரன், மயிலாப்பூர் உதவிக் கமிஷனராக இருந்த முருகேசன் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டது. தேர்தல் முடிந்தவுடன் இந்த அதிகாரிகள் எல்லாம் ஜெயலலிதா ஆட்சியிலே மீண்டும் அந்தந்த இடங்களிலே நியமிக்கப்பட்டார்கள். இதிலே, சண்முகராஜேஸ்வரனும், முருகேசனும் என்னுடைய கைது நேரத்தின்போது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றார்கள் என்பதை தமிழகமே நன்கறியும்.

அவர்களை தேர்தல் ஆணையம் மாற்றிய போதிலும், ஜெயலலிதா மீண்டும் அந்தந்த பதவிகளிலே நியமித்துக் கொண்டார். அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டு, இப்போது அவர், சைவப் பூனையாக மாறி, மதுரை மேற்குத் தொகுதியில் தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பழைய இடங்களில் நியமித்திருப்பதை எதிர்த்து போர் நடத்தப் போகிறோம் என்கிறார்களே. அவர்களை நினைக்கும் போதும் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சிலர் போகும் போதும், Ôவெட்கமில்லை, வெட்கமில்லைÕ என்ற உடுமலையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

கூட்டுறவு தேர்தல்களை ரத்து செய்து, தோழமைக் கட்சிகளிடையே பிளவை உண்டாக்கி பிரித்து விடலாம் என்று நப்பாசை கொண்டிருந்தவர்களின் எண்ணத்தில், மண்ணை அள்ளிப் போட்டு விட்டீர்களே ?

ஏற்கத்தக்க கருத்துக்களை யார் சொன்னாலும், சொல்வது யார் என்று பார்க்காமல், அந்தக் கருத்து எந்த அளவுக்கு சரியானது என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து, இந்த அரசு செயல்பட்டுள்ளது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

உள்ளாட்சித் தேர்தல்களையும் ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்தச் சொல்கிறாரே ஜெயலலிதா?

நல்லவேளை, சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலையும் ரத்து செய்து விட்டு, புதுத் தேர்தல் நடத்துமாறு சொல்லாமல் இருந்தாரே. அதைப் பெரிதுபடுத்தவும் அவரைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்களே?

எதிர்ப்புகள், கோரிக்கைகள் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டால் நீங்கள் பணிந்து விடுகிறீர்களே, அம்மாவைப் பாருங்கள், எதற்கும், எவருக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அவ்வளவு வைர நெஞ்சம் அவருக்கு?

உண்மைதான். அந்த வைர நெஞ்சம் யாருக்கு வரும்? பத்தாயிரம் சாலைப் பணியாளர்களுக்கு திரும்பவும் வேலை கொடுக்காமல் திண்டாட விட்டது- அரசு அலுவலர்களுக்கு சம்பளம், போனஸ் எதுவும் தராமல் சிறையில் தள்ளி வாட்டி வதைத்தது- மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியது- எஸ்மா, டெஸ்மா சட்டங்களைப் பிறப்பித்தது- பொடா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்குப் பிடிக்காதவர்களை சிறையில் தள்ளி கொடுமை செய்தது- இவைகள் எல்லாம் ஜெயலலிதாவின் வைர நெஞ்சுக்கு எடுத்துக்காட்டுகள்தானே? அது போல் வருமா நமக்கு?

பா.ஜ.க. தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டிருப்பது பற்றி?

பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர் வாஜ்பாய் பேச்சு 22-8-1999ல் பத்திரிகையில் வெளிவந்ததை அப்படியே குறிப்பிடுகிறேன். ÔÔஅ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நாளிலிருந்தே ஜெயலலிதா தொல்லை கொடுக்கத் தொடங்கினார். பா.ஜ.க. அரசை பலவீனப்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு வாரமும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அரசைக் கவிழ்க்கப் போவதாக சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளன்று கூட அவர் அச்சுறுத்தினார். ஆனால், அவரது பிளாக் மெயில் தந்திரத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை என்ற இந்தப் பேச்சை மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டால், அவர்களது இன்றைய சந்திப்பு பற்றி சிரிப்பு வரத்தானே செய்யும்.

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. தோழமை கொண்டிருந்த போது, ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்ற பா.ம.க. தலைவர் ராமதாசை பல மணி நேரம் காத்திருக்கச் செய்த ஜெயலலிதா, தற்போது ராமதாஸ் எங்கள் அணிக்கு வந்தால் பாசத்துடன் வரவேற் போம் என்று சொல்லியிருப்பதைப் படித்த போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

ராமதாசே ஜெயலலிதாவின் இந்தப் பதில் குறித்து, அது தேவையற்ற கேள்வி-பதில் என்றும், அது வருத்தத்தை அளிக்கிறது என்றும் சொல்லி விட்டார். அவருக்கு என்னைப் பற்றியும் தெரியும், அந்த அம்மையாரைப் பற்றியும் தெரியும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

Nandri: Source: Dinakaran (13-July-2007 - Chennai edition)

கருணாநிதியின் பச்சைத் துரோகம் - ஜெயலலிதா

காவிரி பிரச்சனையில் அதிமுக கூறியபடி உச்சநீதிமன்றத்தில் முறை யிடாததால், முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்களுக்கு பச்சைத்துரோகம் இழைத்துள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காவிரி பிரச்சனை: "கருணாநிதியின் பச்சைத்துரோகம்'
ஜெயலலிதா ஆவேசம்


சென்னை, ஜூலை 12:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 16 ஆண்டுகாலத்துக்குப்பிறகு காவிரி நடுவர் மன்றம் கடந்த 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சங்களும், ஏற்றுக்கொள்ளக் கூடாத அம்சங்களும் இருந்தன. பாதகமான அம்சங்கள் குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத் துக்கு செல்ல வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழக அரசால் 19.2.2007, 15.4.2007 ஆகிய நாட்களில் கூட்டப் பட்ட அனைத்துக்கட்சி கூட்டங் களிலும் அதிமுக இதனை வலியுறுத்தியது. உடனடியாக நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய கெசட்டில் வெளியிட வேண் டும் என்று கோரி நான் 18.3.2007 அன்று உண்ணாவிரதம் இருந்தேன்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலில் நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு செய்து தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தி லிருந்து அதிமுக ஒதுங்கி நின்றது.

நடுவர் மன்றத்தை மறுபடியும் அணுகுவது வேண்டாத வீண் வேலை என்றும், உச்சநீதிமன்றத்தை மட்டுமே உடனடியாக அணுக வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் கடந்த 10ந் தேதி காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழக அரசு மனுவை விசாரிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து கருணாநிதி யின் முகத்தில் கரி பூசியது.

இப்போது 150 நாட்களை வீணாக கழித்து விட்டு தமிழக அரசு எங்கு புறப்பட்டதோ அந்த இடத்துக்கு திரும்பவும் வந்து நிற்கின்றது. இதுதான் கருணாநிதியின் இமாலய சாதனை, நிர்வாகத்திறன்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, காவிரி தண்ணீரால் உயிர் வாழ்ந்தும் கூட அதைப்பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாத ஒரே மனிதர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். கடந்த நான்கு நாட்களாக அவர் பெங்களூரில் மகள் வீட்டில் தங்கி சன் டிவி குழுமத்திலிருந்து தன் பங்குக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய்களை பெறுவதற்கான சமரச பைசல் விவகாரங்களில்தான் அவர் அக்கறையுடன் ஈடுபட்டு இருந்தாரே தவிர, மறந்தும் காவிரி பிரச்சனை குறித்து உரிய முறையில் செயல்பட வில்லை.

இதற்கிடையில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தில் மிக ரகசியமாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு தீர்ப்பை தாமதப்படுத்தும் நோக்கத்தில் விளக்கம் கோரும் போர்வையில் அமைந்துள்ளது.

தற்போது மேட்டூரில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் 25ந் தேதி தான் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்திருப்பதற்கும் கருணாநிதியின் சுயலாபம் தான் காரணம். தண்ணீர் திறந்து விட்டால் திமுகவினர் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதால்தான் விவசாயிகள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற நோக்கத்தில் தண்ணீர் திறப்பதை தாமதப்படுத் தியிருக்கிறார்.

மகன்களுக்கு இன்னும் எத்தனை ஆயிரம் கோடி சேர்க்கலாம், இன்னும் என்னென்ன பதவிகளைப் பெற்றுத்தரலாம், கனிமொழிக்கு மத்திய அரசில் எந்த இலாகாவைப் பெற்றுத்தரலாம், அதன்மூலம் குடும்பத்துக்கு எந்த வழிகளில் லாபம் கிடைக்கும் என்பது பற்றித்தான் கருணாநிதியின் சிந்தனை உள்ளது.

காவிரி டெல்டா விவசாயி பயிரிட்டால் என்ன, பயிரிடாமல் போனால்தான் அவருக்கென்ன? ஸ்டாலினுக்கு எப்போது பட்டாபிஷேகம் செய்வது?, தூக்கு மரத்தின் நிழல் படிந்திருக்கும் மதுரை மகனை எப்படி காப்பாற் றுவது? என்பது போன்ற குடும்ப கவலையில் மூழ்கியுள்ள கருணாநிதிக்கு காவிரியாவது, பாசன மாவது, பயிராவது, நீராவது?

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கருணாநிதி தலைமையிலான அணிக்கு 39 எம்பிக்களை அளித்துள் ளார்கள். கூட்டுறவு அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு, மாநில அரசு, மத்திய அரசு எல்லா வற்றிலும் அவருடைய கொடூர கரங்கள் நீண்டுள்ளது.

இத்தனை அதிகாரங் களையும் கையில் வைத்துக் கொண்டு ஒரு சிறு நன்மையைக் கூட தமிழகத் துக்கு செய்ய கருணாநிதி தயாராக இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது எப்படி இருந்த தமிழகம், எப்பேர்ப் பட்ட தலைவர்களைப் பெற்ற தமிழகம் இந்த இழிநிலைக்கு இன்று ஆளாகிவிட்டதே என்று நினைத்தால் சொல்லொணா வேதனை நெஞ்சை அடைக்கின்றது.

இப்படியும் ஒரு முதலமைச்சர், இப்படி ஒரு தமிழக அமைச்சரவை, மத்திய அமைச்சரவை இவையெல்லாம் தமிழகத் திற்கு வந்து வாய்த்த பெரும் சாபக்கேடு. தமிழக மக்கள் எவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விலகுகி றார்களோ அவ்வளவுக்கவ்வ ளவு நல்லது.

டெல்டா பாசன விவசாயிகள் பச்சைப்பசே லென்று நெற்பயிரை விளை விக்க வேண்டிய இந்த நேரத்தில், தமிழக மக்கள் பார்க்க முடிந்ததெல்லாம் கருணாநிதியின் பச்சை துரோகத்தைத்தான். இதை நினைக்கும்போது ரத்தக் கண்ணீர்தான் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Nandri: Source: Maalaisudar

Wednesday, July 11, 2007

சினிமா ரசிகர் மன்றத்தினர் முட்டாள்கள் - ராமதாஸ்

சினிமா ரசிகர் மன்றத்தினர் முட்டாள்கள் : பா.ம.க.,ராமதாஸ் ஆவேசம்

திருவண்ணாமலை : ""சினிமா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டதாகத்தான் கருதுவேன்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். திருவண்ணாமலையில் ஒரு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் சினிமாவை பற்றி சில நேரம் நான் மட்டுமே கடுமையான விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. சினிமாவே தேவையில்லை. இளைஞர்களை, சமுதாயத்தை, தமிழை சினிமா சீரழிக்கிறது. சினிமாவில் யதார்த்தம் கிடையாது. சினிமாவில் "மசாலா' என்று பல்வேறு பார்முலா சொல்கிறார்கள். சினிமாவில் ஒருவர் 100 பேரை அடிப்பார். எந்த ஊரிலும் சண்டையின் போது ஒரே ஆள் 100 பேரை அடிப்பது கிடையாது. அதேபோல், கற்பழிப்பு காட்சிகளை சினிமாவில் விலாவாரியாக காண்பிக்கின்றனர். நடைமுறையில் கற்பழிப்பு சம்பவம் நடந்தாலே பலரும் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். தற்போது, ஒரு சிலர்தான் கற்பழிப்பு குறித்து போலீசில் புகார் கொடுக்க முன்வருகின்றனர்.

இப்போது சினிமாவில் நாகரீகம் என்ற பெயரில் கலாசார சீரழிவு நடக்கிறது. இதனை ஆதரிக்க அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டு சிலர் உலா வருகின்றனர். அத்தகைய நபர்கள் உண்மையிலேயே அறிவுஜீவிகள் கிடையாது. இது வருத்தம் அளிக்கிறது. சினிமா ரசிகர் மன்றங்களே கூடாது என்று நான் தொடர்ந்து பலமுறை சொல்லி வருகிறேன். ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டதாகதான் நான் கருதுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Nandri: Source: Dinamalar

Tuesday, July 10, 2007

அதிமுகவுடன் பாமக ? கனவிலும் நடக்காத அதிசயம்

திமுக அணியில் பாமக நீடிக்கும். அதிமுகவுடன் கூட்டணியா? கனவிலும் நடக்காத அதிசயம்
பாமக தலைவர் ஜி.கே.மணி பேட்டி.


செங்கல்பட்டு, ஜூலை 11: “திமுக அணியில் பாமக தொடர்ந்து நீடிக்கும். அதிமுகவுடன் கூட்டணி என்பது கனவிலும் நடக்காத அதிசயம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட பாமக இளைஞர் அணி மாநாடு, மறைமலை நகரில் 14ம் தேதி நடக்கிறது. அதற்காக வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவரின் மாளிகை போல மேடை அமைக்கப்பட்டு வருவதை பாமக தலைவர் ஜி.கே.மணி, நேற்று பார்வையிட்ட பின் அளித்த பேட்டி:

கூட்டுறவு தேர்தல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது எப்படி நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுகிறது.

அதிமுக அணியில் சேருமாறு பாமகவுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். அதை பாமகவினர் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். இது அதிசயமானது.
திமுக கூட்டணியில்தான் பாமக தொடர்ந்து நீடிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அதில் எந்த மாற்றமும் நிகழாது. இது உறுதி. இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

Nandri: Source: Dinakaran (11-July-2007)

Sunday, July 8, 2007

மீன், உளுந்துவடை, தயிர்சாதம்

ஓய்வெடுக்க பெங்களூரு வந்துள்ள கருணாநிதி, மீனை விரும்பி சாப்பிட்டு வருகிறார். தனது உணவில் பொங்கல், தயிர்சாதம், உளுந்துவடை, புலாவ், சாம்பார் ஆகியவற்றை சேர்த்து கொள்கிறார்.

<<<<<<<<< இந்த மாதிரி செய்தியெல்லாம் எப்படித் தான் சேகரிப்பாங்களோ ? >>>>>>>


முதல்வர் கருணாநிதி தோட்டத்தில் ஓய்வு

பெங்களூரு: ஓய்வெடுப்பதற்காக பெங்களூரு வந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி வீட்டில் இருந்து தோட்டத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முதல்வர் கருணாநிதி ஓய்வெடுப்பதற்காக பெங்களூரு வந்துள்ளார். இவர் ஜெயநகர் 9வது பிளாக்கில் உள்ள தனது மகள் செல்வி வீட்டில் தங்கியுள்ளார். இவரது பாதுகாப்பிற்காக அந்த சாலையை சுற்றி தமிழகம் மற்றும் கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு வந்துள்ள கருணாநிதியை முதல் நாளன்று பெங்களூரு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

நேற்று பலர் அவரை சந்திக்க சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. விசாரித்த போது அவர் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. ஓய்வெடுக்க வந்துள்ள கருணாநிதி, மீனை விரும்பி சாப்பிட்டு வருகிறார். தனது உணவில் பொங்கல், தயிர்சாதம், உளுந்துவடை, புலாவ், சாம்பார் ஆகியவற்றை சேர்த்து கொள்கிறார். நாளை வரை கருணாநிதி பெங்களூருவில் தங்கி ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nandri: Dinamalar

அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் ஜெ - வீரமணி

அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் ஜெயலலிதா: வீரமணி அறிக்கை


சென்னை, ஜூலை 9: அரசியல் காரணங்களுக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லக் கூடாது என்று ஜெயலலிதா கூறுவது, அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாததைக் காட்டுகிறது என்று திக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி ஓய்வெடுப்பதற்காக பெங்களூருக்கு சென்றிருப்பதை கண்டித்து, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது மனிதநேயமற்ற, அநாகரிகமான, கீழ்த்தரமான செயலாகும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஐதராபாத் திராட்சை தோட்டத்திலும், கொடநாடு பங்களாவிலும் வாரக்கணக்கில் ஓய்வெடுக்கவில்லையா? தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் எடியூரப்பா கூறியதால், தமிழக முதல்வர் கர்நாடகத்துக்கு செல்லலாமா என்று ஜெயலலிதா கேட்பது ஆத்திரத்தில் தோய்ந்த அரைவேக்காட்டுத்தனமான செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை வற் புறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டுத்தான் முதல்வர் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக அண்டை மாநிலத்துக்கு செல்லக் கூடாது என்று கூறுவது ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

Nandri: Dinakaran (09-July-2007

Thursday, July 5, 2007

உள்ளாடைகளுடன் நடுரோட்டில் நடந்த பெண்

ராஜ்கோட்டில் பூஜா சௌஹான் என்ற பெண் தனது கணவர் மற்றும் அவர் வீட்டினரின் வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து வெறும் உள்ளாடைகளுடன் நடுரோட்டில் நடந்து, தனது எதிர்ப்பையும், நீதி வேண்டி போராட்டமும் நடத்தியதாக செய்தி.



இந்தியாவில் இன்னமும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ? வெளிநாடுகளில் தான் இது மாதிரி போராட்டங்கள் நடக்கும் (இந்தக் காரணத்திற்கு அல்ல..) தற்போது இந்தியாவிலும் ஆரம்பித்துவிட்டது. நீங்க என்ன சொல்றீங்க ?


செய்தி / படம்: நன்றி: ஐ.பி.என்.லைவ்



Woman strips, walks in city against dowry demand

CNN-IBN

Residents of Rajkot city in Gujarat were shocked on Wednesday when a woman walked on a busy road semi-nude to protest against dowry harassment.

Pooja Chauhan, 22, alleges her husband and in-laws are harassing her for dowry and bearing a girl child. Soon after Pooja’s protest, police arrested her husband Pratap Singh Chauhan and his parents. Police plan to take action against Pooja for indecent behaviour.

பாமக நிறுத்தாது: ராமதாஸ் ஆவேசம்

பாமக போராட்டம் நடத்துவதும், கருத்துக்களை வெளியிடுவதும் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசையில்தான். இவையெல்லாம் மக்கள் பிரச்சனை கள். இதில் அரசியல் எதுவும் இல்லை - ராமதாஸ்

மக்களுக்காக போராடுவதை பாமக நிறுத்தாது: ராமதாஸ் ஆவேசம் தேர்தலுடன் உடன்பாடு முடிந்து விட்டது

விழுப்புரம், ஜூலை 5:

மக்கள் பிரச்சனைக்காக வாதாடு வதையும், போராடுவதையும் பாமக நிறுத்திக் கொள்ளாது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு தேர்தலுடன் முடிந்து விட்டது. இப்போது எங்கள் கட்சி எதிர்க்கட்சி என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்காக இந்த அரசு செய்கிற அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே நடைபெற்று வரும் மறைமுக யுத்தத்தின் தொடர்ச்சியாக இன்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களுக்கு பரபரப்பான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொது மக்களுக்கும் மற்றும் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் குறிப்பாக பத்திரிகை நண்பர்களுக்கும் சில பிரச்சனைகளில் நிலைமைகளை விளக்கி கூற வேண்டியது அவசியமாகிறது. பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட தோழமை என்பது தேர்தல் நேரத்தில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொண்டு போட்டியிடுவது என்ற அடிப்படையில் அமைந்ததாகும்.

இந்த உறவு கொள்கை அடிப் படையிலோ அல்லது குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஆட்சியில் பங்கு பெறுவது என்ற அடிப்படையிலோ அமைந்த தல்ல. வெற்றி வாய்ப்புள்ள தொகுதி களைப் பங்கிட்டுக் கொண்டு போட்டியிட்ட தேர்தல் உடன்பாடு. அது தேர்தலுடன் முடிந்துவிட்டது.

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆளும் கட்சி, பாமக எதிர்க்கட்சி. ஆனால் எதிரி கட்சி அல்ல. நட்புடன் கூடிய எதிர்கட்சி. ஆளும் கட்சியான திமுகவுக்கு பேரவையில் பெரும்பான்மை இல்லை. அந்தப் பெரும்பான்மையை அளிக்கக் கூடிய நட்பு கட்சியாக பாமக இருக்கிறது. தொடர்ந்து இருக்கும்.இதில் எந்த மாற்றமும் இல்லை. வேண்டுமானால் இதனை எழுதிக் கொடுக்கவும் தயார்.

அதே நேரத்தில் எதிர்கட்சி என்ற முறையில் தவறு என்று நாங்கள் கருதுகிற அல்லது மற்றவர்களால் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிற பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

பேரவை நடக்கும் போது அங்கே பேசி அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். பேரவை நடக்காத நாட்களில் முடிந்தால் முதல்வரையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரையோ சந்தித்து முறையிடுகிறோம்.

தேவைப்பட்டால் கடிதம் வாயிலாகவும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ஆனால் சில பொது பிரச்சனைகள் அவசர முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசின் கவனத்திற்கு உடனடியாகச் செல்ல வேண்டியவை. அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம் என்று பொது மக்களும் அறிய வேண்டியவை.

அப்படிப்பட்ட பிரச்சனைகளை செய்தியாளர்களின் மூலமாக செய்தித்தாள்கள் மூலமாக அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். இதை வைத்துக் கொண்டு அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? பாமக அங்கே போய்விடுமோ? என்றெல்லாம் செய்தியாளர்கள் எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம்.

அப்படி வந்துவிட்டதன் விளைவாக இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படிப் பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாமகவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக வாதாடுவதையும், அதற்காகப் போராடுவதையும் பாமக நிறுத்திக் கொள்ளாது. அது எங்களது ஜனநாயகக் கடமை. எல்லா காலக் கட்டத்திலும், எல்லா கட்சிகளும் இப்படித் தான் செயல்பட்டு வந்திருக்கின்றன.

திமுகவும் இப்படிசெயல்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் திமுக பங்கு பெற்றிருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.

பொடா சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பொடா சட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கையெழுத்து இயக்கத்தைக் கருணாநிதி தொடங்கி வைத்திருக்கிறார். அதில் முதல் கையெழுத்துப் போட்டிருக்கிறார். 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்காக பேரணி, ஆர்ப்பாட்டங்களைத் திமுக நடத்தியிருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டே இத்தகைய போராட்டங்களை இங்கே திமுக நடத்தியிருக்கிறது. இது தோழமைக்கு உகந்ததல்ல என்று அப்போது யாரும் சொல்லவில்லை. திமுக அதன் ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறது என்று தான் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அது போல தான் பாமகவும் இப்போது தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறது. மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகள் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையிலும், பொதுவான சில கொள்கைகளின் அடிப்படையிலும் கூட்டணி அமைத்து கொண்டிருக்கின்றன.

பெரிய கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தனியாக ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பேரவையில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் குறைந்தபட்சத் திட்டம், பொதுவான கொள்கை அடிப்படையில் கூட்டணி என்பதால் இதர தோழமை கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்களித்திருக்கிறார்கள்.

அப்படி இருந்தாலும் அந்தக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளே சில சமயம் அரசின் திட்டங்களுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றன. போராட்டங்களைக் கூட நடத்துகின்றன. (நந்திகிராம், டாடா சிறு கார் தொழிற்சாலை போன்ற பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் போன்றவை அறிக்கைகள் விட்டு மிரட்டி வந்தன).

ஆனால் தமிழகத்தில் அப்படியல்ல. ஆளும் கட்சியான திமுகவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. குறைந்தபட்சத் திட்ட அடிப்படையில் அமையாத கூட்டணி என்பதால் பெரிய கட்சி என்ற முறையில் அக்கட்சி ஆட்சியை அமைக்கவும், மற்றவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற ரீதியில் இங்கே செயல்படுகிறோம். இந்த அடிப்படையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்காக இந்த அரசு செய்கிற அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தவறு என்று தெரிவதைச் சுட்டிக்காட்டுவதற்கு எங்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. அப்படிச் சுட்டிக்காட்டுவது தோழமை உணர்வுக்கு உகந்த செயலாக இருக்க முடியாது என்று கருத தேவையில்லை.

தவறு என்று நாங்கள் கருதுவதை எடுத்துச் சொல்கிறோம். தவறு இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் விளக்கலாம். அதற்காக விதண்டாவாதங்கள் கூடாது. ஏட்டிக்குப் போட்டி என்ற ரீதியில் பதில் அமையக் கூடாது. அப்படி அமைவது தான் தோழமை உணர்வுக்கு உகந்த செயலாகாது.

கல்விக் கூடங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. எல்.கே.ஜியில் இருந்து பட்ட மேற்படிப்பு வரையில் கல்வி அறுவடை தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இத்தகைய தவறுகள் நடக்கின்றன என்பதை சம்பந்தப் பட்ட அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். முதலமைச்சர் கருணாநிதியும் தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை என்று சொல்கிறார்.

தவறு நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிற இராமதாசு கொடுக்க வேண்டும் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது.

மாணவர்களும் பெற்றோர்களும் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களிடமிருந்து ஆதாரத்தை நான் பெற்று தரவேண்டும் என்று சொன்னால் பிரச்சனையைத் திசை திருப்புகிற செயல் என்று தானே அர்த்தம்?

எங்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கட்டாயமாக நன்கொடை வாங்கினார்கள் என்று மாணவர்கள் புகார் கொடுத்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? கல்லூரி நிர்வாகம் பழிவாங்காதா? பழிவாங்காது என்று அரசு உத்தரவாதம் தருமா? புகார் கொடுத்ததற்காகப் பழிவாங்கப் பட்டால் அத்தகைய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் தருகிறோம் என்று அரசு அறிவித்தால் மாணவர்கள் துணிந்து புகார் கொடுப்பார்கள்.

அப்படி ஒரு உத்தரவாதத்தை அரசு கொடுக்குமா? கொடுத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் புகார் கொடுக்க வரிசையில் நிறுத்தத் தயார். ஆதாரத்தைக் கொடுங்கள் என்று அமைச்சரும் கேட்கிறார். முதலமைச்சரும் அப்படி கேட்கிறார். அப்படியானால் இந்தத் தவறைத் தடுக்க வேறு வழியே இல்லையா? வேறு நடைமுறை இல்லையா? அரசுக்கு அதிகாரமே இல்லையா? அத்தனையும் இருக்கிறது.

1992ஆம் ஆண்டில் தமிழக அரசு கட்டாய நன்கொடை தடை சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதில் அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியது, புகார் என்று கருதுவதற்குக் காரணம் இருக்கும் பட்சத்தில் அல்லது இந்தச்சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கருதுவதற்கு காரணம் இருக்குமெனில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றவர்கள் புகார் தர வேண்டும் என்று காத்திருக்காமல் தானே கல்லூரிகளுக்குச்சென்று சோதனை போட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதாகும்.

ஆனால் இந்த அதிகாரத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஆட்சியும் பயன்படுத்தவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரத்தைத் தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் கட்டாய நன்கொடை ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டிருக்கும். சட்டத்தில் கொண்டு வந்ததில் இருந்த வேகம் அதனை அமல்படுத்துவதில் இல்லை யென்பது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

சில்லரை வணிகம், பொருளாதார மண்டலம் போன்ற பிரச்சனைகளில் பாமக போராட்டம் நடத்துவதும், கருத்துக்களை வெளியிடுவதும் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசையில்தான். இவையெல்லாம் மக்கள் பிரச்சனைகள். இதில் அரசியல் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Nandri: Maalaisudar

Wednesday, July 4, 2007

அடுத்தது யாரோ ?!

முதல் சுற்றில் பெரியம்மா. அடுத்த சுற்றில் சின்னம்மா, மகள், கொள்ளுப்பேரன். தற்போது அடுத்த முதல்வர் ?

குடும்பத்தில் ஒவ்வொருவரும் டெல்லி சென்று அம்மையாருக்கு அறிமுகமும் பூங்கொத்து / சால்வை கொடுத்து வந்தாகிவிட்டது. அடுத்தது யாரோ ?



படம் நன்றி: தினகரன் (05-July-2007)

Tuesday, July 3, 2007

கூட்டணி நீடிக்கும் - ராமதாஸ் பேட்டி

நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

கூட்டணி நீடிக்கும் தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கமாட்டோம்: டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை, ஜுலை. 4-

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். சென்னையில் நடந்த மகளிர் பேரணி குறித்தும் அவர் விமர்சனம் செய்து பேட்டி அளித்தார்.

இது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வேதனையை ஏற்படுத்தியது. அவர் டாக்டர் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

நாங்கள் தி.மு.க. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம். 5 ஆண்டு காலத்துக்கு இது தொடரும் அதில் மாற்றம் இருக்காது.

நாங்கள் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கமாட்டோம். எங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது. எங்கள் நிலைமைகளை, பிரச்சினைகளை கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் எடுத்து சொல்வோம். ஆனால் அதுமாதிரி கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. பின்னர் பிரச்சினைகள் பற்றி எப்படி ஆலோசிக்க முடியும்.

இப்போதைய கூட்டுறவு தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தவித ஆலோசனையும் எங்களுடன் நடத்தப்படவில்லை. பின்னர் எப்படி தேர்தலை சந்திப்பது?

சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி எளியமக்களுக்கு தெரியும். இது பற்றி நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வரவேண்டும். ஒருவர் மட்டும் குரல் கொடுத்தால் அது போதுமானதாக இருக்காது.

நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா?

நாங்கள் துணைநகரம் பிரச்சினை, விமானநிலையம் விரிவாக்கம் பிரச்சினை, காவிரி, பாலாறு பிரச்சினைகள் போன்றவற்றில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அதாவது மக்கள் பிரச்சினைக்காக இந்த விஷயங்களில் குரல் கொடுத்தோம்.

தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Nandri: Maalaimalar

Monday, July 2, 2007

ராமதாஸ் எச்சரிக்கை - பொன்முடி மீது கடும் தாக்கு

பொன்முடி - "நிதானம்' அனைவருக்கும் தெரியும். அவர் எப்போதெல்லாம் நிதானமாக இருப்பார், எப்போ தெல்லாம் நிதானத்தை இழப்பார் என்பதை நான் முதலமைச்சரின் கவனத்திற்கே கொண்டு சென்றிருக்கிறேன்

உயர்கல்வி கட்டணக் கொள்ளை விவகாரம்
ராமதாஸ் எச்சரிக்கை
பொன்முடி மீது கடும் தாக்கு

சென்னை, ஜூலை 2:


தமிழகத்தில் உயர் கல்வித்துறையில் நடைபெற்று வரும் நன்கொடை மற்றும் கல்விக் கட்டண கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் பாமகவின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். உயர்கல்வித்துறை முந்தைய ஆட்சியில் இருந்ததை விட தற்போது மிகவும் சீரழிந்து அலங்கோலமாகி விட்டதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நன் கொடைகள் வசூல் மற்றும் கல்விக் கட்டண கொள்ளை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று சென்னையில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆற்றிய உரை வருமாறு:

கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை சுமார் 27 முறை போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 240க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை கொள்ளை கூடாரங்களாகவே மாறிவிட்டன.

இதில் விதிவிலக்காக ஒரே ஒரு தனியார் கல்லூரி மட்டும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து வருகிறது. மற்ற எல்லா கல்லூரிகளிலும் கல்விக் கட்டண கொள்ளை தான் நடந்து வருகிறது. பிற மாநிலங்களை விட இங்கு தான் மிக அதிகமாக கல்விக் கட்டணங் களை வசூலித்து வருகிறார்கள். இதுகுறித்து புகார்கள் வரவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.

120 மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து ஒரு சங்கத்தை உருவாக்கி இது தொடர்பான புகார்களை முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செய லாளர், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குனர் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பியிருக் கிறார்கள். உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு தொடரப் பட்டுள்ளது. பத்திரிகைகளிலும் இது பற்றிய செய்திகள், கட்டுரைகள் வெளி வந்துள்ளன. இவற்றை யெல்லாம் தான் நான் தொகுத்து ஒரு அறிக்கையாக தந்தேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் (பொன்முடி) நிதானமாக பதிலளிக்கிறேன் என்று கூறி எதைஎதையோ சொல்லியிருக்கிறார். அவர் "நிதானம்' அனைவருக்கும் தெரியும். அவர் எப்போதெல்லாம் நிதானமாக இருப்பார், எப்போ தெல்லாம் நிதானத்தை இழப்பார் என்பதை நான் முதலமைச்சரின் கவனத்திற்கே கொண்டு சென்றிருக்கிறேன்.

(பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், "உயர்கல்வித்துறை அமைச்சர் என்னவோ நடக்கிறது; ஒன்றுமே புரியவில்லை என்று மயக்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறார் என்று குறிப்பிட்டார்) அந்த அமைச்சர் எங்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு, இந்த துறையில் ஏதாவது உருப்படியாக நடவடிக்கை எடுத்தால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நாங்கள்தோழமையுடன் இருக்கும் நாங்களே போராட வேண்டுமா என்றுதான் கேட்கிறோம். முன்பு ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் இருந்ததை விட தற்போது உயர் கல்வித்துறை மிகவும் சீரழிந்து அலங்கோலமாகிவிட்டது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. இதற்கு ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் சொல்லவில்லை.

முதலமைச்சர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சட்டமன்ற வளாகத்திலேயே நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையை உருவாக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். முதலமைச்சருக்கு சங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்றுதான் எங்கள் கட்சி எம்பிக்களையும், எம்எல்ஏக் களையும் தெருவுக்கு அழைத்து வந்து போராடுகிறோம்.

இனியும் இந்த விஷயத்தில் நட வடிக்கை எடுக்கப்படாவிட்டால், எங் களுடைய போராட்டம் மேலும் தீவிர மடையும். எனவே, கல்விக் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தி ஏழை மாணவர்கள் பயன்பெற அரசும், முதலமைச்சரும், அமைச்சரும் உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்கேஜி என்பது சிறுவணிகக் கொள்ளை; மருத்துவக் கல்லூரிகள் பெருவணிகக் கொள்ளை என்று நடப்பதால் தோழமைக் கட்சி என்ற முறையில் இந்த புகார்களை அரசிடம் முன்வைக்கிறோம். முதலமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் ராமதாஸ்.

Nandri: http://www.maalaisudar.com/0207/hed_news_1.shtml

ரஜினியும் - ஐ-ஃபோனும் - 11 ஒற்றுமைகள் :-)

ரஜினியின் சிவாஜி பட ரிலீசுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ- ஃபோன் வெளியீட்டிற்குமான 11 ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறது இந்தப் பதிவு. படிக்க ரசிக்க க்ளிக்கவும்

http://churumuri.wordpress.com/2007/07/01/11-similarities-between-the-iphone-and-rajni