Monday, June 9, 2008

நாமக்கட்சி - தொடங்கினார் கார்த்திக்



நடிகர் கார்த்திக் தொடங்கினார் நாடாளும் மக்கள் கட்சி.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் கார்த்திக் நேற்று தொடங்கினார். கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.


பார்வர்டு பிளாக் கட்சியில் தலைவராக நடிகர் கார்த்திக் இருந்தார். அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அந்த கட்சி மேலிடம் அறிவித்தது. இதன்பின், புதிய கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களிடம் கார்த்திக் ஆலோசித்து வந்தார். நேற்று அவர் புதிய கட்சியைத் தொடங்கினார். சென்னை தி.நகரில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்காக இருந்த கட்சியை 12 மாவட்டத்திற்கு விரிவுபடுத்தினேன். அது மாபெரும் இயக்கமாக வளரும் நிலையில் என் பதவி பறிக்கப்பட்டது. இப்போது, ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’ என்ற புது கட்சியை தொடங்குகிறேன். சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கட்சிக் கொடி இருக்கும். கொடியில் முத்துராமலிங்கத் தேவர் படம் இடம் பெற்றிருக்கும். இதில் சில மாறுதல்கள் வரலாம்.

இனிமேல் நீங்கள் பார்க்கப் போகும் கார்த்திக் வித்தியாசமானவன். எங்கள் கட்சி மக்களின் உரிமையை பெற்றுத் தரும் இயக்கமாக இருக்கும். கட்சியின் பெயரை, கொள்கையை உறுதி செய்த பின், அதை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வேன்.

நான் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளேன். ஆரம்பித்தவுடனேயே, ‘இதை செய்வேன், அதை கிழித்து விடுவேன்’ என்று எல்லாம் நான் கூற மாட்டேன். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 10 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

1 comment:

கிரி said...

//நாமக்கட்சி//

ஹா ஹா ஹா பெயரிலேயே வருங்காலம் பிரகாசமா இருக்கே :-)))

//இனிமேல் நீங்கள் பார்க்கப் போகும் கார்த்திக் வித்தியாசமானவன். எங்கள் கட்சி மக்களின் உரிமையை பெற்றுத் தரும் இயக்கமாக இருக்கும்//

:D

//தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்//

இதன் மொழி மாற்ற விளக்கம்...ஏம்பா! இன்னுமா என்னை நம்பிட்டு இருக்கீங்க :-))