இது வரை 17 செ.மீ x 13 செ.மீ யாக வெளிவந்த ஆனந்த விகடன் அதே 10 ரூபாய்க்கு கடந்த 2 வாரமாக 17 செமி x 12 செமி யாக வருகிறது. இதை எத்தனை பேர் கவனித்தனரோ.
பிஸ்கட், டூத்பேஸ்ட், டீ பொடி முதலிய பண்டங்கள் 100கிராம் இருந்தது 85 அல்லது 90 கிராம் (விலையும் அதிகம் ஆனால் அதே 100 கிராம் பாக்கிங்கில் 85 கிராம்) என்பது போல விகடனும் தனது வேலையைக் காட்டிவிட்டது.
நியூஸ் பிரிண்ட் விலை ஏறிவிட்டதுதான். இல்லையென்று சொல்லவில்லை. இத்தனை வருடங்களாக விலையை ஏற்றி அதை அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் அதுபோல் செய்யாமல் சொல்லாமல் கொள்ளாமல் சுமார் 17 x 1 செ.மி அளவு காகிதக் குறைப்பு என்பது நேர்மையாகத் தெரியவில்லை.
சமீபத்தில் குங்குமத்தில் வெளியான கட்டுரைப்படி
Monday, June 23, 2008
1 செ.மீ சிறுத்த ஆனந்த விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மிக நல்ல கண்டுபிடிப்பு
இங்கேயும் சென்று பாருங்கள் http://scssundar.blogspot.com
நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க. விகடனுக்கும் எழுதிப் போடுங்க.. அடுத்த தலையங்கதில் அறிவிப்பாங்க மெதுவாக...
நான் கவனிக்கவே இல்லை. கழுகு கண் உங்களுக்கு. வர வர விகடன் நடப்பு சரிஇல்லை தான்.
கூடுதுறை, ராமலக்ஷ்மி, கிருஷ்ணன்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
கடந்த சில வாரங்களாக முதல் 2 பக்கங்களில் 'விரைவில்' என ஏதோ அறிவிப்பு வருகிறது. பக்க அளவைக் குறைத்து இன்னும் சினிமா செய்திகளை அதிகரிப்பதுதான் என பட்சி சொல்கிறது பார்ப்போம்.
Post a Comment