Tuesday, June 17, 2008

லட்சுமணன் கோடு இனி இல்லை - ராமதாஸ்

லட்சுமணன் கோடு என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை, மக்கள் பிரச்னைகளுக்காக இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு மேற்கொண்டுள்ள முடிவைப் பார்க்கையில், ‘இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள்Õ என்ற புகழ்பெற்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திமுக முடிவுக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்னையில் எங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியபடி இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடித்து வைக்கப்பட்டு விட்ட விவகாரம். முதல்வரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விவகாரம். ஆனாலும், 6 மாதங்கள் கழித்து அதனை பிரச்னையாக்கி, அரசியலாக்கி இருக்கிறார்கள்.

தனிமனித விவகாரங்களை, தனிமனிதர்கள் மீது ஏற்படும் கோபதாபங்களை அரசியலாக்கி, அதனை முன்னிறுத்தி கசப்பான அரசியல் முடிவுகளை அறிவிப்பது என்பது தி.மு.க.வுக்கு புதிதல்ல. முன்பு ஒரு முறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக என்.சங்கரய்யா இருந்தபோது, அவர் மீது ஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தால் அந்தப் பொறுப்பில் அவர் இருக்கும் வரை, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்து செயல்பட்டது தி.மு.க. இப்போது அந்தச் சரித்திரம் திரும்பியிருக்கிறது. தி.மு.க. இன்னமும் மாறவில்லை என்பதை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது.

கூட்டணி என்கிறார்கள். தோழமைக் கட்சி என்கிறார்கள். ஆனால், முடிவை மட்டும் அவர்களே மேற்கொள்கிறார்கள். ஏனென்று கேட்டால், நடப்பது தி.மு.க. ஆட்சிதானே என்று முதல்வர் சொல்கிறார். அவர்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் நட்புக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால், பிறகு நட்புக் கட்சிகள் தனியாக ஏன் கட்சி நடத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சிகளைக் கலைத்துவிட்டு தி.மு.க.வோடு இணைந்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக ‘வாழ்கÕ என்று குரல் கொடுத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது என்பதைத்தான் அவர்களின் முடிவு எடுத்துக் காட்டுகிறது. அதற்கு எப்போதோ முடித்து வைக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வை காரணமாகக் காட்டி பிரச்னையை திசைதிருப்பி பா.ம.க. மீது பழி சுமத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட முடிவை தி.மு.க. எடுத்துவிட்டதே என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஏனெனில், தி.மு.க.வின் முடிவு அதிர்ச்சியாக இல்லை. இதுவரை எங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தோம். தோழமை என்கிற உணர்வு அவ்வப்போது குறுக்கிட்டதால், சில பிரச்னைகளில் சுதந்திரமாக எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது ‘லட்சுமணன் கோடு’ என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்னைகளுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது. லட்சியம் உறுதியானது. அதிலிருந்து கிஞ்சித்தும் மாற மாட்டோம்.

செய்தி: நன்றி: தினகரன் 18 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

5 comments:

bala said...

//லட்சுமணன் கோடு’ என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்னைகளுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது. லட்சியம் உறுதியானது. அதிலிருந்து கிஞ்சித்தும் மாற மாட்டோம்.//

சாம்பார்வடை அய்யா,
அடேங்கப்பா.புல்லரிக்குது.லட்சுமணன் கோடு இல்லையென்றால் கண்டிப்பாக,அன்பு சகோதரி,புரட்சி தலைவி பக்கம் ஜம்ப் அடிப்பது தான் நல்ல பண்புள்ள கொள்கையா இருக்க முடியும்.

பாலா

அது சரி,மஞ்ச துண்டுக்கு "சமத்துவ பெரிய மாமா" பட்டம் வழங்கி ஜல்லி அடித்த நம்ம திருமா அய்யா கூட பல்டி அடிப்பாரா?

பாலா

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

Krishnan said...

நல்ல தமாசு தான் ! விரைவில் அம்மா பக்கம் அய்யா வந்துடுவாரு இல்லையா ?

கோவை விஜய் said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Unknown said...

எல்லாம் சரி சாம்பார் வடை,மஞ்ச துண்டு எப்ப லட்சுமணன ஆகி கோடு போட்டார்?அப்ப ராமசாமி நாய்கர் சாட்சாத் ராம சாமியா?ஆனா கொஞ்சம் சரியில்லையே.இந்த புது ராமாயணத்துல, ராமசாமிக்கு ரெண்டு சீதையல்லவோ?அதுல ஒண்ணைக் கூட ராவணன் தூக்கவில்லையே.லட்சுமணனுக்கு கூட 2+ 1 போலிருக்கே.என்னவோ போங்க.