கலைஞர் குடும்பத்திலும் "ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்... ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்... " என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
Image,News Courtesy: Kumudam Reporter
‘‘ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்...?’’ என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.
கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!
‘‘ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த.... ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்’’ என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!
இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய.... அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்
Nandri: For full report read Kumudam Reporter
Wednesday, June 6, 2007
ஆகஸ்ட் திட்டம் - குமுதம் ரிப்போர்ட்டர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment