இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் வட மாநில ரயில்வே ஸ்டேஷன்களில் அதிகளவு கேன்டீன்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தென்னக ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், மதுரை, ஜோலார்பேட்டை, ஈரோடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் இதே போன்ற கேன்டீன்கள் செயல்படுகின்றன. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைமையிடம் சென்னையில் உள்ளது. கொச்சியில் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து நேரடியாக தரமான காய்கறிகள், சன் பிளவர் ஆயில், பொன்னி பச்சரிசி (உயர்ந்த ரகம்) போன்றவை நேரடியாக கேன்டீன்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.
Image Source/Courtesy: Dinamalar
கடந்த புத்தாண்டு முதல் ரூ.10க்கு "ஜனதா டிபன்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 175 கிராம் எடையுள்ள ஏழு பூரிகள், 150 கிராம் எடையுள்ள உருளைக்கிழங்கு மசாலா, 10 கிராம் ஊறுகாய் ஆகியவை இடம் பெற்றிருந்தன. தற்போது ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேக் செய்யப்பட்ட "ஜனதா பூரி' விற்பனை நடக்கிறது. நேற்று முன்தினம் முதல் ஈரோடு, மதுரை, ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் "ஜனதா சாப்பாடு' அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தயிர் சாதம் 200 கிராம், புளி சாதம் 200 கிராம், எலுமிச்சம் ஊறுகாய் 10 கிராம், ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் ஆகியவை தனித்தனியாக அழகாக பேக் செய்யப்பட்டு, அனைத்தும் ஒரு பேப்பர் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகிறது. புளிசாதத்துக்கு பதில் 200 கிராம் எடையுள்ள சாம்பார் சாதமும் வாங்கிக் கொள்ளலாம்.
ஈரோடு நகரில் நடுத்தர ஓட்டல்களில் ரூ. 15க்கு "அன்லிமிட்' சாப்பாடு கிடைக்கிறது. இதில் அரிசி சாதம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, மோர், இரண்டு காய்கள், அப்பளம், ஊறுகாய் ஆகியவை ரூ. 15க்கு கிடைக்கிறது. சிறிய ஓட்டல்களில் அளவு சாப்பாடு ரூ. 12க்கு கிடைக்கிறது. இதில் 350 கிராம் எடைக்கு சாதமும், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, மோர், இரண்டு காய்கள், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. உயர்தர ஓட்டல்களில் மதியம் "அன்லிமிட்' சாப்பாடு ரூ.20 முதல் விற்கப்படுகிறது.
ஆனால், ரயில்வே ஸ்டேஷனில் தயிர்சாதமும், புளிசாதமும் மட்டுமே கிடைக்கிறது. தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டும் தான்.மதியம் வேளையில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு ரயில்கள் மட்டுமே வருகின்றன. அப்படியிருந்தும் "ஜனதா பூரி' 100 பார்சல்கள் வரை விற்பனையாகிறது. பூரி பார்சலை வெளியாட்களும் வாங்கிச் செல்கின்றனர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. "ஜனதா பூரி'க்கு கிடைத்த வரவேற்பு "ஜனதா சாப்பாடு'க்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.
Nandri: Dinamalar
Sunday, June 10, 2007
ஜனதா பூரி - ஜனதா சாப்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஏஞ்சாமி நீயும் ஈரோடுதானா?
No Sir.
Post a Comment