Tuesday, December 25, 2007

தமிழ் சினிமா - வாரிசுக்கு சிபாரிசு - 1

இந்தத் தொடருக்கு பதிவு இட்ட அனைத்து பதிவர்களுக்கும் முதற்கண் நன்றி.. மற்றும் மன்னிப்பு கேளல். உங்களிடம் லிஸ்ட் கேட்டுவிட்டு நான் பதிய இத்தனை நாட்கள் ஆனதற்குத் தான் மன்னிப்பு. கேட்டவுடன் பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. பலரும் நான் கேட்டதை சரியாகப் புரிந்துகொண்டிருந்தாலும் சிலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இந்த தமிழ் சினிமா - வாரிசுக்கு சிபாரிசு - ஆட்டத்தில் நான் என்ன எதிர்பார்த்தேன் என எழுதிவிடுகிறேன்.

இந்த லிஸ்டைக் கேட்டதற்குப் பொறி - ஜெயாடிவியோ சன் டிவியோ சில ஆண்டுகள் முன்பு வரை (?) ஒளிபரப்பி வந்த பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த காட்சியை (திரைப்படத்தில்) கூறுவர். அந்தப் படத்தின் அந்த சிறப்பான காட்சியும் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியின் பெயர் மறந்துவிட்டது. அந்த நிகழ்ச்சியில் சில பிரபலங்கள் சொன்ன காட்சியைப் பார்த்தபிறகுதான் எனக்கே அந்தக் காட்சியின் சிறப்பம்சமும் நன்றாகப் புரிந்தது.

உதாரணத்திற்குச் சொன்னால் - சிவாஜியின் தெய்வமகன் படத்தில் மூன்று சிவாஜியும் ஒரு காட்சியில் ஒன்றாக வருவார்கள் ஆனால் மூவரின் நடிப்பும் வித்தியாசமாக இருக்கும். அதே போல தில்லானா மோகனாம்பாளில் ரயிலில் சிவாஜி கோஷ்டியும் பத்மினி கோஷ்டியும் பயணம் செல்லும்போது கண்களாலேயே ஜாடை காட்டுவது ஆகட்டும் - சிவாஜி, பத்மினி, பாலைய்யா மூவரும் பிச்சு உதறியிருப்பார்கள்.

எதற்குச் சொல்கிறேனென்றால் இந்தக் காட்சிகளின் சிறப்பு பற்றி மற்றவ்ர்கள் எடுத்துச் சொல்லியிருக்காவிட்டால் நானும் அவை நல்ல படம் என்ற ஒரு விதத்தில் மட்டுமே பார்த்திருப்பேனே ஒழிய அந்தப் படத்தின் சிறப்புகள், சிறந்த காட்சிகள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்க முடியாது.

அதுபோல நாமும் நமது வாரிசுகளுக்கு நல்ல தமிழ் சினிமாக்களை (அல்லது நல்ல ரசிக்கவேண்டிய சில விஷயங்களை) நாம் கோடிட்டுக் காண்பிக்கவில்லையென்றால் அவர்களும் தங்கள் காலத்து ரசனைக்கேற்ப ரீ-மிக்ஸையும், கிராபிக்ஸையும் ஒசத்தியாககக் கொள்வார்களே ஒழிய தமிழிலும், அந்தக்காலத்திலேயேகூட பல விஷயங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது என்பது தெரியாமலேயே ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நல்ல சினிமா என்று ஒதுங்கும் வாய்ப்பு அதிகமாகவே தெரிகிறது.

அதற்காகத்தான் வாரிசுகளுக்காக எந்தத் தமிழ்ப்படங்களின் சிடி/டிவிடி சேர்த்துவைப்பீர்கள், ஏன் ? எனவும் கேட்டிருந்தேன். என்னுடைய பட்டியலுக்குப் போகுமுன் இதுவரை எழுதியவர்களின் பட்டியல் இதோ. அவர்களுக்கு என் நன்றி. பலருடைய பட்டியலில் எனது தேர்வும் உள்ளது என்பதே அவர்களை நான் அழைத்ததற்கு - எனது கணிப்பும் அவர்களின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

இதில் சிவப்பு வண்ணத்தில் நட்சத்திர முத்திரையுடன் இருப்பவை எனது பட்டியலிலும் உண்டு. அவை பற்றி இன்னொரு பதிவில்.

அழைத்துள்ள மற்றவர்களும் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தங்கள் படப்பட்டியலைப் பகிருவார்கள் என எதிர்பார்க்கிறேன். அவர்கள் பதிவிட்டிருந்தால் தெரிவிக்கவும். இந்தப் பதிவில் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துவிடுகிறேன். மிக்க நன்றி.



லக்கிலுக்
1. உலகம் சுற்றும் வாலிபன் **
2. பேசும் படம்
3. அண்ணாமலை **
4. காதலிக்க நேரமில்லை **
5. இன்று போய் நாளை வா **


இட்லி வடை
1. திருவிளையாடல் **
2. வா ராஜா வா
3. சலங்கை ஒலி **
4. இந்தியன் **
5. 6லிருந்து 60வரை
6. எதிர் நீச்சல் **
7. சிந்து பைரவி **
8. தேடினேன் வந்தது ( பிரபு, கவுண்டமணி நடித்தது )
9. உத்தமபுத்திரன் **
10. கர்ணன் **
11. அன்பே சிவம்

அபுல் கலாம் ஆசாத்
1. ஆயிரத்தில் ஒருவன் **



கோவி.கண்ணன்
1. தில்லானா மோகனாம்பாள் **
2. திருவிளையாடல் **
3. ஒளவை சண்முகி **
4. முதல்மரியாதை **
5. கர்ணன் **
6. அஞ்சலி

டுபுக்கு
1. உன்னால் முடியும் தம்பி
2. சலங்கை ஒலி **
3. காதலிக்க நேரமில்லை **
4. திருவிளையாடல் **
5. தில்லுமுல்லு **

நா.கண்ணன்
பாரு! பாரு! பயோஸ்கோப்பு பாரு! பாரு!
1. பேசும் படம் - 01
2. பேசும்படம் - 02
3. பேசும்படம் - 03
4. பேசும்படம் - 04
5. பேசும்படம் - 05
6. பேசும்படம் - 06

பராசக்தி
ஜெமினியின் ஔவையார்
மனோகரா
கணவனே கண்கண்ட தெய்வம்
மிஸ்ஸியம்மா
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் **
மாயாபஜார் **
காத்தவராயன்
நாடோடி மன்னன் **
சம்பூர்ண ராமாயணம் **
வஞ்சிக்கோட்டை வாலிபன் **
பாகப்பிரிவினை **
வீரபாண்டியக் கட்டபொம்மன்
கல்யாணப்பரிசு **
சிவகங்கைச் சீமை
அடுத்த வீட்டுப் பெண் **
இரும்புத்திரை
கைதி கண்ணாயிரம்

செல்வம்

1) காத‌லிக்க‌ நேர‌மில்லை. **
2) இன்று போய் நாளை வா. **
3) தேன்மழை.
4) ச‌பாபதி.
5) ச‌பாஷ்மீனா

<<<< ரொம்பப் பெரிய லிஸ்ட் >>>>>>>>
குரல்வலை
எம்ஜிஆர்
நாடோடி மன்னன் **
ஆயிரத்தில் ஒருவன் **
மலைக்கள்ளன்
எங்க வீட்டுப் பிள்ளை **
உலகம் சுற்றும் வாலிபன் **

சிவாஜி
உத்தம புத்திரன் **
மனோகரா
பராசக்தி
அந்த நாள்
புதிய பறவை **
பாச மலர் **
பாவமன்னிப்பு **
பலே பாண்டியா **
ஆலயமணி
பாரதவிலாஸ் **
வீரபாண்டியகட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன் **

முட்டக்கண் ராமச்சந்திரன்
சாரங்கதாரா
சபாபதி
அடுத்த வீட்டு பெண் **

ஸ்ரீதர்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓரு ஆலயம் **
தேனிலவு **
காதலிக்க நேரமில்லை**

ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்
அதே கண்கள்
மூன்றெழுத்து
வல்லவன் ஒருவன்

பாலச்சந்தர்
நினைத்தாலே இனிக்கும்
எதிர் நீச்சல் **
சர்வர் சுந்தரம் **
சாது மிரண்டால்
மேஜர் சந்திரகாந்த்
அவர்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
மனதில் உறுதி வேண்டும்
சிந்து பைரவி **
உன்னால் முடியும் தம்பி.

ரஜினி

முள்ளும் மலரும்
பில்லா
ஜானி
தில்லு முல்லு **
படிக்காதவன்
குரு சிஷ்யன்
தம்பிக்கு எந்த ஊரு
மன்னன்
தளபதி
அண்ணாமலை **
பாட்ஷா
சந்திரமுகி


பாரதிராஜா
பதினாறு வயதினிலே **
நிழல்கள்
ஒரு கைதியின் டைரி
முதல் மரியாதை **
சிகப்பு ரோஜாக்கள் **
டிக் டிக் டிக்

மோகன்
விதி **
நூறாவது நாள்

கமல்
விக்ரம்
வாழ்வேமாயம்
மூன்றாம்பிறை **
சலங்கை ஒலி **
சத்யா
அபூர்வ சகோதரர்கள் **
சாணக்யன்
வெற்றிவிழா
நாயகன் **
மைக்கேல் மதன காமராஜன் **
குணா
சதிலீலாவதி
குருதிப்புனல்
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா
விருமாண்டி
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு

மணிரத்னம்
மௌனராகம் **
அஞ்சலி
இருவர்
அலைபாயுதே

பாக்யராஜ்
அந்த 7 நாட்கள் **
இன்று போய் நாளை வா **
தூரல் நின்னு போச்சு
இது நம்ம ஆளு

விசு
சம்சாரம் அது மின்சாரம் **

விஜயகாந்த்
ஊமை விழிகள்
அம்மன் கோவில் கிழக்காலே **
வைதேகி காத்திருந்தாள்
கேப்டன் பிரபாகரன்
புலன்விசாரனை

பிறபடங்கள்
ஓர் இரவு
பஞ்சவர்ணக்கிளி
பாமா விஜயம் **
சாந்தி நிலையம்
வருஷம் 16
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு **
பூவிழி வாசலிலே
பூவே பூச்சூடவா
அக்னி நட்சத்திரம்
அரங்கேற்றவேளை
ஆண்பாவம்
கரும்புள்ளி ("என் உயிர் தோழன்" பாபு)
பாரதி
உதயம் (நாகார்ஜூன், அமலா, ரகுவரன்)
சூரியன்
நாட்டாமை
ஜென்டில் மேன் **
இந்தியன் **
ஜீன்ஸ்
முதல்வன்
அழகி
புதியபாதை
ஹவுஸ்புல்
காக்க காக்க
மௌனம் பேசியதே
நந்தா
கஜினி
கில்லி
காதல் மன்னன் (அஜீத்)
ஆசை
சேது **
தில்
மொழி
காதல்
பருத்தி வீரன்
ராம்
காதலுக்கு மரியாதை
கனா கண்டேன்
கண்ட நாள் முதல்
ஜீவா (சத்யராஜ், அமலா)
நடிகன்
பாதாள உலகம்
மாயாபஜார் **
மைடியர் குட்டிச்சாத்தான்
ஜெகன்மோகினி
பதிமூனாம் நம்பர் வீடு
உருவம்
48 மணி நேரம் (ரேவதி)
ஷாக்
<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Thursday, December 20, 2007

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு - லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
.
திமுக கூட்டணியில் பெருமளவு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுக எதிரணி அரசியலில் முதல் இடத்தில் உள்ளதாகவும் பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர்.

மாற்று அரசியல் பண்பாடு நோக்கி என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மாநில அளவில் 6 மாதத்திற்கு ஒருமுறை கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை திரட்டியுள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

75.3 சதவீதம் பேர் ஆதரவாகவும், இதில் தொலைநோக்கு இல்லை என்று 24.7 சதவீதம் பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர். ரூ.2 அரிசி 90.1, இலவச நிலம்64.5, இலவச டிவி43.3, முதியோர் உதவி தொகை 82.4, சத்துணவு முட்டை92.7, இலவச கேஸ்72.6, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு66.3.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் திருப்தி இருப்பதாக 51.5 சதவீதம் பேரும், திருப்தி இல்லை யென்று 48.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் விரிசல்

திமுக கூட்டணியில் விரிசல் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளதாக 73.6 சதவீதம் பேர் கருதுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது என 51.2 சதவீதம் மக்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சியாக அதிமுக 52.2 சதவீதமும், தேமுதிக 48.5 சதவீதமும், மதிமுக 39.3 சதவீதமும், பிஜேபி 12.9 சதவீதமும் நன்றாக செயல்பட்டிருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தோழமைக் கட்சியாக பாமக 40.8, காங்கிரஸ் 15.6, இடதுசாரிகள் 39.5 சதவீதம் நல்ல செயல்பாடு என கருத்து நிலவுகிறது.

காங்கிரசின் செயல்பாடு மோசம் என்று 50.7 சதவீதம் பேர் கருதுகின்றனர். திமுக ஆட்சி அடுத்த மூன்றரை ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்று 71.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மூன்றாவது அணி

தமிழகத்தில் காங்கிரஸ்தேமுதிக சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு 36.7 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. பிஜேபியும், தேமுதிகவும் சேர 12.6 சதவீதமே ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணிக்கு 5.2 சதவீதமும், பிஜேபி, தேமுதிக, பாமக, மதிமுகவுக்கு 4.3 சதவீதமும் ஆதரவு கிடைக்கிறது.

பலமான அணியாக மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என 35.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

அடுத்த முதல்வர் யார்?

கருணாநிதிக்கு பின் அடுத்த முதல்வர் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கே அதிகமாக உள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அவருக்கு 32.1 சதவீதம் ஆதரவு உள்ளது. ஸ்டாலினுக்கு 27.9 சதவீதம் பேரும், விஜயகாந்துக்கு 24.3 சதவீதம் பேரும், தயாநிதி மாறனுக்கு 6.2 சதவீதம் பேரும், ராமதாசுக்கு 5.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என 53.8 சதவீதம் பேர் கருதுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக தேர்தல் வரும் என்று 27.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என 34.1 சதவீதம் பேரும், அப்படி அமைந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என 21.1 சதவீதம் பேரும் கருதுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போது வந்தால் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் அணியே வெற்றி பெறும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். பிஜேபி அணி 19.3 சதவீதம், மூன்றாவது அணி 7 சதவீதம், கருத்து சொல்ல முடியாது 20.3 சதவீதம் என்ற அளவிலும் கருத்து நிலவுகிறது.

அடுத்த பிரதமர்

அடுத்த பிரதமராக சோனியாவுக்கே வாய்ப்புள்ளது என 37.8 சதவீதம் பேர் கூறுகின்றனர். வாஜ்பாய்க்கு 15.3, மன்மோகன் சிங்கிற்கு 13.7, ராகுலுக்கு 10.6, அத்வானிக்கு 6.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் மிகவும் பயனுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று 72.4 பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

கடல் வளம் பாதிக்கும் என 11.2 சதவீதம் பேரும், வணிக ரீதியில் வெற்றி பெறாது என 8.1 சதவீதம் பேரும், இந்த பணத்தை கிராமப்புற சாலைகளை அமைக்க பயன்படுத்தலாம் என 6.9 சதவீதம் பேரும், மொத்தம் 26.2 சதவீதம் பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு கேபிள் டிவி

அரசு கேபிள் டிவிக்கு ஆதரவு உள்ள போதிலும், அதை தொடங்குவதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக 49.3 சதவீதம் பேர் கருதுகின்றனர். அரசின் செயல்பாடு நிதானமாக உள்ளது என 31.8 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியில் காலாவதியாகும் இந்த திட்டம் வீண் வேலை என 16.2 சதவீதம் பேர் கருதுகின்றனர். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் 62.7 சதவீதம் பேர்.

எம்ஜிஆரே சிறந்த முதல்வர்

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் தாங்கள் அறிந்த வரை சிறந்த முதல்வராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆரே என 40.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கருத்துக் கணிப்பின்படி முதல்வர்களில் தரவரிசை வருமாறு: எம்ஜிஆர் 40.8, காமராஜர் 29.9, கருணாநிதி 17.4, ஜெயலலிதா 7.6, அண்ணா 4.6.

விஜயகாந்துக்கு முதலிடம்

நடிகர்கள் அரசியலில் ஈடுபட எதிர்ப்பு பெருமளவு உள்ளது. எனினும் அரசியலில் குதித்துள்ள நடிகர்களில் விஜயகாந்துக்கு பேராதரவு உள்ளது.

அவருக்கு 47.9 சதவீதம் பேரும், சரத்குமாருக்கு 4.3 சதவீதம் பேரும், கார்த்திக்கிற்கு 4.1 சதவீதம் பேரும், விஜய டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேரும் ஆதரவு அளிக்கின்றனர்.

நடிகர்கள் தனிக்கட்சி தொடங்க 45.3 பேர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். ஆதரவாக 34.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியலில் ஈடுபடலாமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடலாமா? என்ற கேள்விக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தொடர்ந்து முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், நேரடியாக அரசியலில் வருவதை விரும்பவில்லை என்றும் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட 45.2 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என 23.8 சதவீதம் பேரும், சமூக சேவையில் ஈடுபடலாம் என 14.2 சதவீதம் பேரும், நேரடி அரசியலில் குதிக்கலாம் என 11.3 சதவீதம் பேரும் யோசனை தெரிவித்துள்ளனர்.

ரஜினி வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என 51.4 சதவீதம் பேர் கூறுகின்றனர். இதுவரை நடித்தது போலவே நடிக்க வேண்டும் என்று 36.3 சதவீதம் பேரும், படங்களை இயக்கலாம் என 8.9 சதவீதம் பேரும், நடிப்பை சொல்லி தரலாம் என 2.2 சதவீதம் பேரும் கூறுகின்றனர்.

தமிழ் பெயர்களை வைக்கும் திரைப் படங்களுக்கு வரிச் சலுகையை கைவிட வேண்டும் என்று 52.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதற்கு ஆதரவாக 11.6 சதவீதம் பேர் உள்ளனர்.

நன்றி: செய்தி: மாலைச்சுடர்

Friday, December 14, 2007

கிளார்க் வீராசாமி: ராமதாஸ்

"வீராசாமியைப் பற்றி எனக்குத் தெரியாதா. மின் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தபோது ஆளும்கட்சி குறித்து எதிர்க் கட்சிக்கு உளவு சொன்னவர் தானே இவர். நாங்கள் எத்தனையோ ஆற்காடு வீராசாமிகளைப் பார்த்திருக்கிறோம்."

சென்னை: திமுக, பாமக இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்த அறிக்கை போர் இப்போது அமைச்சர் வீராசாமிக்கும் ராமதாசுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மாறி, இப்போது கூட்டணியையே ஆட்டிப் பார்த்துக் கொண்டுள்ளது.

திமுக மாநாட்டுக்கு ராமதாசுக்கு இதுவரை மரியாதைக்குக்கு கூட அழைப்பு விடுக்காமல் தவிர்த்து வருகிறது அக் கட்சியின் தலைமை.

திமுக பொருளாளரும் மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

நேற்று ஆற்காடு வீராசாமியைத் தாக்கி மிகக் கடுமையான அறிக்கை விட்ட ராமதாஸ், பாமகவைச் சேர்ந்த ஒருவரின் திருமண விழாவில் பேசுகையில், மக்களுக்குத் தேவையான கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுக் கடைகளை மட்டும் அரசே ஏற்று நடத்துகிறது.

நம் சமுதாயம் இப்போது தான் முன்னேறி வருகிறது. ஆனால், அதை பொறுக்க முடியாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நம் சமுதாயத்தை அழிக்கப் பார்க்கிறது. சாராயம் குடித்து நம் சமுதாய மக்கள் அழிகின்றனர்.

சமுதாயம் திருந்த வேண்டும் என்று தான் கல்விப் பணியில் இறங்கினோம். கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் 100 ஆண்டுகளாக காடுமேடாகக் கிடந்த நிலத்தை இஸ்லாமியர்களிடம் இருந்து வாங்கி கல்லூரி கட்டினோம். அதில் எங்கோ அரை ஏக்கர், ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதாம். ஆற்காடு வீராசாமி சொல்கிறார்.

வீராசாமியைப் பற்றி எனக்குத் தெரியாதா. மின் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தபோது ஆளும்கட்சி குறித்து எதிர்க் கட்சிக்கு உளவு சொன்னவர் தானே இவர். நாங்கள் எத்தனையோ ஆற்காடு வீராசாமிகளைப் பார்த்திருக்கிறோம்.

இன்று தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. கேட்டால் நீ நிலத்தை அபகரித்துவிட்டாய் என்று பேசுகிறார் மின்சார அமைச்சர் என்று பேசிய ராமதாஸ் பல இடங்களில் வீராசாமியை கோபம் கொப்பளிக்க ஒருமையில் பிடித்து வாங்கினார்.

ஆற்காடு பதிலடி:

இந் நிலையில் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்று அறிக்கை விட்டு விட்டு அவர் சவாலையேற்று நான் ஆதாரங்களைத் தெரிவித்த பிறகு அவரே ஆத்திரவயப்பட்டு அறிக்கை விடுகிறார்.

திருமண விழாக்களில் பேசுகிறார். என்னைப் பற்றி ஏதேதோ கூறுகிறார். ஒருமையில் என்னை விளித்து உருப்படாமல் போய் விடுவாய் என்கிறார். மின்வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தாய் என்கிறார்.

இவைகளில் இருந்தே யார் ஆத்திரத்தில் பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆத்திரம் எப்போது வரும் என்றால், வாதத்தில் பலகீனம் ஏற்படும் போதுதான். அவர் சவால்விட்டு ஆதாரம் கேட்டதால்தான் நான் அவைகளை வெளியிட நேர்ந்தது. அவரே ஆதாரத்தை கேட்டுவிட்டு அதற்காக என் மீது இவ்வளவு வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார்.

பொது நலத்துக்காக நிலம் கையகப்படுத்துவது என்பது நீண்ட காலமாக இருந்து வரும் முறை என்று குறிப்பிட்டுள்ள டாக்டர், கடந்த ஓராண்டு காலமாகத்தான் அதற்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது என்றும் சொல்கிறார்.

அந்த எதிர்ப்புக்கெல்லாம் காரணம் சாட்சாத் இவர்தான் என்பதை இவரது மனசாட்சியே அறியும். வேறு சில தனியார் தங்கள் நிறுவனங்களைத் தொடங்க நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என்று நிலம் கையகப்படுத்துவதைத் தொடர்ந்து டாக்டர் எதிர்த்த காரணத்தில்தான் அவரே கல்லூரி தொடங்குவதற்காக 200க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திய விவரத்தை நான் கூற வேண்டியதாயிற்று.

உடனே அவர் நூறாண்டு காலத்திற்கு மேல் அங்கே எதுவுமே சாகுபடி செய்யவில்லை. களர் நிலம் என்று கூறிய பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலம் வாங்கப்படும் வரையில் அங்கே என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன என்ற விவரத்தை அடங்கல் எண்களோடு நான் தெரிவிக்க நேர்ந்தது.

தற்போது சவுக்கு என்பது பயிரே இல்லை என்கிறார். சவுக்கு மட்டுமல்ல, பூஞ்செடி, நெல் போன்றவைகளும் அங்கே சாகுபடி செய்யப்பட்ட விவரத்தை நான் தெரிவித்திருக்கிறேன். டாக்டர் ராமதாஸ் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். என்னையும் டாக்டர் ராமதாசையும் தெரிந்தவர்களுக்கு யார் கோபப்படுவார்கள் என்பது நன்றாகத் தெரியும்.

வன்னியர் சமுதாயத்திற்கே அவர்தான் பிரதிநிதி என்பதைப் போலவும், அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலவும், அந்த ஒட்டு மொத்த சமுதாயமே அவரிடம் இருப்பதைப் போலவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுச் சரித்திரத்திலேயே இது வரையில்லாத அளவிற்கு வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தற்போது கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான் முக்கிய துறைகளுக்குப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். அது மாத்திரமல்ல முதன் முதலாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமனை மத்திய அமைச்சராக அங்கம் வகிக்க செய்ததும் தலைவர் கலைஞர்தான்.

அதைப்போலவே கட்சியிலே கூட தலைமைக் கழகச் செயலாளர்களாக, மாவட்டக் கழகச் செயலாளர்களாக, ஒன்றியக் கழகச் செயலாளர்களாக மற்றும் பல்வேறு பொறுப்புகளிலே வன்னிய சமூகத்தினர் இருந்து வருகிறார்கள்.

திமுகவிலே மட்டுமல்ல, இன்னும் சில கட்சிகளிலும் வன்னியர் சமுதாயத்தினர் பொறுப்புகளில் உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு கட்சியிலும் பல்லாயிரக்கணக்கான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருந்து வருகிறார்கள்.

எனவே ஒன்றரை கோடி வன்னியர்களுக்கும் இவர்தான் பிரதிநிதி என்பதைப்போல கூறிக் கொள்வது விந்தையாக உள்ளது.

மேலும் அந்தக் கல்லூரியை அவர்கள் தொடங்குவது பற்றியும் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் அந்தக் கல்லூரியின் தொடக்க விழாவின்போது, அன்றைய அரசாங்கம் அதற்கான அனுமதியை மறுத்து விட்ட நிலையிலும் தலைவர் கலைஞர் அந்த விழாவிற்காகச் சென்றபோது, அவரோடு சென்றவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அந்தக் கல்லூரிக்காக வாங்கப்பட்ட இடம் முழுவதும் களர் நிலம் என்று கூறிய டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் குறிப்பிட்டிருக்கும் பரப்பளவு ஒரு ஹெக்டேர் அளவுக்குத்தான் உள்ளது என்று வழுக்கியிருக்கிறார். முதலில் இல்லவே இல்லை என்று சொன்னவர் தற்போது இந்த அளவிற்கு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அது போலவேதான் முதலில் அரசு புறம்போக்கு நிலம் என்று ஒப்புக்கொண்டு, ஆனால் அங்கே வேலி போடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே அவரது நியாயம் எந்த அளவிற்கு தடுமாறியுள்ளது என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

தன்னிடம் என்னைப்பற்றி ஏதோ பட்டியல் அவரிடம் உள்ளதாகவும், வீராசாமியைப் போல எத்தனையோ பேரை தான் சந்தித்திருப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டியல் உண்டு. ஒவ்வொரு நபருக்கும், ஏன் ஒவ்வொரு கல்லூரிக்கும் அதுபோலவே ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் பட்டியல் உண்டு.

என்னைப் பொறுத்தவரையில் டாக்டர் ராமதாஸ் கூறுவதற்கு முன்பே, வருமான வரித்துறை, வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு என்பது போன்ற வழக்குகள் எல்லாம் வந்து அவற்றையெல்லாம் சந்தித்து என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத்தான் உள்ளது.

அதுபற்றி டாக்டர் ராமதாஸ் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டிப் பார்த்துக் கொள்ளலாம். நான் கிளார்க்காக இருந்தேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். கிளார்க்காக பணியாற்றுவது ஒன்றும் பாவமான தொழில் அல்ல.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டு எத்தனை முறை சிறை சென்றேன் என்ற கணக்கு எனக்குத் தெரியாது. மிசா காலத்திலே சிறையிலே அடைக்கப்பட்டு அடி வாங்கி இன்றளவும் என் காது கேட்காத நிலைமை உள்ளது ஒன்றே என்னைப் பற்றிய உண்மையை உலகத்திற்குத் தெரிவிக்கும்.

ஆனால் நான் சிறைபட்ட நேரத்தில் என்னுடைய குடும்பத்தினர் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல யாரும் மேலிடத்தைப் பார்த்து மன்னிப்பு கோரி மண்டியிடவில்லை என்ற வரலாறும் எனக்கு உண்டு. இறுதியாக ராமதாஸ் நான் உருப்படமாட்டேன் என்று சாபம் விடுத்திருக்கிறார். சாபம், விமோசனம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சிதான் திமுக.

ஏழைகளின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று சொன்ன அண்ணாவின் தம்பியாம் கருணாநிதியின் தலைமையில் கீழ் உள்ள நான் இவரது சாபத்திற்காக கவலைப்படவில்லை. அவர் நன்றாக வாழட்டும். எந்தக்கட்சிக்கும் துணை புரியாமல் தாங்களே தனியாக 2011ல் ஆட்சிக்கு வரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் மற்ற கட்சிக்கு துணை போய் ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஆட்சியிலே ஒரு கட்சியை உட்கார வைத்து விட்டு அந்த ஒவ்வொரு கட்சிக்கும் எந்த அளவிற்கு துணை இருந்திருக்கிறார் என்ற சரித்திரம் தமிழகத்தின் வரலாற்றில் என்றுமே பசுமையாக இருக்கத்தான் செய்யும். நான் என்னிடம் இருக்கும் விபரங்களைத் தெரிவிக்கிறேன். இவை தவறு என்றால் டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தோடரலாம். அதை நான் சந்திக்கத் தயார் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

மாநாட்டுக்கு ராமதாசுக்கு அழைப்பில்லை:

இந் நிலையில் திருநெல்வேலியில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ராமதாசுக்கு ஒரு மரியாதைக்காகக் கூட இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லையாம். இதை அவரே நிருபர்களிடம் தெரிவித்தார்.

Nandri: Thatstamil

Thursday, December 6, 2007

கனிமொழியின் கன்னிப் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு

கவிஞர் கனிமொழியின் கன்னிப் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு

அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து - உறுப்பினர் மேசையைத் தட்டி வரவேற்றனர்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்

புதுடில்லி, டிச.5- தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் 123 அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் நேற்று (4-12-2007) கன்னிப் பேச்சு நிகழ்த்தினார். அப்போது, அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். கனிமொழி தனது கன்னிப் பேச்சை நிறைவு செய்ததும், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், “மிகச் சிறந்த தங்கள் உரைக்கு எனது பாராட்டுகள் (Congratulation for your brilliant speech)” என்று குறிப்பு எழுதி அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்கள் கனிமொழி அமர்ந்திருந்த இருக்கை அருகே வந்து கைகுலுக்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சுரேஷ் பச்சோரி, ஆனந்த சர்மா, பட்டேல், சி.பி.எம். மாநிலங் களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்துப் பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் அமர்ந்திருந்த இருக்கை அருகே கவிஞர் கனிமொழி வந்து, பிரதமரிடம் வாழ்த்து பெற்றார்.

செய்தி: நன்றி: விடுதலை

கனிமொழியின் முழு பேச்சு விபரம் இங்கே

Tuesday, December 4, 2007

ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார்

ஸ்டாலின் தலைமையை ஏற்க ஆற்காடு, துரைமுருகன், வீரபாண்டி, கோ.சி மணி தயார்

சென்னை: நான் மட்டுமல்ல, கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராகத்தான் இருக்கிறோம் என மின்துறை அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தென்சென்னை மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி பேசுகையில்,

திமுக சாதாரண இயக்கம் அல்ல. அண்ணா இட்ட கட்டளையை இன்று வரை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் மு.க.ஸ்டாலின் அயராது பாடுபடுகிறார். பேராசிரியர் அன்பழகன் ஒரு திருமண விழாவில் பேசும்போது, ஸ்டாலின் தலைமை பதவிக்கு வருவதை ஏற்பதாக சுட்டிக் காட்டினார்.

அவர் மட்டுமல்ல. நானும் பல்வேறு கூட்டங்களில் பேசும்போது எதிர்காலத்தில் ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரவேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல. கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராகத்தான் இருக்கிறோம்.

அதற்கு காரணம் ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதல்ல. 1976ம் ஆண்டு மிசா காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு தியாகங்களை கட்சிக்காக செய்தவர் ஸ்டாலின். அவருக்கு கட்சியின் தலைமையை ஏற்று நடத்தும் தகுதி திறமை இருக்கிறது என்பதே இதற்கு காரணம் என்றார்.

பின்னர் ஸ்டாலின் பேசுகையில்,

அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்னை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக் காட்டினார். 76ம் ஆண்டு மிசா காலத்தில் எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை சிறை அனுபவங்களையும் சுட்டிக்காட்டி பேசினார்.

நான் என்றும் அதை தியாகமாக கருதியதில்லை. கடமையாகத்தான் உணர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

67, 68ம் ஆண்டுகளில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்று என்னால் தொடங்கப்பட்ட இயக்கம் மதுரையில் 80ம் ஆண்டு இளைஞரணியாக உருவெடுத்தது. இப்போது தமிழகம் முழுவதும் இளைஞர் அணி கம்பீரமாக உலா வருகிறது.

திமுகவில் எல்லா அணிகளையும் விட இளைஞர் அணிக்குத்தான் தனி சிறப்பு. நெல்லையில் இளைஞரணி மாநாட்டை நடத்துகிறோம். அது வெற்றி மாநாடாக அமைய நீங்கள் அனைவரும் வரவேண்டும்.

நாட்டில் புதிதாக கட்சிகள் வரலாம். திடீர் திடீரென தலைவர்கள் வரலாம். வரக்கூடிய கட்சிகளுக்கு கொள்கை குறிக்கோள் இருக்கிறதா. அவர்களது ஒரே கொள்கை ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். நான் தான் முதலமைச்சர் என்ற முடிவோடு கட்சி தொடங்குகிறார்கள்.

இன்றைக்கு புதிய கட்சிகளை பார்த்து சில இளைஞர்கள் தடுமாறலாம். அவர்களை நமது இளைஞர்கள் பக்குவப்படுத்த வேண்டும். நாம் பதவியை தேடி செல்ல கூடாது. பதவி நம்மை தேடி வரவேண்டும். நெல்லை மாநாட்டை தடுத்து நிறுத்த அதிமுக என்னென்னவோ திட்டமெல்லாம் போட்டது, எதுவும் எடுபடவில்லை என்றார் ஸ்டாலின்.

நெல்லை மாநாட்டில் ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு உயர்த்தப்படலாம், முதல்வராகக் கூட முடி சூட்டப்படலாம் என்ற பேச்சு நிலவும் நிலையில் ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் என ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: செய்தி: தட்ஸ்தமிழ்