கவிஞர் கனிமொழியின் கன்னிப் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு
அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து - உறுப்பினர் மேசையைத் தட்டி வரவேற்றனர்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்
புதுடில்லி, டிச.5- தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் 123 அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் நேற்று (4-12-2007) கன்னிப் பேச்சு நிகழ்த்தினார். அப்போது, அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். கனிமொழி தனது கன்னிப் பேச்சை நிறைவு செய்ததும், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், “மிகச் சிறந்த தங்கள் உரைக்கு எனது பாராட்டுகள் (Congratulation for your brilliant speech)” என்று குறிப்பு எழுதி அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்கள் கனிமொழி அமர்ந்திருந்த இருக்கை அருகே வந்து கைகுலுக்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சுரேஷ் பச்சோரி, ஆனந்த சர்மா, பட்டேல், சி.பி.எம். மாநிலங் களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்துப் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் அமர்ந்திருந்த இருக்கை அருகே கவிஞர் கனிமொழி வந்து, பிரதமரிடம் வாழ்த்து பெற்றார்.
செய்தி: நன்றி: விடுதலை
கனிமொழியின் முழு பேச்சு விபரம் இங்கே
Thursday, December 6, 2007
கனிமொழியின் கன்னிப் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment