Friday, November 16, 2007

தமிழ் சினிமா பரிந்துரை- உங்கள் வாரிசுக்கு

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன் சர்வேசன் தனது பதிவில், தமிழில் 75 ஆண்டுகளில் சிறந்த படங்களாக குமுதம் பட்டியலை வெளியிட்டு தனது மற்றும் பிறரது விருப்ப பட்டியலையும் (பின்னூட்டங்களில்) வெளியிட்டிருந்தார். நான் இந்த பதிவில் கேட்பது வேறு.

தமிழ் வலைப்பதிவுலகில் புழங்கி வரும் பெரும்பாலானவர்கள் 20 வயது முதல் 60 வரையிலான பெருமக்கள். உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த எந்த தமிழ் சினிமா படங்களை பார்க்கும் படி சிபாரிசு பண்ணுவீர்கள் அல்லது அதன் டிவிடியை வாங்கி இப்போதே சேமித்து வைப்பீர் ? (அதுவும் மோசர் பாயர் மற்றும் இன்ன பிற கம்பெனிகளின் குறைந்த விலை டிவிடி/சிடிக்கள் கிடைக்கும் போது)

இந்தப் படங்களை நீங்கள் சிபாரிசு செய்யும் (அல்லது சேமிக்கும்) காரணம் என்னவென்றும் பதிவிடலாம். எந்தப் படத்தை வருங்கால சந்ததியினர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் (அவர்கள் விருப்பப்படி); உங்கள் பட்டியலில் உள்ள படங்களை ஒரு முறையேனும் அவர்களைப் பார்க்கச் செய்து உங்கள் காரணத்தை அவர்களிடம் சொல்லும் விதமாக இருக்கவேண்டும் உங்கள் லிஸ்ட்.

காரணங்கள் - சிறப்பான கதை, இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, நடிப்பு, சண்டைக் காட்சிகள் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது உங்களை ஈர்த்ததுடன் உங்கள் மகன்/மகளை பார்க்கச் சொல்லும் படி இருக்கவேண்டும். அவர்கள் படங்களைக் காண்பார்களோ இல்லையோ - நமது ஆசையாக சில படங்களை அவர்கள் பார்க்கவைக்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் படங்களாக இருக்கவேண்டும்.

இந்த ஆட்டத்திற்கு நான் அழைக்கும் பதிவர்கள் (படம் தமிழ் திரைப்படமாக இருக்க வேண்டும் - பிற மொழிப் படங்களை வேறு லிஸ்டில் சேர்க்கலாம்)

- ஆசிப் மீரான்
- ரத்னேஷ்
- கோவி.கண்ணன்
- லக்கி லுக்
- இட்லி வடை
- பெயரிலி கனா.ரவன்னா
- செல்வராஜ்
- நா.கண்ணன்
- சுப்பையா சார்
- தேசிகன்
- டுபுக்கு
- ஐகாரஸ் பிரகாஷ்
- டி.பி.ஆர்.ஜோசப் சார்
- வற்றாயிருப்பு சுந்தர்
- மோகந்தாஸ்
- நாராயண் (உருப்படாதது நாராயண்)
- மூக்கு சுந்தர்
- ராமச்சந்திரன் உஷா
- துளசி டீச்சர்
- கனடா வெங்கட்
- தருமி சார்.
- அபுல் கலாம் ஆசாத்

எனது லிஸ்ட் வரும் பதிவுகளில் வரலாம் :-)

உங்கள் வரிசை எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் கொண்டிருக்கலாம். ஆனால் அதை இயக்குனர் அல்லது நடிகர்/நடிகை வகைப் படுத்தினால் நலம். மற்றவர்களுக்கு அது உதவியாக இருக்கலாம்.

உதாரணம்:

புராணப் படங்கள்
ரஜினிகாந்த் படங்கள்
பீம்சிங் படங்கள்
ஸ்ரீதர் படங்கள்
சிவாஜிகணேசன் படங்கள்
எம்.ஜி.ஆர் படங்கள்
சாவித்திரி படங்கள்
பத்மினி படங்கள்
கமல்ஹாசன் படங்கள்
பாலசந்தர் படங்கள்
சத்யராஜ் படங்கள்
பாலுமகேந்திரா படங்கள்
கே.எஸ்.ரவிக்குமார் படங்கள்
விசு படங்கள்
இளையராஜா (இசைக்காக)
நாகேஷ் படங்கள்
கவுண்டமணி செந்தில் படங்கள்
ராமராஜன் படங்கள்
வடிவேலு படங்கள்
விவேக் படங்கள்
etc etc

பதிவு இடுவோருக்கு நன்றி. நீங்களும் பிற பதிவர்களை இந்த ஆட்டத்திற்கு அழைக்கலாம்.
நான் கூப்பிடவிரும்பும் இன்னும் பல பதிவர்கள் பட்டியலில் அப்புறம்.

22 comments:

அபுல் கலாம் ஆசாத் said...

அன்புடையீர்,

அழைப்பிற்கு நன்றிகள்!

அவசியம் பதிவேன்.

அன்புடன்
ஆசாத்

கோவி.கண்ணன் said...

அழைப்புக்கு மிக்க நன்றி ! விரைவில் ஆவண செய்கிறேன்.

Narain Rajagopalan said...

Thanks. Not sure about Tamil movies, since there are better people [Prakash, Venkat, Azad] than me in doing the listing. I may probably do a small listing of international movies which i personal own & recommand.

RATHNESH said...

தங்கள் அழைப்பிற்கும் என் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் நன்றி. முடிந்ததை நிச்சயம் செய்கிறேன்.

ஒரு சந்தேகத்தைத் தெளிவு படுத்தி விடுங்கள்: என்னுடைய பதிவில் எழுத வேண்டுமா அல்லது தாங்கள் இதற்காக ஒரு தனித் தொகுப்பு ஏற்பாடு செய்கிறீர்களா?

Sambar Vadai said...

Thanks Azad, Govi Kannan, Narain, Rathnesh.

Rathnesh: You can write in your blog.
I will provide link to all these posts in a consolidated post from my blog.

Narain: One of the key reasons for the first choice of bloggers shown in the post (chosen by myself) is the clarity of thought in many of their posts in respective areas. Many more bloggers are there who are writing well. Hopefully they will also get included in the network soon by all of you.

You can possibly list your recommendation of movies in other languages - the key criteria is "it should be recommendable to your children (ofcourse at the appropriate age) and make them see atleast once for the things that you admired in that movie.

Thanks again

Jayaprakash Sampath said...

ரொம்ப interesting. அழைப்புக்கு நன்றி. ரெண்டொரு நாளிலே பதிவு போடறேன்.

Sundar Padmanaban said...

அழைப்பிற்கு நன்றி. விரைவில் எழுதுகிறேன்.

Sambar Vadai said...

நன்றி பிரகாஷ், வ.சுந்தர்.

உங்கள் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

Baby Pavan said...

ஏன் எங்க சங்கத்து சிங்கங்களை அழைக்கவில்லை.

-/பெயரிலி. said...

தமிழ்ப்படங்களென்றால், கொஞ்சம் கஷ்டமே. 90 இற்குப் பிறகு அப்போதும் இப்போதுமாகத்தான் பார்க்கிறேன். மிகுதியானவற்றிலே சொல்லும்வண்ணம் ஞாபகத்திலேயிருப்பது ஓரிரண்டே. இவ்வாரத்திலே அவற்றைச் சுட்டிவிடுகிறேன்

Sambar Vadai said...

பேபி பவன்: உங்க சங்கத்து சிங்கங்களா ? சிங்கம் சிங்கிளாத்தானே வரும் ? :-)
நீங்களும் எழுதலாம்.

பெயரிலி அண்ணே: 90க்கு முந்திய படங்களிலிருந்தே எழுதுங்கள். அதுதான் இங்குள்ள பலருக்கும் பிடிக்கும் (கலாம்?) - ஒங்களுக்குப் பிடிச்ச கவுதமி அண்ணி படங்கள்னும் லிஸ்ட் போடலாம் :-)

MSV Muthu said...

என்னைக் கூப்பிடவேயில்ல?! இருந்தாலும் நாங்க பதிவு போடுவம்ல.. ;-)

லக்கிலுக் said...

அழைப்புக்கு நன்றி அண்ணாத்தே!

பதிவும் போட்டு விட்டேன்!

Dr.N.Kannan said...

பாலா:

இத்தொடர் இன்னும் பொலிவு பெற வேண்டுமெனில், எழுதும் அனைவரையும் தொடர்பு படுத்த வேண்டும். அப்போது ஒரு பெரிய உரையாடல் நடைபெற வாய்ப்புள்ளது. யாரும் வாசிக்கிறார்களா என்றே தெரியவில்லை!

கண்ணன்

தருமி said...

அழைப்பிற்கு நன்றி.
விரைவில் எழுதி தகவலும் அனுப்புகிறேன்.

துளசி கோபால் said...

வெத்தலைபாக்கோட அழைப்பு வச்சுட்டிங்கல்லெ:-)))

அதெல்லாம் ஜமாய்ச்சுப்புடுவோம்.

என்ன எழுதலாமுன்னு ரோ(யோ)சிச்சுக்கிட்டு இருந்தேன். கரும்பு சக்கரையாக் காய்ச்சது:-))))

Sambar Vadai said...

கண்ணன் சார்,

பலரும் வாசிக்கிறார்கள். உங்கள் பதிவு திரட்டிகளில் திரட்டப்படுகிறதா என தெரியவில்லை (அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என எனது கணிப்பு).

மற்றபடி நீங்கள் எழுதிவரும் தொடர் மிக அருமை. இதைப் போன்ற படங்களைத்தான் நான் எதிர்பார்த்தேன். தொடர்ந்து எழுதவும். என்னுடைய தொகுப்பில் இதுவரை எழுதியவர்களின் பதிவுகளை திரட்டியும், தொகுத்தும் வழங்க உள்ளேன். பலருக்கும் அது உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அப்புறம் என் பேர் பாலா இல்லை :-)

மிக்க நன்றி.

-----------------
தருமி சார், துளசி டீச்சர் - உங்கள் பதிவுகளும் பட்டியலும் பெரிதாகவே இருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த (நன்றாக எழுதக்கூடிய, திரைப்படம் ரசிக்கக்கூடிய) பதிவர்களைக் கூப்பிடுங்கள்.

Dr.N.Kannan said...

சாவா
வழக்கமாக சினிமா பற்றிப் பேச்சு வரும் போது வந்து போகும் நண்பர்களைக் காணோம். அதுதான் கேட்டேன். திரட்டிகளில் உள்ளது என்று நம்புகிறேன் (தமிழ்மணம் நிச்சயம்.

மேலும், இது பற்றி சக எழுத்தாளர்கள் என்ன எழுதுகிறார்கள் என்றறிய நீங்கள் அழைத்து எழுதத் துவங்கியுள்ள அனைவர் வலைப்பதிவின் இணைப்பும் கொடுங்கள்.

உங்கள் பேர் பாலா இல்லை? தம்பிகளா இந்த கண்ணாமூச்சி விளையாட்டெல்லாம் தமிழ்.நெட்டில் விளையாண்டு முடித்து ஓய்ந்திருக்கும் நேரம். சுடும் பெயர் (சுட்ட பெயர் தெரிகிறது-சாவா) சொல்லுங்கள். கூப்பிட வசதியாக.

Dubukku said...

அண்ணே நானும் போஸ்ட் போட்டுட்டேன். அழைப்புக்க நன்றி

http://dubukku.blogspot.com/2007/11/blog-post_27.html

ramachandranusha(உஷா) said...

நன்றி, வரேன் ஆனால் கொஞ்சம் டைம் கொடுங்க

அபுல் கலாம் ஆசாத் said...

அன்புடையீர்,

பதிவினை இடுவதற்கு எனக்கு ஒருமாதம் அவகாசம் வேண்டியிருக்கிறது.

இங்கே படிக்கலாம்.

http://ennam.blogspot.com/2007/12/blog-post_19.html

அன்புடன்
ஆசாத்

Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்