Thursday, October 11, 2007

படம் - நெற்றியில் பொட்டில்லா கனிமொழி

அண்ணன் வழியில் தங்கையும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு. என்ன - எப்போதும் நெற்றியில் பொட்டுடன் வரும் கனிமொழி, இதற்கு மாத்திரம் பொட்டிடாமல் வந்து அவரும் அரசியலில் பால பாடம் கற்றுவிட்டார்.

பொட்டு இடுவது இடாதது அவரின் சொந்த விருப்பம். நீ யார் அதைக் கேட்க என சொல்ல வருவீர்களனால் - இங்கேயே ஜகா வாங்கிற்றேன். இதுவரை எத்தனை பொது நிகழ்ச்சிகளில் அவர் பொட்டுடன் வந்துள்ளார். எத்தனை நிகழ்ச்சிகளில் பொட்டில்லாமல் வந்துள்ளார் என ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்.

செய்தி, படம் / நன்றி: தினமலர்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


சென்னை: ""சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கிடைக்க போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்று கனிமொழி பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மகளிர் அணி மாநில செயலர் பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 200 ஏழை பெண்களுக்கு இலவச புடவைகள், 20 ஏழைகளுக்கு தையல் மிஷின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை ஆகியவற்றை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: மத நம்பிக்கை இல்லாத என்னை இந்த விழாவிற்கு ஏன் அழைத்தார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. மத நம்பிக்கை என்பது எல்லாரையும் ஒன்றாக இணைக்கும் விஷயம். மனித நேயத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். எந்த மதமும் மக்கள் நலனுக்காகதான் உள்ளது. மக்களை மேன்மை படுத்துகிறது. மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருகிறது. மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்க மதம் உருவாகவில்லை என்பதை அடிப்படையில் புரிந்துக் கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் பல நன்மையான காரியம் செய்யப்படுகிறது. ஒரு முன்னேற்ற பாதையில் செல்லும் போது அதை தடுப்பதற்காக மதகோட்பாடு பூதாகரமாக எழுகிறது. இந்த தருணத்தில் சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முதல்வர், சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டவர். தமிழக அரசும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளது. அதன் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் கிடைக்க போராட வேண்டிய அவசியம் உள்ளது.

போர் குணமிக்கவர்கள் பெண்கள்:சச்சார் கமிட்டி அறிக்கையை பார்க்கும் போது மனம் பதறுகிறது. பல கேள்விகள் எழுகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சமூகம் பின் தங்கியே இருக்கிறது என்பது வேதனையை தருகிறது. பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்காக போராடுபவர்கள். எந்த மதமும், இயக்கமும் பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்க நினைப்பதில்லை. பெண்கள் முன்னேற வேண்டும் என்ற அக்கறையில் தான் செயல்படுகிறது. நமது சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்படுகின்றனர். அதனால், அவர்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெண்கள் போர் குணமிக்கவர்கள்; தைரியமிக்கவர்கள். இதையெல்லாம் மறந்து விட்டு பெண்கள் வாழ நினைப்பதில் அர்த்தமில்லை. ஆண்கள் அடக்கியாள வேண்டும். பெண்கள் அடங்கி போக வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள். அப்படி சொன்னால் இப்படி தான் வாழ வேண்டும் என்ற சிறிய வட்டத்திற்குள் அவர்கள் வாழ கற்றுக் கொள்வார்கள். இதனால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

1 comment:

mani said...

I noticed same. she is learning political lesson from her father very fast.