Wednesday, October 10, 2007

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும் - கி.வீரமணி

தமிழர் தலைவர் (?) கி.வீரமணி எல்லோரையும் ரொட்டி (பிரட்) சாப்பிடச் சொல்லியுள்ளார். வாரத்தில் சில நாட்கள் அரிசி உணவைத் தவிர்த்து பிரட் சார்ந்த உணவு (சாண்விச், பர்கர் போன்றவை) சாப்பிட்டால் எல்லோரும் நலமாக வாழலாம் என்கிறார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் புரா திட்டத்தை அமுல்படுத்துவது இருக்கட்டும். ஏற்கனவே நாட்டில் கோதுமை தட்டுப்பாடு என வீணாய்ப் போன கோதுமையை இறக்குமதி செய்து பலரும் வாங்கிக் கட்டிகொண்டிருக்கையில் தமிழர்கள் அரிசி உணவைக் குறைத்தால் இன்னும் என்னென்ன நிலைமை வரும் ?

தமிழர்தம் உணவான இட்லிவடைக்கும் சாம்பார் வடைக்கும் இப்படியுமொரு threatஆ :-)

பதியுங்கள் உங்கள் கருத்துகளை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செய்தி / நன்றி : விடுதலை

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும்!

இன்று (அக்டோபர் 8) உலக ரொட்டி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் உள்ள 365 நாள்களும் ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட பொருளை மய்யப்படுத்தி உலக நாள்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது!

பொதுவாக உணவு நாள் என்று அழைக்காமல், ரொட்டியை மய்யப்படுத்தி இப்படி ஒரு நாளா என்று சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

அரிசியையே முக்கிய உண்ணும் உணவுப் பொருளாகக் கருதுபவர்களைவிட உலகில் ரொட்டியை முக்கிய உணவாக (ளுவயயீடந குடிடின) உண்ணும் மக்கள் பல கோடிக் கணக்கில் உள்ளனர்.
ரொட்டியை உணவாகக் கொண்ட பழக்கம் இருந்த காரணத்தால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவர்கள் அவர்தம் கடவுளை வேண்டும் பிரார்த்தனையில்கூட, `இன்றைக்குத் தேவைப்படும் ரொட்டியை எங்களுக்குத் தாரும் பிதாவே என்று ரொட்டியைத்தான் கேட்டார்கள்! (அதிலே கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய செய்தி, ரொட்டியை அன்றாடம் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்; ஒட்டுமொத்தமாக சேமித்து இப்போது குளிர்பதன பெட்டியில் அல்லவா அடைத்து வைத்து) உண்டு, மகிழ்கின்றனர்!

பிரெஞ்சுப் புரட்சி வரலாற்று லூயி மன்னன் மனைவி மேரி அன்டாயினெனட் என்பவர் மக்கள் ரொட்டி கிடைக்கவில்லையே என்று பஞ்சத்தில் வாடியபோது, ``அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்ற பொறுப்பற்ற விசித்திரமான அறிவுரை கூறிய சம்பவங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு!

`கால் வயிற்றுக் கஞ்சி என்பது நம் நாட்டில் நாம் பயன்படுத்தும் சொல்லாட்சி. ஆனால், மேலைநாடுகளில், `ஒரு சிறு ரொட்டித் துண்டுக்கும் வழி இல்லை என்பது அவர்களின் சொல் வழக்கு; காரணம் அவர்களது உணவு ரொட்டிதான்!

இந்த ரொட்டியைத் தயாரிப்பதில்கூட ஒவ்வொரு வகையிலும் புத்தம் புது முறைகளைக் கையாண்டு, விதவிதமாகத் தயாரித்து நுகர்வோரை ஈர்க்கின்றனர்!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் முதல் முறையாக 1980 களில் சென்றபோது, அங்கு பெரிய பேரங்காடிகளில் ரொட்டி வாங்கிச் செல்வோரைக் கண்டு நானும், எனது நண்பர்களும் பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போனோம்! காரணம், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தடி போல் இரண்டு மடங்கு நீளமுள்ள ரொட்டியை வாங்கி லாவகமாகத் தூக்கிச் செல்கின்றனர். நாம் அரிசி வாங்கி சமைப்பதற்கு எடுத்துச் செல்வதுபோல அங்கே அவர்கள் அந்த நீண்ட ரொட்டியை வாங்கிக் கொண்டு சமையல் அறைப் பகுதியில் அப்படி மாட்டிவிட்டு ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப வெட்டியெடுத்து, அதனுடன் உருளைக்கிழங்கை (குசநஉ குசநைள) தட்டு நிறைய வைத்துக்கொண்டு சாப்பிட்டுப் பசியாறுகின்றனர்! (`உருளைக்கிழங்கு வாய்வு என்றெல்லாம் கதை பேசுவது இல்லை!)

நமக்குக்கூட இந்த ரொட்டி உணவு ஒருவேளையாவது எடுத்துக்கொள்ளும் பழக்கம் வந்தால் மிகவும் நல்லது!

சிறுசிறு வகையில் பசி போக்கிட சான்ட்விச் (ளுயனேறஉ) என்பதை இப்போது இரண்டு துண்டு ரொட்டி (ளுடஉந) அதனுள் கோழி இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ அல்லது காய்கறிகள் மட்டும் சாப்பிடுவோர் அந்த சிறு `சான்ட் விச்சுக்குள் தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு இவற்றை இடையில் வைத்து சாப்பிடும் பழக்கம் இப்போது அலுவலகப் பணியாளர்கள், அவசரப் பணியாளர்கள் மத்தியில் அதிகம் பரவிக் கொண்டுள்ளது!

ரொட்டியில் பல வகையில் தயாரித்து, ஒரே வகையில் அனுதினமும் சாப்பிட்டால் அலுத்துப் போகும் என்பதால், `ரொட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பரவசப்பட்டுப் பாடும் வகையில் தயாரிக்கின்றனர்.

சிங்கப்பூரில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து ரொட்டி தயாரிக்கத் தொடங்கி, இன்று அங்கே அவர்களால் தயாரிக்கப்படும் ரொட்டி மிகப்பெரிய வரவேற்புக்கு ஆளாகியுள்ளது!

வல்லத்தில் உள்ள நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெரிதும் கிராமத்துப் பெண்களைக் கொண்டது - இந்த ரொட்டி தயாரிக்கும் தொழிலை நன்கு கற்றுக் கொண்டு, அவரவர் ஊருக்குச் சென்று, வங்கிகளில் கடன் பெற்று ரொட்டி தயாரித்து எளிய விலைக்கு - குறைந்த லாபத்துடன் வருவாயைப் பெற்று வசதியாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம்!

`இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 நாள்களுக்காவது ரொட்டி உணவை உண்போம்; அரிசிக்கு சற்று விடுமுறை அளிப்போம். அதன்மூலம் சர்க்கரை வியாதி ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
இதனால் மகளிருக்குக் கூட இந்த சமையலறைப் பாரம் கொஞ்சம் குறையும் வாய்ப்பு ஏற்படக் கூடும்!


இட்லி தயாரிப்புக்கு எடுக்கும் நேரம், நினைப்பு, உழைப்பு இவற்றைவிட கடையிலிருந்து நல்ல ரொட்டியை வாங்கிக்கொண்டு வந்து கூடி உண்டு மகிழலாமே!
`என்ன தொடங்கலாமா? `நாளைமுதல் என்று சொன்னால் நடைமுறைக்கு வராது; `இன்று முதல் என்று கூறி மாற்றத்தைத் தொடங்கி மகிழுங்கள்.

இல்லத்தரசிகளுக்கு சற்று ஓய்வு தர இதுவும் ஒருவகை உதவியே. அதிலும் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களுக்கு `ரொட்டி பெரிதும் கைகொடுக்குமே

No comments: