Sunday, October 21, 2007

டில்லியில் ராம்லீலா - சோனியா ஆரத்தி

ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த ராம் லீலா விழா கொண்டாடப்படுகிறது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்




செய்தி / படம்: நன்றி: தினமலர்

புதுடில்லி : தசரா பண்டிகையின் நிறைவு நாளையொட்டி, ராம் லீலா நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தசரா பண்டிகையின் நிறைவு விழா, நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம் லீலாவாக கொண்டாடப்பட்டது. ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனால், தீமை ஒழிந்து நன்மை பிறக்கும் விழாவாக இதை மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் டில்லி மற்றும் கோல்கட்டாவில் கொண்டாட்டம் "களை' கட்டியது. டில்லி ராம் லீலா மைதானத்தில் இந்நிகழ்ச்சி, நேற்று மாலை வெகு விமரிசையாக துவங்கியது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

விதவிதமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ராமரின் வாழ்க்கையை விவரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராம் லீலா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். ராம் லீலா நிகழ்ச்சியை முன்னிட்டு, டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

No comments: