Tuesday, October 30, 2007

இப்போ என்ன பண்றாங்க ?

குமுதத்தின் லைட்ஸ் ஆன் சினிமா பகுதியில் மறந்து போன நடிக-நடிகையர் படம் போட்டு தற்போது என்ன செய்து வருகிறார்கள் என கட்டம் கட்டி வெளியிடுகிறார்கள்.

அதுபோல கீழ் காணும் பிரபலங்கள் இப்போ என்ன பண்றாங்க ? யாருக்கானும் தெரிந்தால் பின்னூட்டவும். பிரபலங்கள் லிஸ்டை நீட்டவும் நீட்டலாம்.

1. தயாநிதி மாறன் (தினகரன் அலுவலகம் செல்லுவது தவிர...) - இவரின் சேவை மீண்டும் (தமிழ்)நாட்டுக்குத் தேவை

2. சடகோபன் ரமேஷ் (முன்னாள் தமிழக / இந்திய கிரிக்கெட் வீரர் சினிமாவிலா ?)

3. எழுத்தாளர் சிவசங்கரி (இந்திய மொழிகளில் நாவலாசிரியர்கள் (அல்லது இலக்கியம் ?) பற்றிய ஆய்வுக்குப் பிறகு ?), அதே மாதிரி இந்துமதி, விமலா ரமணி போன்ற முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள்

4. யூகி சேது (டிவியில் பிரபலமான அரட்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, பஞ்ச தந்திரத்திற்குப்
பிறகு)

5. எம்.எஸ்.உதயமூர்த்தி (ஒரு காலத்தில் தன்னம்பிக்கை என்றால் கூப்பிடு இவரை என்ற அளவில் பல கட்டுரைகளும் மேடைப்பேச்சுகளும் வழங்கியவர்)

6. ஆர்.வி.உதயகுமார் (பொன்னுமணி, சின்னக்கவுண்டர், சிங்காரவேலன், எஜமான் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல)

7. பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள், மற்றும் இன்னபிற நிதி நிறுவன தலைவர்கள் - அனுபவ், ஈஸ்வரி பைனான்ஸ் மற்றும் பல 24% வட்டிதருவதாகச் சொன்னவர்கள்

8. கவுண்டமணி (ரொம்ப மிஸ் பண்றோமுங்க)

9. குற்றாலீஸ்வரன் (இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த வீரர்)

10. பூர்ணம் விஸ்வநாதன் (மகாநதிக்குப் பிறகு காணவில்லை)

11. நடிகர் ராமராஜன் (ஒரு காலத்தில் சில்வர் ஜூபிளி நாயகன், பிறகு மக்களவை எம்.பி - சிலகாலம் முன்பு குமுதத்தில் மிகவும் கஷ்டப்படுவதாக ஒரு பேட்டி.. ஆனால் அதன் பின் ?)

12. சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏ.வி.ரமணன் (எப்டி இருந்த நிகழ்ச்சி இப்போ
எப்டி ஆயிடுச்சு)

9 comments:

திரு said...

குமரிஆனந்தன்,தங்கபாலு,தமிழ்குடிமகன்,நடிகர் கார்த்திக்,மலைச்சாமி I.A.S, A.C சண்முகம்,ரபி பெர்னாட்,மாலன்,S.S சந்திரன்....

Thanjavurkaran said...

Kuttaleeswaran finished BTech in Anna University and MS in States. I think now he settled in US

கானா பிரபா said...

//10. பூர்ணம் விஸ்வநாதன் (மகாநதிக்குப் பிறகு காணவில்லை)//


ஆசை படத்தின் பின் நடிப்புத்துறைக்கு முழுக்கு என்று அவர் சொன்னதாக முன் பேட்டியில் படித்தேன்

//தமிழ்குடிமகன்//

அவர் திமுக வை விட்டு விலகி அதிமுகவில் இருந்த போதே சிலவருடம் முன் இறந்துவிட்டாரே?


என் பட்டியலில்

ராம்கி - நிரோஷா
பாடகர் அருண்மொழி
இசையமைப்பாளர் சந்திரபோஸ்

Unknown said...

பாடகர் அருண்மொழியின் இயற் பெயர்.. நெப்போலியன் ..இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜ விடம் அவர் நிரந்தர புல்லாங்குழால் இசை கலைஞர் . எனது நண்பரும் கூட..

ராம்கி-நிரோஷா -- ராம்கி direction துறையில் பயிற்சி எடுத்து..தற்போது திரை படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நிரோஷாவை அவ்வப்போது டிவி சீரியல்களில் தலையை காட்டுவதை பார்க்கலாம்...

Unknown said...

//ரபி பெர்னாட்// தற்போது ஜெயா டிவி ல் தினம் இரவு 10 மணிக்கு அரசியல் நிகழ்ச்சி தொகுத்து கொண்டு இருக்கிறார்..

//சந்திர போஸ்// Retired from பிலிம் மியூசிக்....ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்..அவர் தம்பி தான் தினா..."மன்மத ராசா" குத்து பாட்டு புகழ்...

கானா பிரபா said...

//Jahe said...
பாடகர் அருண்மொழியின் இயற் பெயர்.. நெப்போலியன் ..இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜ விடம் அவர் நிரந்தர புல்லாங்குழால் இசை கலைஞர் . எனது நண்பரும் கூட..//

வணக்கம் நண்பரே

அருண்மொழியின் ஏறக்குறைய எல்லாப்பாடல்களையுமே பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன். இன்று காரில் பயணிக்கும்போதும் சூரசம்ஹரத்தில் இருந்து "நானென்பது நீயல்லவோ" பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தேன்

முடிந்தால் எனக்கொரு தனிமடல் இடமுடியுமா?

kanapraba@gmail.com

Sambar Vadai said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே.

குமரி ஆனந்தன் - பனைவாரியம் தலைவராக இருக்கிறார்.

தங்கபாலு புதியடிவி தொடங்க (அல்ல தொடங்கிவிட்டாரா?) ப்ளான் - மேலும் சில கல்லூரி/கல்விநிறுவனங்களில் பிசி ?
தமிழ்குடிமகன் மறைந்துவிட்டார்.
கார்த்திக் நேற்று கூட தேவர்தினத்திற்கு சென்று சரத்குமாரிடம் பேச்சு நடத்தியதாக செய்தி வந்துள்ளதே. பா.பிளாக் தலைவர் பிஸ்வாஸ் கூட சிரிப்பு பேட்டியெல்லாம் கொடுத்துள்ளார் (கார்த்திக் தான் நிரந்தரத் தலைவராம்). மற்றபடி சினிமாவில் எந்தப் படமும் இல்லையென்று கேள்வி
மலைச்சாமி இன்னமும் அதிமுகவில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வருகிறார். ரபி பெர்நாட் - வாராவாரம் ஞாயிறு இரவு ஜெயாடிவியில் 10மணிக்கு நேருக்குநேர் பேட்டி எடுத்துவருகிறார். யார் பார்க்கிறார்கள் என தெரியவில்லை
மாலன் சன்டிவிவிட்டு விலகி டில்லியில் வசித்து வருகிறார் ? எஸ்.எஸ்.சந்திரன் இன்னமும் அதிமுக மேடைப்பேச்சாளராகத் தான் இருக்கிறார். ஆனால் வரதட்சணை வழக்குகளால் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாய்க் கேள்வி.

கானா பிரபா - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் ஒரு வாசகன் நான். தொடரட்டும் தங்கள் பதிவுகள்.

kaialavuman said...

Chandrabose sun TV-yil oru serialil villian-Aga nadithar

Mookku Sundar said...

//குற்றாலீஸ்வரன் //

He works in Intel Sacramento.