Thursday, October 11, 2007

அந்துமணியின் அப்பாவுக்கு விருது

அந்துமணி ரமேஷின் அப்பா - திரு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விருது பெற்ற விபரம் - இன்றைய தினமலரில் - படத்தில் இடமிருந்து மூன்றாம் இடத்தில்.

செய்தி-படம் / நன்றி: தினமலர்

அந்துமணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்க வேண்டாம். எல்லாம் சும்மா பதிவு விளம்பரம் தான் :-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பத்திரிகையாளர்களை பாராட்டுவதே இல்லை

சென்னை :"பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டுவதில்லை' என "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை புரோபஸ் கிளப் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் 35வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் புரோபஸ் சிறப்பு விருது, "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதினை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் வழங்கினார்.

கலை தம்பதியினர் மனோகர் மற்றும் மகிமாவுக்கும் புரோபஸ் சிறப்பு விருது வழங்கப்பட்டது. புரோபஸ் அங்கீகார விருது பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது."புரோபஸ் வே ஆப் சக்சஸ்புல் ஏஜிங்' நுõலினை வைத்தீஸ்வரன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பெற்றுக் கொண்டார். "புரோபஸ் வழங்கும் அருசுவை விருந்து' நுõலினை ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா உதவி பொதுமேலாளர் வசுதா சுந்தரராஜன் வெளியிட முதல் பிரதியை இன்னர் வீல்ஸ் கிளப்பின் துணை தலைவர் நந்தினி பெற்றுக் கொண்டார். விழாவில் 75 வயதான சென்னை புரோபஸ் கிளப் உறுப்பினர்களும், 50 வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த தம்பதிகளும் கவுரவிக்கப்பட்டனர். புரோபஸ் கிளப்பால் நடத்தப்பட்ட செஸ் போட்டி மற்றும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

என் வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத நாள். சென்னையில் கற்றவர்களும், பல துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கூடி ஒரு பரிசை வழங்குவது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், எனது சங்க கால நாணய ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது. அதே போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு நண்பர்களே கிடையாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களை கண்டால் வெறுப்பார்கள். அதனால் அவர்கள் வெறுப்பிற்கு ஆளாக வேண்டாம் என கருதி கூடுமானவரை ஒதுங்கியே இருப்பது வழக்கம்.பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டாதது பெரிய குறை. ஒவ்வொரு பிரச்னையும் பத்திரிகையில் எழுதினால் தான் அதற்கு ஒரு முடிவு வருகிறது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்றால், பத்திரிகையில் கலர் படத்துடன் செய்தி வெளியிட்டால் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது பத்திரிகையின் முக்கியமான பணி. இந்தப் பணியை வேறு யாரும் செய்வதில்லை. தினசரி இதுபோன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த பணிக்கு 25 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை அழைத்து பாராட்டு பத்திரம் கொடுத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் :

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பேசுகையில், "சாதனைகளை பாராட்டும் புரோபஸ் கிளப்பின் தன்மையை பாராட்டுகிறேன். மனிதர்களின் சாதனைகளை கொண்டாடுவதன் மூலமாக ஆக்கப்பூர்வமான சக்தியை உருவாக்குகிறோம். நாமும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களுக்கு சந்தோஷத்தை வழங்கினால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். துடிதுடிப்புடன் இருக்கும் வரை நாம் வயதானவர்களாக ஆவதில்லை' என்றார்.ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குனர் ஸ்டானிஸ்லேவ் சிமகோவ் சிறப்புரையாற்றினார். புரோபஸ் கிளப்பின் தலைவர் பாலாம்பாள் வரவேற்றார். செயலர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

4 comments:

லக்கிலுக் said...

டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு பொருத்தமான விருது. தமிழரின் வரலாறு குறித்து அறிய டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆய்வுகள் பெரிதும் பயன்பட்டது. குறிப்பாக பண்டையத் தமிழர்கள் ஐரோப்பியருடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் குறித்த வலுவான ஆதாரங்கள் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நாணயவியல் ஆய்வுகளில் வெளிப்பட்டது.

Sambar Vadai said...

நன்றி லக்கிலுக்.

அவரின் இந்த ஆய்வுக் கட்டுரை இணையத்தில் படிக்கக் கிடைக்குமா ?

உங்களின் "தினமலர் ரமேஷ் சார்" கட்டுரை படித்துள்ளேன். உங்களுக்கு பெரியவர் இரா.கி.யுடன் பழக்கமுண்டா ?

தமிழ் தினசரிகளின் தற்போதைய சர்குலேஷன் எவ்வளவு ( தினமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி, மாலை முரசு, தமிழ் முரசு, மாலை மலர், மாலைச்சுடர், தினபூமி, தமிழ் ஓசை, முரசொலி, விடுதலை). இவற்றில் வாராவாரம் வரும் இணைப்புகள் (எகா - வாரமலர், சிறுவர்மலர் போன்றவை) காரணமாக அதிக மக்கள் வாங்கும் பத்திரிக்கை எது.

தவிர, இரா.கி அவர்கள் வேறென்ன துறைகளில் பங்களித்துள்ளார்.

லக்கிலுக் said...

//அவரின் இந்த ஆய்வுக் கட்டுரை இணையத்தில் படிக்கக் கிடைக்குமா ?//

ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களாக வெளிவந்திருக்கிறது. இந்திய நாணயவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தவர் இரா.கி. எனவே அவரது நூலை அடையாளம் காண சிரமப்பட வேண்டியதில்லை. நாணயவியல் குறித்த நூல்கள் தமிழில் மிக குறைவு.


//உங்களுக்கு பெரியவர் இரா.கி.யுடன் பழக்கமுண்டா ? //

தினமலர் எடிட்டரே அவர்தானே? பழக்கமில்லாமல் என்ன?


//தமிழ் தினசரிகளின் தற்போதைய சர்குலேஷன் எவ்வளவு//

பத்திரிகைகள் காட்டும் கணக்கு ஒன்று. விற்பனையாகும் எண்ணிக்கை வேறொன்று. :-)))


//வாராவாரம் வரும் இணைப்புகள் (எகா - வாரமலர், சிறுவர்மலர் போன்றவை) காரணமாக அதிக மக்கள் வாங்கும் பத்திரிக்கை எது.//

இணைப்புகள் காரணமாக அதிகம் விற்பது என்றால் தினமலர் தான்.


//இரா.கி அவர்கள் வேறென்ன துறைகளில் பங்களித்துள்ளார்.//

எனக்குத் தெரிந்து அவர் பத்திரிகை மற்றும் நாணயவியல் துறைகளில் தான் இருக்கிறார். அவரது சகோதரர் மதுரை லட்சுமிபதியுடன் இணைந்து கே.எல். ரேடியோ என்ற சாட்டிலைட் ரேடியோ நடத்துகிறார்.

மதுரை லஷ்மிபதி பல கல்லூரிகளை நடத்தி வருகிறார்.

Sambar Vadai said...

thanks Luckylook