Monday, August 31, 2009

காங்கிரசில் இணைந்தார் ரோஜா..!

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.


முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா? என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.

செய்தி: நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/new/Political_detail.asp?news_id=13660

செப்டம்பர் 08,2009

ஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

No comments: