Tuesday, September 11, 2007

தி.மு.க., கூட்டணியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்

தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகல் : டி.ராஜேந்தர் அதிரடி

சென்னை : தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகுவதாக லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று அவர் கூறியதாவது : தி.மு.க., கூட்டணி தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

source: Nandri: Dinamalar

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடா! இந்த ஆள் இவ்வளவு நாளும் இங்கேயா இருந்தார்.

G.Ragavan said...

கொசு பறந்துருச்சு..இனிமே எருமை சரிஞ்சிரும். என்னமா காமெடி பண்றாரு விஜய டி ராஜேந்தரு. என்ன பதிவு குடுக்கலை. அதத்தான மரியாதைன்னு மரியாதையாச் சொல்றாரு.

மாசிலா said...

இன்னாது "ல.தி.மு.க"வா?
எவ்ளோ காலமா?

பேசாம, தமிழ்மணத்தில பதிஞ்சி ஏதாவது பதிவு போட்டார்னாலும், நாலு மனசாற சிரிப்பாங்க.

பாவம் டி.ஆர்!

Sambar Vadai said...

யோகன், ஜி.ரா, மாசிலா,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

இவர மாதிரி ஆட்களும் (கார்த்திக் கார்த்திக்குனு ஒரு கட்சி (ஃபார்வார்ட் பிளாக்) தலைவர் இருந்தாரு தெரியுமா ?) அப்புறம் திண்டிவனம் ராமமூர்த்தி (சரத் பவார் கட்சித் தமிழக தலைவர்) இவங்களும் இருப்பதால் தான் தமிழக அரசியலும், பத்திரிக்கைகளும் நல்ல பரபரப்பாக செய்திகளுடன் இருக்கின்றன. இல்லாட்டி தமிழ்மணத்துல இத்தன செய்தி பதிவுகள் ஏன் வருது :-)))