Wednesday, September 26, 2007

பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்

ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அனைத்தையும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.

பள்ளிப் பாடநூல்களை நியாயமான விலையில் ஒரே மாதிரியாக, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க, கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் நிறுவப்பட்டது.
இதன்மூலம் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழிகளில் 502 தலைப்புகளில் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழை முதல் மொழியாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெளிச்சந்தையிலும் பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் முன்னேற்றம், ஆசிரியர் நலன் கருதி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட நூல்களை இணைய தளத்தில் வெளியிட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு Ôநிக்Õ நிறுவனத்துடன் இணைந்து பணிகள் நடந்தன. இதையடுத்து 322 தலைப்புகளில் பாடப் பகுதிகள் இணைய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுப் பாடநூல் தலைப்பு 162 (தமிழ் வழிப் பாடநூல் தலைப்புகள் 90, ஆங்கில வழி பாடநூல் தலைப்புகள் 72) உள்ளன. சிறுபான்மை பாடநூல் தலைப்புகள் 160 உள்ளன.
வகுப்பு வாரியாக பார்த்தால், 1 முதல் 5ம் வகுப்பு வரை 95 தலைப்புகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 73 தலைப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 154 தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடங்களை, விருப்பம்போல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இந்த இணைய தளம் குறித்து அறிய விரும்புவோர் http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் பார்க்கலாம்.

இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், Ôதற்போது 1150 மேனிலைப்பள்ளிகளிலும், 1500 உயர்நிலைப்பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில் இந்த பாட நூல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்கலாம். மேலும் பள்ளிப் பாடத்திட்டம் 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் திருத்தம் செய்யப்படுகின்றன.
ஆனால் தேவைக்கேற்ப அவற்றில் ஆண்டுதோறும் மாறுதல்களை கொண்டு வருவதற்காக பாடத்திட்ட மேம்பாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறதுÕ என்றார்.

இணைய தளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலிங்கம் தலைமை தாங்கினார்.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் எம்.விஜயகுமார், Ôநிக்Õ நிறுவன துணை இயக்குனர் ஜெனரல் மோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்

4 comments:

Anonymous said...

அமைச்சர் தங்கம் தென்னரசு மிகச்சிறந்த மாற்றங்களைக் கொண்டுவருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி..

கோபி said...

சில நூல்களை தரவிறக்கிப் பார்த்தேன். scan செய்யப்பட்டு மின்னூலாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதற்கு எதற்கு 50 இலட்சம்?

இலங்கைக் காசு மூன்றே இலட்சத்தில் 1000 நூல்களை மின்னூகாக்கியிருக்கிறார்கள் நூலகம் (www.noolaham.net) திட்டத்தினர்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

50 இலட்சம் என்ற தகவல் உங்கள் பதிவின் மூலம் தெரிய வந்தது. சந்தேகமே இல்லாமல் கொள்ளை தான். scan செய்யாமல் இருந்தால் கூட ஏற்கனவே இந்தக் கோப்புகள் எல்லாம் நூலாக அச்சிடும் காரணங்களுக்காக இருந்திருக்கக்கூடியவை தானே? இணையத்தில் பதிவேற்றுவது மட்டும் தானே செய்யப்பட வேண்டி இருந்திருக்கும்...ஹ்ம்ம்

Sambar Vadai said...

Shara, Gopi, Ravisankar,

thanks for your comments.

Forgot to include.
News source: Dinakaran (27-09-2007)