Tuesday, October 6, 2009

சோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு

மதுரை அருகே சோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு

மூவர் உயிர் இழந்ததாக செய்தி

Times of India

சோழவந்தான் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி : 25 பேர் படுகாயம்
அக்டோபர் 06,2009,19:10 IST

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்நிலையத்தில், நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தின் போது, ரயில் நிலையத்தில், ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாசஞ்ர் ரயில் நின்று கொண்டிருந்தது. குண்டுவெடிப்பில், ரயில் நிலைய கூரை கடுமையாக சேதமடைந்தது. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

செய்தி: நன்றி: Dinamalar


செய்தி: நன்றி: The Hindu

Three people were killed and two injured on Tuesday evening when an explosion rocked a railway station near Madurai in Tamil Nadu, police said.

The exact nature of the explosion was not clear. The blast occurred at the Sholavandan railway station, about 25 km from Madurai city, just when a passenger train entered the platform.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது வெங்காய வெடி- போலீஸ்

மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது குண்டு அல்ல. மாறாக பட்டாசு வியாபாரி கொண்டு வந்த வெங்காய வெடி மூட்டை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.

இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.

இந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன்
லோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.

முதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.

இன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

மொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளோ அல்லது நக்சலைட்டுகளோ காரணம் அல்ல என்றும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...

இந்த சம்பவம் காரணமாக மதுரை - திண்டுக்கல் இடையிலான ரயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மதுரை மற்றும் திண்டுக்கல்லோடு நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னரே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

முன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி: நன்றி: thatstamil

No comments: