Tuesday, July 21, 2009

எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி விருந்து

சட்டசபைக் கூட்டத் தொடர் நிறைவு பெறுவதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றோடு நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.

42 வகை உணவுப் பதார்த்தங்கள் இதில் இடம் பெற்றனவாம்.

முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறைச் செயலாளர் மாலதி, ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டி.ஜி.பி. கே.பி.ஜெயின், தீயணைப்புத் துறை இயக்குனர் டி.ஜி.பி. நட்ராஜ், உளவுப் பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தி.மு.க. வக்கீல் ஜோதி உட்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.

எஸ்.வி.சேகரும் சாப்பிட்டார்...

அதிமுகவின் புரட்சி எம்.எல்.ஏ.வான எஸ்.வி.சேகரும் இந்த விருந்துபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டார்.

அதேசமயம், வழக்கம் போல அதிமுக, பாமக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: