Friday, November 7, 2008

பிராமணப் பத்திரிக்கைகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி

ஈழப் போராட்டம் குறித்த செய்திகளை திசை திருப்பி தகவல் வெளியிடும் பிராமணர்கள் நடத்தி வரும் பத்திரிக்கைகளை தமிழர்களும், திராவிடர்களும் புறக்கணிக்க வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

''எரியும் ஈழமும், பிராமண நாளிதழ்களும்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கி.வீரமணி பேசுகையில்,

பிராமணர்களால் நடத்தப்படும் சில ஆங்கில நாளிதழ்களும், சில தமிழ் நாளிதழ்களும் ஈழப் பிரச்சினை குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மக்களை திசை திருப்பும் வகையில் தவறான, திசை திருப்பக் கூடிய செய்திகளை அவை பிரசுரித்து வருகின்றன.

2.30 லட்சம் ஈழத் தமிழர்கள் படும் துயரங்களையும், வலுக்கட்டாயமாக காட்டுக்குள் துரத்தப்பட்டுள்ள அவலத்தையும் இந்தப் பத்திரிக்கைகள் மறந்து விட்டன.

இவர்களால் அமெரிக்க அதிபராக ஓபாமா தேர்வு செய்யப்பட்டதை பக்கம் பக்கமாக செய்தி போட்டு நிரப்ப முடிகிறது. ஆனால் தமிழ் ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் நடத்தி வரும் போர் குறித்த செய்தியை ஏன் இவர்கள் போடுவதில்லை?.

பிராமணக் குடும்பங்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பத்திரிக்கைகளின் இரட்டை நிலையைத்தான் இது காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு தங்களையும், தங்களது தாயகத்தையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியும். இந்த செய்தித் தாள்களின் உதவி அவர்களுக்குத் தேவையி்ல்லை.

தமிழர்களும், திராவிடர்களும், இந்த பிராமணப் பத்திரிக்கைகளைப் படிக்காமல் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார்.

செய்தி: நன்றி: Thatstamil

1 comment:

Thamizhan said...

இந்தப் பார்ப்பனப் பத்திரிக்கைகளை வாங்கும் தமிழர்கள் வெட்கப் பட வேண்டும்.
தமிழையும்,தமிழனையும் கேலி செய்து அதைப் படித்துச் சிரிப்பு வருகிறது என்பவர்கள் தமிழர்கள் தானா?
அதை இணையத்திலும் வெளியிட்டுச் சிரிக்கும் பார்ப்பனக்கும்பல் சிரிப்பாய் சிரிக்கும் நாள் வரும்.