Monday, April 27, 2009

கருணாநிதியின் பல்டி - சீசன் 2

ஜெ. தனி ஈழம் அறைகூவல் விடுத்ததும் அடுத்து என்ன செய்யலாம் என்றிருந்த கருணாநிதி திடுமென்று வீட்டில் கூட சொல்லாமல் கொள்ளாமல் அண்ணா சமாதியில் சென்று உண்ணாவிரதம் என உட்கார, தமிழகத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, பஸ் நிறுத்தம் என கடந்த 5 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக மக்களுக்கு தவிப்பு.

இது மாதிரி தினமும் ஒரு சீன் போட்டுக் கொண்டிருந்தால் நாற்பதும் நாமமே! திங்களன்று காலை எத்தனை மக்கள் தங்கள் அலுவல், வேலை, தொழில், கடை, கல்லூரி என துவங்கியிருப்பார்கள் ? பொதுமக்களுக்கு தொல்லை தரும் எந்த போராட்டமும், சீனும் இனி வேகாது.

இந்த சீசன் 2 ஸ்டண்டிற்கு இன்றைக்கு திருப்பூரிலும் பொள்ளாச்சி மீட்டிங்கிலும் ஜெ. வின் ரியாக்ஷன் என்ன என பார்ப்போம். பாவம் அவரும் போகுமிடமெல்லாம் 'கருணாநிதி' கருணாநிதி என கூவுகிறார். அதற்கு பதில் சொல்லி போட்டி மீட்டிங்குகள் நடத்த கருணாநிதிக்கு உடல் நலமில்லாத நிலையில் 2ஆம் கட்ட தலைவர்களும் திமுகவில் இல்லாதது நல்ல சவால் இல்லை.


இன்றைக்கு மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கருணாநிதி அளித்த டென்ஷனுக்கு (படிக்க ஜூ.வி கவர் ஸ்டோரி) - நிச்சயம் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அம்மா பக்கம் தான் என தெரிகிறது.



எதை கேட்டு கருணநிதி விரதத்தை கைவிட்டாரோ அந்த போர் நிறுத்தத்தை இலங்கை ராணுவம் நிச்சயம் தொடரப்போவதில்லை. From http://defence.lk

'Media illusionists' twist government statement: 'No Ceasefire offered'

Sri Lankan security forces will continue with the humanitarian operations to rescue the remaining 15,000 -20,000 people held hostage by LTTE while avoiding the use of heavy caliber weaponary as a strict measure coinciding with its 'Zero civilian casualty policy (ZCC)', a defence official stated refuting some immediate media jargons made misinterpreting the government declaration as a 'cession of hostilities' cum 'ceasefire'.

"This is a crude and an unethical way of media 'reportash', a blatant twist of the original statement, perpetrated to motivate the hell-bent terrorist sympathizers cum political clouts" the official said describing the logic behind the Government decision an exhibit of its grave concern to avoid any form of collateral-damage while surging into the remaining 10sq.km swathe of coast, South of Valayarmadam and Vellamullivaikkal.

"This is the same and an extension of what the security forces have been continuing since the fall of Mullaittivu, as terrorists resorted to taking thousands of civilians as hostage", the official said.

"Security forces are now reaching victory, 'combat mission reaching its conclusion' and in no form will leave a breather for the internationally banned terrorist outfit or its leaders who are much wanted for thousands of war crimes and crimes against humanity" the official said.

Further commenting on the government decision the official said, this decision was no reaction to any 'international pressure' but solely timed with the success of the ongoing 'Worlds largest hostage rescue operation'.



கடைசியில் கஷ்டம் என்னவோ (இலங்கை மற்றும் தமிழ்நாட்டு) தமிழ் மக்களுக்குத்தான் !

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் குருஜியின் விடியோ
நன்றி: சென்னை ஆன்லைன்

No comments: