Monday, March 30, 2009

கருணாநிதி - ரம்பா - எஸ்.வி.சேகர்

பிரபல நடிகை ரம்பா முதலமைச்சர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். ‘உள்ளத்தை அள்ளித்தா’ உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் ரம்பா. தற்போது கலைஞர் தொலைக் காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார்.இன்று காலை நடிகை ரம்பா திடீரென்று கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்றார். அவருடைய சந்திப்புக்கு காரணம் எதுவும் தெரியவில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.

செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்திமுகவுக்காக எஸ்.வி.சேகர் பிரச்சாரம்

சென்னை,மார்ச் 30: பிராமண சமுதாயத்திற்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி எஸ்.வி.சேகர் மனு ஒன்றை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார். இதை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலமைச்சர் அவரிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

பிராமண சமுதாய மக்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வரிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார். லட்சக்கணக்கான பிராமணர்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு அவசியம் என்று எஸ்.வி.சேகர் கூறினார். இதனை கனிவுடன் கவனிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாக பின்னர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.


இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும். திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்எல்ஏ பதவி ராஜினாமா குறித்து ஏப்ரல் மாதத்தில் தமது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்

Thursday, March 26, 2009

கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி துணைவியார் ராஜாத்தி ஹோமம்

முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி சீர்காழி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அவரது மனைவி ராஜாத்தி ஆயில்ய ஹோமம் நடத்தினார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 60 வயது முடிந்தவர்களுக்கு சஷ்டியப்த பூஜை, 70 வயது முடித்தவர்களுக்கு பீமரத சாந்தி, 80 வயதுக்கு சதாபிஷேகம் மற்றும் நீண்ட கால ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் நடத்துவது சிறப்பு.

முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது. முதல்வரின் துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.

செய்தி: நன்றி: தினமலர்

From Thatstamil

தி.மு.க. காயப்படுத்தியதால் வெளியேறினோம்: பொதுக்குழுவில் ராமதாஸ் ஆவேச பேச்சு

பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-


படம்: நன்றி: Maalaimalar

தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு. ஜனநாயக முறைப்படி உங்கள் கருத்துக்களை கேட்டோம். பா.ம.க.வில் ஒவ்வொரு தொண்டனும் மனதளவில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் காயப்பட்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான் இந்த முடிவு. வேறு எந்த கட்சி தொண்டர்களைப் பார்த்தாலும் எங்கள் கட்சி தொண்டர்கள் வணக்கம் சொல்வார்கள். அந்த நிலை இன்று தி.மு.க., மற்றும் பா.ம.க. தொண்டர்களிடம் இல்லை.

2004-ல் தோழமை உணர்வுடன் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால் கலைஞர், 34 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.

அப்படியென்றால் பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்று சொன்னார். அதையும் தாங்கிக் கொண்டு 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.

பாராளுமன்றத்தில் எங்கள் மந்திரிகள் உறுப்பினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டனர். 2006 சட்டசபை தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றோம். 13 இடங்களில் தோற்கடிக்கப்பட்டோம்.

அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை நடந்து கொண்ட செயல்பாடு பா.ம.க. தொண்டர்களை மிகவும் காயப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை தி.மு.க. எந்த நிலையிலும் காப்பாற்றவில்லை. ஆனாலும் நிபந்தனையற்ற முறையில் ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்தோம்.

குரு பேசினார் என்பதற்காக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றினார்கள். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இங்கு நாங்கள் கூட்டணியில் இல்லை.

நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரே ஒரு தடவை டி.ஆர்.பாலு என்னை சந்தித்தார். நாம் நெருக்கமாக இருப்போம் என்றார். அதன் பிறகும் எங்களை உதாசீனப்படுத்தினார்கள்.

கடந்த 20 நாட்களாக சென்னையில் தங்கி இருந்தபோதும், தி.மு.க.வில் இருந்து ஒரு மாவட்ட செயலாளரோ அல்லது ஒரு சின்ன அமைச்சரோ கூட என்னை சந்தித்து பேசவில்லை.

சந்திக்காதது மட்டுமல்ல தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று நம்புகிறேன் என பத்திரிகைகளில் ஒரு வார்த்தை கூட கலைஞர் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு செய்யலாம் என்று யோசித்தேன். பொதுக்குழுவை கூட்டி நல்ல முடிவை எடுக்கலாம் என்று கருதி இன்று உங்களால் விடிவு காணப்பட்டுள்ளது.

இது லட்சக்கணக்கான தொண்டர்கள் எடுத்த முடிவு. 1998-ல் இருந்து இன்று வரை பா.ம.க. எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்று வந்துள்ளது. மத்தியில் தொடர்ந்து பா.ம.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது.

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியும் வெற்றி கூட்டணியாக இருக்கும். 40 தொகுதியிலும் இந்த கூட்டணி வெல்லும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செய்தி: நன்றி: Maalaimalar

பாமக சேர்ந்ததால் அதிமுக கூட்டணி வெல்லும் - சோ

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட போவதாக பாமக பொது்க்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட இருக்கிறது.

இது குறித்து தயாநிதி மாறன் கூறுகையில்,

இந்த முடிவு எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004 தேர்தலை போல் இம்முறையும் வெற்றி பெறுவோம். கடந்த முறை பல சுமைகளை தூக்கிவந்தோம். தற்போது சுமை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.

அதிமுக வெல்லும்-சோ:

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ கூறுகையில், அதிமுக தென் தமிழகத்தில் மிக பலமானதாகத் திகழ்கிறது. பாமகவுக்கு வட தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கிறது. தற்போது பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

காங். இருந்தாலே வெற்றி தான்-மொய்லி:

மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் எந்த திராவிடக் கட்சியோடு கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கூட்டணியே வென்று வந்திருக்கிறது. பாமக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, March 18, 2009

திருநங்கைகளுடன் விஜயகாந்த்

தேமுதிகவுக்கு பிரசாரம் செய்ய ஆர்வமுள்ள கட்சியிலுள்ள திருநங்கைகளுடன் விஜயகாந்த். திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என இன்னும் முடிவு எடுக்காத நிலையில் திருநங்கைகளுடன் விஜயகாந்த் - படம்: நன்றி: டெக்கான் கிரோனிகிள்நன்றி: http://www.deccanchronicle.com/neutral/transgenders-ready-campaign-762

Chennai, March 17: Even when Vijayakanth is in a dilemma whether to contest the polls in an alliance or go it alone, his party cadres are ready to campaign across the state. A group of transgenders, also members of the DMDK, called on him at the party office on Tuesday and expressed their willingness to campaign for the party in the state.

Clad in a yellow saree, the flag colour of DMDK, the transgenders said they had already campaigned for the DMDK during the civic polls. “We met Captain to express our views and help us campaign for him,” says Radhika, one among the 15 transgenders who met Vijayakanth.

It may be recalled that the transgenders had voting rights since 2004. With an estimated population of nearly two lakh in the state, transgenders have a major role in deciding the vote bank. Parties like the VCK, BJP and DMDK have given memberships to the transgender community.

“Political empowerment is necessary for transgenders. It is one way of making our presence felt,” said Priya Babu, a transgender rights activist. Ms Priya Babu is the person who had filed a writ petition in the Madras high court five years ago demanding voting rights for transgenders.

Now, all the two lakh transgenders possess voter ID cards that designates them a gender of their choice. “We had got our ID cards in 2004 and had cast our votes in the 2006 state polls and civic polls,” Ms Priya Babu said.தேமுதிகவுக்காக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்த அரவாணிகளை, கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்தி வழியனுப்பினார்.

தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திற்கு நேற்று அரவாணிகள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள்.

அனைவரும் விஜயகாந்த்தை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அரவாணிகள், தாங்கள் தமிழகம் முழுவதும் தேமுதிகவுக்காக பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார் விஜயகாந்த்.

பிரசாரம் செய்யப் போவது குறித்து அரவாணிகள் கூறுகையில், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதன்படி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறோம் என்றனர்.

நன்றி: Thatstamil

Monday, March 9, 2009

ராஜபக்ஷே அரசில் கருணா அமைச்சர்

ஸ்ரீலங்கா ரத்ன - ஹிண்டு என்.ராமின் பத்திரிக்கையில் மட்டுமே (?!) வெளிவந்துள்ள இந்தப் போட்டோ - கோத்தபாய ராஜபக்ஷே கருணாவை அணைத்தவாறு..!

இனிமேல் யாரும் தமிழர்களை சிங்களர்கள் (மட்டுமே) கொல்கிறார்கள் என சொல்லமுடியாது :-(
செய்தி: படம்: நன்றி: The Hindu


Vinayagamoorthy Muralitharan, known as Colonel Karuna (right), with Sri Lankan President Mahinda Rajapaksa’s younger brother, Gotabhaya Rajapaksa, after he was sworn in Minister of National Integration in Colombo on Monday.

Karuna joins Cabinet

A talented leader, says RajapaksaCOLOMBO: Within hours after officially joining the ruling Sri Lanka Freedom Party (SLFP) along with 1,750 cadre, parliamentarian Vinayagamoorthy Muralidharan (Karuna), former deputy leader of the LTTE, was sworn in Minister of National Integration on Monday.

Mr. Muralidharan alias Karuna recently parted ways with the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) following differences with Eastern Province Chief Minister, Sivanesathurai Chandrakanthan (Pillayan) and announced his decision to join the SLFP.

The Presidential Secretariat said here at least 1,750 Tamils from the East, both men and women, including a large number of former LTTE cadre who left the leadership of Prabakaran with Mr. Karuna’s defection in 2004, and many others who had remained loyal to the LTTE even after, joined the SLFP, at a special event at Temple Trees.

Mr. Muralidharan and 12 others obtained their membership from Mr. Rajapaksa, who is also the president of the SLFP.

The statement quoted Mr. Rajapaksa as describing him a “talented leader”.

When development goes ahead, the arms will fall off the hands of people, said the President. The time when the Tamil people of the North would also be liberated like those of the East is very near, he said.

Bodies recovered


The Sri Lankan military on Monday claimed to have recovered at least 150 dead bodies of the LTTE cadre and found another 45 Tiger bodies floating over a lagoon as the battle appeared to reach its climax.

The Defence Ministry said here at least 200 LTTE cadre were killed and as many wounded in intense battles. The Tigers are now confined to about 40 sq km of territory in Mullathivu district. As per the military, the defeat of an estimated 400 Tigers cadre is imminent.

The military said the cargo ship MV Bintan, which carried essential items to civilians in the “Safe Zone”, came under heavy LTTE artillery fire while being unloaded at Puthumatalan on Monday.

The ship left Trincomalee on Friday with 500 metric tonnes of essential items and reached Puthumatalan on Saturday

“However, the ship was taken to the deep sea amidst bad weather to avert further shelling by the terrorists depriving innocent IDPs [Internally Displaced Persons] trapped in the ‘Safe Zone’ of essential supplies sent by the government,” said the military.

தமிழகத்தின் முதன்மையான அரசியல் சக்தி அதிமுக - ராமதாஸ்

தமிழகத்தின் முதன்மையான அரசியல் சக்தியாக அதிமுக திகழ்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொள்வது, ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸின் இந்தப் பேச்சு, அவர் அதிமுகவை நோக்கி அதி வேகமாக போய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.


படம்: நன்றி: Junior Vikatan


லோக்சபா தேர்தலில் திமுக அணியில் இருக்குமா, அதிமுக அணிக்கு தாவுமா என்ற மக்கள் எதிர்பார்ப்பில் பாமக உள்ளது.

திமுக அணியிலிருந்து ராமதாஸ் விலகுவார் என்றும் பலமாக பேசப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் முதன்மையான அரசியல் சக்தி என்றும் அவர் அதிமுகவை வர்ணித்துள்ளார்.

இன்று ஜெயலலிதா சென்னையில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. முதன்மையான அரசியல் சக்தியாக திகழ்ந்து வருகிறது.

அதை வழி நடத்தி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக
இருக்கும். அது அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்தும் ..

அத்துடன் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வலிமை யான செய்தியை உணர்த்துவதாக அமையும். அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமையும்.

சர்வதேச சமூகத்திடம் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள், மிக நெருங்கிய உறவு கொண்ட தமிழகத் தமிழர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் துயர நிலை குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்தான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார்.
தற்போது இலங்கையில் மனித அவலநிலை அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டு கால இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இப்போதுதான் மனித அவலநிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் பட்டினிக் கொடுமையால் அதிக அளவில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அங்கு பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை ராணுவம் படுகொலை செய்து வருகிறது. இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு நிச்சயம் வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்