Friday, February 27, 2009

மூத்திரப் போராட்டம் நடத்துவோம் - வட்டாள் நாகராஜ்

பெங்களூரில் பொதுமக்களுக்கு நகரத்தில் பொதுக்கழிப்பிடங்கள் போதுமான அளவு இல்லை. அதனால் சி.எம், கவர்னர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ என்ன எல்லோர் வீடுகளுக்கு முன்பும் மூச்சா போவோம் என அறிவிப்பு விட்டுள்ளார் கர்நாடகத்தின் போராளி - கன்னட சலுவளி - வட்டாள் பிரிவின் தலைவர் - வட்டாள் நாகராஜ்.

செய்தி: நன்றி: The Hindu

Vatal is right pissed off

Staff Reporter

Bangalore: Vatal Nagaraj has challenged the Governor, Chief Minister, Chief Justice of Karnataka High Court and Chief Secretary to find public toilets to relieve themselves between their offices and the Lalbagh.

Kannada Chalavali Vatal Paksha president has reiterated that he would continue his unique protest of “urinating” in front of residences of dignitaries to draw the attention of State Government to build sufficient number of public toilets, from March 7.

“The Governor, the Chief Minister, the Chief Justice and the Chief Secretary should leave their air-conditioned offices and join me in a walk to Lalbagh to find public toilets,” he said at a press conference on Wednesday. “On March 7, with all my supporters and citizens, I am going to pee in front of the residence of Chief Minister B.S. Yeddyurappa. I will also do it in front of the houses of all MPs, MLAs, MLCs and the elected members of zilla panchayats, taluk panchayats and other local governments,” Mr. Nagaraj said.

The Union and State Governments have not allotted sufficient funds to build public toilets.

The population of Bangalore city is exceeding 75 lakh and the city needs at least 20,000 public toilets. There are hardly a few public toilets. On the other hand, still villagers are attending nature’s call on the roadside.”

It may be recalled that, earlier this year, Mr. Nagaraj had tried to urinate in front of Raj Bhavan. He was arrested by the city police.

Thursday, February 26, 2009

கருணாநிதி - இராம. கோபாலன் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று திடீரென சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

அப்போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியிடம் நலம் விசாரித்த இராம. கோபாலன், வக்கீல்கள் - போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, February 19, 2009

காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்புதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பழைய நண்பர் என்ற முறையில் இந்த யோசனையை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 61-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாநில செயலாளர் தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் 61 ஜோடிகளுக்கு இன்று திருவான்மியூரில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அவர்களுடன் சேர்த்து கல்வராயன் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி- வசந்தி மற்றும் விழுப்புரம் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் மகன் வினோத் - ஆனந்தவல்லி ஆகியோரின் திருமணங்களும் நடைபெற்றன.

இவற்றை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:- திருமணம் என்பதும் ஒரு கூட்டணி தான். இந்த திருமணக் கூட்டணி வெற்றிகரமாக அமைய மணமக்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த திருமண சீசன் நேரத்தில் தேர்தல் சீசனும் வந்து அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில் வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள் மலிந்து விட்டன. ஆனால் இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திமுகவுக்கு தருகின்ற ஆதரவு தான். இந்த ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் உண்மை யான வெற்றிகள் அல்ல.

பண பலம், படை பலம், ரவுடிகள் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பயன்படுத்தி தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் தருகின்ற ஆதரவு தான் காரணம். இப்போது திமுகவுக்கு அசட்டு தைரியமும், நம்பிக்கையும் உள்ளது. இதேபோல வன்முறை, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கருதுகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவுடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. இந்த கூட்டணியுடனே நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரசும், திமுகவும் நம்புகின்றன.

ஆனால் மக்களை இந்த கட்சிகள் அடியோடு மறந்துவிட்டன. உண்மை நிலவரம் என்னவென்றால் தமிழக மக்கள் திமுக மீது கடும் கோபத்திலும், வெறுப்பிலும், கொதிப்பிலும் உள்ளனர். மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களும் இமாலய ஊழல்கள் செய்வதை மக்கள் அறிவார்கள். குறிப்பாக 1 லட்சம் கோடி அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறந்துவிடவில்லை.

இந்த நேரத்தில் மக்கள் மனதில் எழுகின்ற கேள்வி இதுதான். இத்தகைய ஊழல் மலிந்த திமுக மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அந்த கேள்வி. அவ்வாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு உள்ள கோபம் காங்கிரசின் பக்கமும் திரும்பும்.

கடந்த காலத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இப்போது நடக்கும் தவறுகளையும் மறந்து மீண்டும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி கருதிவிடக்கூடாது. அவ்வாறு கருதினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத நிலை உருவாகி விடும். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அந்தப் பழைய நட்புறவைப் பாராட்டி நண்பர் என்ற முறையில் ஒரு ஆலோசனை கூறுகிறோம்.

திமுக இப்போது புதை மணலில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதனை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது. திமுக கதை முடிந்து விட்டது. புதை குழியில் மூழ்கும் திமுகவை கைகொடுத்து காங்கிரஸ் காப்பாற்ற நினைத்தால் அந்தக்கட்சியும் புதைகுழியில் சிக்கி அழியும் ஆபத்து உள்ளது.


எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிரசுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது. எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன்.


இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்வேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதற்கு ஆதரவு தருகின்ற கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி அல்ல, எந்த கட்சி திமுகவுடன் இணைந்து வந்தாலும் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள்.

இத்தகைய நிலையை சந்திக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி விரும்பினால் திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை அந்த கட்சி வாபஸ் பெற வேண்டும். அத்துடன் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்கு இமாலய தவறுகள் செய்யும் திமுக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்களிடம் பரிகாரம் காண வேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். அந்த தீர்ப்புக்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளுக்குத்தான் லாபம். எந்த கட்சிகள் சேர வில்லையோ, அந்த கட்சிகளுக்குத் தான் நஷ்டம் என்றார் ஜெயலலிதா.

செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்

Monday, February 16, 2009

சூப்பர் ஸ்டாரை மோடியாக்க நினைக்கிறேன் - சோ"அலையன்ஸ்' பதிப்பகம் சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெண்கல்வி தொடர்பான நூல், "கல்வியே கற்பகத்தரு' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடந்த விழாவில், இந்த நூலினை "துக்ளக்' ஆசிரியர் சோ.ராமசாமி வெளியிட, நல்லி குப்புசாமி, பி.எஸ்.ராகவன், அவ்வை நடராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

"அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை வேறுபாடு இருக்கலாம்; மாண்புகளை விட்டு விடக்கூடாது. அரசியல் தீண்டாமை என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்" என்று நரேந்திர மோடி பேசினார்.


விழாவில், நரேந்திர மோடி பேசியதாவது:


நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, பெண்கல்வியில் குஜராத் மிகவும் பின்தங்கி இருந்தது. இதை மாற்றுவதற்காக பெண் குழந்தைகள் படிக்க திட்டங்களைச் செயல்படுத்தினேன்; மக்களிடம் நேரடியாகப் பேசினேன்.இதன் காரணமாக, இன்று 100 சதவீத பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். மாணவர்கள் கல்வி பயிலும் போது 42 சதவீதமாக இருந்த இடைநிற்றல், தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.விழாக்களில் எனக்குக் கிடைத்த பரிசுகளை எல்லாம் அரசு கருவூலத்தில் சேர்த்து, அதை ஏலம் விட்டு, அதில் கிடைத்த 20 கோடி ரூபாயை பெண் கல்விக்காகச் செலவிட்டேன். கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில், எனக்குக் கல்வி கற்பித்த 33 ஆசிரியர்களை குடியரசு தினத்தன்று அழைத்து மரியாதை செய்தேன்.


நம்மிடம் வளர்ச்சிக்குத் தேவையான தகுதி, வளம் இருக்கிறது. குஜராத் மட்டும் வளர்ந்ததாக நினைக்கவில்லை; நாடே வளர்ந்ததாக நினைக்கிறேன். நான் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே கொண்டுள்ளேன்; அதுவே வளர்ச்சிக்குக் காரணம்.நாங்கள் நடத்திய பொருளாதார மாநாடுகளால் 50 நாடுகளில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. 25 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது.அடிப்படைத் தேவையான இந்த ஒரு சேவையைச் செய்தாலே குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக ஒருவர் இருக்க முடியும். நான் செய்யப்போவதை சொல்ல மாட்டேன்; செய்தவற்றைத் தான் சொல்வேன். எங்களது மாநிலத்தில் நகரத்தில் கிடைக்கும் தகவல் தொழில்நுட்ப வசதியை கிராமங்களில் உள்ளவர்கள் கூட பெற முடிகிறது.


இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் நேரடியாக குறைகளை அரசிடம் கொண்டு சேர்க்க முடியும். கடந்த 2007-08ம் ஆண்டு மட்டும் குஜராத்தில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பகம் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது; அதே ஆண்டு நாடு முழுவதும் 96 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது. சுகாதாரத் துறையில் வளர்ந்த நாடுகளுக்குச் சமமாக குஜராத் முன்னேறியுள்ளது. தாமதமாக நீதி கிடைப்பதை தவிர்க்கும் வகையில், நீதிபதிகளின் விடுமுறை நாளை குறைத்தேன்; கோர்ட் இயங்கும் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்தேன்; மாலை நேர கோர்ட்டுகளைச் செயல்படுத்தினேன்.இதன் காரணமாக ஒரு கோடி வழக்குகள் தேங்கியிருந்த நிலை மாறி, தற்போது 20 லட்சம் வழக்குகள் மட்டுமே தேங்கியுள்ளன. அடுத்த ஆண்டு இதை ஜீரோவாக மாற்றுவேன்.


மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் என்மேல், நிர்வாகத்தின் மேல் ஒரு சிறு குற்றச்சாட்டைக் கூட எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எனது அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று சொன்னதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.ஆனால், கேரள கம்யூனிஸ்ட் அரசால் ஒரு திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது என்று கேள்விப்பட்டு எனது அதிகாரிகளை அனுப்பி, அந்தத் திட்டத்தை எனது மாநிலத்தில் செயல்படுத்தினேன்.அரசியல் தீண்டாமை என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். அரசியல் கட்சிகளின் தத்துவங்கள் வேறாக இருக்கலாம்; மாண்புகளை விட்டுவிடக்கூடாது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


சோ பேச்சுக்கு எதிர்ப்பு கூட்டத்தில் பரபரப்பு:

சென்னை :நரேந்திரமோடி கலந்து கொண்ட விழாவில், "துக்ளக்' ஆசிரியர் சோ பேசியதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் நடந்த, "கல்வியே கற்பகத்தரு' என்ற நூல் வெளியீட்டு விழாவில், "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமி பேசியதாவது:

மோடியை நான் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதாக கூறினார்கள். அது தேவையில்லை. நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க நினைக்கிறேன். இலங்கைத் தமிழர்கள் மீது பா.ஜ.,விற்கு கூட திடீரென பிரேமை வந்துள்ளது. புலிகள் வாழ்ந்தாலும் பரவாயில்லை; இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர்.(இதைத் தொடர்ந்து சோ ஆங்கிலத்தில் பேசினார். அவரை தமிழில் பேசுமாறு பார்வையாளர்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து சோ ஆங்கிலத்தில் பேசினார்)


நம் நாட்டுக்கு ஒரு நீதி; மற்ற நாட்டுக்கு ஒரு நீதி என்று பார்க்கக் கூடாது. காஷ்மீர் பிரச்னையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுப்பதை நாம் ஏற்கிறோமா? அதே பாணியில் தான் இலங்கை பிரச்னையையும் பார்க்க வேண்டும். இலங்கையில் புலிகளை முற்றிலுமாக ஒழித்தால் தான் அங்கு அமைதி ஏற்படும். அதை விடுத்து போர் நிறுத்தம் வேண்டும் என குரல் கொடுப்பது தவறானது. இந்த விஷயத்தில் ஜெயலலிதா மட்டும் தான் உறுதியான கருத்தைக் கொண்டுள்ளார். (மீண்டும் எதிர்ப்பு குரல் எழுந்தது.) என்னை யாரும் மிரட்ட முடியாது. இந்த கருத்தை இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கு என்னை அழைத்தாலும் அங்கும் சென்று கூறுவேன். பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்கமுடியாது. அங்கு பயங்கரவாதத்தை ஆதரித்தால் அது தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு சோ பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

Thursday, February 12, 2009

முதல்வர் கருணாநிதி குணமடைய தி.மு.க.,வினர் சிறப்பு யாகம்

தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்வர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி, திருக்கோவிலூர் தி.மு.க.,வினர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தினர்.தி.மு.க., பேரூராட்சி தலைவர் ஆண்டாள் தலைமையில், நகரச் செயலர் செல்வராஜ், கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு பூஜையை துவக்கி அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் என யாகசாலை பூஜைகள் நடந்தன. நீண்ட ஆயுளுக்காக நடத்தப்படும் ஏகாதசை ருத்ராஜபம் என 108 திரவியங்களை யாக சாலையிலிட்டு விசேஷ பூஜைகள் செய்தனர்.


இளைஞரணி நிர்வாகிகள் ஜானிபாஷா, குணா, ஒன்றிய நிர்வாகிகள் சங்கர், ஏகாம்பரம், நகர பொருளாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் மாயஜோதி, வள்ளி, கலைவாணி, நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

Tuesday, February 10, 2009

முதல்வர் கருணாநிதிக்கு இன்று முதுகெலும்பில் ஆபரேஷன்

முதல்வர் கருணாநிதிக்கு இன்று முதுகெலும்பில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேலும் பத்து நாட்களுக்கு முதல்வர் ஓய்வில் இருப்பார்.

அறுவை சிகிச்சை வெற்றியடைந்து முதல்வர் பூரண நலத்துடன் குணமடைய பிரார்த்திப்போம்.

நான்கு அறுவை சிகிச்சை டாக்டர்கள், நான்கு மயக்க மருந்து நிபுணர்கள் அறுவை சிகிச்சையின்போது உடன் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.

டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஜெய்ஸ்வால் தலைமையிலான டாக்டர்கள் குழு முதல்வருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறது.

முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவில், எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம், டாக்டர் ஏ.ஜெய்ஸ்வால், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கார்த்திக் கைலாஷ், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் ஐ.எஸ்.நாயுடு, டாக்டர் மகேஷ் வகாமுடி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் பி.எஸ்.சண்முகம், டாக்டர் ராஜ் பி.சிங், டாக்டர் ஏ.வி.சீனிவாசன், டாக்டர் சவுந்தரராசன், டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, முதல்வரின் தனி டாக்டரான டாக்டர் பி.கோபால் ஆகியோரும் குழுவி்ல் இடம் பெற்றுள்ளனர் என அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு நாட்களில் முதல்வர் நடமாட ஆரம்பிப்பார். இருப்பினும் முழுமையாக குணமடைய குறைந்தது பத்து நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Surgery Successful

முதல்வர் கருணாநிதி - அரிய படங்கள் - நன்றி ஜூ.வி.

முதல்வர் கருணாநிதி யோகா செய்யும் படங்கள்.

நன்றி: ஜூனியர் விகடன்படத்தின் மீது க்ளிக்கவும்.

பாலாவின் திறமைக்கு தலை வணங்குகிறேன்-ரஜினி

தமிழ் ரசிகப் பெருமக்கள் அனைவரும் ஆவலுடன் பார்க்க விரும்பிய படங்களுள் சமீபத்தில் முதலிடம் பெற்றது பாலாவின் "நான் கடவுள்".

விமர்சனங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி ரசிகர்கள் பார்க்க வேண்டிய உன்னதப் படைப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் படம் இது.

உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் குறித்து சில வேறுபட்ட பார்வைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தப் படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளவிட முடியாதது.

நான் கடவுள் படத்தைப் பார்க்கும் ஆர்வம் திரை ரசிகர்களுக்கு மட்டுமல்ல... திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்துக்கும் இருந்ததாம்.

அதனால் படம் ரிலீஸான உடனே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் தனது பிஆர்ஓ நிகில் முருகனிடம்.

அதன்படி சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட, நான் கடவுள் படம் பார்த்தார் ரஜினி. இந்தப் படம், கதைக் களம், கதை நிகழுமிடங்கள் ரஜினிக்குப் புதிதல்ல. இமய மலையில் பல விதமான சாதுக்களைப் பார்த்த ரஜினியால், இந்த அகோரி சாதுக்கள் மற்றும் அவர்களின் உலகத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததாம். (அதைக் கைப்பட ஒரு கடிதமாகவே எழுதியுமிருக்கிறார் ரஜினி!)

படம் முடிந்ததும், பாலா மற்றும் ஆர்யாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்த ரஜினி, இருவரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


படம்: நன்றி: தட்ஸ்தமிழ்

"வெரி குட்... பிரமாதம் பாலா. ரொம்ப எமோஷனலாயிட்டேன் படம் பார்த்து. குட்... உங்களால மட்டும்தான் இப்படியொரு படம் பண்ண முடியும் பாலா. எக்ஸலன்ட் ஒர்க். இந்தப் படத்தை நீங்க ப்ரஸண்ட் பண்ண விதம் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். கிளாஸ் பிக்சர்..." என்று பாராட்டினாராம்.

படத்தின் நாயகன் ஆர்யாவையும் மிகவும் பாராட்டியுள்ளார் ரஜினி. இந்த சின்ன வயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வித்தியாசமான படம் பண்ணதுக்கு வாழ்த்துக்கள், என்று ரஜினி கூறியதும் நெகிழ்ந்து போய்விட்டாராம் ஆர்யா.

ரஜினியின் கடிதம்:

பாலாவைப் பாராட்டி ரஜினி கைப்பட எழுதியுள்ள கடிதம்:

"திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை. பொதுவாக அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அன்றாட அரசியல் வாழ்க்கை பற்றித்தான் தெரியும்.

ஆனால் இந்த உலகில், இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாத எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கு. இதில் Underworld Mafia-க்களிடம் சிக்கித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் ஆன்மீகத்திலிருக்கும் அகோரி பாபாக்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு வாழ்க்கைகளையும் யதார்த்தமாக திரையில் கொண்டு வந்திருக்கும் பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்.

இமய மலையில் பல அகோரிகளை நேரில் சந்தித்தவன் என்ற முறையில் ஆர்யா அவர்களின் யதார்த்தமான அகோரி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்ன மெய்சிலிர்க்க வைத்தது

படத்தில் நடித்த அனைத்து ஊனமுற்றவர்களின் நடிப்பும் என்னை கண்கலங்க வைத்தது. இந்த மாதிரி ஒரு திரைக்காவியம் தமிழில் வந்தது என் தலையை நிமிர வைத்திருக்கிறது. இனிமேல் ஒரு படம் இதுபோல் வரப்போவதுமில்லை.

இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்புடன் ரஜினிகாந்த்"

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் ரஜினிகாந்த்.

சமீப காலத்தில் ரஜினி இந்த அளவு நெகிழ்ந்து பாராட்டிய படம் அநேகமாக நான் கடவுளாகத்தான் இருக்கும்!

பாராட்டுக்களும் விருதுகளும் தொடரட்டும் பாலா!

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, February 4, 2009

கோவிலுக்குப் போன திமுக அமைச்சர்கள்

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல கோவில்களில் தமிழக திமுக அமைச்சர்கள் சிறப்புப் பிரார்த்தனையிலும் பொது விருந்திலும் கலந்துகொண்டுள்ளார்கள்.

ஆக இந்தப் பிரார்தனைகள் - மருத்துவமனையில் உள்ள கலைஞரின் உடல்நலத்திற்காகவா ? (முந்தைய பதிவின் முதல் 2- 3 வரிகளைப் படிக்கவும்)இல்லை ஈழத்தமிழர் நலனிற்காகவா ? இல்லை அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவா ? பாராளுமன்ற தேர்தலுக்காகவா ? இல்லை குடும்ப ஜோசியர் சொன்னதற்காகவா ?

பேசாமல் அதிமுக, திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துவிடலாம். (15+15+10) நிச்சயம் ஜெயித்துவிடலாம்.

என்னமோ நடக்குது..! மர்மமாய் இருக்குது..!இதனைப் பற்றிய செய்திகள்..............

அண்ணா பிறந்தநாள்: சிறப்பு வழிபாடு

சென்னை, பிப்.2: பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு நாளை (3ந் தேதி) பகல் 12 மணியளவில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னை மாநகரில் உள்ள 31 முக்கிய திருக்கோயில்களில் இச் சிறப்பு வழிபாடு நடக்க இருக்கிறது. மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் பங்கேற்கிறார்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் திருக்கோயில், நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் மற்றும் தேனாம்பேட்டை பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.

அடையாறு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் கே.என். நேருவும், திருவான்மியூர் மருந்தீஸ் வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், பள்ளியப்பன் தெருவில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமியும், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொள்கிறார்கள்.

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அமைச்சர் என்.சுரேஷ் ராஜனும், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோயில், ஆதிகேசவப் பெருமாள் கோயில் மற்றும் பெரியமேடு எல்லையம்மன் கோயிலில் அமைச்சர் பரிதி இளம்வழுதியும், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அமைச்சர் சுப. தங்கவேலனும், தம்புச்செட்டி தெருவில் உள்ள காமடேஸ்வரர் கோயில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனும், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் பங்கேற்கின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர் மு.பெ.சாமி நாதனும், திருவேட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் தங்கம் தென்ன ரசுவும், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் என்.செல்வ ராசும், வடபழனி ஆண்டவர் திருக் கோயிலில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும் பங்கேற்கின்றனர்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி யம்மன் கோயிலில் அமைச்சர் தமிழரசியும், மாதவப் பெருமாள் திருக்கோயிலில் மேயர் மா. சுப்பிரமணியமும் பங்கேற்கிறார்கள்.
செய்தி: நன்றி: மாலைச்சுடர்

படம்: நன்றி: தினத்தந்தி
Rationalist DMK asks ministers to do temple duty

Members of the Tamil Nadu cabinet, barring the CM and the finance minister, have an important engagement on Tuesday. They're to participate
in special prayers in temples across Chennai and partake of a community feast. As irony would have it, the occasion is the death anniversary of DMK's founder, late C N Annadurai, or Anna, a staunch rationalist.

While DMK ministers have in the past participated in community feasts, or `samapandhi bojanam' within temple precincts as part of observing Anna's anniversary, this is the first time that special prayers have been included in the programme.

"Special prayers and community feasts have been arranged in 31 important temples. The Speaker and ministers, MLAs and other VIPs are due to grace the occasion,'' said an official release. The Hindu religious and charitable endowments department also appended a list of temples and the dignitaries assigned to attend the prayers and feast in each of them.

Assembly Speaker R Avudaiyappan will be in Kapaleeswarar temple, electricity minister Arcot N Veeraswami in Gangadeeswarar temple, Purasawalkam, and local administration Stalin will visit three temples. Deputy Speaker V P Duraisamy, mayor M Subramaniam, government whip R Chakrapani and some MLAs are other DMK functionaries included in the list. CM M Karunanidhi and finance minister K Anbazhagan, the two leaders who still profess rationalism, were not due to participate in the rituals.

It could not be ascertained why the government included special prayers in the observances. Anna, a disciple of late rationalist leader Periyar E V Ramasami, had modified his strident atheism after founding DMK and opted to propagate humanism. "God is one, and humanity is one,'' became his catchphrase, but he remained a non-believer till the end.

Karunanidhi had in the past pulled up his own ministers for participating in unusual Hindu rituals like walking on burning embers during rural religious festivals. He had once criticised a DMK district secretary after noticing a dab of vermilion on his forehead. Proponents of Hinduism have criticised him often for mocking at the religion and its practices. But it remains to be seen how they will react to the entire cabinet offering worship at various temples as part of the homage they pay to their party's founder.

Tuesday, February 3, 2009

குழாயடிக் கூச்சலுக்குச் செவி சாய்க்க முடியாது - கருணாநிதி

""மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை போன்ற ஒரு முக்கியமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் சந்தித்துக் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
படங்கள்: நன்றி: தினகரன்

முழு அடைப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி, அந்த நல்ல நோக்கத்திற்காக தி.மு.க.,வும், அதன் தோழமைக் கட்சிகளும் உண்ணாவிரதம் இருந்ததையே முழு அடைப்பு எனக் கூறி அதை நடத்தியது சட்டவிரோதம் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தலைமையில் இயங்கும் கூட்டணிக் கட்சிகளில் உள்ளவர்கள் நல்ல நோக்கத்திற்காக இந்த முழு அடைப்பு நடத்தினாலும், அதற்கு ஒப்புதல் தந்து, அப்படி ஒப்புதல் தந்ததின் காரணமாக மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் முன்னால் நிற்பதற்கு இந்த அரசு எப்படி இணக்கம் தெரிவிக்க முடியும்?


உங்களுக்கு வெட்கமில்லை என்ற அளவுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாரே?

மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை போன்ற ஒரு முக்கியமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள என்னால், குழாயடிக் கூச்சலுக்குச் செவி சாய்க்க முடியாது. பதில் அளிக்கவும் விரும்பவில்லை.


படங்கள்: நன்றி: தினகரன்

தி.மு.க., செயற்குழு ஏமாற்றம் ஏமாற்றம் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சியிலிருந்து விலகி விடுவோம் என்று செயற்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது? ஈழத் தந்தை செல்வாவின் அன்பு செல்வன் சந்திரஹாசன் எனக்கு எழுதியுள்ள கடிதத்திற்கும், இவர்களுடைய ஏமாற்றத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


மருத்துவமனையில் மீண்டும் அனுமதி :
சென்னை :
முதல்வர் கருணாநிதி நேற்று மூன்று நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தார்.முதல்வர் கருணாநிதி முதுகு வலிக்காக, கடந்த 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சென்னையில் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.அண்ணாதுரை நினைவு நாள் ஊர்வலம் மற்றும் மவுன அஞ்சலி காலையில் நடந்தது.

ஆம்புலன்ஸ் வேனில் வந்தவர், சக்கர நாற்காலி மூலம் வேனில் இருந்து அண்ணாதுரை சமாதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு மலர் அஞ்சலி செலுத்திய பின், தலைமைச்செயலகம் சென்று அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து கட்சித் தலைமை நிலையம் சென்று தி.மு.க., செயற்குழுவில் கலந்துகொண்டார். ஆம்புலன்ஸ் வேனிலேயே சென்று, இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, அதே ஆம்புலன்சில் மீண்டும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு முதல்வர் கருணாநிதி மேலும் ஒரு வாரம் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி: நன்றி: தினமலர்