Tuesday, January 15, 2008

ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத விஷயம்

கருணாநிதி - ராஜாத்தியம்மாள் - தயாளு அம்மாள் - மனோரமா

"ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!' என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, "ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத' விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது"

மனோரமா விழாவில் கலந்துகொள்வது என் பாக்கியம்: கருணாநிதி

சென்னை, ஜன. 14 உலகின் மிகச் சிறந்த நடிகையான மனோரமா வின் பொன்விழா பாராட்டு விழா வில் கலந்துகொள்வது என்னு டைய பாக்கியம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள் ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களில் நடித்துள்ள மனோரமாவுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமையேற்று கருணாநிதி பேசியதாவது: "மனோரமாவின் இன்றைய பேச்சு, குறிப்பாக என்னைப் பற்றிப் பேசும்போது ஏற்பட்ட பரபரப்புக்குக் காரணம் எங்களுடைய கலையுலகத் தொடர்பு மட்டுமல்ல; அவர் பிறந்தது திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூர் என்பது மட்டு மல்ல, அதையும் தாண்டிய குடும்ப உறவும் உண்டு.

குடும்ப ரகசியம்: இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் மத்தியில், இதுவரை நான் வெளியிடாத ஒரு குடும்ப ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். 1967-ம் ஆண்டு திமுக ஆட் சிப் பொறுப்பேற்ற ஏழு, எட்டு மாதங்களில் தஞ்சையில் என்னு டைய தலைமையில் "அண்ணா கவி யரங்கு' நடைபெறவிருந்தது.

அந்த விழாவுக்குச் செல்லும் போது திண்டிவனம் அருகே கார் விபத்துக்குள்ளாகி நான் உள்பட பலரும் படுகாயமடைந்தோம்.

செய்தியைக் கேள்விப்பட்ட அண்ணா உள்பட பலரும் எனக்கு என்ன ஆகிவிட்டதோ என கவலை யுற்று திண்டிவனத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து என்னை சென்னைப் பொதுமருத்துமனையில் அனுமதித்தனர். அதுவரை எனக்கு நினைவு திரும்பவில்லை.

அப்போது மனோரமாவும் அவரது தாயாரும் நான் அனுமதிக்கப் பட்ட அறைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு தலைவிரி கோலமாக வந்த என்னுடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் அழுது புலம்பி யிருக்கிறார்.

அப்போது அங்கு இருந்த தயாளு அம்மாள் அதைப் பார்த்துவிட்டு "இது யார்?' என மனோரமாவிடம் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்... "ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!' என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, "ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத' விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது. மனோரமா என்ன நினைத்து சொன்னாரோ தெரியாது; ஆனாலும் இன்றளவும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலகின் ஒப்பற்ற நடிகை: "உதயசூரியன்' என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்தோம். அதில் நான் தேசியவாதியாகவும் மனோரமா திராவிடம் என்றால் என்ன என்று விளக்கும் கதாபாத்திரத்திலும் நடித்தோம். ஒரு பெண்ணுக்கு அந்த வேடத்தைக் கொடுத்ததற்குக் காரணம், திராவிடத்தைப் பரப்புவதற்காகத்தான்.
ஏனென்றால் பெண்கள் திருந்தினால் போதும் நாடே திருந்திவிடும்.

மனோரமா பேசும்போது நான் இந்த விழாவில் கலந்துகொள்வது அவருடைய பாக்கியம், பெருமை என்றெல்லாம் கூறி எல்லாவற்றையும் எனக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
ஆனால் உண்மையைக் கூற வேண்டுமானால் உலகின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நடிகை மனோ ரமாவின் பொன்விழாவையொட்டி நடைபெறும் இந்த மாபெரும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நாளில் பெற்ற பாக்கியம்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கருணாநிதி.

ரஜினிகாந்த்: நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ராஜாராமன்தாஸ் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் பாலிவுட்டில் முக்கிய நடிகர்கள், தமிழில் சிவாஜிகணேசன், ரெங்கா ராவ், எம்.ஆர்.ராதா, பாலையா போன்றோரைப் பற்றிய படக் காட் சிகளைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்.

ஹீரோயின்களில் அவர்கள் தேர்ந்தெடுத்தது சாவித்ரி, மனோரமா. அவருடன் "குப்பத்து ராஜா' படத்தில் முதல்முறையாக நடித்தேன். அப்போது என் தமிழ் உச்ச ரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து "இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு' என்று கூறியவர்.
ஒருசமயம் "பில்லா' படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒருவர் "பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே' என்று குரல் கொடுத்தார். அந்தக் காலகட்டத்தில் என்னைப் பற்றி ஒருவிதமாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.


அப்போது என் அருகில் இருந்த மனோரமா அந்த நபரின் சட்டை யைப் பிடித்து அடித்து, "அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றி னால்தான் நடிப்பேன்' என்று கூற அவர் வெளியேற்றப்பட்டார்.

அந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் என்றார்.

கமல்ஹாசன்: சிவாஜிகணே சன், ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா ஆகியோரின் மடியில் தவழ்ந்த நான், இந்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான்.

மனோரமாவின் பணிவு, பண்பு, அன்பு போன்றவை அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரியும். எனக்குத் தெரிந்து கண்ணுக் கெட்டியவரை மனோரமாவுக்கு நிகரான நடிகை இந்த உலகில் இல்லை. அவருக்கு ஆண்டுதோறும் விழா நடத்தினாலும் கண்டிப்பாக கலந்துகொள்வோம் என்றார் கமல்ஹாசன்.

மனோரமா: எனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டனர். தவிர்த்து வந்தேன். கருணாநிதி ஆட்சி செய்யும்போது தான் இந்த விழா நடக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் போலும். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு நான்கு பேர் முக்கியக் காரணம். முதலாவதாக என்னுடைய தாய். இரண்டாவது
என்னுடைய தாய் ஸ்தானத்தில் இருக்கும் கருணாநிதி. அவருடைய "மணிமகுடம்' நாடகத்தின் மூலம்தான் கலை யுலகுக்கு அறிமுகமானேன்.

தொடர்ந்து அவருடைய நாடகங்களில் நடித்துத்தான் புகழடைந்தேன். மூன்றாவதாக கவிஞர் கண் ணதாசன். கருணாநிதியின் நாட கங்களில் நான் நடிப்பதைப் பார்த்துவிட்டு அவர்தான் என்னை 1958-ல் "மாலையிட்ட மங்கை' படத்தில் அறிமுகப்படுத்தினார்.

நான்காவது நபர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். என்னை செட்டிநாட்டிலிருந்து சென் னைக்கு வரவழைத்தவர். இவர்க ளும் தமிழக ரசிகர்கள் என்மேல் காட்டி வரும் அன்பும்தான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்.

அனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என உணர்ச்சிவயப்பட்டு நன்றி தெரிவித்தார் மனோரமா.நடிகை மனோரமாவின் பொன்விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 50 தங்க நாணயங்கள் பொறித்த நினைவுப்பரிசை மனோரமாவுக்கு வழங்கினர்.

செய்தி: நன்றி: தினமணி
தேதி 15-ஜனவரி௨ 2008 - பக்கம் 6

ஆமாம் - ஜெயலலிதா பத்தி ஏன் மனோரமா எதுவுமே சொல்லலை ?

Tuesday, January 8, 2008

இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலை கிடையாது ?

இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு மலேசியாவில் வேலை கிடையாது ? படாவி அரசு திடீர் தடை ? ஏற்கனவே இருப்பவர்களையும் திருப்பி அனுப்ப முடிவு


கோலாலம்பூர், ஜன.9: மலேசியாவில் இந்திய தொழிலாளர்களை வேலையில் அமர்த்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை கோயில் அர்ச்சகர்கள், இசைக் கலைஞர்கள், சிற்பிகள் போன்றவர்களுக்கும் பொருந்தும் என்று திடீரென தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில் உரிமை புதுப்பிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படுவர்.

மலேசியாவுக்கு 3 நாள் பயணமாக இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி சென்றார். தலைநகர் கோலாலம்பூரில் இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக உறவு பற்றி பேச்சுநடத்தினார். ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக உறவு குறித்து நேற்று காலை மலேசிய பிரதமர் அப்துல்லா படாவியுடன் 40 நிமிடம் பேசினார். பின்னர், பினாங்குக்கு அவர் புறப்பட்டு சென்றார். இந்நிலையில்தான், இந்த அதிரடி முடிவை மலேசியா அறிவித்துள்ளது.

சம உரிமை போராட்டம்: மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தங்களுக்கு மலேயா இன மக்களைப் போல் சம உரிமை வேண்டும் என்று கோரி கோலாலம்பூரில் கடந்த நவம்பரில் பேரணி நடத்தினர். போலீஸ் அடக்குமுறை நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இது குறித்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்தன.

இந்த நிலையில் மலேசிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து இனி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை என்று முடிவு எடுக்கப் பட்டது. இது பற்றிய சுற்றறிக்கை எல்லா அரசு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த தடை டிசம்பர் 31 முதல் அமலுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 18ம் தேதியே இந்த முடிவை அமைச்சரவை எடுத்து விட்டதாகவும், நேற்று தான் இது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது என்றும் மலேசிய அதிகாரிகள் கூறினர்.

உரிமை புதுப்பிப்பு இல்லை: இந்த தடை உத்தரவு தொழிலாளர்களுக்கு மட்டும் இன்றி, அர்ச்சகர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் விளக்கினர். ஆனால், தொழில்துறையினருக்கும் பொருந்துமா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஏற்கனவே வேலையில் உள்ள இந்தியர்களுக்கு தொழில் உரிமத்தை புதுப்பிப்பது இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அரசு முடிவுக்கு எதிர்ப்பு: மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்து உரிமை இயக்கம் (இண்ட்ராப்) புத்தமதம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், மற்றும் தாவோயிசம் போன்ற அனைத்து மத ஆலோசனைக் குழு கண்டனம் தெரிவித்து உள்ளது. யாரையும் கலந்து பேசாமல் மலேசியா அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மலேசிய அமைச்சர் மறுப்பு: மலேசியாவில் இந்திய தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு டெல்லியில் நேற்று மறுத்தார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். மலேசியாவில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதித்திருப்பதாக கோலாலம்பூரில் செய்தி வெளியாகி இருப்பது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து சாமிவேலு கூறியதாவது:

இந்த தகவல் உண்மையல்ல. அப்படி எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மலேசிய பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருடன் பேசினேன். அந்த செய்தி உண்மையல்ல. மலேசியாவில் இந்திய தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். தேவைப்பட்டால் இன்னும் இந்திய தொழிலாளர்கள் வருவதை வரவேற்போம். இவ்வாறு சாமிவேலு கூறினார்.

பேட்டியின் போது உடன் இருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், மலேசிய அமைச்சர் கூறியது சரிதான் என்று நான் நம்புகிறேன். அவர் பிரதமருடன் பேசியதை கேட்டேன். அவரை நாம் நம்புகிறோம். வேறு தகவல்கள் கிடைத்தால் பேசுவோம் என்றார்.


நன்றி: செய்தி: Dinakaran
Dinamalar

Which is True ?: The Hindu:

2011-ல் காங். ஆட்சி: கிருஷ்ணசாமி

2011ம் ஆண்டில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அதன் தமிழக தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் போது யாருடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி இன்று அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம், மதுரையில் நடந்த கட்சியின் மண்டல மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, திருச்சி, சேலம் அல்லது கோவையிலும் மண்டல மாநாடுகள் நடைபெற உள்ளன. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மண்டல மாநாட்டில் பங்கேற்ற மேலிட பொறுப்பாளர்கள் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதை அறிந்துள்ளனர். வருங்காலத்தில் கட்சி மேலும் பலம் பொருந்திய கட்சியாக மாறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, திமுகவுடன் எங்களுக்கு கூட்டணி உள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கடந்த ஒரு வருடக்காலமாக பேசி வருகிறோம். ஆனால் இது குறித்து முதலமைச்சரும், கட்சி தலைவர் சோனியா காந்தியும் தான் முடிவு எடுக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசின் நிதியை எதிர்ப்பார்க்காமல் உடனடியாக தமிழக அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிமெண்ட் விற்பனை சிவில் சப்ளைஸ் மூலம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் சிமெண்ட் கடத்தல், அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி கடத்தலை தடுக்க ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வோம்.

மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி என்றைக்கும் தயங்கியது இல்லை. வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது எங்கள் கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச உள்ளனர்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை வசதி சரியில்லை. குறிப்பாக திருவண்ணாமலையில் சாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை செப்பனிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

>சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

நன்றி: செய்தி: Maalaisudar

Friday, January 4, 2008

பிஜேபியுடன் கூட்டணி இல்லை - ராமதாஸ்

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியிலேயே பாமக இடம்பெறும் என்றும், இனி எந்த சூழ்நிலையிலும் பிஜேபியுடன் கூட்டணி சேராது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர்த்த மூன்றாவது அணியை உருவாக்கி 2011ல் பாமக தலைமை யில் கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

2007 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமைகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடியிருக்கிறோம்.

குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் எங்களுடைய போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, அரசாங்கமும் எங்களுடைய கருத்துக் களை ஏற்று செயல்படுத்தும் அளவிற்கு நாங்கள் பணியாற்றி இருக்கிறோம்.

2008 ஆம் ஆண்டை பொறுத்தவரை மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். இதற்காக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நானே வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் 3264 டாஸ்மாக் மதுக்கடைகளும், கிராமப்புறங்களில் 3433 டாஸ்மாக் மதுக்கடைகளும் உள்ளன. அந்த வகையில் கிராமப்புறங்களை மது விற்பனையில் முன்னேற்றியிருக்கிறார்கள்.

சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்த அரசாங்கம் சாதாரண, ஏழை, எளிய, உழைக்கும் மக்களிட மிருந்து சுரண்டியிருக்கிறது. எனவே தான் முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இதற்கான தேதியை இம்மாத இறுதியில் புதுவையில் நடைபெற உள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்போம்.

உடனடியாக மதுவிலக்கை அமல் படுத்தாவிட்டாலும், படிப்படியாக இதனை செயல்படுத்தலாம். முதலில் பார்களை அப்புறப்படுத்தலாம். பிறகு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். விற்பனை நேரத்தை மாலை 5 மணியுடன் நிறுத்தி விடலாம்.

மகாராஷ்டிராவில் இருப்பது போன்று உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகள் கூடாது என்று தீர்மானம் போட்டால் அங்கு கடைகளை திறக்கக் கூடாது. பொதுமக்களில் 50 சதவிகிதத் தினரும், பெண்களில் 25 சதவிகிதம் பேரும் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்பதற்கான அரசாணையை மராட்டிய அரசு பிறப்பித்துள்ளது. அதேபோன்ற அரசாணையை தமிழகத்திலும் மாநில அரசு பிறப்பிக்கலாம்.

மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்று கூறுகிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் 6 மாத காலத்திற்கு என்னுடைய யோசனை களை கேட்டு செயல்படுத்தினால் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லாமல் செய்துவிடலாம்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. 5 ஆண்டு ஆட்சி முழுமையாக நடைபெறும். 2009ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் பாமக இருக்கும்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக இல்லாத ஒரு அணியை பாமக தலைமையில் உருவாக்கி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைப்போம். இனி எந்த சூழ்நிலையிலும் பிஜேபி அணியில் இடம்பெற மாட்டோம்.

திமுக தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளுக்கு பதில் சொல்லி லாவணிக்கச்சேரி நடத்த நான் விரும்பவில்லை. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், சைதை சிவா, சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மு.ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: செய்தி: Maalaisudar

Thursday, January 3, 2008

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் ? - சிபிஎம்

தமிழகத்தில் 3-வது அணி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும் என்று அதன் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக தேமுதிக எடுக்கும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

வரும் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கோவையில் நடைபெறுகிறது. அகில இந்திய அரசியல் சூழ்நிலை, வரவிருக்கும் மக்களவை தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் இந்த மாநாட்டில் ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி அரசை நீக்க வேண்டும்; மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்தோம்.
வரும் மக்களவை தேர்தலில் மதவெறியை எதிர்ப்பதைப் போலவே, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொருளாதார கொள்கையையும் நாங்கள் எதிர்ப்போம்.

அகில இந்திய அளவில் 3வது அணியை உருவாக்குவது குறித்து எங்களது தேசிய மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். இந்த மாநாட்டுக்கு முன்பாக மாநில அளவிலும் எங்கள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. அதன்படி இம்மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் மதுரையில் மாநில மாநாடு நடக்கிறது.

இதில் எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தலைமைக்குழு உறுப்பினர்கள் உமாநாத், கே.வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இந்த மாநில மாநாட்டில் தமிழகத்தில் கட்சியின் நிலைப்பாடு குறித்த வலுவான கொள்கைகளை முன் வைக்க உள்ளோம்.

தற்போது அகில இந்திய அளவில் மதவெறி சக்திகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஒரிசாவில் சமீபத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சேதுசமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்த மதவெறி சக்திகள் முயலுகின்றன. மதவெறி சக்திகளால் ஜனநாயகத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதிமுக தனது கொள்கைக்கு விரோதமாக வெளிப்படையாகவே பிஜேபியை ஆதரித்து வருகிறது. இது நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு பின்தங்கி உள்ளது.

50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக தொய்வு காட்டுகிறது. தரிசு நிலங்களை அவற்றின் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு மக்களுக்கு தர வேண்டும்.

தமிழ்நாட்டில் சர்வாதிகாரமா? ஜனநாயகமா? என்கிற கோஷத்தை தேர்தலில் நாங்கள் முன் வைத்தோம். ஆனால் திமுக அரசு ஜனநாயகத்தை வலுப்படுத்தவில்லை.

நன்றி: செய்தி: Maalaisudar