Tuesday, July 28, 2009

ஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி

நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும், அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும், என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என ''கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல'' ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

இதோ!. என் துணைவி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் "கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.

அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?''.

என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி, அதே ஆனந்த விகடன் 25-4-1954ல் எழுதிய 'மனோகரா' திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். அதன் விவரம்:

"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், 'தாய்' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.

இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது 'மனோகரா'.

மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். "என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், "இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!'' என்று நாம் முடிவு கட்டும்போது, "என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.

தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.

மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.

எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.

"மகனே, பொறுத்தது போதும்... பொங்கியெழு!'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.

சிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.

வசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு "மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.'' இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954ல்!.

வசனகர்த்தாவின் பெயரை மறைத்த விகடன்..

அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!.

தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு 'மனோகரா' படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா?.

அதேபோல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா?

அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அதிமுக ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?.


நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

இந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா ?

உங்க புகார்களை இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கணுமா ? ஒரு மெயில் தட்டி வுடுங்க.
இல்ல இந்த தளத்துக்கு போய் ரிஜிஸ்டர் பண்ணி உங்க புகார சொல்லுங்க.

தட்டுங்கள் திறக்கப்படலாம் !படம்: நன்றி: த ஹிண்டு

NEW DELHI: With the click of a few buttons, complaints, petitions and prayers will now swiftly reach the President’s Office, find their way to the departments concerned, get tracked as they are processed and the information stored for later use.

With the launch of a new website http://helpline.rb.nic.in on Friday, reaching out to the President has become easier. Launched by President Pratibha Patil at the Rashtrapati Bhavan, the website has been designed to simplify the process of grievance redress.

“The Rashtrapati Bhavan mail box receives over 400 mails every day. The portal is expected to reduce the time taken to dispatch the mail to the Central and State government departments concerned, following up on the action taken and finally maintaining the record,” said Secretary to the President Cristy Fernandes.

“We hope to process the applications within seven days of receiving them. And everybody who sends us a mail will be provided a unique registration number (URN), which will help them keep track of their application,” he said.

The portal, Mr. Fernandes said, was the President’s idea. “On assuming office, the President expressed the wish to modernise everything possible, from infrastructure to the style of working.”

The portal offers citizens a platform to voice their grievances. Of the total applications that the President’s Office receives, 70 per cent are through snail mail and the rest electronically.

“People who are left with no options write to the President. There are some limitations that the office faces as far as keeping track of these applications, updating their status and preserving these applications is concerned. But with the launch of this portal, we hope to address these issues,” said Mr. Fernandes.

The new system is being integrated with the Centralised Public Grievance Redress and Monitoring System which will monitor the progress of the petition.

The portal, currently available in English, will gradually be available in Indian languages as well. It will allow lodging of lengthy e-petitions and enable supplementary attachment of scanned documents.

செய்தி: நன்றி: த ஹிண்டு

Thursday, July 23, 2009

ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சாம்பார் வடை..!

சொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: வைரமுத்து பேச்சு

சென்னை: ""மொழி வளர வேண்டுமானால், மொழி பேசும் இனமும், மொழியில் உள்ள சொற்களும் வளர வேண்டும்,'' என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்."ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்' தயாரித்த ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் வைரமுத்து அகராதியை வெளியிட, முதல் பிரதியை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.


விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ஆங்கிலேயர்கள் உள்நாட்டை இணைக்கும் தண்டவாளம், உலகத்தை இணைக்கும் ஆங்கிலம் ஆகிய இரு நல்ல விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலத்தை கற்கத் துவங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் ஆங்கி லத்தை முறைப்படி கற்றதால்தான் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறை யில் சிறந்து விளங்குகின்றனர்.கடந்த 1928ம் ஆண்டு முதலாவது ஆங்கில அகராதி வெளியானபோது, அம்மொழியில் நான்கு லட்சத்து 16 ஆயிரம் சொற்கள் இருந்தன. ஆனால், இன்று 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கிலத் தில் 10 லட்சம் சொற்கள் உள்ளன.அதே நேரத்தில், 247 எழுத்துக் களை கொண்ட தமிழில் மொத்தம் மூன்று லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளன. மொழி வளர இனம் வளர வேண்டும்; மொழியில் உள்ள சொற்கள் வளர வேண்டும்.புதிய சொற்களை தமிழில் கொண்டு வர தமிழில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார்.

தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது:அகராதி என்ற சொல் திருக் குறளில் இருந்து உருவாகியுள்ளது. 6,500க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் தமிழ் 21வது இடத்தில் உள்ளது. மனிதன் கண்டுபிடித்த கருவிகளில் அதிக ஆற்றல் மிக்கது மொழிதான்.

தனிப்பட்ட கண்டுபிடிப்பான ஆயுதங்கள், கருவிகளை அடுத்த தலைமுறை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த கருவியை உருவாக்குகிறது. ஆனால், சமுதாய கண்டுபிடிப்பான மொழியை மாற்றுவது கடினம். மாற்ற முயற்சிக்கும் போது புதிய சொற்கள் உருவாகின்றன.இவ்வாறு ராஜேந்திரன் பேசினார்.ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சர்வதேச மேலாண் இயக் குனர் நீல் டம்கின், ஆக்ஸ் போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்திய மேலாண் இயக்குனர் மன்சர் கான், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அகராதியின் ஆசிரியர் முருகன், ஆலோசகர் ஜெயதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி: நன்றி: தினமலர்


Oxford lexicon laps up sambhar, vada


Newly-Released English-English-Tamil Dictionary Has Many Tamil WordsChennai: Pongal and sambhar. Samosa and vada. Ghatam and Carnatic music. We’re not talking about canteens at a sabha; they’re just some of the words that have found their way into Oxford University Press’ (OUP) English-English-Tamil dictionary, which was released at Anna University on Thursday.

The dictionary is aimed at Tamil speakers who are learning English — users can look up the English word, find a meaning in English like in a regular dictionary, and if that’s not clear enough, refer to the Tamil explanation. Poet and lyricist Vairamuthu released the dictionary and presented the first copies to M Rajendran, vice-chancellor, Tamil University, and P Mannar Jawahar, vice-chancellor, Anna University.

“A language grows only when people keep speaking it and it expands to include new words,” said Vairamuthu. “The English language has always been quick to include new words, which is why it has over 10 lakh words even though it has just 26 alphabets,” he said, giving examples of words like ‘cash’ and ‘mulligatawny’ that have been adapted from Tamil. “If you tie down a language by claiming to protect it, it cannot grow and stay relevant to everyday users.”

As part of its 10-year-old bilingual dictionary programme, OUP has already published similar dictionaries in Hindi, Gujarati, Kannada, Bengali, Oriya and Marathi. “Finding the right team to compile a dictionary which is accurate, comprehensive and relevant was a challenge,” said OUP managing director Manzar Khan, responding to Rajendran’s question on why it took so long to publish a Tamil edition. Along with editor V Murugan and consulting editor V Jayadevan, the OUP team took five years to compile the dictionary.

“Only a minuscule number of students and teachers use dictionaries in India because only monolingual dictionaries are available,” said Murugan. He added that each entry had about 12 components, including pronunciation, American English variation, usage notes and cross references. “It was hard to bring all this into the dictionary. But it should also be of help to students going abroad,” he said. With an eye on this user groups, the book has a number of engineering, medical and technical terms too.

Neil Tomkins from OUP’s international division said their dictionaries focused on the evolution of words and not just their current usage. OUP’s dictionary team even looks up social networking and micro-blogging sites to keep in touch with language, its evolution and usage — which is why the dictionary includes words like SMS and browser, explained an OUP spokesperson.

செய்தி: நன்றி: Times of India

Wednesday, July 22, 2009

சட்டமன்றத்தின் 'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகர் - கருணாநிதி

'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகர்..கருணாநிதி:

எஸ்.வி.சேகர் (அதிருப்தி அதிமுக): 2006ம் ஆண்டு ஆடி அமாவாசை அன்று நான் பேசினேன். அதற்கு பிறகு உங்களுடைய கருணையால் இப்போது பேச வாய்ப்பு கிடைத்துள்ளது, நன்றி. இறந்துபோன என்னுடைய தந்தையின் நினைவு நாளான இன்று பேசவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் நான் பேசியபோது, மயானத்தில் பணியாற்றும் வெட்டியான்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதை பத்தே நாட்களில் செய்து கொடுத்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

சமூகநீதி மாநிலமாக இருக்கும் தமிழகத்திலே, சமூகநீதி காவலராக இருக்கும் முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறேன். ஆளும் கட்சிக்காரர்கள்தான் தன்னை பாராட்டக்கூடாது என்று முதல்வர் சொன்னார். நான் பாராட்டுவதில் தவறில்லை. இதர பிரிவினர் நலவாரியம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தால் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

முதல்வர் கருணாநிதி: நம்முடைய சட்டமன்றத்தின் 'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகருடைய முறையீடும் கவனிக்கப்படும், பரிசீலிக்கப்படும்.
சென்னை அருகே சோளிங்கநல்லூரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் எம்எல்ஏக்களுக்கு அரசு விலையில் இரண்டரை கிரவுண்ட் நிலம் வழங்கப்படவுள்ளது.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:

திமுக எம்எல்ஏ பெரியண்ணன்: கடையேழு வள்ளல்களிலே முதல்வராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தின் தலைவரும், தமிழகத்தின் பொற்கால ஆட்சியில் கதாநாயகனாக இருக்கும் தலைவருடைய ஆட்சியில் தனி ஒரு மனிதர் யாரும் பலனடையாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. பெண்ணாகரம் ஒன்றியம் நாகரசம்பட்டி கிராமத்திலே பட்டாசு தொழிற்சாலையில் தீப்பற்றி ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவருக்கு உதவி அளிக்கப்படுமா?

முதல்வர் கருணாநிதி: ஏதே ஒரு விபத்திலே இறந்துவிட்ட செய்தியை சொல்வதற்கும், அவர்களுக்கு நிதி கிடைக்குமா என்று கேட்பதற்கும் இவ்வளவு நேரம் என்னைப் புகழ வேண்டிய அவசியமில்லை. நான் திமுக எம்எல்ஏக்கள், தோழமை கட்சி எம்எல்ஏக்களுக்கு சொல்லிக் கொள்வது, உங்களுக்கு பேச கொடுக்கப்படும் நேரமே குறைவு, அதிலே எங்களைப் புகழ்வதற்கு ஒரு பகுதியை எடுத்துக்கொண்டால் யாருக்கும் பயன் இல்லை.

`இந்திரனே, சந்திரனே' என்று புகழ்ந்து பேசுவதால் காரியம் ஒன்றும் நடந்து விடாது. தயவு செய்து என்னையோ, அமைச்சர்களையோ நீங்கள் புகழ்வதை தவிர்க்க முடியா சந்தர்ப்பம் வந்தால் மட்டும் பயன்படுத்துங்கள். எப்போதும், கேள்வி கேட்கும் நேரத்தில் கூட, `உலகப் புகழ் பெற்ற தமிழர்களுடைய தலைவராக இருக்கின்ற கலைஞர் அவர்களே' என்று எங்களை புகழ்ந்து, எங்கள் ஊரில் பாலம் கட்டப்படுமா? என்று கேட்பதில் அர்த்தமில்லை என்றார்.

எம்எல்ஏக்களுக்கு வீட்டுமனை:

ஞானசேகரன் (காங்கிரஸ்): சோளிங்கநல்லூரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் எம்எல்ஏக்கள் யார் யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு அரசு நிர்ணயிக்கின்ற நியாயமான விலைக்கு இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வழங்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: நீங்கள் குறிப்பிடுகின்ற இடத்தில் நீங்கள் ஒருவர் மாத்திரம் வீடு கட்டிப் பயன் எதுவும் இல்லை. ஒரு நூறு சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களையாவது பெற்று என்னிடம் தந்தால், அந்த நூறு பேருக்கான வசதி மிக்க வீடுகளை அமைப்பதற்கு போதுமான இடம் உங்களுக்கு வழங்கப்படும்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- ஞானசேகரன் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் மாநிலத்தின் நிதி முழுவதும் எம்எல்ஏக்களுக்கே தேவைப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட வேண்டாம். எம்எல்ஏக்களுக்கு எல்லாம் வீடு இருக்கிறது. முதல்வர் அத்தியாவசிய தேவைகளை புரிந்து நிறைவேற்றி, அதிகபட்ச தேவைகளை நிராகரிக்க வேண்டும் என்றார்.

30 நிமிடத்தில் 105 எம்எல்ஏக்கள் கையெழுத்து:

100 பேரிடமாவது கையெழுத்து வாங்கி வாருங்கள் என்று முதல்வர் சொல்லி முடித்த 30 நிமிடத்தில், மின்னல் வேகத்தில் 105 எம்எல்ஏக்கள் இது தொடர்பான மனுவில் கையெழுத்து போட்டு அதை ஞானசேகரனிடம் தந்துவிட்டனர்.

ஆனால், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதில் கையெழுத்து போடவில்லை.

இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு நிலம் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Tuesday, July 21, 2009

எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி விருந்து

சட்டசபைக் கூட்டத் தொடர் நிறைவு பெறுவதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றோடு நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.

42 வகை உணவுப் பதார்த்தங்கள் இதில் இடம் பெற்றனவாம்.

முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறைச் செயலாளர் மாலதி, ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டி.ஜி.பி. கே.பி.ஜெயின், தீயணைப்புத் துறை இயக்குனர் டி.ஜி.பி. நட்ராஜ், உளவுப் பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தி.மு.க. வக்கீல் ஜோதி உட்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.

எஸ்.வி.சேகரும் சாப்பிட்டார்...

அதிமுகவின் புரட்சி எம்.எல்.ஏ.வான எஸ்.வி.சேகரும் இந்த விருந்துபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டார்.

அதேசமயம், வழக்கம் போல அதிமுக, பாமக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்