Monday, May 25, 2009

டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் - உச்ச நீதி மன்றம்

கடைசியில் நீதி இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது என்ற நம்பிக்கை தரும் தீர்ப்பு.

இதற்காக பாடுபட்ட பல்வேறு மீடியா நண்பர்களுக்கும், தனி நபர்களுக்கும் நன்றி.

நன்றி: Rediff

Links:

http://news.rediff.com/report/2009/may/25/supreme-court-grants-bail-to-binayak-sen.htm

The Supreme Court on Monday granted bail to civil rights activist Dr Binayak Sen, who has been lodged in jail for the last 22 months on charges of aiding and abetting naxalite activities in Chhattisgarh.

A bench comprising Justices Markandey Katju and Deepak Verma took up the matter on Monday after senior advocate Shanti Bhushan, on May 22, mentioned Sen's petition in which a notice was issued to the Chhattisgarh government.

When the notice was issued, the apex court had asked the state government to provide medical aid to Sen, who has been suffering from heart ailment.

Sen, who has been in custody since May 14, 2007, contended that there was no evidence against him to be booked under the Unlawful Activities (Prevention) Act, 1967.

The Chhattisgarh government accused Sen, who is the vice-president of the People's Union of Civil Liberties, of acting as a courier for an alleged naxalite who is in jail.

He also sought bail on medical grounds, saying he had been suffering from a heart ailment and needed treatment at the Christian Medical College, Vellore in Tamil Nadu.

Sen, a doctor by profession, claimed that the chargesheet against him had already been filed and that he had remained in jail during the investigation of the case registered against him.


http://www.rediff.com/news/2008/may/16guest1.htm

Dr Sen, a paediatrician by training, was arrested on May 14 2007 by the Chhattisgarh police under the dreaded Chhattisgarh Special Public Security Act and Unlawful Activities Prevention Act, which are in many ways more draconian than the now repealed Prevention of Terrorist Activities Act.

The police claimed it had evidence to prove that Dr Sen was actively helping out Maoists by providing them logistic support. The only piece of evidence they have been able to show till date is the fact that he made 33 visits to Narayan Sanyal, an old, ailing Maoist leader in jail. They were perfectly legal visits and allowed under the jail manual, not something clandestine. Sanyal was suffering from many diseases and required regular medical support.

As a civil right activist and doctor it was not unusual for Dr Sen to come into contact with extremist Maoists, especially since he was in Chhattisgarh, which is reeling under the bloody conflict between the state and the Maoists.

His plea for bail in the Supreme Court was rejected, which did not find it necessary to verify the claims by the state counsel. It agreed with the state that a free Binayak was a threat to the national security in Chhattisgarh.

The state is a dangerous place for civil right activists. It is the most recent destination for rich capitalists eyeing its mineral rich land and want it to be made available. How do you do it unless the tribals are driven out of their lands?

Sunday, May 17, 2009

என்.டி.டிவி - ஹிண்டு - என்.ராம் - பிரணாய் ராய் - பாய் பாய்

தேர்தல் முடிவுகளைத் தொலைகாட்சியில் காணும் பரபரப்பில் எத்தனை பேர் இதனை கவனித்திருப்பீர்கள் என தெரியவில்லை. பட்டு வேட்டு பட்டு சட்டையில் (வேஷம் போடும்) என்.ராம் மற்றும் பிரணாய் ராய் படம் போட்ட ஹிண்டுவின் கடைசி பக்க விளம்பரத்தை பலரும் தவற விட்டிருக்கக்கூடும்.

ஜெனிஃபர் அருளின் தலைமையில் சென்னையை மையமாகக் கொண்டு இந்த கூட்டுத் தயாரிப்பு தொடங்குகிறது. வெற்றிக்குப் பிறகு தயாநிதி மாறனை பிரணாய் ராயும் பர்கா தத்தும் பேட்டி எடுத்த போது மாறன் என்.ராமை நன்றாக வெளுத்து வாங்கினார் (திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என சொன்னதற்கு.


ஜெயாடிவியில் காலையிலிருந்தே சுரத்தில்லாமல் தொகுத்து வழங்கிய மாலன் மற்றும் ரபி பெர்நார்ட். திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது போலும். அட்லீஸ்ட் 12 மணி வரையாவது ஒப்பேத்தினார்களே.

மேலும் சில டிவிக்களின் தொகுப்பாளர் படங்கள். எந்தக் கட்சி (இந்திய அளவில்) ஆட்சிக்கு வந்தாலும் ஒரு வித உற்சாகத்தோடு பணியாற்றும் டெல்லி (ஆங்கில) சேனல் தொகுப்பாளர்களுக்கும் தமிழக திமுக / அதிமுக டிவிக்களின் தொகுப்பாளர்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு !

படங்கள் கைபேசியில் எடுக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஆங்கில சேனல்கள் பல்வேறு முடிவுகளை இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் அளவு தங்கள் பலத்தையும் அரசியல் பெரும்புள்ளிகளுடன் நட்பையும் கொண்டுள்ளன. தமிழகத்தில் தான் ஆட்டோ கலாச்சாரமெல்லாம்.

தொங்கு பாராளுமன்றம் வந்தால் 10 நாட்களுக்கு இல்லை அதற்கும் மேல் தங்களின் பிரெகிங் நியூஸ் விஷயங்களை வைத்து விளம்பரங்களை அள்ளலாம் என்றிருந்த டெல்லி சேனல்களுக்கு இந்த தீர்ப்பால் கொஞ்சம் சோர்வுதான்.

Wednesday, May 13, 2009

இந்தப் பேனா வேண்டுகிறது - கருணாநிதிதனக்கு நடந்த பல் கொழுக்கட்டை விழா நிகழ்ச்சியைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி நெகிழ்ச்சியுடன் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு எழுதியுள்ள கடிதம்.


படத்தின் மீது க்ளிக்கவும்

நன்றி: தினகரன்

Tuesday, May 12, 2009

100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் - எஸ்.வி.சேகர்

நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தென் பிராந்திய பிராமணர் சங்கங்ளின் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.வி.சேகர் கோரியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழக பிராமண வாக்காளப் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரும்பான்மை பிராமணர்கள் தேர்தல்களில் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதில்லை என்ற தவறான கருத்து பல கட்சிகளிடையே உள்ளது.

தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி மற்றும் தீரர் சத்யமூர்த்தி காலத்திலிருந்தே தமிழக ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்கள் பிராமணர்கள் என்பதை இனி வரும் காலங்களிலும் உணர்த்துவோம்.

100 சதவீத பிராமண வாக்குப் பதிவு என்பதை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். பிராமணர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை உறுதி செய்யும் கட்சிகளின் வேட்பாளர்களையும், சமூக நீதி அடிப்படையில் பிராமணர்களை ஆதரிக்கும் வேட்பாளர்களையும் மட்டும் நாம் ஆதரிப்போம்.

நம் தொகுதிகளில் போட்டியிடும் பிராமண வேட்பாளர்களில் சிந்தித்து, சிறந்தவரை ஆதரிப்போம். நம்மை ஒதுக்காத யாரையும் நாம் வெறுக்க வேண்டியதில்லை. எக்காரணம் கொண்டும் நாம் வாக்களிக்கத் தவறக் கூடாது.

வாக்களிப்பது நம் கடமை. ஒரு சிறந்த தேசம் உருவாக, நாம் ஒரு மணி நேரம் வெய்யலில் வரிசையில் நின்று ஓட்டளிப்பது நமக்கு நன்மையே செய்யும். நம் லட்சியம். ‘தமிழகத்தில் சமூக நீதியாக பிராமணர்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு’.

அடுத்த இலக்கு ‘தமிழக பிராமணர்களின் ஏழு சதவிகித எண்ணிக்கைக்கேற்ப 2011ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சுமார் 12 பிராமண சட்ட மன்ற உறுப்பினர்கள் (எந்த கட்சியானாலும்) வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்ல உறுதி எடுப்போம்.

ஒற்றுமையே வலுவானது. நாளை நமதே, இந்த நாளும் நமதே'.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, May 11, 2009

பாதம் பணிகிறேன் - பணியாற்றப் புறப்படு - கருணாநிதி

இடையறாது உழைத்திடு - இமாலய வெற்றியைக் குவித்திடு என திமுக தலைவர் கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.படத்தின் மீது க்ளிக்கவும்

நன்றி: தினகரன்நன்றி: The Times of India

Thursday, May 7, 2009

பாஜக ஆட்சியில் திருநாவுக்கரசர் அமைச்சர் - அத்வானி

பரமக்குடியில் அத்வானி பிரசாரம்

பா.ஜ. ஆட்சியில் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்

பரமக்குடி, மே 8: 'பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரசிடம் அந்த தன்மை இல்லை' என்று பரமக்குடியில் அத்வானி பேசினார்.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, தமிழகத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்த தேர்தல் பிரசாரத்தில் 123வது மாவட்டமாக ராமநாதபுரம் வந்துள்ளேன். தேர்தலுக்கு முன்பே பெரும்பான்மை கூட்டணியை அமைத்தது பா.ஜ.தான்.

இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பா.ஜ. ஆட்சியில் இந்தியா அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை பெற்றது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்கி கவுரவித்தது. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றியது.

மன்மோகன் சிங் ஆட்சியில், பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், நேபாளம் போன்ற நாடுகளுடன் சரியான அணுகுமுறை இல்லாததால் நட்புறவு கெட்டு விட்டது. பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரஸ் அரசிடம் அந்த தன்மை இல்லை. தமிழர்கள் அங்கு பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கை, நேபாள நாட்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வெளியுறவுத் துறை செயலாளர் என்னை சந்தித்தபோது, இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஒழிப்போம்.

தமிழகத்தில் ராமநாதபுரம் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையே காரணம். பா.ஜ.ஆட்சிக்கு வந்தால் திருநாவுக்கரசர் அமைச்சர் ஆக்கப்படுவார். அவர் உங்கள் மாவட்டத்தை முன்னேற்ற பாடுபடுவார்.
இவ்வாறு அத்வானி பேசினார்.
செய்தி: நன்றி: தினகரன்சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் கட்சி தலைவர் அத்வானி. அருகில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, சமக கட்சி தலைவர் சரத்குமார், எச்.ராஜா, சந்திரலேகா.
படம்: நன்றி: தினகரன்


இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது * சென்னை கூட்டத்தில் அத்வானி பெருமிதம்

சென்னை: மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளில் மேன்மையான நாடாக இந்தியா வர வேண்டும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பேசினார்.பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று இரவு, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அத்வானி பேசியதாவது:


கடந்த 1952 முதல் 2009 வரையிலான 15 லோக்சபா தேர்தலிலும் நான் பங்கெடுத்துள்ளேன். ஒன்று வேட்பாளராகவோ அல்லது தீவிர பிரசாரம் செய்பவராக இருந்துள்ளேன். இதுபோன்ற நேரம் வரும்போது என் முன் ஒரு கேள்வி எழும். கடந்த 14 லோக்சபா தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று வருத்தம் அளிக்கும் செய்தி, மற்றொன்று மகிழ்ச்சியான செய்தி.


வாஜ்பாய் என்னுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய முடியாதது வருத்தத்திற்குரிய செய்தி. இரண்டாவது, தென் மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய வரும்போது பா.ஜ., கட்சி வடமாநில கட்சி என்று விமர்சனம் செய்வர். இந்தத் தேர்தலில் அப்படி கூற முடியாது; காரணம், கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.முந்தைய கால ஆட்சிகள், தேர்தலின் போது, "நாங்கள் இதையெல்லாம் செய்தோம்' என்று பெருமையுடன் கூறுவதற்கு சில திட்டங்கள் இருக்கும்.


ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சியில், சொல்வதற்கு என்று எதுவும் இல்லை.காங்கிரஸ் ஒரே கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருவதைத் தகர்க்க வேண்டும்; அப்போது தான் நாடு வளர்ச்சி பெறும் என அப்போதே முடிவெடுத்தோம். அதனால் தான் அப்போதே பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி வைத்தோம். தொடர்ந்து மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஒரு கட்சி ஆதிக்கத்தை மாற்றி, இரு துருவமாக கொண்டு வந்துள்ளோம்.


கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளோம். சீனா, நோக்னோர் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி, தன்னை அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக உலக நாடுகளுக்கு பறைசாற்றியது. அந்த நேரத்தில், "இந்தியாவும் அணு ஆயுதம் படைத்த நாடாக வேண்டும்' என்று, ஜனசங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.கடந்த 1964, 65ம் ஆண்டுகளில் நாங்கள் நினைத்ததை 1998ல் ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியாவின் வல்லமையை உலகுக்கு வெளிப்படுத்தினோம்.


அப்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மன்மோகன் சிங், "அமெரிக்கா பொருளாதார தடை கொண்டு வந்துவிடும், மக்கள் பாதிக்கப்படுவர்' என்று விமர்சித்தார்.பொருளாதார தடை விதித்தாலும் எதிர்கொண்டு நம்மால் சாதிக்க முடியும் என்று மன்மோகனுக்கு பதில் தரப்பட்டது. அதன்படியே இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும், பொருளாதார நிர்வாகத்தை திறமையாக கையாண்டு வெற்றி பெற்றோம்.


இப்போது அமைந்துள்ள ஐ.மு., கூட்டணி, முற்றிலும் சந்தர்ப்பவாத கூட்டணி. சந்தர்ப்பவாதத்தின் விலையை நாடு இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். நேர்மையான ஆட்சி, நாட்டின் மேம்பாடு, பாதுகாப்பு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளின் மேன்மையான நாடாக இந்தியா வரும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.இவ்வாறு அத்வானி பேசினார்.


ச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:

பா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என எல்லா இடங்களிலும் கேட்கின்றனர். பா.ஜ.,வுடன் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி வைத்திருந்தன. சமத்துவ மக்கள் கட்சி மட்டும் ஏன் கூட்டணி வைக்கக் கூடாது? பா.ஜ., ஆட்சியின் போது, யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டே இல்லை. அதனால், பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறேன்.

இப்படி பேசுவதால் பா.ஜ.,வுடன் ஒன்றிப் போய்விட்டார்; ஜெயித்ததும் மந்திரியாவார் என்றெல்லாம் பேசுவர்.நான் பதவிக்கு ஆசைப்படவில்லை; மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்களே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

மத்தியில் நல்லாட்சி அமைய பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டும்.இவ்வாறு சரத்குமார் பேசினார்.கூட்டத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சந்திரலேகா மற்றும் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: நன்றி: Dinamalar

Tuesday, May 5, 2009

ராமதாசுக்கு அனுமார் குணம் - ஆற்காடு வீராசாமி

ராமதாசுக்கு அனுமார் குணம்.
தேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும்.

ஆற்காடு வீராசாமி அறிக்கைசென்னை, மே 6: தேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதியை ஜெயலலிதா ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்பதை காவல் துறையினர்தான் கண்காணிக்க வேண்டும்.

குடும்பத்தினர் சொல்லியே ஓய்வு எடுக்காதவர் இவர் கூறியா ஓய்வு எடுக்கப் போகிறார். மனித உணர்வுள்ள யாரும் மருத்துவமனையில் இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்யமாட்டார்கள். முரசொலிமாறன் அமெரிக்காவில் இருந்து உடல்நலக் குறைவோடு வந்தபோது மருத்துவமனையில் சேர்க்க விடாமல் தடுத்தார். அவர் இறந்த போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தார். இதுதான் ஜெயலலிதாவின் குணம்.

எம்ஜிஆர் உடல் நலக்குறைவாக இருந்த போது, என்னை முதல்வராக்குங்கள் என ராஜீவ்காந்திக்கு கடிதம் அனுப்பியவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோப்புகளை பார்க்காமல் வைத்திருந்தார். ஆனால், முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோதும் எந்த ஒரு கோப்பும் காத்திருக்கவில்லை.
ராமதாசும் அவருடன் சேர்ந்து முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லியுள்ளார். 5ஆண்டுக்கு பாமக ஆதரவு உண்டு என கதை அளந்து விட்டு, தேர்தல் வந்ததும் திமுகவுக்கு ஆதரவு கிடையாது என்று கூறிய 'அரிச்சந்திரன்' இவர்தான். 'கலை'ப்பதால் கலைஞர் என பெயர் வந்தது என கூறுகிறார். அனுமாரின் குணம் இருப்பதால்தான் ராமதாஸ் பெயர் வந்தது என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும். ஜெயலலிதா, ராமதாஸ் போன்றவர்கள் நாவடக்க வேண்டும். தேர்தல் பயத்தில் உளறுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தினகரன்

Monday, May 4, 2009

கருணாநிதி பதவி விலகுக: ராமதாஸ்

பஸ் கட்டண குறைப்பு விவகாரம் ஒரு வரலாற்று மோசடி என்றும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் பதவி விலக வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எவ்வளவு நாடகம் ஆடினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்று தெரிந்துவிட்டது. இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் திமுகவினரும், அதன் கூட்டணி தலைவர்களும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்.

500 ரூபாய் நோட்டு கட்டுக்களுடன் திமுக வேட்பாளர்களும், அவர்களது அடியாட்களும் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். மணல், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி மூலம் கிடைத்த அனைத்து கறுப்புப் பணமும் வெள்ளமாய் பாய்கிறது.

இதை தடுக்க வேண்டியதேர்தல் அதிகாரியும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். குறிப்பாக வேலூர் மற்றும் மதுரைமாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுகிறார்கள்.

அரக்கோணம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் மீது புகார் கொடுத்த பாமக மற்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். அரக்கோணத்தில் கல்வி கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து சாராய ஆலை தொடங்கி யுள்ள ஒரு பிரமுகர் ஊரையே விலைபேசி கொண்டிருக்கிறார்.இதை தடுக்க வேண்டிய நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

பஸ் கட்டண உயர்வு மற்றும் ரத்து என்பது தமிழக வரலாற்றில் இல்லாத மோசடியாகும். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் நேருவும், முதலமைச்சர் கருணாநிதியும் பதவி விலக வேண்டும். மாவட்ட கலெக்டர்களை டம்மியாக்கிவிட்டு தேர்தல் அதிகாரிகளுக்கும், மேலிட பார்வையாளர்களுக்கும் பொறுப்பு களையும், அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.

தனி ஈழம்தான் தீர்வு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா துணிச்சலுடன் அறிவித்துள்ளார். இதனை உலகத் தமிழர்கள் பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் கருணாநிதி இந்தியா போர் படை அனுப்ப முடியுமா? சீனா சும்மா இருக்குமா? என்று பேசி வருகிறார்.1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்க மொழிபேசும் மக்களுக்கு தனி நாடு உருவாக்க இந்திரா காந்தி எடுத்த முயற்சி கூட சீனா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்த்தன.

ஆனால் துணிச்சலுடன் இந்திராகாந்தி தனி நாடு உருவாக்கினார். இதை வரவேற்று கருணாநிதி தாம் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். எப்போதுமே தமிழ், தமிழர், தமிழினம் என்று வாய்கிழிய பேசுவார். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் தன் நலம், தன் கட்சி, தனது ஆட்சி என்றுதான் செயல்படுவார்.

காவிரி பிரச்சனை உள்பட எல்லா பிரச்சனைகளிலிருந்தும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்து விட்டார். இலங்கைப் பிரச்சனையில் அவர் நடத்திய கிளைமாக்ஸ் நாடகம்தான் உண்ணாவிரதம். இந்த பிரச்சனையில் நேருக்கு நேர் பொது மேடையில்அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

மத்தியில் அமைந்த தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய 4 ஆட்சியிலும் இடம் பெற்று பதவி சுகம் அனுபவித்த கருணாநிதி எங்களை பார்த்து பதவி சுகம் அனுபவித்ததாக சொல்கிறார். கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் பாமக மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள். ஸ்டாலின் அரசியல் கத்துக்குட்டி. அவர் பாமகவின் பயிலரங்கத்திற்கு வந்து அரசியல் பயிற்சி எடுக்கட்டும்.

ராஜ்யசபா எம்பி பதவி கொள்ளைபுரத்தில் வந்ததாக கூறுகிறார். ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்களெல்லாம் மேலவை பொறுப்பு வகித்திருக்கிறார்கள். 1984-ல் கருணாநிதியும் மேலவை உறுப்பினராக இருந்தவர்தான். தமிழகத்தில் 52 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தாத்தா, பேரன் சண்டையில் அரசு கேபிள் டிவி தொடங்கினார்கள். இப்போது அதை கைவிட்டு விட்டார்கள். நாங்கள் கொடுத்திருந்த திட்டத்தின்படி கேபிள் டிவியை அரசு தொடங்கியிருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலையும், ரூ.1000 கோடி வருமானமும் கிடைத்திருக்கும்.

கள் இறக்குவதைவிட அதனை பதநீராக பதப்படுத்தி அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் விற்றால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பூரண மதுவிலக்கு என்பதே பாமகவின் கொள்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்