Tuesday, May 5, 2009

ராமதாசுக்கு அனுமார் குணம் - ஆற்காடு வீராசாமி

ராமதாசுக்கு அனுமார் குணம்.
தேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும்.

ஆற்காடு வீராசாமி அறிக்கை



சென்னை, மே 6: தேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதியை ஜெயலலிதா ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்பதை காவல் துறையினர்தான் கண்காணிக்க வேண்டும்.

குடும்பத்தினர் சொல்லியே ஓய்வு எடுக்காதவர் இவர் கூறியா ஓய்வு எடுக்கப் போகிறார். மனித உணர்வுள்ள யாரும் மருத்துவமனையில் இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்யமாட்டார்கள். முரசொலிமாறன் அமெரிக்காவில் இருந்து உடல்நலக் குறைவோடு வந்தபோது மருத்துவமனையில் சேர்க்க விடாமல் தடுத்தார். அவர் இறந்த போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தார். இதுதான் ஜெயலலிதாவின் குணம்.

எம்ஜிஆர் உடல் நலக்குறைவாக இருந்த போது, என்னை முதல்வராக்குங்கள் என ராஜீவ்காந்திக்கு கடிதம் அனுப்பியவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோப்புகளை பார்க்காமல் வைத்திருந்தார். ஆனால், முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோதும் எந்த ஒரு கோப்பும் காத்திருக்கவில்லை.
ராமதாசும் அவருடன் சேர்ந்து முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லியுள்ளார். 5ஆண்டுக்கு பாமக ஆதரவு உண்டு என கதை அளந்து விட்டு, தேர்தல் வந்ததும் திமுகவுக்கு ஆதரவு கிடையாது என்று கூறிய 'அரிச்சந்திரன்' இவர்தான். 'கலை'ப்பதால் கலைஞர் என பெயர் வந்தது என கூறுகிறார். அனுமாரின் குணம் இருப்பதால்தான் ராமதாஸ் பெயர் வந்தது என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும். ஜெயலலிதா, ராமதாஸ் போன்றவர்கள் நாவடக்க வேண்டும். தேர்தல் பயத்தில் உளறுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தினகரன்

No comments: